கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு

தமிழன்பருக்கு, வணக்கம். கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் –  சான்றிதழ்ப் படிப்பு [Certificate Course in  Fundamental & Usage of Tamil Computing] 05.05.14 – 30.05.14  எனும் ஒருமாதக்காலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு மே மாதம் திஇராநி (எசுஆர்எம்) பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித்தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது.   கணினியின் அடிப்படையைப் புரிந்துகொண்டு அதில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ் மென்பொருள் உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்துகொள்வதற்கும் இணையத்தமிழ்ப் பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் பயிற்சியிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் வாயிலாக ஊடகத்துறையில் பணிவாய்ப்புகளைப் பெறமுடியும்….

திங்கள் இலக்கியக் கலந்துரையாடல்

சங்கக் கால இலக்கிய அகத்திணை மரபுகளும் இலக்கியச் செல்நெறிகளும் – ஓர் அறிமுகம் உரை: பேராசிரியர். இ.பாலசுந்தரம் சிறப்பு விருந்தினர்கள் உரை: திருமதி.செல்வம்  சிரீதாசு திருமதி. (இ)லீலா சிவானந்தன் திரு. அருள் சுப்பிரமணியம் ஐயந்தெளிதல் அரங்கு நாள்:சித்திரை 13, 2045 / 26-04-2014 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: மெய்யகம் [3A, 5637, Finch avenue East, Scarborough, M1B5k9] தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316

ஈரோடு தமிழன்பன் முத்துவிழா – பங்குனி 25, 2045 சென்னை

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் முத்து விழா 08.04.2014  செவ்வாய்க்கிழமை மாலை 6-00மணி       எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம், சென்னை தமிழன்பனைப் பற்றிய பார்வை அவரது படைப்புத் தலைப்புகள் மூலம் – பேரா.மறைமலை இலக்குவனார் ‘தமிழன்பன் கவிதைகள்’ வாசகர் உள்ளத்தில் ஏற்படுத்திய ‘சிலிர்ப்புகள்’(1970) மதிப்பீடுகள்(2002) எவற்றாலும் அளக்கமுடியாதவை. கவியரங்கங்களில் அலைமோதும் சுவைஞர்வெள்ளத்தை நீந்தி அந்தப் பாட்டுத் ‘தோணி வருகிறது’என்றால் கேட்டுக் கிறுகிறுத்துப் போவதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்?சமூகப்புன்மைகளைச் சுட்டெரிக்கும் ‘சூரியப் பிறைகள்’ அவரின் சுடர்மிளிரும் கவிதைகள். உண்மை அறியாதவர்கள்’ஊமை வெயில்’ என்று…