நாலடி நல்கும் நன்னெறி 3 – பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்!: இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 2.: இறப்பவரைப் பார்த்து இருப்பவர் உணர்க!-தொடர்ச்சி) பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்! இழைத்தநாள் எல்லை இகவா ; பிழைத்தொரீஇக் கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; ஆற்றப் பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் ; நாளைத் தழீஇம் தழீஇம் தண்ணம் படும். -நாலடியார், செல்வம் நிலையாமை , 6 பொருள்: வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட கால அளவைக் கடந்து எமனிடமிருந்து தப்பிக் குதித்து ஓடிப் பிழைத்தவர் இல்லை! நாளைக்கே (விரைவில்) உங்களது பிணப்பறை ‘தழீம் தழீம்’ என்னும் ஓசையுடன் எழும். எனவே, பெரும் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவர்களே!…
நாலடி நல்கும் நன்னெறி 2.: இறப்பவரைப் பார்த்து இருப்பவர் உணர்க!-இலக்குவனார் திருவள்ளுவன்
(நிலையாமை உணர்ந்து நல்லறம் புரிக!-தொடர்ச்சி) இறப்பவரைப் பார்த்து இருப்பவர் உணர்க! சென்றே யெறிப வொருகால் சிறுவரை நின்றே யெறிப பறையினை – நன்றேகாண் முக்காலைக் கொட்டினுண் மூடித்தீக் கொண்டெழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து. (நாலடியார் பாடல் 24) பொருள்: (பறை அடிப்போர்) இறந்தவர் வீட்டிற்குச் சென்று ஒரு முறை பிணப்பறையை அடிப்பர்; சற்று நேரம் சென்றதும் மீண்டும் ஒரு முறை அடிப்பர்; மூன்றாவது முறை பறை அடிக்கும் பொழுது இனி இறக்கப் போகிறவர்கள், பாடையில் இறந்தவர்களைத் துணியால் மூடி மறைத்துத் தூக்கிக் கொண்டு, நெருப்புச்…
சங்கப்புலவர்கள் பொன்னுரை – 5: உன்னுடைய இன்பத்திற்காகப் பிறருக்குத் துன்பம் செய்யாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 4: தொடர்ச்சி) சங்கப்புலவர்கள் பொன்னுரை – 5: உன்னுடைய இன்பத்திற்காகப் பிறருக்குத் துன்பம் செய்யாதே! “தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னாசெய்வது நன்று ஆகுமோ…” கபிலர், கலித்தொகை 62: 7, 8 – வெண்கலிப்பா – கலித்தொகை – 62, குறிஞ்சிக் கலி – 26 – தலைவன் கூற்று– பாடியவர்: கபிலர்– திணை: குறிஞ்சிகி.மு. காலத்துப் பாடல் தமக்கு இனிதாய் இருக்கின்றது என்று கருதிப்…
ஆளுமையர்உரை 124 & 125; என்நூலரங்கம்-கருவிகள் 1600
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௨ – 642) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் ஆளுமையர் உரை 124 & 125; என் நூலரங்கம் இணையவழி யரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 பங்குனி 09, 2056 ஞாயிறு 23.03.2025 காலை 10.00 மணி தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன் “தமிழும் நானும்” –…
நிற வகைகள்-இலக்குவனார் திருவள்ளுவன்
நிற வகைகள் புதிய அறிவியல் – செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 12:03 இதிநேTuesday, September 18, 2012 12:03 IST பால் போல் வெண்ணிறம் கொண்டவனைப் பால்வண்ணன் என்றும் முத்துபோல் வெண்ணிறம் கொண்டவனை முத்து வண்ணன் என்றும் சொல்வது பழந்தமிழர் வழக்கம். மலர்களின், விலங்குகளின் வண்ண அடிப்படையிலும் நிறங்களைக் குறிப்பிட்டுள்ளனர். இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இந்நிறங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. நிறங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை…
வழிவழியாகச் சிறந்து வாழ்வாயாக…! – சங்கப்புலவர்கள் பொன்னுரை – 4: இலக்குவனார்திருவள்ளுவன்
(சங்கப்புலவர்கள் பொன்னுரை – 3 தொடர்ச்சி) வழிவழியாகச் சிறந்து வாழ்வாயாக…! வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்துபொலிமின்!(தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல் 422) கடைச்சங்கக் காலத்தைத்தான் நாம் சங்கக்காலம் என்கிறோம். அதற்கு முற்பட்ட சங்கத்தைச் சேர்ந்ததுதான் தொல்காப்பியம். எனவே, தொல்காப்பியப் பொன்னுரைகளையும் சங்க இலக்கியப் பொன்னுரையில் சேர்த்துப் பார்ப்போம். கடவுள் வணக்கம் என்பது தமிழர்க்குரியதுதான். ஆனால், அதில் மூடநம்பிக்கை கலக்கக் கூடாது. தெய்வ முணாவே மாமரம் புட்பறைசெய்தி யாழின் பகுதியொடு தொகைஇஅவ்வகை பிறவுங் கருவென மொழிப. …
