கலைச்சொல் தெளிவோம் 45 உரனி- Vitamin

45 உரனி- Vitamin   உயிர்ச்சத்து எனப் பலராலும் குறிக்கப்படும் ‘வைட்டமின்’ என்பதற்கு வேளாணியல், பயிரியல், வேதியியல் ஆகியவற்றில் ‘உயிர்ச்சத்து’, ‘வைட்டமின்’ என்றும். மீனியல், மனையியல் கால்நடைஅறிவியல் ஆகியவற்றில ‘உயிர்ச்சத்து’ என்றும் குறிப்பிடுகின்றனர். சிலர் ‘வைட்டமின்’ அல்லது ‘விற்றமின்’ என ஒலிபெயர்ப்பு அடிப்படையில் அயற்சொல்லையே கையாளுகின்றனர்.   இதற்கு நாம் சங்கச் சொல் அடிப்படையில் புதுச்சொல் அறிந்து பயன்படுத்த வேண்டும். உரன் (19) என்னும் சொல் மன உறுதி, பற்றுக்கோடு என்னும் பொருள்களில் சங்க இலக்கியங்களில் வந்துள்ளன. [சிறுபாணாற்றுப்படை (115,190); நற்றிணை (3-6, 333-5);…

கலைச்சொல் தெளிவோம் 44 : அஞர்-mental distress ; கொடுமகிழ்வு-sadism

44 : அஞர்-mental distress ; கொடுமகிழ்வு-sadism  வாங்க வாங்கநின்று ஊங்குஅஞர் நிலையே (நற்றிணை : 30.10) ஆர வுண்டு பேரஞர் போக்கி (பொருநராற்றுப்படை : 88) என்பனபோன்று, அஞர்(33) மனத்துயரத்தைக் குறிக்கின்றது. distress: உளஇடர்ப்பாடு என மனையறிவியல் கூறுகிறது. அஞர்-mental distress என்பது பொருத்தமாக அமையும்.  தொல்பொருள் துறையில் sadism என்பதற்கு அஞரின்பம் என்றும் sadist என்பதற்கு அஞரின்பர் என்றும் சொல்கின்றனர். நம் துன்பத்தில் இன்பம் காண்பது என்பது நமக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு எதிர் நோக்குவது. ஆனால் பிறரைத் துன்புறுத்தி…

கருவிகள் 1600 : 441 – 480 : இலக்குவனார் திருவள்ளுவன்

  441. ஒற்றை அச்சுச் சுழல் நோக்கி –  single-axis gyroscope 442. ஒற்றை நிறமானி – monochrometer 443. ஒற்றைக் குறிகைநோக்கி – monoscope 444. ஒற்றைக்கட்ட மானி – single-phase meter 445. ஒற்றைப் பொன்னிழை மின்னோக்கி – Wilson electroscope 446. ஓசைமானி – toro meter 447. ஓட்ட வகைத் தொலை மானி – current-type telemeter 448. ஓட்ட வகைப் பாய்மமானி – current-type flowmeter :    மூடியும் திறந்தும் உள்ள தடங்களில் நீர்மத்தின் திசை வேகத்தை…

கலைச்சொல் தெளிவோம் 43 : வாட்டூன்-roasted mutton/chicken பொதிபொரி-puff

43 : வாட்டூன்-roasted mutton/chicken; பொதிபொரி-puff     பொரித்தலும் வறுத்தலும் (குஞ்சு)பொரித்தல்-hatch/hatching (வேளா., பயி., மனை., கால்.); fry/frying(கால்., மனை., வேளா., வங்., மீனி., தக.); puff(மனை.); வறுத்தல்-fry/frying(மனை.,கால்.); roasting (புவி., மனை., கால்., தக., வேதி., வேளா.) என்று அடைகாத்துக் குஞ்சு பொரித்தல், வாணலியிலிட்டு வறுத்தல், தீயிலிட்டு வாட்டுதல், என ஒரே சொல்லையே வெவ்வேறு வகைக்குக் குறிப்பிடுகின்றனர். சங்கக்காலத்தில் கருனை(4) எனப் பொரித்த கறியைக் (Any preparation which is fried) குறிப்பிட்டுள்ளனர். கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு…

