அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017
அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017 வைகாசி 03 – 05, 2048 / 17 – 19 மே 2017 பங்களிப்பும் படைப்பும் வேண்டல் ஆங்கிலத்திலுள்ள முழுவிவரத்திற்கும் பதிவுப்படிவத்திற்கும் காண்க : http://thiru2050.blogspot.in/2016/11/2017_18.html ஆசியவியல் நிறுவனம், சென்னை உலகத்தமிழர் பேரவை, மொரிசியசு
4 நாடுகள், 8 நகரங்களில் செம்மல் வ.உ.சி(தம்பரம்) நினைவு நாள் – உலகத்தமிழ்ப்பேரவை
கார்த்திகை 03, 2047 / நவம்பர் 18, 2016
குவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் மாத நிகழ்வு
குவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் மாத நிகழ்வு செயகாந்தன் – ஆவணப்படமும் உரையாடலும் கார்த்திகை 04, 2047 / நவம்பர் 19, 2016 சனிக்கிழமை மாலை 6.00 மணி விவேகானந்தா அரங்கம் , பெ.சு.உயர்நிலைப்பள்ளி, இராமகிருட்டிணா மடம் சாலை , மயிலை, சென்னை 600004 ஆவணப்படமும் அதன் இயக்குநர் திரு இரவி சுப்பிரமணியனுடன் உரையாடலும் இடம் பெறுகின்றன. கவிதை, கதை வாசிப்பு – வழக்கம்போல் அனைவரும் வருக!
பன்னாட்டுக் கருத்தரங்கம் : காலம்தோறும் தமிழ், சென்னை
பன்னாட்டுக் கருத்தரங்கம் : காலம்தோறும் தமிழ் தை 29, 2048 – 11.02.17 பள்ளிக்கரணை , சென்னை ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி, சென்னை ஆதிரா பதிப்பகம், சென்னை நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற தை 29, 2048 / 11.02.17 சனிக்கிழமை அன்று. அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்! ஆதிரா முல்லை
அபுதாபி மௌலிது குழு நடாத்தும் மீலாது பேச்சுப் போட்டி, அமீரகம்
அபுதாபி மௌலிது குழு நடாத்தும் மீலாது பேச்சுப் போட்டி அபுதாபி : அபுதாபி மௌலிது குழு நடாத்தும் அமீரகம் தழுவிய மீலாது பேச்சுப் போட்டி கார்த்திகை 10, 2047 / 25.11.2016 அன்று நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் (சல்) என்ற தலைப்பில் நடக்க இருக்கிறது. போட்டியாளர்கள் 5 நிமிடங்கள் மட்டுமே பேச இசைவளிக்கப்படுவர். வயது வரம்பு இல்லை. பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். வெற்றி பெறுவோர்க்கு மதிப்புமிக்க பரிசுகள் வழங்கப்படும். பெயர் பதிவுக்குத் தொடர்பு எண் :…
தலைநகர்த் தமிழ்ச்சங்கம் : பெரியபுராணத் தொடர்சொற்பொழிவு – 18
தலைநகர்த் தமிழ்ச்சங்கம் பெரியபுராணத் தொடர்சொற்பொழிவு – 18 ஆனாய நாயனார் ஐப்பசி 28, 2047 / நவம்பர் 13, 2016 மாலை 4.30 தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் பொழிவாளர்: பேரா.முகிலை இராசபாண்டியன்
திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உரைநயங்களும் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
கார்த்திகை 22, 2047 / 07.12.2016 அன்று கே.எசு.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள, திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உரைநயங்களும் என்ற தலைப்பில் நடைபெறும் இரண்டாவது பன்னாட்டுக் கருத்தரங்கத்துக்குப் பல்வேறு மொழிகளில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகளையும் பல்வேறு உரையாசிரியர்களின் உரை நயங்களையும் ஒப்பீட்டு முறையிலும் திறனாய்வு முறையிலும் எடுத்துரைக்கும் ஆய்வுக்கட்டுரைகள் வந்துள்ளன. கட்டுரை அனுப்பிய பேராளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் கட்டுரை வழங்குவதற்கான இறுதி நாள் ஐப்பசி 22, 2047 / 07.11.2016. திருக்குறள் மொழிபெயர்ப்புகள் குறித்தோ உரைகள் குறித்தோ எழுதப்படும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. சிறந்த கட்டுரைகளுக்குப்…
இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : கரிச்சான்குஞ்சு
அன்புடையீர் வணக்கம். இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்‘ வரிசையில் இந்த மாதம் – 08.11.2016 செவ்வாய் அன்று மாலை 06.30 மணிக்கு – ‘மறுவாசிப்பில் கரிச்சான்குஞ்சு‘ இடம் : பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர் தலைமை: திரு தி.அருணன் சிறப்புரை : திரு மாலன் அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் என். சிரீராம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன் இணைப்புரை: முனைவர் ப.சரவணன் உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்
அணிதிரள்வோம் ஆர்ப்பாட்டத்தில்! – சுப.வீ.
