இனிதே இலக்கியம் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

1. எங்கும் கலந்துள்ள இறைவன் கண்ணில் கலந்தான்; கருத்தில் கலந்தான்-என் எண்ணில் கலந்தே இருகின்றான்;-பண்ணில் கலந்தான்;என் பாட்டில் கலந்தான் -உயிரில் கலந்தான் கருணை கலந்து. எல்லாச் சமயத்தவரும் ஏற்கும் வண்ணம் பொதுநோக்கான இறைநெறிப்பாடல்கள் தமிழில்தான மிகுதியாக உள்ளன. இப்பாடலும்  அனைவரும் பாடுவதற்குரிய பொதுநிலைச் சிறப்பு உடையது. இறைவன்,  அருட்பார்வை உடைய கண்ணில் கலந்திருக்கின்றான்; நற்செயல்களுக்கு அடிப்படையான நல்ல கருத்துகளில் கலந்திருக்கின்றான்;  பிறர் நலம் பேணக்கூடிய உயர்ந்த எண்ணத்தில் கலந்திருக்கின்றான்; இசையாகிய பண்ணிலும் பாட்டிலும் கலந்திருக்கின்றான்;  அருள்உணர்வுடன் நம் உயிரிலும் கலந்துள்ளான். எல்லா இடங்களிலும் கலந்து…

எனக்குப் பிடித்த திருக்குறள் – இலக்குவனார் திருவள்ளுவன்

எனக்குப் பிடித்த திருக்குறள்   எந்நாட்டவருக்கும் எக்காலத்தவருக்கும் ஏற்ற   உலகப் பொது நு}லாம் திருக்குறளில் ஏதேனும் ஒரு குறளை மட்டும் சுட்டிக் காட்டி நமக்குப் பிடிக்கும் என்று கூற இயலாது. இருப்பினும் நாம் அடிக்கடி நினைவு கூர்கின்ற திருக்குறள்கள் பல இருக்கும். அவ்வாறு நான் நினைவு கூர்கின்ற திருக்குறள்களில் முதன்மையான ஒன்றைக் கூற விழைகிறேன்,   திருவள்ளுவர் தம் தாய்நாடாகிய தமிழ்நாட்டையோ தாய் மொழியாகிய தமிழ்மொழியையோ எவ்விடத்தும் குறிப்பிடாமல் மக்கள் கூட்டத்திற்காகவே திருக்குறள் நூலைப் படைத்துள்ளார். இருப்பினும் உலக மக்கள் தோன்றிய தென்பகுதியில் வாழ்ந்தோரைக்…

திருவள்ளுவரைப் போற்றி இலக்குவனாரின் கனவை நனவாக்குவோம்!

திருவள்ளுவரைப் போற்றி இலக்குவனாரின் கனவை நனவாக்குவோம்! தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பியம், சங்க இலக்கியம், குறள்நெறி ஆகியவற்றைப் பரப்புவதையும் தமிழ்க்காப்புப் பணிகளையும் தம் வாணாள் தொண்டாகக் கருதிப் பாடுபட்டவர்; தம் மாணவப்பருவத்தில் இருந்தே இப்பரப்புரைப் பணிகளிலும் காப்புப் பணிகளிலும் ஈடுபட்டவர்; தாம் பணியாற்றிய இடங்களில் எல்லாம் திருவள்ளுவருக்கு விழாக்கள் எடுத்தும் திருக்குறள் வகுப்பு நடத்தியும் குறள்நெறி பரப்பிய சான்றோர்; குறள்நெறி முதலான இதழ்கள் மூலமும் திருவள்ளுவர் புகழ் போற்றிய ஆன்றோர்.   “இன்றைய சூழ்நிலையில் மக்கள் அமைதிவாழ்வு பெறவும், பசி, பிணியற்று இன்புற்று…

