5 மாவட்டங்களிலும் தமிழக அரசே, மருத்துவமனை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

5 மாவட்டங்களிலும் தமிழக அரசே, மருத்துவமனை அமைக்கட்டும்!    அ.இ.ம.அ.நி.(அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவம்) மருத்துவமனை (AIIMS) தமிழ்நாட்டில் 200 காணி பரப்பில் 2000 கோடி உரூபாய் செலவில் அமைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 2015 இல் தெரிவத்தது.   தமிழ்நாடு அரசு, செங்கல்பட்டு (காஞ்சிபுரம் மாவட்டம்), புதுக்கோட்டை,  செங்கிப்பட்டி(தஞ்சாவூர் மாவட்டம்), பெருந்துறை(ஈரோடு மாவட்டம்), தோப்பூர் (மதுரை மாவட்டம்) ஆகிய 5 இடங்களைப் பரிந்துரைத்தது.    இந்திய ஒன்றியத்தின் நல்வாழ்வு குடும்பநலத்துறை இணைச்செயலர்  தத்திரி பண்டா (Dharitri Panda)  தலைமையிலான குழு…

ஆட்சியை மாற்ற வேண்டியது மக்களே! ஆளுநர் அல்லர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆட்சியை மாற்ற வேண்டியது மக்களே! ஆளுநர் அல்லர்!   இந்திய நாடு முழுவதுமே மத்திய ஆளுங்கட்சிக்கு ஒத்துவராத மாநில ஆட்சிகள் பலமுறை கவிழ்க்கப்பட்டுக் கலைக்கப்பட்டுள்ளன. முதன் முதலில் (சூலை 31, 1959), சவகர்லால்நேருவால், தேர்ந்தெடுக்கப்பட்டப் பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சி கேராளவில் கலைக்கப்பட்டுக் குடியரசுத்தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் இதுவரை 125இற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மாநிலஅரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. சத்திசுகாரையும்(Chhattisgarh) புதியதாகத் தோன்றிய தெலுங்கானாவையும் தவிர எல்லா மாநிலங்களுமே குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உட்பட்டுள்ளன. ஏறத்தாழ 85 முறை  பேராயக்(காங்.)கட்சிதான் இத்திருவிளையாடலைச் செய்துள்ளது. பா.ச.க.வின் கலைப்புப்பணி…

மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!  செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே (தொல்காப்பியர்,  தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 11) எனத் தொல்காப்பியர், துன்பம் போக்கும் உவகைகளில் ஒன்றாக விளையாட்டைக் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது நம் நாட்டில் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தாலும் வல்லவர்களை உருவாக்கும் வண்ணம் போதிய கருத்து செலுத்துவதில்லை. புதிய விளையாட்டுகளில் கருத்து செலுத்தும் நாம் மனத்திற்கும் உடலுக்கும் வலுவைச்சேர்க்கும் பரம்பரை விளையாட்டுகளைப் புறக்கணிக்கின்றோம். அவ்வாறில்லாமல் மரபு விளையாட்டுகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும்.   பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள்…

நினைவேந்தலுக்குத் தடை! : சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா? – இலக்குவனார் திருவள்ளுவன்

நினைவேந்தலுக்குத் தடை! :  சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா?   இறந்தவரைப் போற்றுவது என்பது உலகம் தோன்றியது முதலே உலக மக்களிடம் இருக்கும் பழக்கம். தமிழ் மக்கள் இந்தப் பண்பாட்டில் திளைத்தவர்கள். எனவே, இறந்தவர்களைத் தெய்வமாகக் கருதி வணங்கும் பண்பாடு காலந்தோறும் நிலைத்து நிற்கிறது. இன்று நாம் வணங்கும் தெய்வம் பலவும்  வழி வழி, வழிபட்ட இறந்தவர்களே! துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் 42) என இறந்தவரைப் போற்றல் இல்லறத்தான் கடமை என்கிறது உலகப்பொதுநூல். இறந்தபின்னர் எவ்வாறு  துணை…

தேர்வுக்கொள்கை : இடைப்பாடியார், செங்கோட்டையார், உதயச்சந்திரருக்குப் பாராட்டுகள்!

