வெருளி நோய்கள் 734-738: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 729-733: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 734-738 காணாட்டம்(video game) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காணாட்டவெருளிludus electronicus என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவான Ludectro என்பதற்குக் காணாட்டம் எனப் பொருள்.00 காதல் களியாட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காதலாட்ட வெருளி.காதலினால் தீண்டல், நெருங்கிப் பழகுதல் முதலியன உறவிற்கோ, கற்பழிப்பிற்கோ, கருவுண்டாலுக்கோ இழுத்துச் செல்லும் என்ற கவலையால் வரும் பேரச்சமே இது. காதல் வெருளி உள்ளவர்களுக்கும் காதலாட்ட வெருளி வரும்.மென்மை என்னும் பொருளிலான malயssō என்னும் பழங்கிரேக்கச் சொல்லில் இருந்து இலத்தீன் சொல்லான…
வெருளி நோய்கள் 729-733: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய் 724-728: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 729-733 729. காசாளர் வெருளி – Tamiaphobia காசாளர் (cashier) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காசாளர் வெருளி. கிரேக்க மொழியில் tamஅas என்றால் காசாளர் என்று பொருள். 00 730. காசு வெருளி – Cuprolaminophobia காசு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காசு வெருளி. காசுகள் மாழையில் செய்யப்படுவதால் மாழை வெருளி(Metallophobia)க்கும் இவர்கள் ஆளாவர். காசுகள் பணமதிப்பின் ஒரு பகுதி என்பதால் பண வெருளி(Chrometophobia/Chrematophobia)க்கும் ஆளாவர். Cuprum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் செம்பு( )…
செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-6(2010): இலக்குவனார் திருவள்ளுவன்
(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-5(2010): தொடர்ச்சி) செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-6(2010) ? தமிழைப்போல் வேறு சில மொழிகளையும் செம்மொழிப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது அல்லவா? # ஏதோ ஒரு கட்டாயச் சூழலில் தமிழுக்கான செம்மொழி ஏற்பை இந்திய அரசு வழங்கிவிட்டதே தவிர அதற்கு முழு உடன்பாடு இல்லை என்பதுபோல் நடந்து கொள்கிறது. இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு மொழியினரும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தத்தம் மொழிக்குச் செம்மொழி ஏற்பு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். ஆழமும் அகலமும் நுண்மையும்…
வெருளி நோய்கள் 724-728: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 723: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 724-728 கன்னெய்(gasoline/ petrol) பற்றிய அளவு கடந்த பேரச்சம் கன்னெய் வெருளி.கல்+நெய் = கன்னெய்.கன்னெய்யில் எரிநறா(எத்தனால்) அல்லது வேறு எதுவும் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தாலும் கன்னெய்மீது பேரச்சம் வருவதுண்டு. வளி நிலைய வெருளி(Aerostatiophobia) உள்ளவர்களுக்கும் கன்னெய் வெருளி வர வாய்ப்பு உள்ளது.00 (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் வெருளி அறிவியல் 2/5
குறட் கடலிற் சில துளிகள் 35 : துணையில்லாதவர்க்கு நிலைபேறு இல்லை-இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 34 : கடிந்துரைப்போர் இல்லாதவன் அழிவான்! –jதொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 35 துணையில்லாதவர்க்கு நிலைபேறு இல்லை முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௯ – 449) முதல் இல்லாதவர்க்கு ஆதாய ஊதியம்(இலாபம்) இல்லை; அதுபோலத் தம்மைத் தாங்கியுதவும் துணை இல்லாதவர்க்கு நிலைத்திருக்கும் தன்மை இல்லை. பதவுரை: முதல்=முதற்பொருள், முன்பணம், அஃதாவது மூலதனம்; இலார்க்கு=இல்லாதவர்க்கு; ஊதியம்=வருவாய், இலாபம், பேறு, ஆக்கம்; இல்லை=இல்லை; மதலை-முட்டுத்தூண், பாரந்தாங்கும் தூண், உத்தரம், வன்மையுடையது; ஆம்-ஆகும்;…
சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 5: இலக்குவனார் திருவள்ளுவன்
(சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 4: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!? உரையின் எழுத்து வடிவம் 5 நான் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அரசு நிறுவனத்தில் செம்மொழி ஒதுக்கீடு பற்றிய ஒரு கருத்தரங்கில் பங்கேற்றேன். அப்போதே நிதி நிலை அறிக்கையில் இருந்து மொழிகளுக்கான பல்வேறு நிதி குறித்துக் குறிப்பிட்டு இருந்தேன். இன்னின்னவாறு ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால் தமிழுக்கு இல்லையே என்பதாக குறிப்பிட்டு இருந்தேன். பல்வேறு ஒதுக்கீடுகள். ஆனால் இப்பொழுது இன்னும் கூடுதலாக இருக்கிறது. இந்தக் கூடுதலான நிதி ஒதுக்கீட்டிற்கு நாம்…
