தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொல்காப்பியத்தை புறக்கணிப்பது ஏன்? – இன்மதியில் இலக்குவனார் திருவள்ளுவன்

by Inmathi Staff | சன 5, 2022 | கல்வி ஒன்றிய அரசின் சமற்கிருதத் திணிப்புக்கு தமிழக அரசு  ஒத்துழைக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் தொல்காப்பியத்துக்கு இடமில்லையே ஏன்? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாய்ப்பிற்கான தேர்வுகளில் தமிழ்த்தாள் கட்டயாமாக்கப்பட்டிருப்பது குறித்துத் தமிழ்க்காப்புக்கழகத் தலைவரான இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களிடம் கருத்து கேட்டோம். அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தமிழ் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலையை அரசு உருவாக்கியிருப்பதில் எனக்கும் இரட்டை மகிழ்ச்சி. தமிழறியாதவர்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தில் பணியில் அமர்ந்து கொண்டு, மக்களுக்கும் அரசிற்கும் இடையே இடைவெளியை உருவாக்கிக்…

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்: தமிழக அரசு அறிவித்தது சரியா?

by Inmathi Staff | டிசம்பர் 24, 2021 | பண்பாடு English தமிழ் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ. சுந்தரனார். அவர் எழுதி 1891இல் வெளியான மனோன்மணீயம் என்ற நாடக நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் உள்ள பாடலின் ஒரு பகுதிதான் நீராரும் கடலுடுத்த பாடல். தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் பாட வேண்டும் என்று கரந்தைத் தமிழ் சங்கத்தின் 1913ஆம் ஆண்டு ஆண்டறிக்கையில் இடம் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 1914இல் கரந்தைத் தமிழ் சங்கத்தின் விழாக்களில் அந்தப் பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலைத்…

தமிழ் முதலெழுத்து கட்டாயமா? -குமுதம் செய்தியாளர் செவ்விக்கட்டுரை

தமிழ் இன்சியல் கட்டாயமா? நடைமுறையில் சிக்கலோ சிக்கல் – கணேசுசுமார்   அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் இலக்குவனார் திருவள்ளுவன் கருத்துகள்  

தகவல் தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் படித்தவர்களுக்கும் வேலை – எழுத்தாளர், பேராசிரியர் பாரதிபாலன்

தகவல் தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் படித்தவர்களுக்கும் வேலை  “தமிழ் படித்தால் இன்றைய சூழலில் வேலை வாய்ப்புக் கிடைக்குமா?” என்பது குறித்து தமிழ்நாடு பொதுநிலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் தமிழ்ப்புலத் தலைவர், புதுதில்லி சாகித்ய அகாதெமியின் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு, உறுப்பினர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கல்விப் பேரவை உறுப்பினர், கல்வியாளர், எழுத்தாளர் பாரதிபாலன் அவர்களிடம் மேற்கொண்ட நேர்காணலில் மாணவர்களுக்கான பல புதிய தகவல்கள். தற்போதைய சூழலில் உயர்கல்விக்கான வாய்ப்பு – வசதிகள் எப்படி உள்ளன? உலக அரங்கில் இந்தியா…

சாகித்ய அகாதெமி விருதாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்!

தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழி எழுத்தாளர்  தோப்பில் முகமது மீரான்(75) நெல்லையில் இன்று காலை காலமானார்.  முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் ஊரில் பிறந்தவர். இவர் மனைவியின் பெயர் சலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளிட்டுள்ளார்.  1997இல்  சாய்வு நாற்காலி என்னும் புதினத்திற்குத் தமிழுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பெற்றது. கன்னியாகுமரியில் இருந்து நெல்லைக்கு மாறிக் கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த சில நாள்களாக…

முன்னோர்கள்: இலக்குவனார், தமிழன் தொலைக்காட்சி

பேரா.சி.இலக்குவனார் குறித்த இலக்குவனார் திருவள்ளுவன் செவ்வி  தமிழன் தொலைக்காட்சி முன்னோர்கள் வரிசையில் நாள்  கார்த்திகை 26, 2049 / 12.12.2018    

