ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1521-1530 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1501 – 1520 இன் தொடர்ச்சி) 1521. மின்னணுப் பொறியியல் Electronics Engineering 1522. மின்னணுவியல் Electronics 1523. மின்னியங்கியல் Electrophysiology 1524. மின்னியல் Electrology (1) 1525. மின்னொளி யியல் Electrooptics 1526. மீ கணக்கியல் Meta – மாறு, மிதப்பு, மீ, உயர் என்னும் பொருள்களில் பயன் படுத்தப்படுகிறது. Meta என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நடுவில், மேல், அப்பால் ஆகும். எனவே, இடத்திற்கேற்ற பொருள் தரும் இணைப்புச் சொல்லாக Meta உள்ளது. மீ என்றால்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1501 – 1520 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1488 – 1500 இன் தொடர்ச்சி) 1501. மிகு ஒலியியல் Hyperacoustics 1502. மிடறு–மூக்கியல் Laryngorhinology 1503. மிடற்றியல் larynx என்னும் புது இலத்தீன் சொல்லின் பொருள் தொண்டை. தொண்டையியல் என்றும் குரல் வளையியல் என்றும் சொல்லப்படுகின்றது. உடலின் இப்பகுதிக்கு மிடறு எனப் பெயர். எனவே, மிடற்றியல் எனக் குறித்துள்ளோம். Laryngology 1504. மிதவை யுயிரியியல் Planktology 1505. மிதிவண்டிப் போக்குவரத்துப் பொறியியல் Bicycle Transportation Engineering 1506. மின்இயங்கியல் Galvanology / Electrodynamics 1507. மின் உருவாரவியல் …
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1488 – 1500 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1477 – 1487 இன் தொடர்ச்சி) 1488. மாதவிடாயியல் மாதந்தோறும் என்னும் பொருளுடைய Emmenosஎன்னும் சொல்லில் இருந்து Emmeno உருவானது. பெண்களுக்கு மாதந்தோறும் வரும் விலக்கு குறித்த இயல். Emmenology 1489. மாந்தக் குமுகவியல் Anthroposociology 1490. மாந்தர்விலங்கு தொடர்பியல் மாந்தருக்கும் விலங்கினத் திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆராயும் துறை. எனவே, Anthrozoology என்பதன் நேர் பொருளைக் குறிக்கக் கூடாது. இதன் மற்றொரு பெயர் மாந்தர்-அல்மாந்தர்-விலங்குகள் ஆய்வு/human–nonhuman-animal studies என்பதாகும். ஆதலின் மாந்தர் விலங்குகள் தொடர் பியல்…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 1-7
(சொற்களஞ்சியம் சுரதா! – தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) தமிழ்ச்சொல்லாக்கம் : 1-7 1. Geometry – அளவு நூல் கண்டிதமான அளவு நூலில் குத்துக்கு யாதொரு பெருமையும் இல்லை. (அதாவது) நீட்சியும் இல்லை, அகலமும் இல்லை, கனமும்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1477 – 1487 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1465-1476 இன் தொடர்ச்சி) 1477. மனிதச் செய்திறனியல் பாதுகாப்பு, செயல் திறன் தொடர்பான மாந்தரின் பணிச்சூழல் ஆய்வு. இந்த இடத்தில் Engineering என்பதை பொறியியல் என்று கூறுவதை விடச் செய்திறனியல் என்பதே சரியாக இருக்கும். மனிதப் பொறியியல் / மனித உடற்கூற்றுப் பொறியியல் எனப் பிறர் கூறுவது பொருந்தாது. மனிதச் செய்திறனியல் எனலாம். பணிச்சூழலுடன் தொடர்புடையது என்பதால் இதனை ergonomics உடன் இணைத்து விடலாம். Human Engineering 1478. மனிதத் திறன்சார் பொறியியல் Human-Factors Engineering 1479….