தமிழைப் பேச்சுமொழியாக நிலைக்கச் செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழைப் பேச்சுமொழியாக நிலைக்கச் செய்க!   தமிழ், தமிழர்களுக்கான கல்விமொழியாகவோ, ஆட்சிமொழியாகவோ, அலுவலக மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ, வணிக மொழியாகவோ, கலை மொழியாகவோ இல்லை என்பது இக்காலத்தில் வாழும் நம் அனைவருக்கும் இழிவு சேர்க்கும் நிலையாகும். இவை எல்லாவற்றிலும் மோசமான துயர நிலை என்பது தமிழ் தமிழர்களின் பேச்சுமொழி என்ற நிலையையும் இழந்துவருவதுதான்.   தமிழ், தமிழ்நாட்டின் மொழியாக நிலைப்பதற்குக் குறைந்தது மக்களின் பேச்சுமொழியாகவாவது இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் தமிழில் பேசுவோர் சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ‘‘தமிழை வீட்டில் பேசுகிறோமே! எதற்குத் தமிழ்மொழிக்…

அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன்

அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு      காலங்கள் தோறும் மூடநம்பிக்கைகள் உருவாக்கப்படுவதும் பரப்பப்படுவதும் அவை வாழ்தலும் வீழ்தலும் மீண்டும் வேறுவடிவில் உருவாவதும் இருக்கத்தான் செய்கின்றன. உலகின் முதல் மொழியாகிய தமிழுக்கும் பாலி முதலிய வேறுசில மொழிகளுக்கும் மிகவும் பிற்பட்ட ஆரியத்தை உயர்த்திக் கூறும் மூடக் கருத்துகளும் அவ்வகையினவே.      ஆரியத்தின் சாதியக்கருத்தைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என ஞாலப் புலவர் திருவள்ளுவரும் அவர் வழியில் பொதுமை நலன் நாடுவோரும் மறுத்து வருகின்றனர்.      “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்      உயிர் செகுத்து உண்ணாமை…

விண் தொலைக்காட்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன்

ஆவணி 25, 2046 / செப்.11, 2015 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு விண் தொலைக்காட்சி – WIN TV ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்று இந்திக்கு எதிரான குத்துகளைப் பதிய இருக்கிறேன்   http://wintvindia.com/   இணையத் தளத்திலும் காணலாம். மறு ஒளிபரப்பு செப்.11 இரவு – அஃதாவது செப்.12 வைகறை 1.00 மணி.   வாய்ப்புள்ளவர்கள் காண்க.   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் – 3: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி)         பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் மற்றொரு குறிப்பிடத்தக்க பாடல் படைப்பு அவரின் ‘துரத்தப்பட்டேன் என்னும்’ உள்ளக் குமுறலாகும். நம் நாடு சிறந்த மக்களாட்சி நாடாக விவரிக்கப்பட்டு வந்தாலும் உள்ளபடியே பல உரிமைகள் ஏட்டளவோடு நின்று நடைமுறையில் மறுக்கப்படுவனவாகவே உள்ளன. இதற்கொரு சான்றே, பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், தம் கல்லூரிப் பணியைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், சாதிக் கண்ணோட்டத்தால் வேலைவாய்ப்பை இழந்தது ஆகும். விருதுநகர்ச் செந்திற்குமார இந்து நாடார் கல்லூரியில் பேராசிரியர் அவர்கள்,…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 6 இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி) 6 9.] தண்டியலங்காரம் தேடுதல் பகுதி சென்றால் சொல் தேடல் பாடல் தேடல் ஆகியன உள்ளன. ஆனால், ஒவ்வொரு பக்க மேற்தலைப்பிலும் தேடுபொறி இடம் பெறவில்லை. இடப்பக்க அட்டவணையில் உள்ள உரைப்பகுதிக்குச் சென்று சொடுக்கினால்தான் உரையைப் படிக்க இயலும். அவ்வாறு சொடுக்காமல், மூலப்பகுதிகளில் உள்ள ‘உரை’ என்னும் இடத்தில் சொடுக்கினால் அப்பகுதியைக் காண இயலாது. உரைப் பகுதி செயல்படவில்லை என்ற எண்ணம் அல்லது உரை இல்லை என்ற எண்ணம் படிப்போருக்கு ஏற்படும்….

