நீலிக்கண்ணீரை நிறுத்தட்டும் நடிப்புத் திலகம் இரசனிகாந்து! – இலக்குவனார் திருவள்ளுவன்
நீலிக்கண்ணீரை நிறுத்தட்டும் நடிப்புத் திலகம் இரசனிகாந்து! நடிப்பையும் தோரணையையும் பொருத்தவரை பெரும்பாலான நேயர்களின் உள்ளத்தைக் கவர்ந்துள்ளார் இரசனிகாந்து என்பதில் ஐயமில்லை. ஆனால், அதனாலேயே அவரது சொல்லுக்குக் கட்டுப்படும் மக்கள் பெரும்பான்மையர் இருப்பதாக எண்ணினால் தவறு. மக்கள் திலகம் ம..கோ.இரா.வின் (எம்ஞ்சியாரின்) கொடை உள்ளத்துடனும் தமிழ் உணர்வுடனும் ஒப்பிடக்கூட இயலாதவர்தான் இரசனிகாந்து என்பதில் ஐயமில்லை. பணத்துக்கு விலை போவோரால் எழுதப்பட்ட தமிழ்உணர்வு வரிகளுக்கு இரசனிகாந்து வாயசைத்துள்ளார். ஆனால், சொந்தக்கருத்தாக எப்பொழுதும் தன்னை வாழ வைக்கும் தமிழ்நாட்டு நலன் சார்ந்தகருத்துகளைத் தெரிவித்தவர் அல்லர். மனித…
‘அதற்கும் அப்பால்’ நிகழ்ச்சிப் பதிவுகளுக்கான அழைப்பு
வணக்கம். சேக்கம் சமூகசேவை அமைப்பு வழங்கும் ‘அதற்கும் அப்பால்’ நிகழ்ச்சிக்கான பதிவுகள், பங்குனி 22, 2048, செவ்வாய் ஏப்பிரல் 04, பங்குனி 23, 2048, புதன்கிழமை, ஏப்பிரல் 5 ஆகிய நாள்களில் இடம்பெறவுள்ளன. உங்களையும் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம். முதல்பதிவு வருகை: மாலை 6.00 மணி இரண்டாம் பதிவு வருகை: மாலை 7.30 மணி இடம் : இரா அரண்மனை விருந்துக்கூடம் [ ERAA Palace Banquet Hall, 10 Karachi Dr, Markham, ON. L3S 0B6…
இலங்கையை ‘இலங்கை’ என்றே தமிழில் குறிப்பிடுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இலங்கையை ‘இலங்கை’ என்றே தமிழில் குறிப்பிடுங்கள்! இலங்கையைத் தமிழில் குறிப்பிடும் நம்நாட்டுத்தமிழர்களும் இலங்கைத்தமிழர்களும் ஈழத்தமிழர்களும் உலகத்தமிழர்களும் அரசுமுறைப் பெயரைச் சரியாகக் குறிப்பிடுவதாக எண்ணிச் சிரீ இலங்கா என்றே குறிப்பிடுகின்றனர். ஈழம், இலங்கை என்பன தொடர்புடைய பெயர்களே! ஈழத்துப் பூதன்தேவனா் என்னும் புலவர் சங்கக்காலத்தில் வாழ்ந்துள்ளார். ஈழத்து உணவு என்பதைப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. சங்க இலக்கியத்தில் இலங்கை என்றும் சொல்லாட்சி உள்ளது. ‘தொன்மாவிலங்கை எனச் சிறுபாணாற்றுப்படை குறிக்கிறது. ‘இலங்கை கிழவோன்’ எனப் புறநானூறு(379) குறிப்பிடுகிறது. ஈழம் என்றால் பொன் எனப் பொருள்….
நூல் வெளியீடும் அறிமுகக் கூட்டமும், ஈரோடு
பங்குனி 20, 2048 ஞாயிறு ஏப்பிரல் 02, 2047 காலை 10.00 – நண்கல் 1.00 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பாரதி புத்தகாலயம்
சவூதி இரியாத்தில் நடைபெற்ற குடும்ப ஒன்று கூடல்
சவூதி இரியாத்தில் நடைபெற்ற குடும்ப ஒன்று கூடல் சவூதி இரியாத்து நகரில் பரங்கிப்பேட்டை இசுலாமிய நல்வாழ்வுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பரங்கிப்பேட்டை குடும்பங்கள் ஒன்றுகூடல் நிகழ்வு 17 மார்ச்சு 2017 அன்று இசுதிராஃகா இலயாலைனா என்னும் மகிழகத்தில் மிகச் சிறப்பாக நிகழ்வுற்றது. இதில் அகவை வாரியாக பிள்ளைகளுக்கான ஒப்பித்தல்(கிராஅத்து) போட்டிகள், பேச்சுப் போட்டி, இசுலாமிய வினாவிடை எழுத்துத் தேர்வு, ஆண்கள் பெண்களுக்கான இசுலாமிய எழுத்துத் தேர்வு ஆகிய அறிவுசார் போட்டிகளும், ஆண்களுக்கான கால்பந்து, மட்டைப்பந்தாட்டங்களும், மாற்றி எண்ணு(யோசி), ஊமை விளையாட்டு (Dumb Charades)…
சார்சாவில் இரத்தத் தான முகாம்
சார்சாவில் இரத்தத் தான முகாம் சார்சா நகர் மையம் பின்புறம் உள்ள நகர் வாடகைஊர்தி(City-Taxi) அலுவலகத்தில் மாசி 07, 2048 – திங்கட்கிழமை – 20.03.2017 காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை குருதிக்கொடை முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் முதுவை இதாயத்து 050 51 96 433 கீழை ஏ அமீது யாசின் 052 777 8341 ஆகியோரைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
உத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும், கனடா