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1465-1476 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1452 – 1464 இன் தொடர்ச்சி) 1465. மறையிடர் பொருளியல் Risk – ஆபத்து,ஆபத்து காரணி, இழப்பு, இடர், அபாயம், அபாய நேர்வு, கெடு, கேடு, இன்னல், இடையூறு, இக்கு எனப் பல வகையாகக் குறிக்கப் பெறுகிறது. அதில் ஒரு இக்கன்னா இருக்கிறது எனப் பேச்சு வழக்கில் இயல்பாக உள்ள ‘இக்கு’ என்பதை நான் முதலில் பயன்படுத்தினேன். இதே சிந்தனை கொண்ட மற்றொருவரும் இச்சொல்லைப் பயன்படுத்தி வந்தார். இருப்பினும் இக்கு என்பதைக் கலைச்சொல் வடிவமாகப் பெரும்பான்மையர் கருதவில்லை. எனவே,…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1452 -1464 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1434 – 1451 இன் தொடர்ச்சி) 1452. மருந்து வேதியியல் Medicinal chemistry 1453. பவ்வீ இயல் Coprology – மலத்தியல், கசட்டியல், மலத்தியல், மல இயல், சாண இயல், சாண வியல். சாண அறிவியல் எனப்படுகிறது. மாட்டின் மலம்தான் சாணம். சாணம், மலம் ஆகிய மூலப்பொருள் அடிப்படையில் , சாணவியல் , மலவியல் எனக் கூறுகின்றனர். இரண்டும் சரிதான். ஆட்டின் கழிவு பிழுக்கை, குதிரையின் கழிவு இலத்தி, யானையின் கழிவு இலண்டம் முதலான பிற உயிரினங்களின் கழிவுகளையும் …
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1434 – 1451: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1424-1433 இன் தொடர்ச்சி) 1434. மர வளைசலியல் Dendroecology – மரவரை சுற்றுப்புறவியல் எனக் குறிக்கப்படுகிறது. வரலாற்று சுற்றுச்சூழல் செயல்முறைகளை பகுப்பாய்வு செய்ய மரக்காலவியலைப் பயன்படுத்தும் அறிவியல் என்றும் கடந்தகால, நிகழ்கால வனச்சூழல் மாறுபாடுகளை மதிப்பிடுவது என்றும் இவ்வறிவியல் குறித்து விளக்கு கின்றனர். மரத்தின் அடிப் படையிலான புறவியல் என்பதாலும் ecology / வளைசலியல் என நாம் வரையறுத்துள்ளதாலும், மர வளைசலியல் – Dendroecology எனலாம். Dendroecology 1435. மரவரைத் தொல்லியல் மரவரை என்பது மரத்தில் உள்ள காலங்காட்டும்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1424-1433 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1411 – 1423 இன் தொடர்ச்சி) 1424. மரபு உளவியல் Genetic Psychology 1425. மரபு நுட்பியல் Genetic Technology 1426. குடிவழி யியல் மரபுவழியியல், கொடிவழி, குலவழி, குலமரபு, கால்வழியியல், மரபுவரிசை யியல், குடிமரபியல், மரபியல் எனக் கூறுகின்றனர். Genetic-மரபியல் எனப்படுவதால் அதனை நீக்கி விடலாம். குடிமரபியல், மரபு வழியியல் என்றாலும் குழப்பம் வரலாம். கொடிவழி, குலவழி, கால்வழி என்பன ஒத்த பொருளுடை யனவே. எனினும் எளிமையாகக் குடி வழி > குடிவழியியல் எனலாம். Geneology/ Geneaology/Genealogy…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1411 – 1423 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1401 – 1410 இன் தொடர்ச்சி) 1411. மதலையியல் neonātus என்னும் இலத்தீன் சொல் பச்சிளங்குழந்தையைக் குறிக்கிறது. அண்மையில் பிறந்த மழலையரைக் குறிக்கும் மதலை என்னும் சொல்லைக் கையாண்டுள்ளோம். Neonatology 1412. மதிப்புச்செய்திறனியல் மதிப்பு மேலாண்மைக்கு ஒத்ததாக இது கருதப்படுகிறது. செயல்பாட்டை மேம்படுத்து வதன் மூலம் செலவையும் குறைத்து மதிப்பை உருவாக்குவது குறித்த செய்திறன்துறை. எனவே, இதனை மதிப்புப் பொறியியல் என்று சொல்வதைவிட, மதிப்புச் செய்திறனியல் எனலாம். Value Engineering 1413. மதுக்காய்ச்சியல் brew என்னும் கிரேக்கச் சொல்லின்…
சொற்களஞ்சியம் சுரதா! – வெள்ளையாம்பட்டு சுந்தரம்
(சொல்லாக்க நெடு வழியில். . . தொடர்ச்சி) சொற்களஞ்சியம் சுரதா! நம் தமிழகத்தில் தோன்றிய கவிஞர்கள் பலராவர். செய்யுள்கள் மட்டும் யாத்தவர் சிலர் உரைநடையும் எழுதியோர் பலர். உரைநடையில் நாடகம், கட்டுரை, கதைகள் எழுதியோர் சிலர். பக்தி, சீர்திருத்தம், நாட்டு நலன் எனப் பல்வேறு துறைகளில் ஈடுபட்டோரும் உண்டு. வரலாறு, ஆய்வு எனும் ஆர்வமுடையோரும் உண்டு. பாரதியார், பாரதிதாசன், சுத்தானந்த பாரதியார், கவிமணி, கம்பதாசன், வாணிதாசன், முடியரசன், தமிழ்ஒளி, கண்ணதாசன் போன்றோர் பல துறைகளில் கால் பதித்ததை இலக்கிய வரலாறு காட்டுகிறது. இவ்வரிசையில் சுரதா…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1401 – 1410 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1391 – 1400 இன் தொடர்ச்சி) 1401. மண் ஆய்வியல் pedo-என்னும் பழங்கிரேக்க முன்னொட்டுச் சொல் மண் தொடர்பான என்பதைக் குறிக்கிறது. (உயிரெழுத்திற்கு முன் ஓ/O வராது.) Pedogenics 1402. மண்உயிரியல் Soil biology 1403. மண்டலப் புவியியல் Regional Geology 1404. மண்டலப் பொருளியல் Regional Economics 1405. மண்டையோட்டியல் cranium என்னும் இடைக்கால இலத்தீன் சொல்லின் பொருள் மண்டையோடு. Craniology / Fronology 1406. மண்ணியல் Agrology என்பதையும் மண்ணியல் என்கின்றனர். ஆனால், அதை மண்ணியலின் ஒரு…