நோபல் பரிசுத் தகுதியாளர் சி.இலக்குவனார்

தமிழைக் காத்தவரை நாம் மறக்கலாமா? நோபல் பரிசுத் தகுதியாளர் புரட்சித்தமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார்   விருந்தோம்பல், நன்றிமறவாமை முதலிய பண்புகள் தமிழ்மக்கள் கடைப்பிடித்து வருவனவாக இருப்பினும் மறதியும் நம்மைக் காத்தாரைப் போற்றாமையும் இன்றைய தமிழ் மக்களின் அரும் பண்புகளாகத் திகழ்ந்து நம்மைத் தலைகுனியச் செய்கின்றன. எனவேதான் தனக்கென வாழாமல் தமிழ்க்கென வாழ்ந்து மறைந்த தவப்புதல்வர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரைத் தமிழுலகும் மறந்து விட்டது; நம் சமுதாய மக்களும் மறந்து விட்டனர். சங்கத்தமிழை மீட்டுப் பரப்பிய அவர் புலமையும் தொண்டும் குறள் நெறியைப் பரப்பிய அவரின்…

இலக்குவனாரின் விழைவுகள் நிகழ்வுகளாகட்டும் ! -இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனாரின் விழைவுகள் நிகழ்வுகளாகட்டும் ! தமிழ் நாட்டில் தமிழ் உணர்வு குறைந்து வருவதன் காரணம் என்ன? செம்மொழிச் சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அன்றே கவலைப்பட்ட  சூழல்கள்  இன்றும் மாறாமல் இருப்பதுதான். பிறர் இந்தியா என்றும் திராவிட நாடு என்றும் சொல்லிய பொழுதே தமிழ்த்தேசியம் என்றும் மொழி வழித் தேசிய இனங்களின் கூட்டரசு என்றும் தொலைநோக்கில் சிந்தித்தவர் அவர். அவரது சிந்தனைகளில் சிலவற்றை அவரது நூற்றாண்டின் நிறைவில் நினைத்துப் பார்ப்போம். “தொல்காப்பியமும் திருக்குறளும் நமதிரு கண்கள். தமிழ் மக்கள் தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் அவற்றைப்…

இலக்குவனார் தமிழுக்காக வாழ்ந்தவர் – முனைவர் கா.மாரிமுத்து

தமிழை நினைந்து தம்மை மறந்தவர்   இலக்குவனார் செய்த தமிழ்ப்பணி, தனியொருவர் செய்திட முடியாத செயற்கரிய பெரும் பணி; எழுச்சியும் உணர்ச்சியும் மிக்க பேராசிரியராய்த், துறைத்தலைவராய், கல்லூரி முதல்வராய், நூலாசிரியராய், இதழாசிரியராய், இலக்கண இலக்கிய ஆய்வாளராய், மொழி பெயர்ப்பாளராய், மேடைப் பேச்சாளராய் சிறந்த கவிஞராய் மொழிப் போர்த் தளபதியாய் விளங்கியவர் இலக்குவனார். இவரால் தமிழுணர்வு ஊட்டப் பெற்று இவரிடம் பயின்றவர்களும், அமைச்சர்களாய், கட்சித் தலைவர்களாய், இவரைப் போன்றே மொழி ஆற்றல் பலவுடையராய்ச், சிறப்புற்றிருக்கிறார்கள் என அறிய முடிகிறது. இவர் தமிழுக்காக வாழ்ந்தவர், தனக்கென வாழ்ந்திலர்….

முதன் முதலாக மொழிப் போராட்டப் பயணம் மேற்கொண்டவர் இலக்குவனார்

முதன் முதலாக மொழிப் போராட்டப் பயணம் மேற்கொண்டவர் இலக்குவனார்     மொழிப்போராளி  பேராசிரியரி சி.இலக்குவனார் பகுத்தறிவு நோக்கில் பெரியாரைப் பின்பற்றினார்; மொழிநோக்கில் மறைமலை அடிகளாரைப் பின்பற்றினார்; இந்தி எதிர்ப்பில் நாவலர் சோமசுந்தர பாரதியாரைப் பின்பற்றினார்; வறுமையிலும் செம்மையுடையவராக விளங்குவதில் சங்கப்புலவர் பெருஞ்சித்திரனாரைப் பின்பற்றினார்; புறநானூற்றில் வருகின்ற வேலைக் கையிலெடுப்பது போலத் திண்மையோடு (வலிமையோடு) வாழ்ந்து காட்டினார்; வன் தொடர்களை மிகுதியாகப் பின்பற்றினார்; வல்லினப் பேராசியராய் விளங்கி இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்கின்றார். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்றோர் பக்திக்காகப் பயணம் செய்தனர். பக்திக்காகப்…