தேர்வுக்கொள்கை : இடைப்பாடியார், செங்கோட்டையார், உதயச்சந்திரருக்குப் பாராட்டுகள்!   நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்றார் ஔவையார்(மூதுரை 10). வல்லார் ஒருவர் உளரேல் அவர் செயலால் எல்லார்க்கும் விளையும் நன்மை என நாம் சொல்லலாம்.   பணியாற்றும் இடங்களில் எல்லாம் பாங்குடன் செயல்படும் திரு உதயச்சந்திரன் இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்துறைச் செயலர் பொறுப்பேற்ற பின்னர், பள்ளிக்கல்வித்துறை, நூலகத்துறை முதலானவற்றில் அனைத்துத் தரப்பாரும் போற்றும் வண்ணம் நற்செயல்கள் புரிந்து வருகின்றார்.   பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், கல்விநலனில் கருத்து செலுத்தும்  வண்ணம்…

ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை!    ஈழம் என்பது இலங்கையின் மறுபெயர்தான். இலங்கை முழுமையும் தமிழருக்கே உரியது. எனினும் காலப்போக்கில், வந்தேறிச் சிங்கள மக்கள் பெரும்பான்மை வாழும் தீவாக மாறிவிட்டது. தமிழ், சிங்களவர் தவிர, அயலவர் வரும்பொழுதுகூட அங்கே இரண்டு தமிழ் அரசுகளும் ஒரு சிங்கள அரசும்தான் இருந்தன. ஆனால், பிரித்தானியரால், நாட்டை விட்டு வெளியேறும்பொழுது அவர்கள் செய்த சதியால், சிங்களர்கள் ஆதிக்கத்திற்குத் தமிழர்கள் இரையாகினர். சிங்கள வெறியர்களால் மொழிக்கும் இனத்திற்கும் கேடு பெருகியதால், உரிமையாட்சி செய்த தமிழினம்…

அரசியல் சட்டத்தைத் திருத்தினாலன்றி இந்தி ஒழியாது! – இலக்குவனார் திருவள்ளுவன்

அரசியல் சட்டத்தைத் திருத்தினாலன்றி  இந்தி ஒழியாது!    இந்தித்திணிப்பு என்பது புதிய செயல்போல் தலைவர்கள் அவ்வப்பொழுது அறிக்கை விடுவதும் கண்டனம் தெரிவிப்பதும் வழக்கமாக உள்ளது. இந்தியை  எதிர்த்து அறிக்கை விடுவதால் எப்பயனும் இல்லை.   “இந்தியைத்திணித்தால் எரிமலையாவோம்”, “இந்தியைத்திணித்தால் புரட்சி வெடிக்கும்! தூங்கும்புலியை இடறாதீர்!”, “நாங்கள் இருக்கும் வரை இந்தியைத்திணிக்க விடமாட்டோம்” என்பனபோன்ற வெற்றுக்கூச்சல்களை அரசியல் தலைவர்கள் நிறுத்த வேண்டும்.    நம்மைப்போல், “என்றும் இந்தி! இன்றும் இந்தி!” என்று சொல்லிக்கொண்டிராமல் எங்கும் எதிலும் இந்தியை மத்திய அரசு திணித்துக்கொண்டுதான் உள்ளது. ஆனால், எப்பொழுதாவது…

இந்தித்திணிப்பு : தலைவர்களே அறியாமையில் உழன்றால் எப்படி வழிகாட்ட இயலும்? – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தித்திணிப்பு:  தலைவர்களே அறியாமையில் உழன்றால் எப்படி வழிகாட்ட இயலும்?   இந்தித்திணிப்பு என்பது, ஆங்கிலேயர் ஆட்சியில் 1918  இல்  தென்பாரத இந்திப் பரப்புரை அவை (‘தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா’) என்னும் அமைப்பு தொடங்கியபொழுதே தொடங்கிவிட்டது. இந்தியா விடுதலை அடைந்ததும்  வேரூன்றியது. இந்தியா, குடியரசானதும் கிளை பரப்பியது. 1965 இல் இந்தியா என்றால் இந்தி என்பது முழுமையாக மாறும் நிலை இருந்தது. இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் முன்னெடுப்பால் கிளைகள் பரவாமல் வெட்டப்பட்டன. எனினும் அவ்வாறு அரசமைப்புச் சட்டத்தின்படி இந்தி …

