கலைச்சொல் தெளிவோம் 35 : தாழி மரம் – bonsai

தாழி மரம் – bonsai போன்சாய் (bonsai) என்றால் குறுஞ்செடி வளர்ப்பு, குறுமர வளர்ப்பு என மனையறிவியலில் கையாளுகின்றனர். பொருள் சரியாக இருந்தாலும் சங்கச் சொல் அடிப்படையில் நாம் புதுச் சொல் உருவாக்குவது நன்றல்லாவா? பானையைக் குறிக்கும் தாழி என்னும் சொல் சங்க இலக்கியங்களில்   எட்டு இடங்களில் கையாளப்பட்டுள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்க வரி பின்வருமாறு ஆகும். தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்தி (குடவாயில் கீரத்தனார்ர : அகநானூறு 129: 7) தாழியாகிய மட்பாண்டத்தில் வளர்க்கப்படும் பருத்திச் செடியை இது குறிக்கிறது. மண்தொட்டிகளில் சிறு செடிகளை…

கலைச்சொல் தெளிவோம் 34 : துயின்மை – hibernation

34 : துயின்மை-hibernation இன்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர்க் (பெரும்பாணாற்றுப்படை : 440) இன்றுயில் வதியுநற் காணா டுயருழந்து (முல்லைப் பாட்டு : 80) கம்புட் சேவல் இன்றுயில் இரிய (மதுரைக்காஞ்சி : 254) வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும் (குறிஞ்சிப்பாட்டு: 242) ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின் (நற்றிணை : 87.2) இவைபோல் சங்க இலக்கியங்களில் 62 இடங்களில் துயில் என்னும் சொல்லும் 31 இடங்களில் துயில் என்பதன் அடிப்படையிலான சொல்லும் பயின்றுள்ளன. அவற்றுள் ஒன்று துயின்று என வரும் பின்வரும்…

கலைச்சொல் தெளிவோம் 33 : வலசை – migration

33 : வலசை – migration   இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்லும் பறவைகள் புலம் பெயர் பறவைகள்/transit birds எனப்படும். இவற்றை அயல் புலத்திலிருந்து வருவன, அயற்புலத்திற்குச் செல்வன என இருவகையாகப் பிரிப்பர். இடம் பெயராமல் தாய்மண்ணிலேயே தங்கும் பறவைகளும் உள்ளன.    மைகிரேசன் (migration) எனில் குடிப்பெயர்ச்சி எனத் தொல்லியல், வங்கியியல், பொருளியல் ஆகியவற்றிலும் புலப்பெயர்ச்சி என வேதியியல், தகவல் நுட்பவியல் ஆகியவற்றிலும் வலசைபோதல் என மீனியல், உயிரியல், காலநடைஅறிவியல் ஆகியவற்றிலும் புலம்பெயர்தல் என மனையியலிலும் சட்டவியலிலும் இடம்பெயர்தல் என அரசியலிலும்…

கலைச்சொல் தெளிவோம் 32 : புகைக்கொடி- comet

  32 :புகைக்கொடி– comet   இன்றைக்கு நாம் வால்நட்சத்திரம் என்று சொல்லப்படுவதன் கிரேக்கப் பெயர் கோமெட்(டு) (komete) என்பதாகும். இதிலிருந்தே காமெட் (comet) என்னும் ஆங்கிலப் பெயர் தோன்றியது. நீண்ட முடி என்பது இதன் பொருள். கிரேக்க அறிவியலாளர் அரிசுடாடில் (Aristotle) தலைமுடி போல் தெரிவதாகக் கூறி இதனை அப்பொருளில் முதலில் குறிப்பிட்டார். வால் போல் நீண்டுள்ள விண்பொருள் என்னும் பொருளிலேயே பலர் குறிப்பிடுகின்றனர்.   இதனைப் பனியால் சூழப்பட்ட சிறுகோள் என்றே அயல்நாட்டார் தொடக்கத்தில் கருதி வந்துள்ளனர். அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னரே…

