வா, தமிழா! தமிழா! – நக்கீரன் பாலசுப்பிரமணியம்

வா, தமிழா! தமிழா!   வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம் கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம் வாளெடுத்து வா தோழா அந்தப் பகையை வென்று முடிப்போம் தோள்கள் சேர்த்து வா தோழா நம் தேசத்தைக் காத்திடுவோம் எமனையும் கண்டு அஞ்சோம் பனங்காட்டுப் புலியிது என்போம் நெற்றியில் இந்த மண்ணை நாம் திலகமாகச் சுமந்திடுவோம் வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம் கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம் ஆயிரம் நாடுகள் அன்று நம்மைச் சுற்றியழித்தது பழங்கதையே தீரத்துடன் நாம் நின்று இனி வெல்லப்போவது புதுக்கதையே…

காக்கா காக்கா இயல் கொண்டுவா! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்

  காக்கா காக்கா இயல் கொண்டுவா!     காக்கா காக்கா இயல் கொண்டுவா காடைக்குயிலே இசை கொண்டுவா மயிலே மயிலே நடை கொண்டுவா மானத் தமிழா இனம் கொண்டுவா சொல்லால் மனதால் மொழி கொண்டுவா சோலைக்கிளி போல் திறம் கொண்டுவா கருத்தால் எழுத்தால் உரம் கொண்டுவா காணும் பெயரிலே தமிழ் கொண்டுவா பையப் பைய நம்மொழி கொண்டுவா பகைவர் பழிப்பினும் பண்கொண்டுவா நைய நைய இவ்வன்னியம் வேண்டா நாறும் ஆங்கிலம் இனி வேண்டா படிக்கும் மறையாய் குறள் கொண்டுவா பாடல் இனிக்கக் கலி கொண்டுவா செவிக்கும்…

எம்மை ஆள எமக்குத் தெரியும்! – ம.குமரவேல்

எம்மை ஆள எமக்குத் தெரியும்!   வடவோர்சிலர் தமிழோர் தமை வதையே புரிகுவதா – இறை மதவோர் பலர் இனமோர் நமை இழிவெனப் பழிப்பதுவா கரமோடு உளிசெய் நம்கடவுளர் கருவறை தடுப்பதுவா – மறை களவொடு சதிசெய் நால்வருணம் நம்கருப்பத்தில் விதிப்பதுவா இறையாண்மை இலா மண்ணில் இருப்பது இறைத்தன்மையா முறைசாரா முடிமன்னன் தில்லி வீணமர்வது பழந்தமிழருக்கா பயனிலாத்தமிழுடன் பண்ணிலா இசையும் இங்கு பலன்தருமா பதவிஆசையில் தமிழ்த்துரோகம் செய்யப்பன்றிகளும் மேவுமா ஆளுநர் உயர்சாதி தனிஅதிகாரி உயர்சாதி நீதியரசரும் அரசுத் தலைமைச் செயலரும் இவர்சாதி உறங்குதே தமிழ்ச்சாதி…

உறக்கம் வருமோ? சொல்வீர்! – மறைமலை இலக்குவனார்

உறக்கம் வருமோ? சொல்வீர்!   எரிக்கும் வறுமைத் துயர் தாளாமல் எரியில் மூழ்கிச் சாகத் துடிக்கும் தமிழ்க்குடி மக்களின் அவலம் ஒருபுறம்; கல்வி பயின்றிடப் பொருளைத் தேடிக் கழுத்தை நெரித்திடும் வங்கிக் கடனால் அல்லலுற்றிடும் மாணவர் ஒருபுறம்; விரும்பிய கல்வியை வேண்டிப் பெற்றிட வழியில்லாமல் வாடி வதங்கித் தற்கொலைக் குழியில் அமிழ்ந்து அழிந்திடும் பச்சிளங் குருத்துகள் படுதுயர் ஒருபுறம்; வாடிய பயிரைக் கண்டது,ம் வருந்திச் சாவூர் சென்றிடும் உழவர் ஒருபுறம்;; வேலை தேடியே சாலையில் நின்றிடும் இளைஞர் துன்ப ஓலம் ஒருபுறம்; துயருறும் மக்கள்…

திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் – மலர்

திருப்பூர்தேவியின் குறும்பாக்கள்    மது அருந்தாமலே வாழ்ந்து முடித்தவனை மது நிரம்பிய மலர்களால் போர்த்தி இருந்தனர் அவன் அந்திமத்தில்! ++ பூவாங்கக் காசு போதாததால் அதை விற்கும் வேலையை வாங்கிக் கொண்டாள் ஏழைச் சிறுமி! ++ சிதைந்து உடன்கட்டை ஏறின இறந்தவருடன்… சாலையில் இறைக்கப்பட்ட மலர்கள்…! ++           வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்

திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில்

  திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில் இதில் நாண் பூட்டி அம்பு எய்ய வருபவர் யார்? ++ இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அம்பு இல்லாத வில்லையே வரையும்… அந்த வானம்?     வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்

