கலைஞர் பல்கலைக்கழகம் தவறில்லை. தமிழ்ப்போராளி இலக்குவனார் பெயரிலும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்

நேரலை: கலைஞர் பல்கலைக்கழகம்.. பாமக கேட்கலாமா? வன்னியர்களுக்கு கலைஞர் செய்த துரோகம் | TNMedia Debate நெறியாளர் – தொகுநர், ஊடகர் சிவசங்கர் உரைஞர்கள் தமிழ்த்தேசச் செயற்பாட்டாளர் செந்தமிழ்க் குமரன் மூத்த தமிழறிஞர் இதழாளர் இலக்குவனார் திருவள்ளுவன் எழுத்தாளர், மூத்த ஊடகர் பவா சமுத்துவன்

சட்டச் சொற்கள் விளக்கம் 961-965 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 956-960 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 961-965 961. At sight கண்டவுடன்   கண்ட நிலை     காட்டியவுடன்‌   பார்த்த உடன்   “At sight” என்பது சட்டப் பிரிவிலும் நிதித் துறையிலும் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கொண்டுள்ளது. சட்டப் பிரிவில், “at sight” என்பது ஒரு கடமை அல்லது பணம் செலுத்த வேண்டிய தேவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைப் பற்றிக் குறிக்கும்.   பணப் பரிமாற்றங்கள், ஒப்பந்தங்களில்,…

குறள் கடலில் சில துளிகள் . 26. விருப்பத்தைப் பகைவர் அறியப் புலப்படுத்தாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் . 25. உன்னையே வியந்து கொள்ளாதே! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 26. விருப்பத்தைப் பகைவர் அறியப் புலப்படுத்தாதே! காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் (திருவள்ளுவர்,  திருக்குறள், அதிகாரம்:குற்றங்கடிதல் குறள் எண்: ௪௱௪௰ – 440) பதவுரை: காதல-காதலித்த பொருள்கள்; விரும்புகின்ற பொருள்கள்; காதல்-விருப்பம்; அறியாமை-தெரியாமல்; உய்க்கிற்பின்-செலுத்த வல்லனாயின். பொழிப்பு: தன்விருப்பம் வெளிவராவாறு அடக்கி வாழ்ந்தால், பகைப்பார் தோற்பார் (பேரா.வெ.அரங்கராசன்). தனக்கு விருப்பமானவற்றைப் பிறர் அறியாதபடி அடக்கி வைத்திருப்பவனிடம் பகைவரின் வஞ்சகச்…

விலங்கறிவியல் – இலக்குவனார் திருவள்ளுவன்

விலங்கு என்பது குறுக்காக நடப்பவற்றைத்தான் குறிப்பிடும். கைகளில் குறுக்காக மாட்டப்படும் சங்கிலிக்காப்பை விலங்கு என்கிறோம் அல்லவா? வளைந்த அமைப்பு உள்ளதுதானே வில். எனவே, குறுக்காக உடலுடைய உயிரினங்கள் விலங்குகள் எனப் பட்டன. எனினும் அறிவியலில் பறவை வகைகளும் விலங்கு வகையில் அடங்கும். ஏன், மனிதனே ஒரு மன்பதை விலங்குதானே! தமிழ்ப் பெருநிலப்பரப்பு, புவி அமைந்த தொடக்கக் காலத்தில் இன்றைய ஆப்பிரிக்கா முதல் ஆசுதிரேலியா வரை இருந்தமையால் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்திருந்தன. அவற்றையெல்லாம் ஆராயும் நோக்கில் மாணாக்கர் அறிவு வளம் பெருக வேண்டும். பொதுவாக இப்புவியில்…

நாலடி நல்கும் நன்னெறி 8 : காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை  – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 7 : பயனின்றிச் சேர்ப்போர் இழப்பர் – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 8 காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப் பல்கழன்று பண்டம் பழிகாறும் – இல்செறிந்து காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே ஏம நெறிபடரும் ஆறு. பொருள்: சொற்கள் தளர்ந்து கைத்தடியுடன் நடக்கும் முதுமை வரையும் காமவழியில் செல்வார்க்குப் பேரின்ப நெறியில் செல்வதற்கு வழியில்லை. சொல் விளக்கம்: சொல்=சொற்கள்; தளர்ந்து=வலிமை குறைந்து(குழறி); கோல்=ஊன்றுகோலை; ஊன்றி=ஊன்றிக்கொண்டு; சோர்ந்த=தள்ளாடிய; நடையினர் ஆய்=நடையை உடையவராய், பல்=பற்கள், கழன்று=உதிர்ந்து,…

சங்கப்புலவர்கள் பொன்னுரை – 10 : பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!- இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9-தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 10 பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!  “பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக”                   ஐங்குறுநூறு 5. 2 பதவுரை : பிணி – நோய்; சேண் நீங்குக – தொலைவிற்குச் செல்லுக; அஃதாவது இல்லாமல் போகுக. ஐங்குறுநூற்றுப் பாடலில் புலவர் ஓரம்போகியார் “பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக” என வாழ்த்துகிறார். பசி இல்லாமல் ஆவதும் நோய் தொலைவில் நீங்குவதும் இயல்பாக நடைபெறுமா?…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9 : பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 8 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9 பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்! “செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான “  (தொல்காப்பியம், பொருளதிகாரம், பொருளியல், நூற்பா 15) “செறிவு என்பது அடக்கம்; நிறைவு என்பது அமைதி; செம்மை என்பது மனங்கோடாமை; செப்பு என்பது சொல்லுதல்; அறிவு என்பது நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் துணிதல்; அருமை என்பது உள்ளக் கருத்து அறிதலருமை” என்று இளம்பூரணர் உரை வகுத்துள்ளார். செப்பும் என்பதற்குக் கூறத் தகுவன கூறலும் என்கிறார் பேரா.முனைவர்…