நாலடி நல்கும் நன்னெறி 18: – செய்யும் செயல்களுக்கேற்பவே நன்மை தீமை விளையும்: இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 17: கல்வியே உண்மையான அழகு- தொடர்ச்சி) செய்யும் செயல்களுக்கேற்பவே நன்மை தீமை விளையும் சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா உறுகாலத்து ஊற்றாகா ஆமிடத்தே ஆகும் சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால் இறுகாலத்து என்னை பரிவு (நாலடியார் 110) பதவுரை: சிறுகா=சிறுத்துப் போகா; குறைய மாட்டா; பெருகா=பெருத்துப் போகா; கூடா; முறை பிறழ்ந்து வாரா=முறை மாறி வாரா; உறுகாலத்து=துன்புறுங்காலத்து, ஊற்று ஆகா=ஊன்றுகோல் போல் துணை ஆகா ஆம் இடத்தே=ஆகும் காலத்தில் ஆகும்= நிகழும் சிறுகாலை=முற்காலத்து, பட்ட= உண்டாகிய, பொறியும்=நல்வினைகளும், அதனால்=ஆதலால், இறு…
வெருளி நோய்கள் 723 கனவு வெருளி: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 719 -722 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 723 723. கனவு வெருளி-Oneirophobia கனவு தொடர்பான பெருங்கவலையும் தேவையற்ற பேரச்சமும் கனவு வெருளி. கனவு பற்றிய இயல்புக்கு மீறிய பேரச்சமே கனவு வெருளி. உறங்கினால் தீய கனவுகள், பேய்க்கனவுகள் வரும், மார்பில் பேய் அமர்ந்துஅழுத்தி மூச்சுத்திணற வைக்கும் என்பன போனற் அச்சங்களால் தூங்குவதற்குக்கூட அச்சம் கொள்வர்.நல்ல எண்ணங்களை மனத்தில் கொண்டு படுக்கச் சென்றால் கனவு வெருளி வர வாய்ப்பில்லை. அச்சம் தரும் கதைகளையும் செய்திகளையும் படித்தலும் கேட்டலும் ஒரு முறை கெட்டக் கனவு…
செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-5(2010): இலக்குவனார் திருவள்ளுவன்
(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-4(2010):தொடர்ச்சி) செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-5(2010) இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். செம்மொழி ஏற்பளிப்பால் விளையும் நன்மைகள் யாவை என நான் உட்படப் பலரும் எழுதிய கட்டுரைகளைப் படித்தாலே அவை யாவும் காற்றில் கட்டிய கோட்டைகளோ என்று எண்ணத் தோன்றும். எனினும் செம்மொழி மாநாட்டை முன்னிட்டாவது இவற்றை நிறைவேற்றும் முயற்சிகளில் அரசுகள் இறங்கும் என நம்பிக்கை வைப்போம். ? இளம் தமிழறிஞர்களுக்கு விருதுகள் கொடுத் துள்ளார்களே. அது மகிழ்ச்சிக்குரிய செய்திதானே? # நாம் மேம்போக்காக எண்ணுவதால் நமது…
வெருளி நோய்கள் 719 -722 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 714 -718 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 719 -722 719. கற்பழிப்பு வெருளி – Esodophobia/Primeisodophobia/ Virginitiphobia/ Virgivitiphobia கற்பழிப்பிற்கு ஆளாக நேரிடும் என்ற அளவுகடந்த பேரச்சம் கன்னிமை வெருளி. கற்பழிப்பு வெருளி, கற்பிழப்பு வெருளி, கன்னியமை யழிப்பு வெருளி, கன்னிமை வெருளி என நால்வகையாகக் குறிப்பிட்டாலும் பொருள் ஒன்றுதான். எனவே சேர்த்தே தரப்பட்டுள்ளது. தனியாகவோ, கூட்டாகவோ கற்பழிக்கப்படுவோம் என்ற பேரச்சத்திற்கு ஆளாகி இரவில் வெளியே செல்வதைத் தவிர்ப்பர். இது போன்ற செய்திகளைப் படிப்பதாலும் பார்ப்பதாலும் அறிந்தவர்க்கு இத்துன்பம் நேர்ந்துள்ளதை அறிய…
வெருளி நோய்கள் 714 -718 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 709 -713 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 714 -718 714. கறி அப்ப வெருளி – Hamburgerphobia கறி அப்பம்(Hamburger) மீதான மிகையான பேரச்சம் கறி அப்ப வெருளி. மாட்டுக்கறி பயன்படுத்தப்பட்டிருக்குமோ என்று இந்துக்களும் பன்றி இறைச்சி பயன்படுத்தப்பட்டிருக்குமோ என்று இசுலாமியர்களும் கருதிக் கறிஅப்பம் மீது அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர். 00 715. கறித்துண்ட வெருளி – Biftekiphobia கறித்துண்டம்(steak) தொடர்பான வரம்பற்ற பேரச்சம் கறித்துண்ட வெருளி. காந்திநேவியன்(Scandinavian) மொழியில் steik என்றால் கறித்துண்டம் எனப் பொருள். 00 716….
தொல்காப்பியமும் பாணினியமும் – 10 : தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும். – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 9 : வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும். திருவள்ளுவரும், திருக்குறளும் உலகளாவிய நிலையில் புகழ்பெற்ற அளவுக்கு தொல்காப்பியமும், தொல்காப்பியரும் உலக அளவில் சிறப்படையவில்லை. தொல்காப்பியரும், அதங்கோட்டாசானும், பனம்பாரனாரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள் என வரலாற்று நிலையில் வரையறுக்கப்படுகிறது. தொல்காப்பியர் காலம் வடமொழி இலக்கண நூலான பாணினியின் காலமான கி.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கும், புத்தர் காலமான கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டது. தொல்காப்பியர்…