கருவிகள் 1600 : 401-440 : இலக்குவனார் திருவள்ளுவன்

401. ஒளிநுண் வரைவி – photomicrograph : ஒளிநுண் வரைவு- நுண்பொருள்களை நுண்ணோக்கி மூலம் படம் எடுத்துப் பெருக்குதல்(- மூ.520). ஒளிநுண் வரைவு என்பதை விட ஒளிநுண் வரைவி என்பதே சரியாக இருக்கும். 402. ஒளிப்பொருள் உறழ்மானி – twyman and greens interferometer – ஒளிசார் பொருள்களை ஆய்ந்தறிய பயன்படுததப்படுவதால், ஒளிப்பொருள் உறழ்மானி எனலாம். 403. ஒளிபேசி – photophone : ஒளிபேசி – ஒருவர் பேசுவதைச்சிறிது தொலைவிற்கு ஒளிக்கற்றைவாயிலாகச் செலுத்தும் கருவி (-மூ 521) 404. ஒளிமானி – lucimeter /photometer…

கலைச்சொல் தெளிவோம் 42 : வகுத்தூண்-diet

 42 : வகுத்தூண்-diet    உணவு-meal (ஆட்.,கால்.), food (வேளா.,சூழ.,), diet (பயி.,மீனி.) என வெவ்வேறு வகையாகக் குறிப்பிடுகின்றனர்.  (இ)டயட்(டு)-diet என்பதைத் திட்ட உணவு (ஆட்.,வேளா.,மனை.), சீர் உணவு(ஆட்.), சரியுணவு, அளவு உணவு என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். இவை யாவும் இயல்பான நிலையில் உள்ள சரியளவு உணவைக் குறிப்பதாகவே கருதப்படுகின்றன. பத்தியம் என்றும் சிலர் சொல்கின்றனர். இது சரியான சொல் என்றாலும் நோய்நிலையுடன் தொடர்புபடுத்தியே கருதிப் பார்ப்பதால் இதுவும் இயல்பான நிலையில் ஏற்கத்தக்கதாகக் கருதப்படவில்லை. உணவுக் கட்டுப்பாட்டையே வழக்கத்தில் இச்சொல்லின் பொருளாகக் கருதுகிறோம். நாம் கொள்ளத்…

கருவிகள் 1600 : 361-400 : இலக்குவனார் திருவள்ளுவன்

361. ஒப்புநோக்கு அடர்த்திமானி  – comparator-densitometer 362. ஒப்புமானி – machometer / machmeter  : விமானக்காற்று ஒப்புவிசைமானி: காற்று வேகத்தின் கூறளவாக விமான வேகத்தை கணித்தளவிடும் கருவி (-செ.).ஒலி விரைவிற்கும் விண்ணூர்தி விரைவிற்கும் உள்ள ஒப்புமையைக் காட்டும் கருவி. எனவே சுருக்கமாக ஒப்பு மானி எனலாம். 363. ஒல்லைமானி – velometer :  காற்றின் விரைவை அல்லது காற்றின்ஊடாகச் செல்லும் விண்ணூர்தியின் விரைவை அளக்கும் கருவி. வேகம் என்னும் பொருளில் தமிழில் கதழ்வு, கடுகல், முடுகல்,வல்லை, ஒல்லை முதலான 12   சொற்கள் உள்ளன…

கலைச்சொல் தெளிவோம் 41 : உடை வகைகள் : மீகை-over coat, கஞ்சுகம்-safari

 41 : உடை வகைகள் : மீகை-over coat, கஞ்சுகம்-safari      காதி அல்லது கதர்-khadi என்பதற்குக் கைந்நூலாலை, கதர் ஆடை (ஆட்.), மெருகேறிய கதர்(தொ.நுட்., மனையியல்) எனக் கூறுகின்றனர். ‘மதிப்பு மிகுந்த’ என்னும் பொருளில் சொல்லப்பட்ட காதி-khadi/கதர் கையால் நூற்கப்படுவதையே குறிப்பிடுகிறது. கையில்கட்டும் காப்புநூலைக் கைந்நூல் எனக் குறுந்தொகை(218.2) குறிப்பிடுகிறது. விசையால் இயங்கும் தறியை விசைத்தறி (ஆட்.,மனை.) என்றும் கையால் இயங்கும் தறியைக் கைத்தறி (வேளா.,மனை.) என்றும் சொல்வதுபோல் கையால் நூற்கப்படுவது என்ற பொருளில் கைந்நூல் என்பதே சரியானது. ஈரணி-two piece…

