உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சிறப்புற்றோங்குக! – இலக்குவனார் திருவள்ளுவன்

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சிறப்புற்றோங்குக! நடந்து முடிந்த 11ஆவது உலகத்தமிழ் மாநாட்டின்பொழுது புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பொறி.அரசர் அருளாளரையும் பேரா.முனைவர் ப.மருதநாயகத்தையும் முறையே தலைவராகவும் செயலராகவும் கொண்ட புதிய அமைப்பிற்கு வாழ்த்துகள். இம்மன்றம் தொய்வின்றிச் சிறப்பாகச் செயற்படவேண்டும். அதற்கு முதலில் இதன் உரிய பெயரிலேயே சங்கச் சட்டங்களின் கீழ்ப் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். 7.1.1964 இல் தொடங்கப்பெற்ற இம்மன்றம் ஈராண்டுக்கொரு முறை மாநாடு நடத்துவதை இலக்காகக் கொண்டது. அப்படியானால் இதுவரை முப்பது மாநாடுகளேனும் நடந்திருக்க வேண்டும்.ஆனால் 11 மாநாடுதான் நடந்துள்ளது. இதுவே இம்மன்றத்தின் தக்கச்…

பெயரை மாற்றிக் கொண்ட மலேசிய (உலகத் தமிழ்) மாநாட்டினருக்குப் பாராட்டு. – இலக்குவனார் திருவள்ளுவன்

பெயரை மாற்றிக் கொண்ட மலேசிய (உலகத் தமிழ்) மாநாட்டினருக்குப் பாராட்டு. மலேசியாவில் இவ்வாரம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற இருப்பதை அறிவீர்கள். இது குறித்து முன்னரே “போட்டிக் குழுவை உருவாக்கக் கூடாது. “ என அகரமுதல இதழில் (06.11.2022) “திருவள்ளுவரை இழிவு படுத்தும் சார்சா தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம்!” என்னும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். எனினும் மன்றத் தலைவர் முனைவர் மு.பொன்னவைக்கோவிடமும் பிற பொறுப்பாளர்களிடமும் ஒன்றுபட்டு நடத்துவதே சிறப்பு என வலியுறுத்தி வந்தோம். “அடுத்தடுத்து இரு தமிழ் மாநாடுகள் எதற்கு? முதல்வர் ஒன்றிணைக்க வேண்டும்!” (அகரமுதல –…

ஆளுமையர் உரை 55,56 & 57 : தமிழ்க்காப்புக்கழகம்:  இணைய அரங்கம்: 23.07.2023

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர்,திருக்குறள் 414) தமிழே விழி!                                                           தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 55,56 & 57 : தமிழ்க்காப்புக்கழகம்:  இணைய அரங்கம்: நிகழ்ச்சி நாள்: ஆடி 07, 2054 /23.07.2023  ஞாயிறு தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00  கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்  “தமிழும் நானும்” – உரையாளர்கள் தமிழிசை…

தமிழ் மாநாடும் தமிழக அரசும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் மாநாடும் தமிழக அரசும் உலகத்தமிழாராய்ச்சி மன்றம் ஆசியவியல் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய 11ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு இனிதே நிகழ்ந்து முடிந்தது. போதிய காலமின்மை, போதிய பணமின்மை ஆகியவற்றால் இடர்ப்பாடுகளை எதிர்நோக்கினாலும் மாநாடு சிறப்புடன் முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைவு விழாவின்போது சட்டக்கதிர் சம்பத்து அவர்கள் “அரங்கு நிறைய ஆராய்ச்சியாளர்கள் அமைதியாக அமர்ந்திருப்பதே மாநாட்டின் வெற்றிக்கு அடையாளம்” என்றார். அஃது உண்மைதான். பொதுவாகக் கருத்தரங்கம் அல்லது மாநாட்டிற்கு வருபவர்கள் அமர்வின்பொழுது முழுமையாக இருப்பதில்லை. அல்லது எல்லா  நாள் அமர்வுகளிலும் பங்கேற்பதில்லை. ஆனால், இந்த…

11ஆவது உலகத்தமிழ் மாநாடு முடிந்தது. மலேசியா தமிழ் மாநாட்டின் நிலை என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்

11ஆவது உலகத்தமிழ்மாநாடு முடிந்தது. மலேசியா தமிழ் மாநாட்டின் நிலை என்ன? கடந்த வெள்ளி, சனி , ஞாயிறு (07,08,09.07.2023) சென்னையில் 11ஆவது உலகத்தமிழ்மாநாடு உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. ஆனால் மலேசியாவிவ் இதே மன்றத்தின் பெயரைப் பயன்படுத்திச் சூலை 21-23இல் 11 ஆவது உலகத்தமிழ்மாநாடு நடைபெறுவதாக அறிவித்து அதற்கான் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 11 ஆவது மாநாடு நடந்து முடிந்த பின் 12 ஆவது மாநாடுதானே நடைபெற வேண்டும். அப்புறம் ஏன் மீண்டும் 11 ஆவது மாநாடு ? முன்பே…

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 52,53 & 54 : இணைய அரங்கம்: 18.06.2023

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.   (திருவள்ளுவர், திருக்குறள் – 415) தமிழே விழி!                                                           தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 52, 53 & 54 : இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: ஆனி 03, 2054 / ஞாயிறு / 18.06.2023 தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00  கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்  “தமிழும்…