பெண் வன்முறைகள்: அவதூறு எங்ஙனம் கருத்துரிமையாகும்? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண் வன்முறைகள்  கருத்தரங்கம்: அவதூறு கற்பிப்பது எங்ஙனம் கருத்துரிமையாகும்? – ‘நம்ம திருச்சி’ இதழில் இலக்குவனார் திருவள்ளுவன் இலக்குவனார் திருவள்ளுவன்: தமிழ்க்காப்புக்கழகம் என்னும் அமைப்பின் தலைவரும் இலக்குவனார் இலக்கிய இணையத்தின் ஒருங்கிணைப்பாளரும் ‘அகரமுதல’ மின்னிதழ் ஆசிரியருமான இலக்குவனார் திருவள்ளுவன் (தமிழுக்குக்கேடு வரும் பொழுது முதல் எதிர்ப்புக்குரல் எழுப்பும் தமிழறிஞர்) அவரிடம் திருச்சிராப்பள்ளியில் சூசையப்பர் கல்லூரி நடத்த உள்ள கருத்தரங்கம் குறித்து ‘நம்ம திருச்சி’ இதழின் சார்பாகக் கேட்டபோது, இதனைக் கடுமையாக எதிர்த்துப் பின் அவர் கூறிய பதில்கள்… தமிழியல் துறை தமிழ்…

சங்கத்தமிழ் நகரம் முசிறியே கேரளாவில் உள்ள ‘பட்டணம்’

சங்கத்தமிழ் நகரம் முசிறியே கேரளாவில் உள்ள ‘பட்டணம்’ “சங்க இலக்கியங்களில் புகழப்படும் துறைமுக நகரம் முசிறி. அதுதான், தற்போது, கேரளாவில் உள்ள பட்டணம்,” என்கிறார், அங்கு அகழாய்வு செய்தவர், கேரளாவின், ‘பாமா’ தொல்லியல் கல்வி நிறுவன இயக்குநர், முனைவர் பி.செ.செரியன். அவர், ‘தினமலர்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி: உங்களைப்பற்றியும், உங்கள் அகழாய்வுபற்றியும் கூறுங்கள்? நான், கேரளாவில் உள்ள, ‘பாமா’ என்ற, தொல்லியல் சார்ந்த நிறுவனத்தின் இயக்குநராக உள்ளேன். 2006இல், மத்தியத் தொல்லியல் துறையிடம், அகழாய்வு செய்வதற்கான இசைவு பெற்றேன். ஏற்கெனவே, 2004இல், நான் செய்த…

மொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே! – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்

மொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே!   மொழிப்பாடங்கள் சுமையாக இருப்பதாகக் கூறி அரசு, தாள் 1, தாள் 2 என இருந்த முறையை மாற்றியுள்ளது. இனி  மொழிப்பாடங்களில் ஒரு தேர்வுத்தாள் மட்டுமே இருக்கும்.  மேம்போக்காகப் பார்க்க இது சிறப்பானதாகத் தோன்றலாம். ஆனால்,  மொழி அறிவு என்பது அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை. அறிவியல் முதலான பிற மொழிப்பாடங்களைப் படிப்பதற்கும் மொழி அறிவு துணை நிற்கின்றது. அறிவில் சிறக்கத் துணையாய் இருக்கும் தாய்மொழி அறிவு குறைக்கப்படுவது மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்….

பள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம் –  நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்

பள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம் தமிழ்நாட்டில் 1951  இல் 20.80 % மக்கள்  படிப்பறிவோராக இருந்தனர். ஆண்களில்  31.70 % மக்களும்  பெண்களில் 10.10 % மக்களும்தான்  படிப்பறிவு பெற்றவர்கள். இத்தொகை 1961 இல்  ஆண்களில் 51.59% ,  பெண்களில் 21.06%  ஆகவும் மொத்தத்தில்  36.39% ஆகவும் உயர்ந்தது. 1971 இல் படிப்பறிவு உடையோர் மேலும் உயரந்தனர். ஆண்கள் 59.54%    பெண்கள் 30.92%     மொத்தம் 45.40% என இருந்தது. 2011 இல் தமிழ்நாட்டில் படிப்பறிவோர் விகிதம்  ஆண்கள் 86.81%  பெண்கள் 73.86% ஆகும். எல்லாக்…

நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 – சந்தர் சுப்பிரமணியன்

(நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 தொடர்ச்சி) நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2   11)? இன்றைய அவசரகதி உலகில் சிற்றிதழ்களுக்கு – பொதுவாக இதழ்களுக்கு வாசகர்கள் உள்ளார்களா? அல்லது குறைந்து வருகிறதா?   வாசகர்களின் ஆர்வம் குறைந்துள்ளது என்று சொல்லவியலாது ஏனெனில், ஆனந்த விகடன் போன்ற பதிப்பகங்கள், வெகுவாக அறியப்படாத எழுத்தாளர்களின் நூல்களைக்கூட பத்தாயிரம் படிகளுக்கு மேல் பதிப்பிடுகின்றன. ஆனால் வாசகர்கள் எதை விரும்பிப் படிக்கிறார்கள் என்பதே கேள்விக்குரியது. ஊன்றிக்கற்க வேண்டிய இலக்கியங்களைக் கற்காமல்,…