கலைச்சொல் தெளிவோம் 40 – உடலுறுப்புகளுக்கான சுட்டடைகள்

  அக– internal அண்மை–proximal கீழ்–inferior உழை-lateral எதிர்மம்-opponens குறு-brevis சேய்மை–distal நடுவண்மை – medial சிறு–மினிமி/minimi நெடு-longus நீள்-Extensor பின்-posterior புறம்-dorsal முன்-anterior வெளி-external மடக்கு-abductor விரி–adductor ஆழ்–deep மீ–superficial மேல்–superior     உடலுறுப்புகளைச் சுட்டிக் காட்டுவதற்கு முதன்மை உறுப்பின் அருகில் அல்லது தொலைவில் அல்லது முன்புறம் அல்லது பின்புறம் அல்லது பக்கவாட்டில் என்பனபோல் அமைவிடத்தைக் குறிப்பிட்டே உடலுறுப்புகளின் பெயர்களைக் குறிப்பிடுவர். இத்தகைய சுட்டடைகள் சங்கச் சொற்களாக அமையும் பொழுது எளிதான சொல்லாக்கங்கள் உருவாகின்றன. அண்மை(1), அண்மைய(1), சேய்மையன்(1), சேய்(43), சேய்த்து(8),…

கருவிகள் 1600 : 321-360 : இலக்குவனார் திருவள்ளுவன்

  321. எதிர்முனைக்கதிர் மின்வலி மானி – cathode-ray voltmeter 322. எதிர்வினைப்பு மானி – reactive meter 323. எதிரிருமடி ஒளிமானி – jollys photometer : எதிர் இருமடி விதி (Inverse-square law) யின் அடிப்படை யில் உருவாக்கப்பட்ட ஒளிமானி. 324. எதிருரு நோக்கி – stratton pseudoscope : முப்பருமான நோக்கியில் ஒரு வகை. இதிலுள்ள கண்ணாடிகள், வல, இடப் பார்வைகளைத் தலைகீழ் முறையில் காட்டும். 325. எதிரொலிமானி – echometer 326. எதிரொளி விகித மானி – glossimeter/…

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 6 – இலக்குவனார் திருவள்ளுவன்

(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி) தமிழ்த்தேசியம் சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர் முக்குலத்தவர் ஆட்சி செய்த நாடுதான் தமிழ்நாடு. எனினும் இனம் என வரும் பொழுது சேர இனம், சோழ இனம், பாண்டிய இனம் என இல்லாமல் தமிழினமாகத் தழைத்திருந்தனர். எனவேதான், தமிழ்த்தேசியத்தை உணர்த்தத் தமிழகம் எனச் சேர்த்தே புலவர்கள் பாடி உள்ளனர். இதை உணர்த்தும் வகையில், அரசால் மூவர் என்றாலும் இனத்தால் ஒருவரே என உணர்த்தும் வகையில், ” நாம்மூவர் ஆனாலும் ஒரும னத்தார்! நாட்டினில்வே…

இலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே! தோற்றது பா.ச.க.

இலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே! தோற்றது பா.ச.க.     இலங்கை அதிபர் தேர்தலில் கொலைகார இராசபக்சே மண்ணைக் கவ்வினான். கோவில் கோவிலாகச் சுற்றியும் கடவுள் கருணை காட்டவில்லை.   கணியத்தை – சோதிடத்தை – நம்பி ஈராண்டுக்கு முன்பே தேர்தலை நடத்தித் தன் தலையில் தானே மண்ணை வாரிகப் போட்டுக் கொண்டான்! மக்களை நம்பாமல் சோதிடத்தை நம்பினால் இதுதான் கதி என மக்கள் காட்டிவிட்டனர்.     அவனுக்கு வாழ்த்து தெரிவித்ததன் மூலம் அரசியல் கணிப்பின்மையை வெளிப்படுத்திய பாசக அரசின் தலைவர்…