பன்னாட்டுக் கருத்தரங்கம் : காலம்தோறும் தமிழ், சென்னை

பன்னாட்டுக் கருத்தரங்கம் : காலம்தோறும் தமிழ் தை 29, 2048 –  11.02.17 பள்ளிக்கரணை , சென்னை ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா  ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி, சென்னை ஆதிரா பதிப்பகம், சென்னை நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற தை 29, 2048 / 11.02.17 சனிக்கிழமை அன்று. அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்! ஆதிரா முல்லை

திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உரைநயங்களும் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

கார்த்திகை 22, 2047 / 07.12.2016 அன்று கே.எசு.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள, திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உரைநயங்களும் என்ற தலைப்பில் நடைபெறும் இரண்டாவது பன்னாட்டுக் கருத்தரங்கத்துக்குப் பல்வேறு மொழிகளில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகளையும் பல்வேறு உரையாசிரியர்களின் உரை நயங்களையும் ஒப்பீட்டு முறையிலும் திறனாய்வு முறையிலும் எடுத்துரைக்கும் ஆய்வுக்கட்டுரைகள் வந்துள்ளன. கட்டுரை அனுப்பிய பேராளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் கட்டுரை வழங்குவதற்கான இறுதி நாள்  ஐப்பசி 22, 2047 / 07.11.2016. திருக்குறள் மொழிபெயர்ப்புகள் குறித்தோ உரைகள் குறித்தோ எழுதப்படும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. சிறந்த கட்டுரைகளுக்குப்…

கீழடி அகழாய்வுப் பாதுகாப்பு இயக்கம் – உருவாக்கப்பட்டது

கீழடி அகழாய்வுப் பாதுகாப்பு இயக்கம் – உருவாக்கப்பட்டது   கீழடி அகழாய்வில் கிடைக்கப் பெற்ற தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க 5000த்திற்கும் அதிகமான தொல்லியல் பொருட்களைத் தமிழக மக்கள் எளிதில் கண்டுணரும் வண்ணம், கீழடித் தொல்லியல் பொருட்களைத் தமிழகத்தில் வைத்து பாதுகாக்கும் நோக்கோடு கடந்த புரட்டாசி 16, 2047 / 02.10.2016 அன்று பல்வேறு முற்போக்கு இயக்கங்கள் ஒன்றிணைந்து “கீழடி அகழாய்வுப் பாதுகாப்பு இயக்கம்” உருவாக்கப்பட்டுள்ளது.   கீழடி அகழாய்வில் கிடைக்கபெற்ற ஏறக்குறைய 5000 தொல்லியல் பொருட்களை முறையாக ஆவணம் செய்து, அதனை மக்கள் காணும்…

வரும் ஆண்டில் தென் குமரியில் உலகத் திருக்குறள் மாநாடு

தென் குமரியில்  உலகத் திருக்குறள்  மாநாடு   மொரிசியசு நாட்டிலுள்ள புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் அமைப்பு, சப்பானிய, கொரிய, சீனக் கூட்டுறவோடு சென்னையில் செயல்பட்டுவரும் ஆசியவியல் நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களோடு இன்னும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த அமைப்புக்களும் இணைந்து  அனைத்துநாட்டுக் கூட்டு முயற்சியாகத் தமிழகத்தின் தென்கோடிக் குமரியில் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டினை அடுத்து வரும் வைகாசி 03-05 / 2048 / 2017ஆம் ஆண்டு மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களில் மிகச் சிறப்பாக நடத்தவிருக்கின்றன.   அனைத்துலகு நோக்கிய திருக்குறளின்…

உலக இசுலாமியத் தமிழ் இலக்கிய மாநாடு – கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

இலங்கை இசுலாமிய இலக்கிய ஆய்வகம் இவ்வருட இறுதிக்குள் உலக இசுலாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்தவுள்ளது.    இவ்விழாவை முன்னிட்டு நடத்தப்படவுள்ள ஆய்வரங்குகளுக்கான கட்டுரைத் தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.    கட்டுரைகள் கிடைப்பதற்குரிய இறுதி நாள் : புரட்டாசி 16, 2047 / செப்டம்பர் 30, 2016 கட்டுரைகளை எழுதுவதற்கும் பங்கேற்பதற்கும் தேச இன வரம்புகளில்லை.  கட்டுரைகள் ஒரு குழுவினரால்  ஆய்விடப்பட்டுச் சிறந்தவை ஏற்றுக் கொள்ளப்படும்.   கட்டுரைத் தலைப்புகள்.  01. தற்கால இலக்கியம் 01. முசுலிம் படைப்பாளிகளின் வலைத்தளப்பதிவுகள் 02. 1970 களின் பின்னரான…

உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளிவிழா

    வணக்கம்! உலகத் தமிழ் அமைப்பு 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்று வணிக நோக்கமற்ற நிறுவனமாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு, அமெரிக்க நாட்டின் சட்ட திட்டங்களுக்கு முழுவதுமாக உட்பட்டு, சிறப்பாக இயங்கிக்,  கடந்த 25ஆண்டுகளாக நற்பணியாற்றி வருகின்றது.   தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பேணிப் பாதுகாத்து மேலும் செழிப்புடன் வளர்வதற்காகவும்;  உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களின் நலன்களுக்காகவும்; இவற்றுடன் மிகவும் முதன்மையான குறிக்கோளான தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து, தன்னாட்சி உரிமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும், உலகத் தமிழ் அமைப்பு கடந்த 25ஆண்டுகளாக அயராது உழைத்து வருகின்றது.   உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. உலகின் பல நாடுகளிலும் இருந்து…

பன்னாட்டுக் கருத்தரங்கம் – நூல் வெளியீட்டு விழா, அண்ணாமலைப்பல்கலைக்கழகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, சென்னை கலைஞன் பதிப்பகம் இணைந்து நடத்தும் கவிஞர்கள் பாடலாசிரியர்கள் என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் – நூல் வெளியீட்டு விழா . முனைவர் அரங்க.பாரி பேராசிரியர் மற்றும் தலைவர் தமிழியல்துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

குறள் மலைச்சங்கத்தின் கருத்தரங்கமும் நூல் வெளியீடும் – ப.இரவிக்குமார்

பேரன்புடையீர் வணக்கம்.   1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலையில் கல்வெட்டுகளாகப் பதிக்க குறள் மலைச்சங்கம் எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே.   தொடர் முயற்சியாக “திருக்குறள் ஏன் கல்வெட்டில் பதிக்கப்படவேண்டும்” என்பது பற்றிய கருத்தரங்கமும், “கல்வெட்டில் திருக்குறள் – பாகம்3” என்ற நூல் வெளியீட்டு விழாவும், மார்கழி 01, 2047 / 16.09.2016 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எசு.எசு.எம். கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதுசமயம் தாங்கள் தவறாது விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கவேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.   விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு…

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் க.தமிழமல்லன்

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் க.தமிழமல்லன் ஆடி 01, 2047 / சூ லை 16,2016 அன்று தஞ்சையில்  நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா மாநாட்டில்   முனைவர் க.தமிழமல்லன  பங்கேற்றார். மூன்று நாள் விழாவின் இராண்டாம் நாளான அன்று காலையில் புலவர்மணி இரா.இளங்குமரனார் அவர்கள் தலைமையில்  கருத்தரங்கம் நடைபெற்றது. புதுச்சேரித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் ‘தனித்தமிழில் பெயர் வைத்தல்‘ எனும் தலைப்பில் உரையாற்றினார். நண்பகல் 1.50மணிமுதல் 2.30மணிவரையில்  நிகழ்த்திய அவருடைய சொற்பொழிவை மக்கள் விரும்பிக் கேட்டனர். அவருடைய சொற்பொழிவுக்குச்…

உண்மையில் சுவாதியைக் கொலை செய்தது யார்? – கருத்தரங்கம்

உண்மையில் சுவாதியைக் கொலை செய்தது யார்? – கருத்தரங்கம்   ஆடி 15, 2047  –  30-7-16 சனிக்கிழமை மாலை 6.00  40 பக்தவச்சலம் சாலை , திசில்வா சாலை விரிவு, மயிலாப்பூர், சென்னை. உங்கள் வருகையை உறுதி செய்ய அழைக்கவும் பாலசுப்பிரமணியன் 9042905783 சேலை அணிந்தால் காற்றில் பறந்த மாராப்பினால் இடை தெரிந்துதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்… காற்சட்டை –  சட்டை அணிந்தால் உடலோடு ஒட்டிய ஆடைதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்… பாவாடை –  சட்டை அணிந்தால் கெண்டைக்கால் தெரிந்ததுதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்… முழுதாய்…