கருத்தரங்கம் 6 :இந்தியால் தமிழுக்குக் கேடு…! – க. அ.செல்வன்

வருமுன்னர்க் காவா தான் வாழ்க்கை எரிமுன்னர்  வைத்தூறு போலக் கெடும். 1. அழிவுக்கு உண்டான வேலைகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு விட்டன, நண்பரே, அரசியல் சட்டம் 17ஆவது பிரிவில், அதன் பயனை 65 சனவரி 26ஆம் நாள்முதல் இந்தி அரியணைஏறுவதின் வழியாக நாம் பட்டறியத்தான் போகிறோம். ‘‘தமிழகம் ஏற்றுக்கொண்டால்தானே’’ என்றொரு வினாவை நீர் கேட்கத்துடிப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நிலைமைகள் நம்மைப் பயமுறுத்துகின்றன எனபதை இதோ பாரும். ‘‘தமிழ்நாட்டிலும் வங்காளத்திலும் இந்தியைக் கட்டாய பாடமாக்குவதே என் முதல் வேலை. அதனை எவ்வகையிலும் செயல்படுத்தியே தீருவேன்’’…

கருத்து அரங்கம் 7 இந்தியால் தமிழுக்குக் கேடு! – மே.சி.சிதம்பரனார்

  வினா1 : இந்தியால் தமிழ் எந்த வகையில் அழிகிறது? அழிந்தது? அழியும்? மேல் நாட்டில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ‘‘பின்னமாலியட்’’ என்பாரிடம் எதிர்கால விளைவுகளின் ஐயப்பாடுகள் பற்றி மக்கள் பல கேள்விகளைக் கேட்டுக் கொள்வதுண்டாம். அவற்றுள், ஒரு நாட்டிற்கு வரும் மீளாத பேராபத்து எது? “எவ்வித ஆபத்திற்கும் மீட்சியுண்டு. அந்நாட்டுத் தாய்மொழி மெல்ல மெல்ல மங்கி மறைவதுதான் மீளாத பேராபத்து.” ஒரு நாட்டை என்றும் அடிமையாகவே வைத்திருக்க வேண்டுமானால் செய்வதென்ன? “முதற்கண் அந்நாட்டின் மொழி வளத்தைக் கெடுக்க வேண்டும்” இங்ஙனம் கூறிய விடைகள்…

கருத்தரங்கு 5 : இந்தியால் தமிழுக்குக் கேடு…!

– பி.சு.தங்கப்பாண்டி குலசேகரப்பட்டி 1. ‘இந்தி படித்தால்தான் நடுநிலையரசில் பதவிகள் பெறமுடியும்’ என்ற உணர்வு மாணவ உள்ளங்களில் தூண்டப்படுகிறது. நம்மவர் படிப்பது பதவிக்குத்தான்; அறிவோடும் தன்மானத்தோடும் வாழவல்ல. இதனால் தமிழார்வம் கொண்டோரும், தமிழால் பயனில்லையோ? என்று எண்ண வேண்டியுள்ளது. இதற்குத் தமிழ் அழிந்ததோ, இல்லையோ, தமிழை வளர்க்க வேண்டியோரின்  உள்ளங்கள் அழிந்ததாயின. அழிகிறது; இதே நிலைமை நீடித்தால் அழியும். 2. இந்தியா ஒரு தனியாட்சி நாடாக இருந்தால் மாநிலங்களின் தொடர்பிற்குரிய மொழி இந்திதான். அதை ஒப்புக் கொள்வது தவறல்ல. ஏனெனில் தனியாட்சிதானே! ஆனால் இந்தியா…

கருத்தரங்கு 2: இந்தியால் தமிழுக்குக் கேடு…!- ச.சிவசங்கர்

ஐயா! குறள்நெறிக் கருத்தரங்கத்தில் ஓர் அன்பர் விடுத்த வினாக்களுக்கு விடையாக எனது கருத்துகள். அவ்வன்பர் தொடக்கத்தில் ‘பிறப்பால் தமிழன், மொழியால் தமிழன்; என் கதை, கட்டுரைகளில் தமிழ் தவிரப் பிற மொழிச் சொற்கள் இடம் பெறா!’ எனக்கூறிவிட்டுப் பல பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதை முதற்கண் அன்பர் தெரிந்து கொள்வது, அவர் எடுத்துக் கொண்ட செயலுக்கு மிக வேண்டற்பாலதாகும். – ச.சிவசங்கர். 1. ஒரு காலத்தில் ஆண்டமொழியாக இருந்த தமிழ், வெள்ளையன் காலத்தில் இரண்டாந்தர மொழியாக ஆகியது. வெள்ளையன் சென்ற பின் காங்கிரசு…

“துறைதோறும் கம்பன்” பன்னாட்டுக் கருத்தரங்கம்: மார்ச்சு15-இல் காரைக்குடியில் தொடக்கம்

   கம்பன் தமிழ் ஆய்வு மையம் சார்பில் “துறைதோறும் கம்பன்” என்ற தலைப்பில் வரும் மார்ச்சு 15-ஆம்  நாள் பன்னாட்டு ஆராய்ச்சிக் கருத்தரங்கம் காரைக்குடியில் தொடங்குகிறது.   கம்பர் திருநாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள கம்பன் தமிழ் மையம் சார்பில் 2 நாள்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பேராசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள்.   “கம்பன் துறைகள்” என்ற பொதுத் தலைப்பில் மூன்று பிரிவுகளில் மார்ச்சு 15,   16 ஆகிய நாள்களில் காலை 9.30 மணி…