உயிர் நாவில் உருவான உலகமொழி – ஃகிசாலி
உயிர் நாவில் உருவான உலகமொழி நம் செம்மொழியான தமிழ் மொழியே மென்மையும் தொன்மையும் கலந்த தாய் மொழியே நீ தானே தனித்துத் தவழும் தூய மழலை தேன் மொழியே இலக்கணச் செம்மையில் வரம்பே இல்லா வாய் மொழியே மும்மைச் சங்கத்தில் முறை சாற்றும் இயற்கை மொழியே இலக்கணப் பொருளின் அணிச்சிறப்பாய் அளவெடுத்த செய்யுள் மொழியே நம் தாய் மொழியாம்! – ஃகிசாலி http://www.eegarai.net/t74296-topic
தேனினும் இனிய மொழி – சான் பீ. பெனடிக்கு
தென்பொதிகை பிறந்த மொழி தென்பாண்டி வளர்ந்த மொழி தேனினும் இனிய மொழி தெவிட்டாத செந்தமிழ் மொழி அமிழ்தினும் இனிய மொழி ஆண்டாண்டுகளாய் வாழும் மொழி அன்னை மடியை விஞ்சும் மொழி அணைத்து என்னை மகிழும் மொழி -சான் பீ. பெனடிக்கு http://www.vaarppu.com/padam_varikal.php?id=12
மனத்தில் நின்ற மாமணி கா.அப்துல் கபூர் – அப்துல் கையூம்
மனத்தில் நின்ற மாமணி கா.அப்துல் கபூர் [ 1955/1924 – 2033/2002] இந்த மண்ணை விட்டுப் போகையில் சடலமாகப் போகின்றவர் பலர். வரலாற்றாய்ப் போகின்றவர் வெகு சிலர். வரலாறு சமைப்பது கருவாடு சமைப்பது போலன்று. வாழ்வாங்கு வாழ்ந்த பின்னும் வாடாத மலராய் நம் உள்ளத்தில் மணம் வீச வேண்டும். ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’. பிறந்த பயனை பிறரறியச் செய்ய வேண்டும். அதற்கு எடுத்துக்காடு நம் பேராசிரியர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர். தமிழ்…
புண்ணுக்குப் புனுகு பூசும் வேலை! – பழ.நெடுமாறன்
ஏழை எளியோர்க்கு எட்டாக்கனியாகும் உயர் கல்வி! இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளையும் தங்கள் பல்கலைக்கழகக் கிளைகளையும் தொடங்குவதற்கான ஒப்புதலை வழங்கும் முன்னேற்பாடுகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த காங்கிரசுக் கூட்டணி ஆட்சியின்பொழுது இதே முயற்சியில் ஈடுபட்டபொழுது மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பா.ச.க கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், இப்பொழுது பா.ச.க அரசு அதே முயற்சியில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. உலக வணிக அமைப்பின் முடிவை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதன் விளைவே இதுவாகும். இந்திய நாடு முழுவதிலும் இயங்கி வரும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பிறவகைத்…
ஒடுக்கப்பட்டவர் விடுதலைக்காகப் பாடிய பறவை கரு.அழ.குணசேகரன் – சுகிர்தராணி
வல்லிசையின் எளிய பறவை கடந்த தை 1 / 15.01.2016 வெள்ளியன்று புதுச்சேரியில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நான் பேசியபொழுது ‘எங்காண்டே என்னால காரியம் ஆகணும்னா சார் என்பார்’ என்னும் பாடலின் ஒரு பகுதியைக் குறிப்பிட்டபொழுது என் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அன்று இரவு நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது பின்னிரவு வரை அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். மறுநாள் பாண்டிச்சேரியிலிருந்து மாலதி மைத்திரியுடன் மகிழுந்தில் பயணிக்கும்பொழுது மீண்டும் அவரைப்பற்றிய பேச்சு. அன்று இரவு நண்பர்களுடன் உணவருந்தியபடி பின்னிரவு வரை நீண்ட…
வையகத் தமிழ் வாழ்த்து – சி. செயபாரதன்
வையகத் தமிழ் வாழ்த்து பாரதக் கண்டச் சீரிளம் தமிழே ! ஓரினம் நாமெலாம் ஒரு தாய் மக்கள் வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே ! தாரணி மீதில் உன் வேர்களை விதைத்தாய் வேர்கள் தழைத்து விழுதுகள் பெருகின ஈழத் தீவில் இணைமொழி நீயே சிங்கப் பூரினில் துணைமொழி நீயே மலேசிய நாட்டில் தனிமொழி யானாய் காசினி மீதில் தமிழர் பரப்பிய காவியத் தமிழே ! வாழ்த்துவம் உனையே ! வையகத் தமிழே ! வணங்குவம் உனையே ! ஆத்திசூடி ஓளவையார், ஆண்டாள்,…
இலாத்துவிய மொழியில் திருக்குறள்!