துடித்தேன்! வடித்தேன்! காலடிச் சுவடுகள் பதிப்பேன்! – கவிஞர் சீவா பாரதி

துடித்தேன்! வடித்தேன்! காலடிச் சுவடுகள் பதிப்பேன்!   வானத்தில் உலவிடும் வண்ணமலர் நிலவைநான் வடித்திட எழுதுகோல் பிடித்தேன் – புது வரிகளை வேண்டிநாள் துடித்தேன் – ஆனால் வானமே கூரையாய் வாழ்ந்திடும் எளியவர் வாழ்க்கையைக் கவிதையில் வடித்தேன் – அவர் நிலைகண்டு கண்ணீரை வடித்தேன்! – அந்த நிலவினைப் பாடநான் நினைத்தேன் – நாட்டு நிலைமையைப் பாடிநான் முடித்தேன் – இது நான்செய்த தவறாகுமா? – இல்லை நான்கற்ற முறையாகுமா? காதலின் இலக்கணம் கண்டவர் வாழ்க்கையைப் படைத்திட எழுதுகோல் பிடித்தேன் – புதுப் பாடல்கள்…

திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்

திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்     வெறும் கூழாங்கற்கள் கிளிஞ்சல்களுடன் அரற்றியது… மணலையிழந்த ஆறு!   பெருங்கூட்டம் எனப் பெயர் வாங்கின… தனித்தனியான விண்மீன்கள்!   யார் ஒளித்து வைத்தது குழலையும் இசையையும்… மூங்கில் வனத்தினுள்?     வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா : இணையவழி உரையாடல் காணுரைகள்

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா   இணையவழி உரையாடல் காணுரைகள்   மலேசியாவின் இரண்டாம் பெரிய நகராமான பேராக்கில் உள்ள சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உலகத்தமிழிணையமாநாடு  ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய மூன்றுநாள் நடைபெற உள்ளது. இது குறித்துச் சென்னையில் ஆடி 21, 2048 ஞாயிறு  ஆக.06, 2017  அன்று மாலை நடைபெற்ற இணைய வழிஉரையாடல் பதிவுகள்.   உரையாளர் மரு.மணவை மு.செம்மல் கருத்துரை https://www.facebook.com/DrSemmal/videos/1488288084570609/   Posted by Semmal Manavai Mustafa on Sunday, August…

தமிழர் என்பதாலே இந்தச் சோதனை! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்

தமிழர் என்பதாலே இந்தச் சோதனை! யாதுமாகி நின்றே நம்தமிழை எங்கு நிறையச் செய்வோம் சூது அலட்சிமாய், இந்து அரசு செய்யும் சூழ்ச்சி அன்றோ? மோதும் பகைமை எல்லாம் நாம் தமிழர் என்பதால் அன்றோ ? நீதி நேர்மை எல்லாம் இந்தியர் கீதை ஏட்டில் மட்டும்தானே !! இந்தி புகுத்தி விட்டார் – இவர் சூதுநிறை மதஆட்சியாலே ; மந்திகள் ஆடவிட்டார் அவரை மந்திரி என்ற பெயராலே குந்தி மைந்தர் என்பார்; இவர் கோசலை குமரென்பார் ; விந்தியமலைக்கீழேஇருக்கு நமை வேற்றுகிரக மக்களென்பார் ; இராம…

நீயின்றி இயங்காது எம் உலகு! – கவிஞர் கனிமொழி

நீயின்றி இயங்காது எம் உலகு!   பேசுவதை நிறுத்திக்கொண்டாய். “உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது” என்று நினைத்துவிட்டாயா? பேசிப் பேசி அலுத்து விட்டதா? சொல்வதற்கு இருந்ததை எல்லாம் சொல்லிவிட்டேன் என்றா? உன் வார்த்தைகளின் எசமானர்கள் நாங்கள் என்று உனக்குத் தெரியாதா? மௌனம் கனத்துக்கிடக்கிறது எங்கள் பாதையை அடைத்துக்குக்கிடக்கும் அசைக்க முடியாத பாறையாய்… வெடித்துக் கிடக்கும் வறண்ட வயலின் வரப்பில், செய்வது அறியாது நிலைகுலைந்து நிற்கும் குடியானவனைப் போல நாங்களும் காத்துக்கிடக்கிறோம் கார்முகிலாய் திரளும் சொற்களுக்காக. கடல் பிளந்து மறுகரை சேர்க்கிறேன் என்ற கிழவனை, பறித்துச்…

சுடும்! சுடும்! சுடும்! – மு இராமச்சந்திரன்

சுடும்! சுடும்! சுடும்! சுடும் சுடும் நீரும் சுடும் நெருப்பும் சுடும் நேர் நேர் நின்றால் நட்பும் சுடும்! வாயும் சுடும் வரவும் சுடும் வரம்புகள் மீற நிழலும் சுடும் ! காற்றும் சுடும் கவிதைகள் சுடும் கசடரைப் பார்த்தால் நெஞ்சும் சுடும் ! பூவும் சுடும் பொழுதும் சுடும் பொதுவில் நில்லா மன தைச் சுடும் ! அன்பும் சுடும் ஆசையும் சுடும் அழகே இல்லா நடையும் சுடும் ! சுடும் . சுடும் . போரும் சுடும் பொழுது போக்காய் செய்வது…