அணிதிரள்வோம் ஆர்ப்பாட்டத்தில்! இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.).,பா. ச.க. முதலான சங்கப் பரிவாரங்களின் அடாவடித்தனமும், மிரட்டல்களும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றன. அதன் ஒரு பகுதிதான் மூத்த இ.ஆ.ப. அதிகாரி கிருத்துதாசு காந்தியின் மீது ஏவி விடப்பட்ட வன்முறை மிரட்டல்கள். யாருக்கோ நிகழ்ந்த ஒன்று என எண்ணி நாம் கவலையற்று இருந்தால் அது நாளைக்கு நம் ஒவ்வொருவருக்கும் நடக்கக்கூடும். எனவே கருத்து வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகள் அனைத்தையும் தாண்டி,மதவாத வன்முறைகளுக்கு எதிராக ஒன்று திரள வேண்டிய நேரமும், நெருக்கடியும் இப்போது வந்துள்ளது. எங்களின் திராவிட இயக்கத் தமிழர் பேரவைக்கும், கிருத்துதாசு…
கலைமாமணி விக்கிரமன் நினைவுச் சிறுகதைப் போட்டி
மொத்தப்பரிசுத்தொகை 28,000 உரூபாய் -மாம்பலம் ஆ.சந்திரசேகர் -இலக்கியப் பீடம்
திருகோணமலையில் முப்பெருவிழா 2017
தை 15, 2048 / சனவரி 28, 2017 ஈச்சலபற்றை, தமிழீழம் -ஊற்றுவலையுலக எழுத்தாளர் மன்றம் -நந்தவனம் நிறுவம்
ஈழ மாணவர் சுட்டுக்கொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகை – மே 17
யாழ் பல்கலைக்கழக மாணவர் இருவரை சிங்களப் பேரினவாதக் காவல்துறை சுட்டுக்கொலை செய்திருக்கிறது. ஈழ மாணவர் எழுச்சியே 2009 இனப்படுகொலைக்குப் பின்பான அரசியலில் முதன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டார்கள், மாவீரர் விளக்குகள் விடுதலைக் கனலாய் பல்கலைக்கழக வளாகத்தில் முளைத்திருந்தன. தொடர்ந்து சிங்களப் பேரினவாதத்தின் முயற்சிகளுக்கு எதிராய்ப் போராட்டங்களும், மோதல்களும், முழக்கங்களும் யாழ் பல்கலைக்கழகத்திலேயே பிறந்தன. இந்தப் பின்புலத்திலிருந்தே இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. யாழ் மருத்துவமனையில் இந்திய அமைதிப்படை நடத்திய கோரமான படுகொலையின் 29ஆவது நினைவு நாள் இன்று. இந்த நிலையில் இந்தப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பன்னாடுகளின் தோல்வியும், அமெரிக்கத் தீர்மானத்தின்…