கருவிகள் 1600 : 241-280 : இலக்குவனார் திருவள்ளுவன்

  241.  உப்புமானி –   salinometer/ salimeter/ salometer :  கரைசலில் உள்ள உப்பின் செறிவை அளவிடும் மின்கடத்திப் பயன்படுத்தப்படும் கருவி. நீர்ம உப்பியல்புமானி, நீர்ம உப்பியல்பு அளவி என உப்புக் கரைசலை நீர்ம உப்பு என்பதும் சரியான சொல்லாட்சி அல்ல. உப்புமானி எனலாம். 242. உமிழ் மின்னணு நுண்ணோக்கி – emission electron microscope 243. உமிழ்வு நிறமாலைமானி  – emission spectrometer 244.  உயர் நிகழ்வெண் மின்வலி மானி  – high-frequency voltmeter 245. உயர் பகுதிற மின்னணு நுண்ணோக்கி  …

இலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது!

இலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது!   வரும் மார்கழி 24 ,2045 / சனவரி 8, 2015 அன்று இலங்கையில் அரசுத்தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இலங்கையில் தலைவர் பதவிக்காலம் 6 ஆண்டுகள். எனவே 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவர் தேர்தல் நிகழ வேண்டும். ஆனால், இரண்டாம் முறையாக 2010 இல் தலைரவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொடுங்கோலன் இராசபக்சே எதிர்ப்புகள் வலுத்து வருவதால், முன்கூட்டியே தேர்தல் நடத்துகிறான்.   பொதுவாகத் தேர்தல் என்றால் தகுதியுடையவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டாமல் போகிறது. போட்டியிடுபவர்களில் குறைந்த…

கலைச்சொல் தெளிவோம் 31: கோளுதிரி – asteroid

கோளுதிரி – asteroid   விண்ணியலிலும் கணக்கியலிலும் அசுட்டிராய்டு/asteroid என்பதற்குச் சிறுகோள் என்றும் பொறிநுட்பவியலிலும் புவியியலிலும் குறுங்கோள் என்றும் குறிப்பிடுகின்றனர். இவற்றைச் சிறுகோள்கள் என்று சொல்வதை விட வேறு பொருத்தமான சொல்லால் அழைப்பதே பொருத்தமாகும். கோள் பற்றி 105 இடங்களிலும் கோள்மீன் 5 இடங்களிலும் சங்க இலக்கியங்களில் வருகின்றன.    உதிர்பு(4), உதிர்க்கும்(4), உதிர்த்த(20), உதிர்த்தலின்(1), உதிர்த்து(3), உதிர்தரு(1), உதிர்ந்த(6), உதிர்ந்தன(1), உதிர்ந்து(4), உதிர்ந்தென(1)உதிர்ப்ப(3), உதிர்பு(2), உதிர்வ(1), உதிர்வன(5), உதிர்வை(1), உதிர (22) என உதிர் தொடர்பான சொற்கள் உள்ளன. உதிர் + இ…

கலைச்சொல் தெளிவோம் 30 : சேணாகம்- Pluto; சேண்மம்- Neptune

30 :சேணாகம்- Pluto ; சேண்மம்- Neptune     சேய்மையன் (1), சேண் (96),சேணன் (1),சேணோர் (1),சேணோன் (9)  எனச் சேண் அல்லது அதனடிப்படையிலான சொற்கள் சங்க இலக்கியங்களில் பயின்றுள்ளன. கண்ணுக்கெட்டாத தொலைவு,  நினைவிற்கெட்டாத தொலைவு என மிகுதொலைவை இவை குறிக்கின்றன. இவற்றின் அடிப்படையில் மிகுதொலைவிலுள்ள கோள்களுக்குப் பெயர் சூட்டலாம். சேண்விளங்குசிறப்பின்ஞாயிறு (புறநா. 174, 2) எனத் தொலைவிலுள்ள ஞாயிறு குறிக்கப்பெறுகிறது.   புளூட்டோ- Pluto என்பதனையும் நெப்டியூன் – Neptune என்பதனையும் ஒலி பெயர்ப்பில்  அல்லது  தொலைவிலுள்ள கோள் என்றே விண்ணியலிலும்…

