தமிழ்நாட்டில்தான் சனாதனம் உருவாகியது என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருப்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(எல்லாரும் சமம் என்பது சாத்தியமில்லை – சரியா?- தொடர்ச்சி) 5. இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படும் . . . . இந்த நிலத்தில்தான் சனாதன தருமம் உருவாகியது. இந்தத் தருமம் பாரதம் முழுவதும் பரவியது. பாரதம் என்றால் சனாதன தரும இலக்கியங்கள் என்று பொருள்” என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருக்கிறாரே! இது பொதுவாக ஆரியர்களின் வழக்கம். ஒன்றைப்பற்றிய தீய சக்தியை மக்கள் புரிந்து கொண்டால், அதனைச் சமாளிப்பதற்காக அதைப்பற்றிய இல்லாத நல்ல செய்திகளை இருப்பதாகப் பரப்புவர். அதுபோல்தான் இப்போதும். சனாதனத்திற்குரிய எதிர்ப்பு…
எல்லாரும் சமம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை எனச் சனாதனவாதிகள் கூறுவது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் என்பது நிலையானதுதானா? (தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 3. எல்லாரும் சமம் என்பது, எழுதவும் பேசவும் இனிப்பாக இருக்கும்; நடைமுறையில் அது சாத்தியமில்லை. ஒரே வண்டியில் பயணிப்பதால், உரிமையாளரும் ஓட்டுநரும் ஒன்றில்லை. – தினமலரின் சிந்தனைக் களத்தில் சானதனக் காவலாளி இரங்கராசு கூறிய செய்தியாகும்.- சரிதானா? இஃது அனைத்துச் சாதியினரையும் சமமாகப் பார்க்கக் கூடாது என்பதற்குச் சொல்லப்படும் மறுப்பு விளக்கமாகும். பதவி முறையில் உள்ள வேறுபாடு நிலையானதல்ல. அப்பதவி மாறும் பொழுது அதுவும் மாறும். இன்றைய வண்டி ஓட்டுநர் நாளைய உரியமையாளராகலாம்….
சனாதனம் என்பது நிலையானதுதானா?
(சனாதனம் – பொய்யும் மெய்யும் – பதிப்புரை – தொடர்ச்சி) சனாதனம் என்பது நிலையானதுதானா? நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறிவு ஆண்மை, கடை. என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 331) இதன் மூலம், “நிலைத்திருத்தல் அல்லாதனவாகிய பொருள்களை, நிலைத்து இருப்பன என்று நினைக்கின்ற அற்ப அறிவைக் கொண்டு இருத்தல் இழிநிலை” என்கிறார் திருவள்ளுவர். இத் திருக்குறளுக்கு விளக்கமாக, மாதவச் சிவஞான யோகிகள் பாடிய, “சோமேசர் முதுமொழி வெண்பா” என்னும் நூலில் இத்திருக்குறளை விளக்கிப் பின்வரும் பாடல் வருகிறது. ஆக்கையும் ஆயிரத்துஎட்டு அண்டங்களும் நிலையாத் தூக்கி…
சங்கப்புலவர்கள்பொன்னுரை – 12 : அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11 : யார் யாரையோ இணைப்பது அன்புதான்! –தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 12 அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை! “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” – புறநானூறு 55, 10. திணை : பாடாண்திணை துறை : செவியறிவுறூஉ பாடியோர் : மதுரை மருதன் இளநாகனார் பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் (இம்மன்னன் குறித்துச் சங்கப்புலவர்கள் பொன்னுரை – 2 இல் குறித்துள்ளோம்.) கொற்றம் என்றால் வெற்றி என்று பொருள். அரசியலாட்சி என்றும் பொருள். ஆனால் அரசின் கொற்றம் என வருவதால் இங்கே அது…
தாழிமரம் அறிவோமா? – bonsai – அன்றே சொன்னார்கள் 14 (விரிவு)
தாழிமரம் அறிவோமா? bonsai அன்றே சொன்னார்கள் 14 தொட்டிகளில் வளர்க்கும் குறுமர வகைகளை நாம் போன்சாய் என்கிறோம். போன்சாய் என்பது சப்பானியச் சொல். போன் என்பது சிறு பானையைக் குறிக்கும்; சாய் என்பது செடியைக் குறிக்கும். சீன மொழியில் பென்(ஞ்)சாய் எனப்படுகிறது. சிறு தொட்டிகளில் வளர்க்கும் செடி வகைகளைச் சீனர்கள் 6 ஆம் நூற்றாண்டில் வளர்த்து வந்திருக்கலாம் எனப் படங்கள் மூலம் அறிய வருகிறோம். எனினும் சப்பானில் 11 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே போன்சாய் அறிமுகமாகியுள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் இம்முறை உலகெங்கும் பரவியது….
