பொங்கல் விழா 2047 / 2016, கனடா

  தை 03, 2047 / சனவரி 17, 2016 காலை 10.00 முதல்  பிற்பகல் 02.00 வரை   கனடிய மண்ணில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புகளுள் சிலவான கனடியத் தமிழர் தேசிய அவை, அறிவகம், ஆகிய அமைப்புகளோடு இணைந்து கனடியத் தமிழ் வானொலியும் சேர்ந்து தமிழர் மரபுரிமைத் திருவிழாவாம் தைப் பொங்கல் விழாவை இளம் தமிழர் மனத்தில், தமிழர்நாள் நினைவுகள் தித்திக்கும் வண்ணங்களாகப் பதியும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நிகழ்த்த உள்ளார்கள். அனைவரும் இந்நிகழ்வுக்கு வருக என அன்போடு அழைக்கின்றார்கள்,…

தமிழ்க்கூடல், தனிப்பாடல்

மார்கழி 27, 2046 /  சனவரி 12, 2015 சென்னை அன்புடையீர் வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன். இந்த ஆண்டின் முதல் நிகழ்வுக்கு,  சென்னைக் கம்பன் கழகம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன். 9841181345.  

வெள்ளி விழா மருத்துவ அறிவியல் மாநாடு, சென்னை

  25 ஆவது விழா மருத்துவ அறிவியல் மாநாடு ஞாயிறு :24/01/16 காலை : 9 மணி முதல் 5 மணிவரை இடம் : இந்திய அலுவலர்கள் சங்கம் (IOA) 69,திரு.வி.க சாலை, அசந்தா அருகில் இராயப்பேட்டை , சென்னை -14 (பேசி: 28116807, 9841055774 தலைமை : மரு.கமலிசிரீபால் முன்னிலை :திருமதி . மணிமேகலை கண்ணன்,  மரு.செயச்சந்திரன் சிறப்பு விருந்தினர் : மரு. இளங்கோவன் : ‘மெய்நிகராக்கம் வாழ்கை’ புத்தகம் வெளியிட்டுச் சிறப்புரை தியாகி சுவாமிநாதன், தோப்பூர் சுப்ரமணியன் நினைவுப் பரிசு. நூல்…

ஐம்பெரும் விழாக்கள், உடுமலைப்பேட்டை

தமிழமுது பருக…. தவறாது வருக….! அனைவருக்கும் வணக்கம் ! வருகின்ற திருவள்ளுவர் ஆண்டு 2047, சுறவம் ( தை ) : 2 அன்று திருவள்ளுவர் நாள் விழா முதலான ஐம்பெரும் விழாக்கள் உடுமலைப்பேட்டை, திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளன. உணர்வாளர்கள் – நண்பர்கள் – தோழர்கள் – மாணாக்கர்கள் – குழந்தைகள் – தாய்மார்கள் – பொதுமக்கள் அனைவரும் வந்து கலந்துகொண்டு, விழாவைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்! அன்புடன் உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம், உடுமலைப்பேட்டை – 642 126….

மே பதினேழு இயக்கம் : பேரழிவை உருவாக்கியது யார்? – கருத்தரங்கம்

  சென்னை – கடலூர் பேரழிவை உருவாக்கியது யார்? இனிவரக்கூடிய பேரழிவினைத் தடுப்பது எப்படி? – கருத்தரங்கம்    மார்கழி 24, 2046 / 09.01. 2016, சனிக்கிழமை மாலை 4 மணி, செ.தெ.நாயகம் பள்ளி, தியாகராயநகர், சென்னை. மே பதினேழு இயக்கம்