நல்லக்கண்ணு…நல் மேய்ப்பன் நீடுவாழி! – துரைவசந்தராசன்
தமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் ! – துரை வசந்தராசன்
பாவலர் தமிழேந்தி விடைபெற்றார்!
பாவலர் தமிழேந்தி விடைபெற்றார்! அடுத்தடுத்து இப்படியா ? ‘சிந்தனையாளன்‘ இதழைப் பார்த்தவுடன்அதன் இறுதிப்பக்கத்தை ஆவலுடன்தேடுவோர் மிகுதி. இதழ்தோறும் இறுதிப்பக்கத்தில் இடம்பெற்றிருப்பதுபாவலர் தமிழேந்தியின் பாடல். ” நடப்பு அரசியலை வெளிப்படையாகப்பாடுவோர் அருகிவிட்ட தமிழ் இலக்கியச் சூழலில் தமிழேந்தி மட்டுமேஅந்தத் தனித்தன்மையைக் காப்பாற்றிவருகிறார் ” என்று பாவலர் அறிவுமதி வியந்து பேசுவது வழக்கம். ‘சிந்தனையாளன்’ இறுதிப் பக்கக் கவிதையாக இனித் தமிழேந்தி வரமாட்டார்.அரசியல் கவிதை அற்றுப்போகாமல்காப்பாற்றிய பாவலர் தமிழேந்தியின்பயணம் நின்றுவிட்டது. தமிழின விடியலுக்கான எல்லாப் போராட்டங்களிலும் மார்க்சியப் பெரியாரியப்பொதுவுடைமைக் கட்சி சார்பில் எழுச்சிமுழக்கமிடும் போராளித் தமிழேந்திகுரலை இனிக் கேட்க வாய்ப்பில்லை!…
மறவாதே! 21.04.2019 பாவேந்தர் நினைவு நாள்!
மறவாதே! 21.04.2019 பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்! “பண்பட்ட ஞானம் பகுத்தறிவாம்! அவ்வழியில் மண்ணின் மாத்தமிழர் மாண்புறுக! – விண்வரை பெண்ணினமும் ஆணினமும் பேணுங் கருத்தொன்றித் தண்ணிழல்போல் வாழ்க தழைத்து“ எனவுரைக்கும் பாவேந்தர் இன்றமிழ்ப் பாச்சொல் நனவாக்கிப் பண்பாட்டை நாடு! – இனம்மொழி மண்ணுரிமை போற்று! மறவாதே! நல்லொழுக்கம் கண்ணெனக் காத்துயர்வைக் காண்! – மணிமேகலை குப்புசாமி
சிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம்
சிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம் இலக்கிய அமைப்புகளின் சார்பில் சித்திரை முதல் நாள், 14/4/19 அன்று மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் சிறப்பாக நடந்தது. அன்று ஞாயிறு என்பதாலும் சித்திரை முதல் நாள் என்பதனாலும் நிலவிய நிகழ்ச்சி நெருக்கடிகளைப் புறந்தள்ளி நல்ல கூட்டம் கூடியது. வேறொரு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டிய கவிஞர் மு.மேத்தா இந் நிகழ்வைக் கேள்விப்பட்டு சிலம்பொலியார்க்குப் புகழவணக்கம் செலுத்த வந்தது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மின்னூர் சீனிவாசன், வேணு குணசேகரன், ஏர்வாடி இராதாகிருட்டிணன், அமுதா பாலகிருட்டிணன், இரவி தமிழ்வாணன்,பெரு.மதியழகன், தமிழமுதன், தமிழ்முதல்வன், முனைவர்…
ஆத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்
ஆத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள் மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் ஆத்தூர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடப்பட்டது. அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி பேசுகையில், “பெண் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் கிடைக்கப் போராடுவோம், பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம். நாம் அனைவரும் பெண் குழந்தைகளைப் போற்றிப் பாதுகாப்போம்” என்று கூறினார். ஒரே நாளில்…
ஆத்தூர் பேருந்து நிலையத்தில் வினையகத்தின் பெண் குழந்தைகள் நாள்
