குறட் கடலிற் சில துளிகள் 33. இடிக்குந் துணை இருப்போரைக் கெடுப்போர் யாருமிலர்: இலக்குவனார்திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 32. தக்கவர் இனத்தில் இணைந்தால் பகைவரால் யாது செய்ய இயலும்? –தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 33 இடிக்குந் துணை இருப்போரைக் கெடுப்போர் யாருமிலர் இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர். (திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், எண்: ௪௱௪௰௭ – 447) கடிந்துரைத்துக் கூறித் திருத்தும் தன்மையுடைய பெரியோரைத் துணையாகக் கொண்டவரை, எவர்தாம் கெடுக்கக்கூடிய வல்லமை உடையவர்? பதவுரை இடிக்கும் = கடிந்துரைத்து அறிவுரை கூறும்; துணையாரை=துணையாக இருந்து உதவி; ஆள்வாரை…
வெருளி நோய்கள் 539-543: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 534-538: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 539-543 539. ஐசுலாந்து வெருளி-Islandophobia ஐசுலாந்து(Island) தொடர்பானவற்றில் காரணமின்றிப் பேரச்சம் கொள்வதே ஐசுலாந்து வெருளி. ஐசுலாந்து நாடு, ஐசுலாந்து மக்கள், அவர்களின் நாகரிகம், பண்பாடு, பொழுதுபோக்கு முதலியன என ஐசுலாந்து தொடர்பானவற்றில் காரணமின்றி வெறுப்பும் பேரச்சமும் கொண்டிருப்பர். 00 540. ஐந்தாய ஆட்ட வெருளி -Yahtziphobia ஐந்தாய ஆட்டம்(the game Yahtzee) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஐந்தாய ஆட்ட வெருளி. ஐந்து ஆயம்(தாயக்கட்டை/கவறு//பகடைக்காய்) கொண்டு விளையாடும் ஆட்டம் ஐந்துஆய>ஐந்தாய ஆட்டம். 00 541. ஐந்தாம் எண்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : உம்மைத் தொடர்களில் ‘மற்றும்’ தேவையில்லை : இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது,இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : உம்மைத் தொடர்களில் ‘மற்றும்’ தேவையில்லை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை எனக் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மற்றும் எனச் சேர்ப்பது தவறாகும். மற்றும் என்பதை நீக்கிப் பின்வருமாறு குறிப்பிட வேண்டும். தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத் துறை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை…
வெருளி நோய்கள் 534-538: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 529-533: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 534-538 ஏளனமாகப்(Ridicule) பேசப்படுவது குறித்த பேரச்சம் ஏளன வெருளி.பொதுவிடங்களில் ஏளனமாகப் பேசப்படுவோம் என்று அஞ்சுதல்; இதனால் தரம் தாழ்த்தப்பட்டதாக வருந்துதல்; தன் மதிப்பு குறைவதாகப் பேரச்சம் கொள்ளல்; கேலிப்பொருள் ஆக்கப்பட்டதாக வருந்துதல் ஆகியன இத்தகையோருக்கு ஏற்படும்.தலைக்குனிவிற்கு ஆளாவோம் என்ற அச்சம், தாழ்வு மனப்பான்மை, தன்மதிப்புக் குறைப்பிற்கு ஆளாவோம் என்ற கவலை போன்ற வற்றால் கேலி செய்யப்பட்டாலும் கேலி செய்யப்படுவோம் என எண்ணினாலும் இப்பேரச்சம் வருகிறது.தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், தங்களைப் பிறர் ஏளனமாக எண்ணுவதாகக் கருதி ஏளன…
வெருளி நோய்கள் 529-533: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 524-528: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 529-533 ஏமாற்றம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஏமாற்ற வெருளி.இவ்வெருளி உடையோர் எண்ணங்கள் நிறைவேறாமற் போதல், நம்பிக்கைக் குலைவு, மனமுறிவு, மனக்கசப்பு, தோல்வியினால் விளையும் வெறுப்புனர்ச்சி போன்றவற்றிற்கு ஆளாகின்றனர்.00 ஏரி அல்லது சதுப்பு நிலம் குறித்துக் காரணமின்றி வரும் அச்சம் ஏரி வெருளி.ஏரி அல்லது சதுப்பு நிலத்தில் மூழ்கிவிடுவோம், ஏரி நீர் துன்பம் தரும், ஏரி உடைப்பெடுக்கும், ஏரி வறண்டால் வேளாண்மை முதலியன பாதிப்புறும் முதலிய கவலைகளுக்குத் தேவையின்றி ஆளாகி அளவு கடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.Limne…
தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 6 : பாணினியத்தின் சிறப்பு?!-தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 7 தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே தமிழ் நூல்களைக் காப்பதற்காக இயற்றப் பெற்ற தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் தமிழ்ச்சொற்களைக் கையாள்வதுதானே முறை. தமிழ் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவும் சமற்கிருதத்தை உயர்த்தும் நோக்கிலும் வையாபுரி போன்றோர் பல சொற்களையும் சமற்கிருதமாகத் தவறாகக் கூறுகின்றனர். தொல்காப்பியர் காலத்தில் எழுத்தமைப்பு உருவாக்கி அதன்பின் சொல் வளத்தை உருவாக்கிய சமற்கிருதச் சொற்கள் எங்ஙனம் தொல்காப்பியத்தில் இடம் பெற இயலும்? தமிழ் இலக்கணம் வகுக்க வந்த தொல்காப்பியர் எதற்கு வளமில்லாத…
சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 2: இலக்குவனார் திருவள்ளுவன்
(சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 1 தொடர்ச்சி) சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 2 நாம் செய்ய வேண்டியது என்னவாக இருக்க வேண்டும்? தமிழுக்குத் திட்டங்கள் தர வேண்டும். தரவில்லையே! ஒன்றும் செய்யவே இல்லையே! நமக்கு ஒன்றும் வேண்டா, செம்மொழி அறிவிக்கப்பட்ட பிறகு செம்மொழி விருது கொடுத்தார்கள். யாருக்கு? இளைய அறிஞர்களுக்கு ஆண்டுக்கு ஐவருக்குக் கொடுத்தார்கள். (அதிலும் சில ஆண்டுகள் குறைவாகக் கொடுத்தார்கள்.) ஒவ்வோர் ஆண்டும் சமற்கிருத அறிஞர்கள் 15 பேர், அரபி அறிஞர்கள் 3 பேர், பெருசியன் அறிஞர்கள் 3 பேர், பாலி/பிராகிருத…
வெருளி நோய்கள் 524-528: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 519-523: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 524-528 ஏணி குறித்த வரம்பற்ற பேரச்சம் ஏணி வெருளி.உயரத்தைக் கண்டு பயப்படுபவர்களுக்கும் ஏணி மீது அச்சம் இருக்கும்.ஏணியில் ஏறும் பொழுது அல்லது இறங்கும் பொழுது கால் தவறி விழுந்துவிடுவோம் அல்லது ஏணி புரண்டு விழுந்து விடும் என்றெல்லாம் தேவையற்ற கவலை கொள்ளேவார் ஏணி வெருளிக்கு ஆளாகின்றனர்.climac என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஏணி.00 ஏந்து(appliance) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஏந்து வெருளி.சமையலுக்குப் பயன்படும் ஏனங்கள் முதலான துணைப் பொருள்கள், அன்றாடத் தேவை நிறைவேற்றத்திற்கு உதவும் குளிர்ப்பி(Air…
சட்டச் சொற்கள் விளக்கம் 1011-1015 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1011-1015 1011. Automated teller machine தானியங்கிப் பணப் பொறி teller – கூறுபவர் என்னும் பொருளில் குறி சொல்பவர், வருவதுரைப்போர், கதை சொல்பவர், கதைஞர், கதைகூறு கலைஞர், கதை கூறுவோர்,, கதை எழுத்தாளர், கதையளப்பவர் எனப் பல பொருள்கள் உள்ளன. குழந்தை வழக்கில் பொய்யர், புளுகர் எனவும் பொருள்கள் உள்ளன. விரைவு காசாளர்(teller) என்பவர் பணப்பரிமாற்றங்களைக் கையாளும் வங்கி ஊழியர். காசாளர்(cashier) என்பவர் கடைகள், உணவகங்கள் போன்ற வணிக…
வெருளி நோய்கள் 519-523: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 514-518: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 519-523 எளிமைபற்றிய வரம்பற்ற பேரச்சம் எளிமை வெருளி.எளிய நிலையில் இருப்பதால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அதனாலும் எளிமை வெருளிக்கு ஆளாவர்.00 எறும்பு குறித்துக் காரணமில்லாமலே அஞ்சுவது எறும்பு வெருளி.எறும்பு குமுக ஒழுக்கம் உடைய செய்தியைத் தம்மிடையே நேர்த்தியாகப் பரிமாறிக் கொள்ளும் திறன் மிக்க உயிரியாகும். எனினும் இது கடித்தால் வலிக்கும் என அஞ்சுவர். கட்டெறும்பு, செவ்வெறும்பு முதலான சில வகை எறும்புகள் கடித்தால் நீண்ட நேரம் வலி இருக்கும். எனவே, எறும்பைக் கண்டால், சில இடங்களில்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது,இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது : இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 12 : ‘என’, ‘இனி’ அடுத்து வல்லினம் மிகும் : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது, இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது “ஒரு ஊழியரேனும்’ எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இது தவறு ஆங்கிலத்தில் உயிரெழுத்துக்களுக்கு முன் என்ன குறிப்பிட வேண்டும் என நன்கு அறிவோம். கேள்வி: ‘an’ என உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன்னால் சேர்ப்போம். இவ்வாறு தமிழிலும் உள்ளதா? விடை:…
வெருளி நோய்கள் 514-518: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 509-513 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 514-518 உயிர்த்தெழு நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் எழு நாள் வெருளி.இயேசு கிறித்து கி.பி.33 இல் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம்நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிகும் நாளே உயிர்த்தெழு நாள் (Easter). ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா என்றும் பாச்சா(Pascha) என்றும் சொல்வர். புனித வெள்ளியின் மூன்றாம்நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால் இதனை உயிர்ப்பு ஞாயிறு(Resurrection Sunday) என்றும் சொல்வர்.பாச்சா(Pascha) என்னும் அரமேயச் சொல்லுக்குக் ‘கடந்து போதல்’ எனப் பொருள். இசுரேல் மக்கள் எகித்தில் இருந்து…
