மணவை முசுதபா 80 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

  அறிவியல்தமிழறிஞர் திரு. மணவை முசுதபா அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை வைகாசி 31, 2046 / சூன் 14, 2015 மாலை சென்னையில் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள இந்திய அலுவலர் சங்ககக்கட்டடத்தில் மாலை 5.00 மணிமுதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது.    தேநீர் விருந்துடன் தொடங்கும் விழா, இரவு விருந்துடன் நிறைவடைகிறது.   அந்நிகழ்வின் பொழுது அறிவியல் தமிழ் அறக்கட்டளை அமைப்பினை அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்க விண்ணியல் அறிவியல் துறையில் அருந்திறல் ஆற்றியுள்ள மதிற்பிற்குரிய முனைவர்…

சங்கத் தமிழ் 87 ஆவது மாதக் கூட்ட அழைப்பு

  வைகாசி 30, 2046 / 13-6-2015 சனிக்கிழமை, மாலை 6.00 மணி தலைப்பு- ‘நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் தமிழ்ச் சுவை’ ஆய்வுரை: திரு. சொ. வினைதீர்த்தான். வருக! வருக! இவண் செயலர் த. மு. எ. க. ச. காரைக்குடி.

தன்மதிப்பு வாழ்வியல் சான்றிதழ்ப் பயிற்சி

பெரியார் ஈ.வெ. இரா. –  நாகம்மை இந்திய அயலக மொழிகள் பண்பாட்டு நிறுவனம் சுயமரியாதை வாழ்வியல் சான்றிதழ்ப் பயிற்சி சனி, ஞாயிறு தோறும்ஆடி 16 / ஆகத்து 1 முதல் தொடக்கம் விண்ணப்ப இறுதி நாள்  ஆனி 25, 2045 /  10.07.2015

கனடா உதயன் இதழின் 1000ஆவது இதழ் வெளியீட்டு விழா , சென்னை

    கனடா உதயன் இதழின் 1000ஆவது இதழ் வெளியீட்டு விழா   சென்னை தியாகராயநகர் வாணி மகாலில் வரும் ஆனி 12, 2046 / சூன் 27ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நிகழவிருக்கிறது.  கவிதைஉறவு அன்பர்களும் இலக்கிய ஆர்வலர்களும் திரண்டு வந்து கலந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறேன். ஏர்வாடி இராதாகிருட்டிணன்

உதவி வேண்டும் தாய்த்தமிழ்த்தொடக்கப்பள்ளி, பொள்ளாச்சி

அன்பிற்குரியீர்!                   வணக்கம்.   புதிய மனிதனை உருவாக்குவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். நாம் சொல்லும் புதிய மனிதன் – நுகர்வியத்தை வெறுத்தொதுக்கி பிற மனிதனின் கண்ணீர் துடைக்கும் ஒப்புரவு, எதிரி என்றாலும் அவரையும் கண்ணியமாகவும் மாந்தநேயத்தோடும் நடத்தும் அறம், கேள்விக்கு சொல்லித்தரப்படும் விடையைக் கேள்விக்குட்படுத்தும் அறிவாற்றல், அறிவை ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டுக்குப் பயன்படுத்தும் உயர்நோக்கம் கொண்டவராய்  இருக்க வேண்டும். இதைச்  சாதிக்க தமிழால்தான் முடியும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இப்படி ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும்…