ஆத்தூர் பேருந்து நிலையத்தில் வினையகத்தின் பெண் குழந்தைகள் நாள் மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடப்பட்டது. அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி, வினையகத்(PDI) திட்டப் பணியாளர்கள் இணைந்து பொது மக்கள் மத்தியில் பெண் குழந்தைகளின் முதன்மைபற்றி வலியுறுத்தினர். ‘‘இளம் வயது திருமணத்தைத் தடுக்க வேண்டும். பெண் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும். எனவே, நாம்…
புதுப்பாளையத்தில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்
புதுப்பாளையத்தில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள் மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் புதுப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி (வாழப்பாடி) வளாகத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடப்பட்டது. அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி பேசுகையில், “பெண் குழந்தைகள் அனைத்துத் துறைகளிலும் பங்கேற்றுச் சாதிக்க வேண்டும். நாம் அனைவரும் பெண் குழந்தைகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார். ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு…
மறைமலையடிகள் – சிராப்பள்ளி மாதேவன்
மறைமலை என்னும் மாமலையே சிராப்பள்ளி மாதேவன்
அகதியம்மா இந்த மண்ணில்! – கவிஞர் அம்பாளடியாள்
அகதியம்மா இந்த மண்ணில்! இத்தரையில் வாழ்ந்தாலும் தமிழை இன்றும் இன்னுயிராய்ப் போற்றுகின்றோம் அதுவே போதும்! நித்தமெமை வாட்டுகின்ற துயரும் பொய்க்கும்! நின்கருணை யாலெம்மின் கடமை ஓங்கும்! அத்தனவன் அருள்பெற்றும் இயற்றும் பாக்கள் அம்புவியில் எம்புகழை ஏந்திச் செல்லும்! பெற்றவளை யாமிழந்தோம் கண்ணீர் விட்டோம்! பேறுபெற்றோம் இன்றமிழைப் போற்றிப் பாட! சித்தத்துள் பேராசை தானும் இல்லை! சிங்காரத் தமிழ்மீதே காதல் கொள்ளை! அத்தனையும் தேனாறாய் ஓட வேண்டும்! அகத்தூய்மை பெற்றுலகில் வாழ வேண்டும்! மொத்தத்தில் அகதியம்மா இந்த மண்ணில்! மொழிகாக்கத் துடிக்கின்றோம் தமிழே!…
தமிழ் நன்று என்றிரு! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்
தமிழ் நன்று என்றிரு! ஒன்று என்றிரு; தமிழ் நன்று என்றிரு. இம்மொழிதான் செம்மொழி எனத் தமிழின்றி வாழ்வோ என்றே நீ மறு குன்று என்றிரு எம் மொழிவளம் குன்று என்றிரு; பிறமொழி தான்கன்று என்றிரு; நம்தமிழ் நன்றேதான் என்றும் என்றிரு . இன்றே தொடங்கியிரு; வன்தமிழராய் நின்றிரு எவ்வுயிர்க்கும் மென்தோழனாயிரு;. என்றும் தீந்தமிழ், கலப்படம் செய்யாதிரு. கொன்றால் பாவமென்றிரு தின்றால் போகாதென்று மறு; ஆங்கிலம் ஆனமட்டும் பேசாதிரு ஆதிமொழி நம்மொழியென்று மேதினியிரு ; தமிழால் பேசி நாவென்றிரு; நல்ல மனத்தால் இனம் வென்றிரு ,…
சாமியே வள்ளுவனே சரணம் ! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்
சாமியே வள்ளுவனே சரணம் ! வள்ளுவன் சரணம்; ஐயன் சரணம் ஐயனே வள்ளுவனே; வள்ளுவனே நம்ஐயனே வள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே வள்ளுவனே வருக! வாய்மை தருக! வாய்மை தருக! வள்ளுவனே வருக! தாயே சரணம் தந்தையே சரணம் தந்தையே சரணம் தாயே சரணம் ஆதியே சரணம் பகவன் சரணம் பகவன் சரணம் ஆதியே சரணம் தமிழே வருக! குறளே வருக!; குறளே வருக! தமிழே வருக! முப்பால் சரணம்; முத்தமிழ் சரணம்; முத்தமிழ் சரணம்; முப்பால் சரணம்; தமிழைப்பாடு தமிழை நாடு குறளும் யாப்பும்…