மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவில் தமிழறிஞர்களுக்கு இடந் தருக! – இலக்குவனார் திருவள்ளுவன்
மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவில் தமிழறிஞர்களுக்கு இடந் தருக! கல்வித்துறை என்பது மாநில அரசுகளின் வரம்பிற்குட்பட்டது. அதனைப் பொதுப் பிரிவாக மாற்றிய ஒன்றிய அரசு நாளடைவில் ஒன்றிய அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டதாக மாற்றி வருகிறது. இதனால் தேசிய மொழிகள், தேசிய இனங்கள் பாதிப்புறும் வண்ணம் கல்விக்கொள்கையை வகுத்துக் கொண்டு புதிய கல்விக்கொள்கை என்ற பெயரிலும் வேறு பெயர்களிலும் மாநில மக்களின் கல்விகளில் அதிகாரம் செலுத்தி அல்லல் படுத்தி வருகிறது. எனவே, இச்சூழலில் தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கைக் குழு என ஒன்றை அமைத்திருப்பது பாராட்டிற்குரியது. இத்தகைய…
இலக்குவனார் வலியுறுத்தும் கல்விக் கொள்கை- இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் வலியுறுத்தும் கல்விக் கொள்கை – இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பன்முக அறிஞராகவும் களப்பணிகளில் ஈடுபட்ட போராளியாகவும் திகழ்ந்தவர். “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர். இதற்காகத் தமிழ்க்கல்வியையும் தமிழ்வழிக் கல்வியையும் எக்காலமும் எப்பொழுதும் வலியுறுத்திவந்தவர். தமிழ்வழிக்கல்விக்கு மூடு விழா நடத்திக் கொண்டு வரும் நாம் இப்பொழுதாவது இத்தகைய அழிவுப்பணிக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும். தமிழ் நலப்பணிகளில் கருத்து செலுத்தும் தமிழக அரசு தமிழ்நாட்டில் கல்வி என்றால் அது தமிழ் வழிக்கல்வியே என்னும் சீர்நிலையைக்…
புலமைப்பித்தன் மீளாத் துயில் கொண்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்
புலமைப்பித்தன் மீளாத் துயில் கொண்டார் தமிழ்த்தேசிய உணர்வாளரும் தமிழீழச் செயற்பாட்டாளரும் திரைப்படப்பாடலாசிரியருமான புலவர் புலமைப்பித்தன் (புரட்டாசி 20, 1966 /06.10.1935 – ஆவணி 23, 2052 / 08.09.2021)இன்று மீளாத்துயில் கொண்டார். கோவை மாவட்டம், பள்ளப்பாளையத்தில் உயர்மிகு கருப்பண்ணன் – தெய்வானையம்மாள் இணையருக்குப் பிறந்தவர் இராமசாமி. ஒருமுறை இந்தி ஆசிரியர் ஒருவர், இவரைப் பைத்தியக்காரன் என விளையாட்டாகக் கூற, “ஆம்.நான் பைத்தியக்காரன்தான். தமிழ்மீது பைத்தியம் கொண்டவன்” எனச்சொல்லித் தன் பெயரைப் புலமைப்பித்தன் என மாற்றிக்கொண்டவர். பள்ளி இறுதி வகுப்பு முடித்த பின்னர் கோவை, சூலூரில்…
கலைஞர் பெயரைக் கேடயமாகப் பயன்படுத்தி மொழிக்கொலை புரிய அரசைத் தூண்டுவதா? – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைஞர் பெயரைக் கேடயமாகப் பயன்படுத்தி மொழிக்கொலை புரிய அரசைத் தூண்டுவதா? பதவி ஆசை உள்ள ஓய்வு பெற்ற சிலரும் உயர்பதவியில் அதிகாரச் சுவையைச் சுவைக்க விரும்பும் சிலரும் தங்கள் பதவி அரிப்பைத் தணித்துக் கொள்ள புதிய பல்கலைக்கழகம் ஒன்றுக்குக் குரல் கொடுத்துள்ளார்கள். நேரடியாகத் தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியாதே! அதனால் அவர்கள் எடுத்துள்ள கருவியே விடுதலைச்சிறுத்தை. எனவேதான், “கலைஞரின் பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வேண்டும்..” – என அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திருமாவளவன் மூலம் அறிக்கை ஒன்று வந்துள்ளது. அக்கட்சியில்…