இலாத்துவிய மொழியில் திருக்குறள் காதில் கம்மல், கழுத்தில் ‘ஓம்’ பதக்கத்துடன்மறையாடை(sudithar) உடன், ‘‘ நான் தமிழ் நாட்டை நேசிக்கிறேன்’’ என்றபடியே வரவேற்கிறார் ஆசுட்டிரா! (https://www.facebook.com/astra.santhirasegaram). இலாத்துவிய நாட்டிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கும் தமிழ்நாட்டு மருமகள். தமிழ் மொழியின் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும் கொண்ட காதலால், இப்போது திருக்குறளை இலாட்விய மொழியில் மொழிபெயர்த்து வருகிறார் இவர். உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்ட திருக்குறள், இலாட்விய மொழிக்குப் போவது இதுதான் முதல்முறை! ‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இலாத்துவியாவில்! இரசியாவுக்குப் பக்கத்தில் இருக்கிற…
போடுமலையில் அரிய உருளை வடிவக் கல்வட்டம்.
போடுமலையில் அரிய உருளை வடிவ கல்வட்டங்கள் கண்டெடுப்பு! எகிப்து நாட்டின் ஈமச் சின்னங்களை ஒத்திருப்பதாக ஆய்வாளர் தகவல் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான போடுமலையில், 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான அரிய வகை உருளை வடிவக் கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வடிவத்தில் எகிப்து நாட்டின் ஈமச் சின்னங்களை ஒத்திருக்கும் இந்த உருளை வடிவக் கல்வட்டங்களை, பண்டைய தகடூர் நாட்டின் பெருமைக்குரிய சின்னங்களின் வரிசையில் இணைத்துக் கொள்ளலாம் என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் த. பார்த்திபன். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி மலையின் தொடர்ச்சியாக உள்ள…
பெறுமதியான பங்காளியா இலங்கை? – புகழேந்தி தங்கராசு
பெறுமதியான பங்காளியா இலங்கை? வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விலங்குகளை வேட்டையாடுவது போலத் தமிழர்களை விரட்டி விரட்டிக் கொன்று குவித்த பிறகு, மகிந்த இராசபக்ச கூசாமல் பேசிய சொற்களில் ஒன்று – ‘மீள்குடியேற்றம்’. 2009 முதல் 2014 வரை மகிந்தன் பயன்படுத்திய அந்தப் பித்தலாட்ட சொல், இப்போது மைத்திரியின் வசம். ஆறே மாதத்தில் தமிழர்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விடுவார்கள் -என்று இப்போது அவர் சோதிடம் சொல்வது, தமிழர்களையும் பன்னாட்டு சமூகத்தையும் எப்படியாவது ஏமாற்றியாக வேண்டும் என்கிற எண்ணத்தின் விளைவு. இப்போது…
எங்கள் பெரியார் – கவிமதி
எங்கள் பெரியார் – மனு வேதம் கொளுத்திய திரியார் மூடிமறைத்துப் பேச அறியார் மூடப் பழக்கம் எதுவும் தெரியார் நூலார் திமிர் அறுத்த வாளார் நூற்றாண்டு கடந்து வாழும் வரலாறார் நரியார் தோலுரித்த புலியார் நால்வகை வருணம் கலைத்த கரியார் எளிதாய்க் கடந்து செல்லும் வழியார் ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த விழியார் தெளியார் அறிவு நெய்த தறியார் தெளிந்தோருக்குத் தெளிவான குறியார் உலகத் தமிழருக்கு உரியார் உணர்ந்தால் விளங்கும் மொழியார் மனு வேதம் கொளுத்திய திரியார் மாதருக்குத் தெளிவான ஒலியார் தேடிப் படிக்க சிறந்த…
சொல் காக்க! – மதன். சு, சேலம்
கூரிய வாளைவிட கூரிய சொல் வலிமை! கூடுமட்டும் சொல் காக்க கூடுமுந்தன் வாழ்வில் நலம் ! வாளினாலிவ் உடலில் துன்பம் சொல்லினாலிவ் வாழ்வே துன்பம் ! வரம்புடைய சொல்லால் வாழ்வினிலே சேரும் இன்பம் ! ஒரு சொல் உரைத்திடினும் உயர்வு எனின் உலகை ஆளும் ! தவறான சொல் லெனின் தரமிழந்து தரணி மாளும் ! ஆதலினால் சொல்லினை அளந்து நீங்கள் பேசிடுவீர் ! காதலினால் பேசுதற்போல் கண்ட சொல் விட்டிடாதீர் ! மதன். சு சேலம் ecemadhan94@gmail.com
நன்றி மறவேன் என்றும்! – இலக்குவனார் மறைமலை
சொந்தக் கதை 01 எண்ணிப் பார்த்தால் எனக்கே நகைப்பாம் அறுபது அகலுது வருவது எழுபது எண்களில் மட்டுமே இந்த மற்றம் எனக்குள் எந்த மாற்றமும் இலையே! பிறந்தேன் எனல்பிழை பெற்றனர் என்னை; இலக்குவர் மலர்க்கொடி இணையர் அன்பால் உலகினில் தோன்றினேன் என்செயல் என்ன? வந்தேன் வளர்ந்தேன் வண்டமிழ்ச் சூழலில்! கல்வியால் பதவியும் பதவியால் செல்வமும் மேலும் மேலும் மேன்மையும் தேடிய அறிஞர் நிறைந்த அருந்தமிழ் நாட்டில் கல்வியும் பதவியும் செல்வமும் கொண்டே தமிழின் உரிமை மீட்கும் பணியில் தளரா(து) உழைத்தவர் என்னருந் தந்தை…