அன்புடையீர், உத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும் கனடாவில் புகழ்மணக்கும் தொராண்டோ பெருநகரில் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாள்களில் நடக்கவிருக்கின்றது. உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்கள் சிறப்பு ஆய்வுரை நிகழ்த்தவிருக்கின்றார்கள். தமிழ்க்கணிமை சார்ந்த எல்லாத் தலைலப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கருத்தரங்க முழக்கங்கள்: ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning) தமிழில் தரவு அறிவியல் (Data Science) நினைவில் கொள்க: 2 பக்க ஆய்வுச்சுருக்கம் அனுப்ப இறுதி நாள்: சித்திரை…
ஐ.நா.வின் அலுவல் மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஆக்குக! – இலக்குவனார் திருவள்ளுவன்
விரைவாக நடைபெறும் சமற்கிருதத் திணிப்பு! மெல்லவும் விழிக்காத தமிழ் மக்கள்! ஐ.நா.வின் அலுவல் மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஆக்குக! பாரதிய மக்கள்(சனதாக்) கட்சியும் பேராய(காங்கிரசு)க் கட்சியும் இந்தித்திணிப்பிலும் சமற்கிருதத் திணிப்பிலும் ஒற்றுமை உள்ளவை. பேராயக்கட்சி மெல்லத்திணிப்பதுபோல் நடிக்கும். பா.ச.க.விற்கு அந்த நடிப்பு பிடிக்காது. ஆனால், வேறொரு வேற்றுமை உண்டு. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என இந்துமதத்தைத்திணிப்பதிலும் பாசக கவனம் செலுத்தும். நம் நாட்டில் இந்தியையைும் சமற்கிருதத்தையும் திணித்துத் திணித்துச் சலிப்பு ஏற்பட்டு விட்டது பா.ச.க.விற்கு. எனவே, உலக…
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்கள், வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்கள், வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்! இலங்கை அரசின் இனப்படுகொலை, போர்க்குற்றம், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமானவர்களை உசாவுவதற்கு, ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானத்திற்கு விடையளிக்கும் கடப்பாட்டினை தொடர்ந்து புறக்கணித்துவரும் இலங்கை அரசுக்கு, இம்முறையும் செனிவாவில் இன்னும் இரண்டு வருட கால நீட்டிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் மாசி 28, 2048 / 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டு காணாமல்…
எல்லாம் கொடுக்கும் தமிழ் – பாவலர் கருமலைத்தமிழாழன்
எல்லாம் கொடுக்கும் தமிழ்! என்னயில்லை நம்தமிழில் ஏன்கையை ஏந்தவேண்டும் இன்னும் உணரா திருக்கின்றாய் — நன்முறையில் பொல்லாத தாழ்வுமனம் போக்கியுள்ளே ஆய்ந்துபார் எல்லாம் கொடுக்கும் தமிழ் ! எள்ளல் புரிகின்றாய் ஏகடியம் பேசுகின்றாய் உள்ள துணரா துளறுகின்றாய் — உள்நுழைந்து கல்லாமல் தாழ்த்துகிறாய் காண்கதொல் காப்பியத்தை எல்லாம் கொடுக்கும் தமிழ் ! எந்த மொழியிலுமே இல்லா இலக்கணமாம் நந்தமிழில் மட்டுமுள்ள நற்பொருளாம் — செந்தமிழர் நல்லொழுக்க வாழ்க்கைக்கு நல்வழியைக் காட்டியிங்கே எல்லாம் கொடுக்கும் தமிழ் ! ஐந்தாய் …
சூழ்ச்சித் திட்டம் தீட்டியது யார்? – புகழேந்தி தங்கராசு
(மு.க.தாலின் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை பிப்பிரவரி 19ஐ – தொடர்ச்சி) மு.க.தாலினும் பிப்பிரவரி 19-உம்! (2) சூழ்ச்சித் திட்டம் தீட்டியது யார்? ‘பழையவற்றையெல்லாம் ஏன் கிளறுகிறீர்கள்’ – எனச் சண்டைக்கு வருகிறார்கள், பழைய நண்பர்கள் சிலர். உள்ளூர் அழைப்புக்கும் 25 காசு, வெளியூர் அழைப்புக்கும் 25 காசு என்கிற கட்டணக் குறைப்புத் திட்டத்தில் (Rate cutter) இணைந்து விட்டார்கள் போலிருக்கிறது… என்னை ஒரு சொல் சொல்ல விடாமல் மூச்சு விடாது பேசிக் கொண்டிருக்கிறார்கள். கூட இருந்தே குழி பறிப்பவர்களுக்கு மறப்போம் மன்னிப்போமெல்லாம் பொருந்தாது…
இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 2/2
(இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2 தொடர்ச்சி) இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 2/2 ? தமிழ் பேசும் வழக்கம் தமிழர்களின் வீடுகளில் குறைந்துவரும் இந்தக் காலத்தில் தமிழ்ப்பண்பாட்டுக்குரிய வேறு செயல்கள் தொடர்ந்து பழக்கத்தில் உள்ளனவா? கோயிலுக்குச் செல்லுதல், திருமணங்களில் சடங்குகள், குழந்தைகளுக்குப் பெயர் வைத்தல் போன்றவற்றில் இன்னும் பண்பாட்டு வழக்கங்கள் கையாளப்பட்டு வந்தாலும், மெதுவாக அவை மாறிவருகின்றன. தமிழ்ப்பெயர்கள் இப்போது குறைந்து வருகின்றன. ? இந்தோனேசியாவில் தமிழ்வழித்தோன்றல்கள் குறிப்பாக எந்தப் பகுதிகளில் மிகுந்து காணப்படுகிறார்கள்?…
