முதல்வர் நலம் பெறட்டும்! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி இடட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

முதல்வர் நலம் பெறட்டும்! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி இடட்டும்!     தமிழக முதல்வர் செயலலிதா உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனை  ஒன்றில் கடந்த புரட்டாசி 06, 2047 / 22.09.16 அன்று சேர்க்கப்பட்டார். காய்ச்சலும் நீர்ச்சத்து குறைபாடுமே நலக்கேட்டிற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனையில் சேர்ந்த பின்னர், சருக்கரை மிகுதி, நுரையீரல் பாதிப்பு, அவ்வப்பொழுது மூச்சிரைப்பு போன்ற காரணங்களும் சொல்லப்படுகின்றன. தன் கட்சித்தொண்டர்களால் ‘அம்மா’ எனப் பாசத்துடன் அழைக்கப்படும் அவர், அன்பர்களின் வேண்டுதலால் விரைவில் நலம்  பெறுவார் என எதிர்பார்க்கிறோம். தமிழ் மருத்துவத்தையும் கடைப்பிடித்தார்கள்…

சிறையில் தாக்குதலும் உயிர்போக்குதலும் – இலக்குவனார் திருவள்ளுவன்

சிறையில் தாக்குதலும் உயிர்போக்குதலும் ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை(திருவள்ளுவர், திருக்குறள் 541).   மணிமேகலை வகுத்தாற்போல் சிறைக்கோட்டங்களை அறக்கோட்டமாக ஆக்குவதைத் தமிழ்நாட்டு அரசாள்வோர் நெறியாகக் கொண்டனர் அன்று. சிறைக்கூடங்கைளக் கொலைக்கூடங்களாக மாற்றுகின்றனர் இன்று.   சிறையில் தாக்குதல் அல்லது கலவரம் என்பது எல்லா நாட்டுச் சிறைச்சாலைகளிலும் அரங்கேறும் அவலம்தான். ஆனால், இவை பொதுவாக இரு குழுக்களிடையே அல்லது வெளியே உள்ள குழு ஒன்றின் தூண்டுதலால் நடைபெறுவதாகத்தான் இருக்கும். அல்லது சிறைச்சாலை அடக்கு முறைக்கு எதிராகச் சிறைவாசிகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பர். ஆனால், …

நீதித்துறையினருக்கு அறநெறிப் பயிற்சி தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

நீதித்துறையினருக்கு அறநெறிப் பயிற்சி தேவை!  அரசின் நாற்பெரும் தூண்களுள் ஒன்றாக விளங்குவது நீதித்துறை. இந்தியாவில் மக்களாட்சி இந்த அளவிற்கேனும் இருக்கின்றது எனில், அதற்குக் காரணம் நீதித்துறைதான்.  பல்வேறு நேரங்களில் நீதிபதிகள் மக்களின் காவலர்களாக விளங்கும் வகையில் தீர்ப்பு வழங்குகின்றனர்’ இதனால் மக்கள் நம்பிக்கை மூச்சில் வாழ்கின்றனர்.  அதே நேரம் சட்டம் யாவர்க்கும் சமம் என்பது பொய்த்துப்போனதற்குக் காரணமும் நீதித்துறைதான் என்பதுதான் கொடுமையானது.   பல நேரங்களில் மக்களின் காப்புநிலையிலிருந்து நழுவித் தாக்கு நிலையில் காலூன்றுவதே இன்றைய தலையாய சிக்கலாகின்றது. குற்றத்தின் அளவு, குற்றம் சாட்டப்பட்டவரின் சூழல்,…

இந்தியர் என்று உரிமைகளைப் பறிப்பதும் தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான் இந்தியமா? -இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தியர் என்று  உரிமைகளைப் பறிப்பதும் தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான் இந்தியமா?   ஒருவன் எந்த நாட்டான் என்பது அரசியல் சூழலுக்கேற்ப மாறக்கூடியது. ஆனால், எந்த இனத்தான்என்பது பிறப்பிலேயே அமைந்து இறப்புவரை  – ஏன்,அதற்குப்பின்னரும் – நிலைப்பது. எனவே இந்தியன் என்பது நிலையற்றது. ஆனால் தமிழன் என்பது நிலையானது. தமிழ் மக்கள் இந்தியர்களாக அரசியல் அமைப்பின் கீழ் மாற்றப்பட்டதால் இழந்தவைதான் மிகுதி. இழப்பு என்பதும் ஒரு  முறை ஏற்பட்டதன்று. தொடர்ந்து இழப்பிற்கு ஆளாகி வருகின்றனர் தமிழ் மக்கள்.    இன்றைய, கேரள, ஆந்திர, தெலுங்கானா,…

