மீனவர்கள் தூக்கு நாடகம் முடிந்தது!

மீனவர்கள் தூக்கு நாடகம் முடிந்தது!   மீனவர்கள் எமர்சன், அகஃச்டசு, வில்சன், பிரசாத்து, இலாங்லெட்டு ஆகியோரை இலங்கைக் கடற்படையினர், போதை பொருள் கடத்தியதாகப் பொய் வழக்கு தொடுக்கப்பட்டு த் தூக்குத் தண்டினை விதிக்கப்பட்டனர். குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவதுபோல் தூக்குத் தண்டனை நாடகமும் நிறைவேற்றிவிட்டு விடுதலை யும் செய்யும் புதிய நாடகம் அரங்கேறியுள்ளது. ஏறத்தாழ அனைவருமே இதை அறிந்திருக்கின்றனர். ஆனால் விசயகாந்த்து மட்டும் மாற்றுக் கருத்தைக் கூறியுள்ளார். தம்பிதுரை, இலங்கை அரசு நடத்திய நாடகத்திற்கு, இந்திய அரசும் துணை போய் உள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டை…

பாடி மகிழ்வோம் பைந்தமிழில் – இலக்குவனார் திருவள்ளுவன்

பாடி மகிழ்வோம் பைந்தமிழில்    உலகில் தோன்றிய முதல் மொழி தமிழே. எனவே, பிற அனைத்து மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்கிறது. ஆதலின்,,இசை, கூத்து ஆகிய மூன்றிலும் தாய்மைச் சிறப்புடன் இலங்குகிறது. இசைச் செல்வம் மிகுந்தது தமிழ் என்பதை மறந்து பிற மொழிகளில் பாடுவதையே பெருமையாகக் கொள்வது நமது பழக்கமாக உள்ளது. புலவர்களின் இசைப் பாடல்களைச் சிறு அகவையிலேயே நாம் சிறுவர் சிறுமியருக்குப் பயிற்றுவிக்க வேண்டும். நமக்குத் தெரிந்த அல்லது எளிமையான பாடல் மெட்டுகளில் பாடிப் பழகுவது தமிழ்ப் பாடல்களில் ஈடுபாட்டை ஏற்படுத்தும். எனவே, சில…

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

  கண்ணதாசன் என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது அவரது திரைப்பாடல்கள்தாம். நம் வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளின் பொழுது நம்மோடு தொடர்புடையனவாக – நமக்கே என்று எழுதப்பட்டனவாக – அமைந்த பாடல்கள் வழி நாம் அவரை என்றும் நினைவில் கொள்கிறோம். ஆனால் அவர் பாடலாசிரியராக மாறும் முன்னரும் பின்னருமே கவிஞர், கதையாசிரியர், நாடக ஆசிரியர். இதழாசிரியர், திரைப்படக் கதைஉரையாடலாசிரியர், புதின எழுத்தாளர், காவிய ஆசிரியர், கட்டுரையாளர், எனப் பன்முகமும் கொண்டவர். பிறப்பும் சிறப்பும்   கண்ணதாசன் ஆனி 10, 1958 / 24.6.1927 இல் சிறுகூடல்பட்டியில்சாத்தப்பன்-விசாலாட்சி…

வணங்குதற்குரிய வாரம்!

வணங்குதற்குரிய வாரம்!   ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை இரண்டாம் வாரம் / நவம்பர் நான்காம் வாரம் உலகத் தமிழ் மக்களுக்குப் போற்றுதலுக்கும்வணங்குதற்குரியதான சிறப்பான வாரமாகும்.   நவம்பர் 26, தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் பெருமங்கலமாகும். வாராது வந்த மாமணியாய் நமக்கு அமைந்த ஒப்பற்ற தலைவர் அவர்.   ‘கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமை‘(திருக்குறள் 1021)யுடன் வாழும் செம்மல் அவர். சலம்பற்றிச் சால்பில செய்யா மா சற்ற (திருக்குறள் 956) மாமனிதர் அவர்.    ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே…

பணிமலர் 1. அவ்வளவு தங்கமும் உங்களுக்குத்தான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

    (என் பணிவாழ்க்கையில் எண்ணற்ற மறுவாழ்வுப்பணிகளையும் முன்னோடிப் பணிகளையும் ஆற்றியுள்ளேன். காலமுறையில் இல்லாமல் அவ்வப்போது பூக்கும் நினைவின் மணத்தைப் பரப்ப விழைகிறேன்.) தமிழ்நாடு சிறைத்துறையில் நன்னடத்தை அலுவராகப் பணியாற்றிய பொழுது ஒரு நாள் நண்பர் ‘சௌ.’ என் பக்கத்தில் வந்தமர்ந்தார். “நேர்மையான அதிகாரி ஒருவர் பெயரைக் கூறுங்கள்” என்றார். நான்,“திருவள்ளுவன்” என்றேன். உடனே அவர், “நீங்கள் நேர்மையானவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காக உங்கள் பெயரையே கூறுவதா?” என்றார். நீங்கள் பன்மையில் கேட்டிருந்தால் செளந்தரபாண்டியன், மீசை(பெரியசாமி) எனச் சிலரையும் சேர்த்துச் சொல்லியிருப்பேன். ஒருமையில்…

1 132 133