குறள் கடலில் சில துளிகள் 27. அறமறிந்த அறிவு உடையவரைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 26. விருப்பத்தைப் பகைவர் அறியப் புலப்படுத்தாதே! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 27. அறமறிந்த அறிவு உடையவரைத் துணையாகக் கொள்க! அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்: ௪௱௪௰௧ – 441) பதவுரை: அறன்-அறவழி; அறிந்து-தெரிந்து; மூத்த-முதிர்ந்த; அறிவுடையார்-அறிவுடையவர்; கேண்மை-உறவு, நட்பு; திறன்-கூறுபாடு; அறிந்து-தெரிந்து; தேர்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க. பொழிப்பு: அறநெறியை அறிந்து முதிர்ந்த அறிவினையுடையாரது நட்பை அதன் ஆற்றலை அறிந்து, ஆராய்ந்து அடைய…
சட்டச் சொற்கள் விளக்கம் 966-970 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 961-965 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 966-970 966. Attendance (S. 7(9) ROBDA, 1969) வருகை முன்னிலையாதல் கல்வியகம், பணியகம், தொழிலகம் போன்ற இடங்களில் உரிய நேரத்தில் பயிலுவோர் அல்லது பணியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் வருவதைக் குறிப்பது. முறை மன்றம் போன்ற இடங்களில் அதன் தலைவர் முன்னர் நேர் நிற்பதை அல்லது முன்னிலையாதலைக் குறிப்பது. தொல்பொருள், கருவூலப் பொருள்கள் சட்டம் 1972(Antiquities and Art Treasures Act), இருப்பூர்தித் துறை(சட்ட…
நாலடி நல்கும் நன்னெறி : 9 இளமையிலேயே நல்லன செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 8 : காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 9. இளமையிலேயே நல்லன செய்க! தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா இறக்கும் இவள்மாட்டும் – காழிலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகுந் தன்கைக்கோல் அம்மனைக்கோ லாகிய ஞான்று. -நாலடியார், இளமை நிலையாமை 14 பொருள்: கூன் விழுந்து உடல் தளர்ந்து தலை நடுங்கிக் கைத்தடி ஊன்றி வாழும் இம் மூதாட்டி முன்பு இவள் தாய் மூதாட்டியாக இருக்கும் பொழுது இளமை நலம் திகழப் பிறர்…
திராவிடம்தமிழைக்காக்குதா? அழிக்குதா? – இலக்குவனார் திருவள்ளுவருடன் காரசார விவாதம் | பவா சமத்துவன்
(தொடரும்)
அன்றே சொன்னார்கள் – காற்றின் வகைமை தெரியும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(அன்றே சொன்னார்கள் 11 : முகிலறிவியலின் முன்னோடி நாமே! –தொடர்ச்சி) அன்றே சொன்னார்கள் –காற்றின் வகைமை தெரியும்! காற்று உலகெங்கும் பரவி இருந்தாலும் ஒரே தன்மையில் இல்லை. சில நேரங்களில் அல்லது சில இடங்களில் வலிமை குறைந்தும் வேறு சில நேரங்களில் அல்லது இடங்களில் வலிமை மிகுந்தும் காணப்படுகின்றது. கப்பல் தளபதி பிரான்சிசு பியூஃபோருட்டு (Sir Francis Beaufort : 1774 –1857) என்னும் ஐரீசு நாட்டு நீர்ஆராய்வாளர் 1806ஆம் ஆண்டில் காற்று வீசும் வலிமைக்கேற்ப அதனை வகைப்படுத்தினார். அவ்வாறு காற்று வீசும் விரைவிற்கேறப்ப வீச்சு எண்களையும் பின்வருமாறு வரையறுத்தார். வீச்சு எண்…
அன்றே சொன்னார்கள் 11 : முகிலறிவியலின் முன்னோடி நாமே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(அன்றே சொன்னார்கள் : சேம அச்சு – stepney – தொடர்ச்சி) அன்றே சொன்னார்கள்முகிலறிவியலின் முன்னோடி நாமே! வான் மழை பெய்யும் முகில் கூட்டம் பல வகையாய் உள்ளது என 19 ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். ஆவர்டு (Luke Howard: 1772-1864) என்னும் பிரித்தானிய அறிஞர் வெவ்வேறு வகை முகில் கூட்டம் உள்ளன என உணர்ந்து அவற்றிற்குப் பெயர்கள் இட்டார். என்ற போதிலும் முதல் முறையாக முகில்களின் வேறுபாடுகளை உணர்ந்து வகைப்பாடுகளை விளக்கியவர் இலமார்க்கு (Jean-Baptiste Lamarck:1744-1829) என்னும் அறிவியலாளரே. ஆனாலும்…
புவியின் சுழற்சியை முதலில் உணர்ந்த தமிழர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(சேமக்குடுவையின் முன்னோடி – தொடர்ச்சி) அன்றே சொன்னார்கள் 7 புவியின் சுழற்சியை முதலில் உணர்ந்த தமிழர்கள் பழந்தமிழ் மக்கள் அறிவியல் நோக்கிலேயே எதனையும் சிந்தித்தனர். ஆனால், பிற நாடுகளில் அறிவியல் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டபொழுது அறிவியலாளர்கள் சமயவாதிகளால் தண்டிக்கப்பட்டனர்; உயிர்பறிக்கப்பட்டனர். 1548 இல் பிறந்த இத்தாலிய அறிவியலாளர் கியார்டனோ புருனோ (Giordano Bruno) எனப்பெறும் பிலிப்போ புருனோ (Filippo Bruno) அண்டங்களைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியவர். 1584இல், முடிவற்ற அண்டமும் உலகங்களும் (Infinite Universe and Worlds) முதலான இரு நூல்களை வெளியிட்டார். சமய நம்பிக்கைக்கு…