குறள் கடலில் சில துளிகள் . 25. உன்னையே வியந்து கொள்ளாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

( குறள் கடலில் சில துளிகள் 24. கஞ்சத்தனத்தை என்றும் எண்ணாதே! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 25. உன்னையே வியந்து கொள்ளாதே! வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.  ( திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், எண்: ௪௱௩௰௯ – 439) பொழிப்பு: எப்பொழுதும் தன்னை வியந்து கொண்டாடாதே; நன்மை தராத செயல்களை மனத்தாலும் விரும்பாது ஒழிக! (சி.இலக்குவனார்) பதவுரை: வியவற்க-வியந்து கொள்ளற்க, பெருமிதம் கொள்ளற்க, புகழ்ந்து கொள்ளற்க; எஞ்ஞான்றும்-எப்பொழுதும்; தன்னை-தன்னை; நயவற்க-விரும்பாதீர்; நன்றி-நன்மை; பயவா-விளைக்காத; வினை-செயல்….

சட்டச் சொற்கள் விளக்கம் 956-960 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 951-955 : இலக்குவனார் திருவள்ளுவன்) சட்டச் சொற்கள் விளக்கம் 956-960 956. At large கட்டுப்பாடின்றி கட்டுப்பாடற்று   பொதுவாக   பேரளவில்   பொதுவாக நாம் large என்றால் பேரளவு அல்லது  பெரிதான என்னும் பொருள்களில்தான் எண்ணுகிறோம்.   தடையற்ற நிலை, தற்சார்பு(சுதந்திர) நிலை, அகல்விரிவு, அகல்விரிவான, முழு நிறை நுணுக்கவிவர விளக்க இயல்பு, பரவல் நிலை, தனிக்குறிப்பீடற்ற பொதுநிலை, குறிப்பிட்ட தனிஅலுவலற்ற பொதுத்தன்மை, முற்கால இரு நெடிலளவொத்த இசைமானம், பரந்தகன்ற, ஏராளமான, வளமான, பலவற்றை, உள்கொள்ளவல்ல, எல்லாம்…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! -2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 1 – தொடர்ச்சி) Jan 5, 2011   எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! -2   ** இந்தக் கோப்பிலுள்ள மடல்களில் திருவள்ளுவர் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அரசு மடல்கள், ஆணைகளில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் தனியார் அலுவலகங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பிட வேண்டும் என்ற உணர்வு இயல்பாய் அமைதல் வேண்டும். தமிழராய் இருந்தாலும் இல்;லாவிட்டாலும் அரசு, அரசு சார் பணிகளில் உள்ள ஒவ்வொருவரும் அரசாணைக்கு இணங்கத் திருவள்ளுவர் ஆண்டு குறிக்க வேண்டும். எழுத்துப் பணியினர் குறிக்க மறந்தாலும்…

நாலடி நல்கும் நன்னெறி 7 : பயனின்றிச் சேர்ப்போர் இழப்பர் – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 6 – பயன்பாடு இல்லாப் பொருளால் என்ன பயன்? – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 7 பயனின்றிச் சேர்ப்போர் இழப்பர் உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும் கெடாஅத நல்லறமும் செய்யார் – கொடாஅது வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட ! உய்த்தீட்டும் தேனீக் கரி. -நாலடியார், செல்வம் நிலையாமை, 10 பொருள்:  நல்ல ஆடைகளை உடுத்தாமலும் சுவையான உணவுகளை உண்ணாமலும் வறுமையாளர்களுக்குக் கொடுக்காமலும் அழியாக நல்லறச் செயல்கள் செய்யாமலும் உடலை வருத்திச் செல்வத்தை வெறுமனே சேர்த்து வைப்பவர் அதனை…

 வலசை – migration : இலக்குவனார் திருவள்ளுவன்

வலசை – migration   இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்லும் பறவைகள் புலம் பெயர் பறவைகள்/transit birds எனப்படும். இவற்றை அயல் புலத்திலிருந்து வருவன, அயற்புலத்திற்குச் செல்வன என இருவகையாகப் பிரிப்பர். இடம் பெயராமல் தாய்மண்ணிலேயே தங்கும் பறவைகளும் உள்ளன.    மைகிரேசன் (migration) எனில் குடிப்பெயர்ச்சி எனத் தொல்லியல், வங்கியியல், பொருளியல் ஆகியவற்றிலும் புலப்பெயர்ச்சி என வேதியியல், தகவல் நுட்பவியல் ஆகியவற்றிலும் வலசைபோதல் என மீனியல், உயிரியல், காலநடைஅறிவியல் ஆகியவற்றிலும் புலம்பெயர்தல் என மனையியலிலும் சட்டவியலிலும் இடம்பெயர்தல் என அரசியலிலும் குடிபெயர்வு எனச்…