ஆட்சி நிலைக்கத் தமிழை நிலைக்கச் செய்வீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(தயிருக்குப் பொங்கிய முதல்வர் எல்லாவற்றிற்கும் பொங்க வேண்டும்!: தமிழுக்குச்செய்ய வேண்டிய ஆயிரம் 24 –தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 25 – ஆட்சி நிலைக்கத் தமிழை நிலைக்கச் செய்வீர்! எழுதவே வெட்கப்படுகிறோம்! வேதனைப்படுகிறோம்! எத்தனை முறைதான் அரசின் ஆங்கிலத்திணிப்பைக் குறித்து எழுதுவது? இரு நாள் முன்னர்ப் பிறப்பித்த இ.ஆ.ப. அலுவலர்கள் மாறுதல் ஆணை கூட ஆங்கிலத்தில்தான். பொதுத்துறை உட்பட எல்லாத்துறைகளிலும் தமிழ் ஈடுபாடு மிக்கவர்களையே அரசு செயலர்களாக அமர்த்தினால்தான் தமிழைக் காண முடியும். ஆங்கிலத்தைத் திணிப்பதற்கு அவர்கள் வெட்கப்படாமல் இருக்கலாம். வேதனை உறாமல்…

உலகத் தமிழ் மாநாடு : நூல் வெளியீடும் விற்பனை அரங்கும்

உலகத் தமிழ் மாநாடு : நூல் வெளியீடும் விற்பனை அரங்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்(IATR) நடத்தும் 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னை வரும் ஆனி 22, 23 & 24, 2054 ****சூலை 07,08& 09.2023 அன்று சென்னையில் செம்மண்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில்  உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற உள்ளது. உ.த.ஆ.நி. தலைவராக முனைவர் பொன்னவைக்கோவும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளராகப் பொறி.அரசரும் மாநாட்டுச் செயற்தலைவராக முனைவர் சான்சாமுவேலும் உள்ளனர். அறிஞர்கள் பலரும் பணிக்குழுப் பொறுப்புகளில் உள்ளனர். இம்மாநாட்டில் நூல்…

தோழர் தியாகு எழுதுகிறார் 121 : இரு தேசங்கள் ஒரு தேர்தல் 2/2

(தோழர் தியாகு எழுதுகிறார் 120 : இரு தேசங்கள் ஒரு தேர்தல் 1/2 -தொடர்ச்சி) இரு தேசங்கள் ஒரு தேர்தல் 2/2 இப்போது அதிபராகியுள்ள இராசபட்சர் சந்திரிகாவால் தலைமையமைச்சர் பதவிக்குப் பொறுக்கியெடுக்கப்பட்டவர். இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆகவே எவ்வித அரசியல் தடையுமின்றி அவர்களால் ஒரு தீர்வை முன் மொழிந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை. புலிப்படையை அழித்தொழித்துத் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கும் ஆசைத் திட்டத்தைக் கைவிடவும் இல்லை. அதனால் புலிகளோடு உடன்பாடு காண்பதை விடவும் இந்தியாவோடு இராணுவ உடன்படிக்கை…

தோழர் தியாகு எழுதுகிறார் 120 : இரு தேசங்கள் ஒரு தேர்தல்

(தோழர் தியாகு எழுதுகிறார் 119 : வள்ளலார் சொல்கிறார்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! ஈழத் தமிழர் இனவழிப்புக்கு சிங்களப் பேரினவாத அரசு காரணம், அதற்கு உடந்தையாக இருந்த இந்திய அரசு காரணம் என்ற உண்மையை மறைத்துத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது பழிபோடும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இப்படிப் பழி சுமத்துகின்றவர்கள் எடுத்துக் காட்டும் ஒரு முகன்மைச் சான்று 2005ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தல் ஆகும். இந்தத் தேர்தலில் இரணில் விக்கிரமசிங்காவும் மகிந்த இராசபட்சேவும் போட்டியிட்டார்கள். இந்தத் தேர்தலை விடுதலைப் புலிகளின்…

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 49,50 & 51 : இணைய அரங்கம்: 04.06.2023

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.(திருவள்ளுவர், திருக்குறள் 416) தமிழே விழி!                                                           தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 49,50 & 51 : இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: வைகாசி 21 , 2054 / ஞாயிறு / 04.06.2023 தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00  கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)  “தமிழும் நானும்” – உரையாளர்கள் இணையத்தமிழ்ச்சுடர்…

(சிங்கப்பூர்)11ஆவது உலகத்தமிழ் மாநாடு – ஆன்றோர் உரைகளும் அறிவிப்புகளும்

(சிங்கப்பூர்)11ஆவது உலகத்தமிழ் மாநாடு – ஆன்றோர் அறிவிப்புகளும் உரைகளும் பிரிவு 2 இலக்குவனார் திருவள்ளுவன் 01- 10.12 முனைவர் உலகநாயகி 10.13 -14.47 முதுமுனைவர் முருகன் 14.48 – 19.25 முனைவர் சேயோன் 19.26- 23.48 முனைவர் அருத்தநாரீசுவரன் 23.49 – 24.53 பிரிவு 1 முனைவர் மருதநாயகம் 01.-7.39 முனைவர் பொன்னவைக்கோ 7.40 – 12.25 முனைவர் சுந்தரமூர்த்தி 12.26 – 15.19 முனைவர் பிரான்சிசு முத்து 15.20 – 21.56 முனைவர் சான் சாமுவேல் 21.57- 41.02 நேருரை தொடுப்பு :செல்வி…