நூல்களை எண்மியமாக்கல் – தமிழக அரசிற்குப் பாராட்டும் வேண்டுகோளும் : இலக்குவனார் திருவள்ளுவன்

படைப்பாக்கப் பொதும உரிமப்பரவலாக்கலுக்குப் பாராட்டு! தொடர்நடவடிக்கைகளுக்கு வேண்டுகோள்   எல்லாத்தமிழ் நூல்களும் எண்மியமாக்கப்பட வேண்டும் என்பதே இணையத்தமிழ் ஆர்வலர்களின் உள்ளக்கிடக்கை. இது குறித்துப் பலரும் பேசியிருந்தாலும் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் முறையாக முறையீடு அளித்துத் தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. எல்லா நூல்களையும் எண்மியமாக்கல் என்பது  பொதுவான கருத்து. அதைப் படிப்படியாக எப்படிச்  செய்யலாம் எனத் தெரிவித்துள்ளோம். முதலில் அரசுத் துறைகள், அரசுசார் நிறுவன  நூல்களை எண்மியமாக்க வேண்டும் என்பது போன்று படிநிலைகளை வேண்டியிருந்தோம்.    தமிழ்இணையக் கல்விக்கழகத்தின் ஆட்சிக்குழுவில் தமிழ்வளர்ச்சித் துறைச் செயலர், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குர்…

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் வழியில் நற்றமிழ் பேணுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார்  வழியில் நற்றமிழ் பேணுவோம்!   படிக்கும் பருவத்திலிருந்தே தனித்தமிழ்நடை பேணியவர்; தனித்தமிழில் எழுதியும் பேசியும் வந்ததுடன் – தனித்தமிழ் வித்தைப்பிறரிடம் விதைத்தவர்; தனித்தமிழ் அன்பர்களைத் தம் உறவாகவும் தனித்தமிழுக்கு எதிரானவர்களைத் தமக்குப் பகையாகவும் கருதி வாழ்ந்தவர்; தனித்தமிழ் வளர்ச்சிக்கெனவே இதழ்கள் நடத்தியவர்; அவர்தாம் தனித்தமிழ்க்காவலர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். அவர் புகழுடல் எய்திய நாளில்(ஆவணி 18 / செட்டம்பர் 03) அவரது நினைவைப் போற்றும் நாம்  அவரது கனவுகளை நனவாக்க அவர் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்த பின்வரும் முழக்கங்களைக் கடமைகளாகக்…

ச.ம.உ.தியாகராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மதுரைத்தமிழ்ச்சங்கம்குறித்துத் தவறான தகவலைச் சட்டமன்றத்தில் தெரிவித்த ச.ம.உ.தியாகராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!   தமிழகச் சட்டமன்றத்தில்(ஆடி12, 2047/சூலை27, 2016) மதுரை மத்தியத்தொகுதி தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராசன் ஆங்கிலத்தில் பேசினார். அதற்குத் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முக்குலத்தோர் புலிப் படை அமைப்பின் நிறுவனத் தலைவர், கருணாசு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கான விளக்கம் தருவதாகச் சட்டமன்றத்திலும் ஊடகங்களிலும் பழனிவேல் தியாகராசன் தமிழால் முடியாது என்பதுபோல் தெரிவித்துள்ளது தமிழன்பர்களிடையே கோபக்கனலை எழுப்பியுள்ளது. தனக்கு எதிர்ப்பு மிகுந்ததும் தான் தெரிவித்ததைத் தானே மறுத்து மழுப்பியுள்ளார். ஊடகங்களில்…

மாநில, மத்திய அரசுகளே! திருவள்ளுவரையும் திருக்குறளையும் போற்றுங்கள்!

மாநில, மத்திய அரசுகளே! திருவள்ளுவரையும் திருக்குறளையும் போற்றுங்கள்!   உலக அறிஞர்களாலும் ஆன்றோர்களாலும் போற்றப்படும் நூல் திருக்குறள். சமயச்சார்பற்ற நூல்களில் உலக மொழிகளில் மிகுதியாக  மொழிபெயர்க்கப்பட்டதும், மொழிபெயர்க்கப்பட்டு வருவதும் திருக்குறள் நூல் ஒன்றே. எனவேதான் இதனை இயற்றிய திருவள்ளுவர் ஞாலப்பெரும்புலவர் எனப் போற்றப்படுகிறார்.  இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே! (பாரதிதாசன்) என்பது  முப்பால் எனப்பெறும் திருக்குறள்பற்றிய இக்காலக் கருத்து மட்டுமல்ல! முக்காலத்திற்கும் பொருந்தும் திருக்குறள்பற்றிய எக்காலக் கருத்துமாகும்.  அண்ணல் காந்தியடிகள், இந்தியத் துணைக்கண்டம் ஒற்றுமையாகத் திகழக் குமரி முதல் இமயமலைவரை வாழும் அனைவரும்  …

தீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும் இணையாக இருந்தால்தான் நீதி பிறக்கும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும் இணையாக இருந்தால்தான் நீதி பிறக்கும்  ‘நயன்’ என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்துதான் [நயன் > நயதி > நியதி >] நீதி  என்னும் சொல் பிறந்துள்ளது. எனவே, நீதி என்பதைத் தமிழ்ச்சொல் என உணர்ந்து கையாள்வோம். ‘பதி’ என்பது தங்குமிடத்தையும் தலைவனையும்  வேறு சில பொருள்களையும் குறிக்கும். நீதி தங்கியிருக்க வேண்டிய இடம் என்னும் பொருளிலும் நீதி வழங்கும் மன்றத்தின் தலைவன்  என்ற முறையிலும்  முறைமன்றத்தின் தலைவர் நீதிபதி  எனப்படுகிறார். எனவே, நீதிபதியும் தமிழ்ச்சொல்லே!   நீதிபதியைத் தமிழ்ச்சொல்லல்ல எனக் கருதியும் ‘justice’ …

அரசின் கல்விக்கொள்கை இலெனின்கள் உயிர்களைப் பறிக்கின்றது! உள்ளம் தவிக்கின்றது! -இலக்குவனார் திருவள்ளுவன்

அரசின் கல்விக்கொள்கை இலெனின்கள் உயிர்களைப் பறிக்கின்றது! உள்ளம் தவிக்கின்றது!   அனைவருக்கும் கல்வி தருவது  அரசின்  கடமை. ஆனால், கல்வி வணிகமயமாக்கப்பட்டதால் கற்போர் பெரும்பாடு படவேண்டியுள்ளது. பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் என்கிறார் பாரதியார். ஆனால் பாரை உயர்த்துவதாகக் கூறும் அரசாங்கங்கள், கட்டணமில்லாக் கல்வியைத் தர மறுக்கின்றனவே! கல்லா ஒருவரைக் காணின்  கல்வி நல்காக் கசடர்க்குத்  தூக்குமரம் அங்கே உண்டாம்  எனக் கனவு கண்டார் பாரதிதாசன். ஆனால், கல்வியை வணிகக் கொள்ளையரிடம் ஒப்படைத்துவிட்டுக், கற்பவர்க்குத் தூக்குமரத்தைக் காட்டுகின்றனரே!…

நமக்குத் தேவை மனிதநேயக்கல்வியே! – இலக்குவனார் திருவள்ளுவன்

நமக்குத் தேவை மனிதநேயக்கல்வியே!   சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 422)   மனம்போன போக்கில் செல்லாமல் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயனவற்றை விலக்கி, நல்லனவற்றின்பால் கருத்து செலுத்தச் செய்வதே அறிவு என்கிறார் திருவள்ளுவர். பழியும் பாவமும் பொருள்கேடும் வராமல்  நன்மைப்பக்கம் செலுத்துவதே அறிவு என மணக்குடவர் விளக்குகிறார். எனவேதான், மனம்போன போக்கெல்லாம் போக வேண்டா (உலகநாதர் : உலகநீதி  3.1) என்று உலகநாதர் கூறியுள்ளார். இத்தகைய அறிவை நமக்குத் தருவதுதான் கல்வி.   “கற்றது கைம்மண்…

தமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்?   எல்லா விழா அழைப்பிதழ்களிலும் பிறமொழிக் கலப்பும் பிறமொழிஒலிக்கான அயல் எழுத்துகளும் கலந்து  கிடக்கின்றன. தமிழ் அமைப்பினர், தமிழ்த்துறையினர் நடத்தும் விழாக்களின் அழைப்பிதழ்களாவது (நல்ல)தமிழில் அமைய வேண்டாவா? இல்லையே! தமிழ் ஆண்டையும் குறிப்பிடுவதில்லை. முதலெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதில்லை. கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாமல் பெயர்களைக் குறிப்பதில்லை.   நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்களும் கிரந்தஎழுத்துகளின் கலப்பால் தமிழ், தான் பேசப்படும் பரப்பை இழந்துள்ளதையும் இழந்து வருவதையும் உணராமல் கிரந்தம் தேவை என்கின்றனர். அவ்வாறிருக்கும்பொழுது ஆர்வத்தால்  தமிழ் நிகழ்ச்சிகளை நடத்துவோரிடம்…