உலகத் திருக்குறள் மையம், திருக்குறள் ஆய்வரங்கம் 1021

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை உலகத்திருக்குறள் மையம் இணைந்து நடத்தும் வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் 1021 ஆவணி 02, தி.ஆ.2054 / 19.08.2023 சனி காலை 10.00 இடம் : வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை. திருவள்ளுவர் வாழ்த்து வரவேற்புரை ஆய்வாளர்கள் அரங்கம் பொருள்: வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வுகள் 2. திருக்குறள் சமூகவியல் ஆய்வுகள் திருக்குறள் ஆய்வாளர் ஏ.சிவபாக்கியம் 3. திருக்குறள் சான்றோர்கள் பற்றிய ஆய்வுகள் அருள்திரு திருத்குறள் தூதர் சு.நடராசன், சென்னை சிறப்பு ஆய்வுரைகள் புனித நூல்…

மும்மொழித்திணிப்பு எதிர்ப்பு இணைய உரையரங்கம்

மும்மொழித்திணிப்பு எதிர்ப்பு இணைய உரையரங்கம் மாசி 07, 2054 / 19.02.2023 காலை 10.00 கூட்ட எண் Meeting ID: 864 136 8094  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு  https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை:  கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் எதிர்ப்புரைகள்: முனைவர் நா.இளங்கோ முனைவர் வெற்றிச் செழியன் தோழர் தமிழ்க்கதிர் நிறைவுரை:  தோழர் தியாகு நன்றியுரை: திருவாட்டி புனிதா சிவக்குமார் தமிழ்க்காப்புக் கழகம் தமிழ்நாடு–புதுச்சேரி தமிழ் அமைப்புகள்

அறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே! 7/8

(ஏ, தாழ்ந்ததமிழகமே! 6/8 தொடர்ச்சி) [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] அறிவுகெட்ட தமிழகம் எங்கே – எடுத்துக் கொள்ளுங்களேன், ஒரு பத்திரிகை “பகவத் கீதையிலே நாலு சாதி இருக்கவேண்டும்” என்று பரமாத்மா கூறியிருக்கிறார் என்று எழுதும். “அது யார் சொன்னது? பகவத் கீதையிலே சாதிக்காதாரமில்லை” என்று ஒரு பத்திரிகை எழுதும், மற்றொரு பத்திரிகை, “நீங்கள் கீதையை வேறு விதமாக…

அறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே! 6/8

(ஏ, தாழ்ந்ததமிழகமே! 5/8 தொடர்ச்சி) [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] இருந்தால் என்ன? இறந்தால் என்ன? அதனால்தான் நமது கவி பாரதிதாசன் இந்த உலகத்தைப் பற்றிப் பாடுகிறார். இந்த உலகத்தில் நீ பிறந்தது வாழ; வாழ என்றால் நிம்மதியுடன் வாழ; பிறரைச் சுரண்டாமல் வாழ; பிறரை வஞ்சித்தால்தான் வாழலாம் என்ற எண்ணமில்லாமல் வாழ; சுதந்திரமாய் வாழ என்கிறார். உருதிலே…

அறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே!: 5/8

(ஏ, தாழ்ந்ததமிழகமே! 4/8 தொடர்ச்சி) [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] அவர் செய்தது நம்பத் தகாதவற்றை நம்புவதா? நம்பும்படி நாட்டு மக்களை நிருப்பந்திப்பதா? இதைவிட நயவஞ்சகச் செயல் வேறொன்றுமில்லை. அந்த உலகமே வேண்டாமென்று இந்த உலகத்துக்கு வந்தார். வந்து கடவுள் முதற் கொண்டு கருப்பத் தடை வரைக்கும், காதலிலிருந்து விதவை மறுமணம் வரைக்கும், சுண்ணாம்பு இடிக்கிற பெண்ணின் பாட்டிலிருந்து…

ஏ, தாழ்ந்த தமிழகமே! – 4/8

(ஏ, தாழ்ந்ததமிழகமே! 3/8 தொடர்ச்சி) ஏ, தாழ்ந்த தமிழகமே! 4/8 [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] கற்பனைக் கொலை இன்று நாடக மேடைகளில் நடக்கிற வள்ளித் திருமணத்திற்கும். அதிலிருந்துதான் இது கற்பனையானதோ என்று எண்ணும்படியான ஓர் இயற்கை நிகழ்ச்சி சங்க இலக்கியத்தில் வருணிக்கப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். பண்டைக் காலப் புலவர்களின் கள்ளங் கபடமற்ற உள்ளத்தையும், இடைக்காலத்திலே இரட்டை…

பேரறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே! : 3/8

(ஏ, தாழ்ந்ததமிழகமே! 2/8 தொடர்ச்சி) ஏ, தாழ்ந்த தமிழகமே! – 3/8 [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] புலவர்களுக்கே பழக்கம் ஒருவர் எழுதின புத்தகத்திற்கு மறுப்போ அதில் ஏதாவது குறையோ காணாவிட்டால், சில புலவர்களுக்குத் தூக்கமே வராது. திருவிளையாடல் புராணத்திற்கு விளக்கவுரை என்று திரு.வி.கலியாணசுந்தரனாரால் ஒரு புத்தகம் பிரசுரிக்கப்படும். அந்தப் புத்தகம் அச்சில் இருக்கின்ற அதே நேரத்தில், அதே…

பேரறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே!: 2/8

(ஏ, தாழ்ந்த தமிழகமே!1/8 தொடர்ச்சி) ஏ, தாழ்ந்த தமிழகமே!: 2/8 [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] சங்க இலக்கியம் கவிஞர்களையும், மற்றவர்களையும் அன்று போற்றாததற்கும், இன்று போற்றுதற்கும் இன்னுமொரு காரணமுண்டு. சங்க இலக்கியங்களிலே, நமது கண்ணும் கருத்தும் படாதபடி திரையிட்டு வந்தார்கள். உங்களில் பலர் சங்க இலக்கியங்களைப் படித்திருக்கலாம். சிலர் புரிந்து கொண்டிருக்கலாம்; சிலர் புரிந்தது போல் பாவனை…

பேரறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே!

ஏ, தாழ்ந்த தமிழகமே! 1/8 [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] புரட்சியின் சிகரம் தலைவர் அவர்களே! அருமைத் தோழர்களே!! மிக உற்சாகத்துடன் ஒரு கவிக்கும் (பாரதிதாசன்) ஒரு பேராசிரியருக்கும் (பேராசிரியர் கா. சு. பிள்ளை) சிறந்த முறையிலே பாராட்டுதல் நடத்துகிற இந்த உங்கள் சம்பவத்திலே, நான் கலந்துகொண்டு பேசுவதற்கும், இதில் பங்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கும் எனது…

தந்தை பெரியார் சிந்தனைகள் : நூலாசிரியரைப் பற்றி. . .

(தந்தை பெரியார் சிந்தனைகள் 42 இன் தொடர்ச்சி) இந்நூலாசிரியரைப் பற்றி. . . 85 அகவையைக்(பிறப்பு: 27.8.1916) கடந்த நிலையிலுள்ள இந்நூலாசிரியர் பி.எசு.சி., எம்.ஏ., எல்.டி, வித்துவான், பிஎச்.டி., டி.லிட் பட்டங்கள் பெற்றவர். (குறிப்பு – இக்குறிப்பு நூல் வெளிவந்த பொழுது எழுதப்பெற்றது. முனைவர் ந.சுப்பு(ரெட்டியார்) 2006 மேத்திங்கள் முதல் நாள் மறைந்தார். ) ஒன்பதாண்டுகள் துறையூர் உயர் நிலைப்பள்ளி நிறுவனர், தலைமை யாசிரியராகவும் (1941-50), காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் – துறைத் தலைவராகவும் (1950-60), பதினேழு ஆண்டுகள்…

தந்தை பெரியார் சிந்தனைகள் பின்னிணைப்பு 1 & 2

(தந்தை பெரியார் சிந்தனைகள் 41 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 42 பின்னிணைப்பு-1 சவகர்லால் நேரு மறைந்த போது அவர் நினைவாக நேரு அவர்களைப் பற்றி அறிஞர் கருத்துகளைத் திரட்டி ‘இந்தியப் பேரொளி’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டது கழகம். அங்ஙனமே அறிஞர் அண்ணா மறைந்தபோது அம்முறையில் தொகுத்து ‘தமிழ்ப் பேரொளி’ என்ற தலைப்பில் வெளியிட்டது. தந்தை பெரியார் மறைவு நினைவாக இங்ஙனமே ஒருநூல் வெளிவரத் திட்டமிட்டது கழகம். ஆனால் எக்காரணத்தாலோ நூல் வெளிவரவில்லை. அதற்குக் கழகம் வேண்டியபடி 18.2.1974இல் தந்தை பெரியாரைப்பற்றி…

தந்தை பெரியார் சிந்தனைகள் முடிவுரை: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 40 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 41 முடிவுரை  முடிவுரை: என் பேச்சுகளுக்கு மூல மனிதராக இருக்கும் நாயக்கர் வாழ்க்கைக் குறிப்புகளையும் அவரது தோற்றத்தைப் பற்றியும் இன்று விளக்கப்பெற்றது. மொழிபற்றிய தோற்றம் வரலாற்று அடிப்படையில் விளக்கப்பெற்றது. அடுத்து இதன் அடிப்படையில் எது தமிழ் என்பது தெளிவாக்கப் பெற்றது. பலகால உழைப்புதான் மொழியாக அமைந்தது என்று சுட்டப்பெற்றது. மொழி ஆராய்ச்சியில் தெய்வக்கூறு பெரியரால் வெறுக்கப்பெற்றது என்றும், மூளையின் வளர்ச்சி காரணமாகத்தான் மொழி வளர்ந்தது என்றும் கூறி கிளியின் பேச்சில் மூளையின் கூறு…