கருவிகள் 1600 : 201-240 : இலக்குவனார் திருவள்ளுவன்

  201. ஈய இதழ் மின்னோக்கி – aluminum leaf electroscope / wilson electroscope 202. ஈய இலை மின்னோக்கி –  aluminum leaf electroscope 203. ஈர்-மானி – g-meter :  ஈர்ப்பு மானி > ஈர் மானி; சுருக்கமாக ஈ-மானி என்றால் ‘ஈ ‘ என்னும் உயிரியுடன் தொடர்புபடுத்தப்பட்டுத் தவறான பொருள் வரும். 204. ஈர்ப்பளவி  – suction gauge 205. ஈர்ப்பு உலவைமானி  – suction anemometer 206. ஈர்ப்புமானி / எடைமானி  –  gravimeter :  நீர்ம…

கருவிகள் 1600 : 161 – 200 : இலக்குவனார் திருவள்ளுவன்

  161. இருட்புல நுண்ணோக்கி – darkfield microscope   :  இருட்டுப்பின்னணியில் ஒளிப்பொருளை அறிய உதவம் இருட்புல நுண்ணோக்கி. 162. இருநிற நோக்கி – dichroscope   : படிகங்களின் வண்ணக்கோலத்தை அளவிடப்பயன்படும் கருவி. (மூ.182) 163. இருபக்கக் கதிரியமானி – net radiometer : கதிர்ச்செறிவுமானியின் வகைகளுள் ஒன்று. வளிமண்டிலவியல் பயன்பாடுகளில் பூமியின்மேற்பரப்பில் நிகரக் கதிர்வீச்சினை அளவிடப் பயன்படுவது. பொதுவாகச்சூழ்உடலியல் துறையில் பயன்படுகிறது. நிகரக் கதிர்வீச்சளவி, இருபக்கக் கதிர்வீச்சு அளவி என இரு பெயர்கள் வழக்கத்தில் உள்ளன. கதிரிய மானியான இதனைக் கதிர்வீச்சு…

கலைச்சொல் தெளிவோம் 29: வியலி – giant

 29: வியலி – giant மிகப்பெரிய விண்மீன்gaint – அரக்கன் எனப்படுவதும் பொருத்தமாக இல்லை. அரக்கன் என்பது உயர்திணையாக வருவதால் வேறுவகையாக எண்ணுவதற்கு இடமில்லை. மிகப்பெரிய கோளை வியாழன் எனக் குறிக்கிறோம். வியல் என்பது அகலத்தைக் குறிப்பதால் மிகவும் அகன்ற பெருங்கோள் வியாழன் எனப்படுவது பழந்தமிழரின் அறிவியல் புலமையைக் காட்டுகிறது. வியல் 113 இடங்களிலும் வியன் 94 இடங்களிலும் சங்கஇலக்கியங்களில் வருகின்றன. அகன்ற பரப்புடைய ஊர் வியலூர் என அழைக்கப்பட்டமையும் பின்வரும் அடியால் தெரியவருகின்றது. வாலைவேலிவியலூர்அன்ன (மாமூலனார்: அகநானூறு: 97.13) அகன்று பரந்துள்ள பரப்பு…

கலைச்சொல் தெளிவோம் 28 : குறுமி – dwarf

 28. குறுமி- dwarf    ஞாயிற்றைவிடப் பெரியவிண்மீன்களை gaint என்றும் மிகவும் சிறிய விண்மீன்களை dwarf என்றும் தமிழிலேயே ஒலிபெயர்ப்பாகக் குறிக்கின்றனர். அல்லது அரக்கன் என்றும் குள்ளன் என்றும் மாந்தர்களைக் குறிப்பதுபோல் நேர்மொழிபெயர்ப்பாகக் குறிப்பிடுகின்றனர். dwarf – குட்டை, குள்ளமான என வேளாணியலிலும் குள்ளர் எனச் சூழறிவியலிலும் குட்டையான, குள்ளன் என மனையறிவியலிலும் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில், குள்ளமாக உள்ள மனிதர்களைக் குறிக்கும் சொல்லால் விண்பொருளையும் குள்ளன் என்று குறிப்பது பொருத்தமில்லை. குறு(56), குறுக்கை(2), குறுக(6), குறுகல்(7), குறுகல்வேண்டி(3), குறுகல்மின்(1), குறுகா(2), குறுகாது(3), குறுகார்(1),…