இந்தித்திணிப்பு அல்ல, இந்தியே கூடாது! – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தித்திணிப்பு அல்ல, இந்தியே கூடாது!   மத்திய அரசின் துணையுடன் இந்தி, ஆழமாக வேரூன்றித் தன் நச்சுக்கிளைகளைப்  பரப்பி வருகிறது. நம்மை எதிர்ப்பவரை நாம் எதிர்க்கவோ, நம் இனத்தை அழிக்க முயல்பவனை நாமும்  வேரறுப்பதிலோ தவறில்லை. உலகெங்கும் நடைபெறும் உரிமைப்போரின் அடிப்படையே இதுதான். ஆனால், அவ்வாறு இந்தியை எதிர்க்க நம்மவர்களுக்கு அச்சம். அதனால், இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித்திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் என்கின்றனர். இது தவறான கூற்று.   இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தங்கள் மாநிலத்தில் இந்தியை வளர்க்க எல்லா உரிமையும் உண்டு. அதனைப் பரப்ப எண்ணினாலும்…

ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்!   அயலவர்கள் அவர்களின் மொழி உச்சரிப்பிற்கேற்ப நம்  ஊர்ப்பெயர்களை உச்சரித்தனர். திருநெல்வேலியைத் ‘தின்ன வேலி’ என்றும் திருவல்லிக்கேணியை ‘டிரிப்பிளிகேன்’ என்றும் சொல்வதுபோல் எண்ணற்ற ஊர்களை இவ்வாறுதான் தவறாக நாம் தமிழிலும் ஒலித்தோம். ஒருபுறம் ஆரியமயமாக்கப்பட்ட பெயர்கள் மறுபுறம் தவறான உச்சரிப்பிலான பெயர்கள் என இருபுறமும் தாக்குதல் நடைபெற்றது. திராவிட இயக்க எழுச்சியாலும் தனித்தமிழியக்கத்தினர் தொண்டினாலும் தமிழறிஞர்களின் ஆற்றுப்படுத்தினாலும் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் தமிழ்மய மாற்றங்கள் தேவை.   இவ்வாறு நம்மிடையே குறை  வைத்துக்கொண்டு, ஈழத்தமிழர்களை மட்டும் குற்றம்…

அரசியல்வாதிகளே! நற்செயல் விதையுங்கள்! புகழை அறுவடை செய்யுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அரசியல்வாதிகளே!  நற்செயல் விதையுங்கள்! புகழை அறுவடை செய்யுங்கள்!   அரசியல்வாதிகள் மக்கள் பணிக்காக அரசியலில்  ஈடுபடுவதாகக் கூறுகின்றனர்.  ஆனால் மக்கள் நலனுக்காக வருவதாகக்  கூறுபவர்கள் தங்களையும் தங்கள் சார்ந்தவர்கள் நலன்களையுமே கவனத்தில் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். அரசியல் என்பது வணிமாக்கப்பட்டதால், சிறு முதல் போட்டு,  பெரு முதல் எடுப்பதுபோல், தேர்தல் நேரங்களில் மக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி வெற்றியை  ஈட்டுகின்றனர். வெற்றி  பெற்றதும் மக்கள் நலனில் கருத்து செலுத்தாமல் போட்ட முதல்தொகையை எடுப்பதில் கவனம் செலுத்தி ஊழலில் ஈடுபடுகின்றனர். அன்னக்காவடியாக இருந்தவர்களும் மன்னனைப்போல் செல்வம்…

இந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை! அஃதை ஏற்பது நம் மடமை! – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை! அஃதை ஏற்பது நம் மடமை!   “மெல்ல மெல்லப் படரும் நோய்போல இந்தி எல்லாச் சந்துபொந்துகளிலும் நுழைகிறது; குழைகிறது; நமது தன்மானம் பறிபோகிறது” எனப் பேரறிஞர் அண்ணா அன்றே  எச்சரித்துள்ளார்.  இன்று, இந்தி எல்லா இடங்களிலும் ஆழமாக வேரூன்றிக் கிளை பரப்பிக் கொண்டுள்ளது; அதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் “எல்லைக்கற்களில் இந்தி” என ஆர்ப்பாட்டம் செய்து என்ன பயன்?  வஞ்சகமாய் வெல்வதுதான் ஆரியத்தின் வழக்கம். அதுபோல்தான் இந்தியும் பொய்யான தகவல்கள் மூலமும் முறையற்ற செயல்கள் மூலமும் மத்திய அரசின் அலுவல்மொழியாக மாறியுள்ளது….