இலக்குவனார் திருவள்ளுவன் முதலானவர்க்கு நூற்பரிசு வழங்கு விழா
புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் மகளிர் நாள் விருதுகள் வழங்கல் நூற்போட்டிப் பரிசுகள் வழங்கல் மாசி 08, 2056 சனி 22.03.2025 மாலை 5.30 மணி இடம் புதுவை தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி 10 பிரிவுகளில் தமிழ் நூல்களுக்கும் ஓர் ஆங்கிலப் பிரிவிற்கும் மும்மூன்று பரிசுகள் வழங்கு விழா. பொதுக்கட்டுரைப் பிரிவில் முதல் பரிசு பெறுநர் இலக்குவனார் திருவள்ளுவன்
ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாள்
ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாள் “தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலை நிறுத்தி முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரையும் உறுதி குலையாது, படைநடத்தி, தான் வரித்துக் கொண்ட உயரிய லட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோ இறுதிக் கணம் வரை துணிவோடு களமாடி பிரபாகரன், 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாள், வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை தமிழீழ மாவீரர் பணிமனை அறியத் தருகிறது. பிரபாகரன், வீரச்சாவினை உறுதிப்படுத்தி நெஞ்சைப்…
நிலையில்லாத உலகில் நிலைத்தப் புகழைப் பெற…! மன்னனுக்கு அறிவுறுத்திய புலவர்: இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 2 : தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 3 நிலையில்லாத உலகில் நிலைத்தப் புகழைப் பெற…! மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே! – புறநானூறு 165– திணை : பாடாண் திணை– துறை : பரிசில் விடை– பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.– பாடப்பட்டோன் : குமணன். 15 அடிகள் கொண்ட புறநானூறு 165 ஆம் பாடலின் முதலிரு அடிகளே இவை. இவ்வுலகம் நிலையில்லாதது. நிலையில்லா உலகில் நிலைபெற வேண்டின் புகழை நிலைநிறுத்த…
குறள் கடலில் சில துளிகள் 22. உன்னைத் திருத்திய பின் ஊரைத் திருத்து! – இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 21. வருமுன் காத்திடு! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 22. உன்னைத் திருத்திய பின் ஊரைத் திருத்து! தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின் என்குற்றம் ஆகும் இறைக்கு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், குறள் எண்: 436) தன் குற்றம் கண்டறிந்து நீக்கிப் பிறர் குற்றம் காண்பவனுக்கு எக்குற்றமும் வராது என்கிறார் திருவள்ளுவர். ஆளுமையியலாளர்கள், பிறர் குற்றங்களைப் பார்க்கும் முன்னர் முதலில் உன்னைப் பார் (Look at yourself first, before looking on to others) என்கின்றனர்….
முடியுமா, முடியாதா? உண்மையைச் சொல்!-இலக்குவனார் திருவள்ளுவன், தாய் மின்னிதழ்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 1, தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 2 முடியுமா, முடியாதா? உண்மையைச் சொல்! ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும்,ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவதுஇல் என மறுத்தலும், இரண்டும், வல்லேஇரப்போர் வாட்டல் – புறநானூறு 196– திணை : பாடாண் திணை– துறை: பரிசில் கடா நிலை– ஆவூர் மூலங்கிழார் பொருள்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், பரிசில் தராமல் காலந் தாழ்த்திய பொழுது ஆவூர் மூலங்கிழார்…
தமிழ்க் காப்புக் கழகம்: ஆளுமையர் உரை 122 & 123; எம் நூலரங்கம்
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று. (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௧ – 641) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் ஆளுமையர் உரை 122 & 123; எம் நூலரங்கம் கூட்ட இணைப்பு கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 மாசி 25, 2056 ஞாயிறு 09.03.2025 காலை 10.00 மணி தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன் “தமிழும் நானும்” – ஆளுமையர்கள்…
