அன்றே சொன்னார்கள் : சேம அச்சு – stepney – இலக்குவனார் திருவள்ளுவன்
(புவியின் சுழற்சியை முதலில் உணர்ந்த தமிழர்கள் – தொடர்ச்சி) சேம அச்சு ஆங்கிலத்தில் இஃச்டெப்னி (stepney) என்றால் வழக்கத்தில் கூடுதலாகச் சேர்த்துக் கொண்ட துணையைக் குறிப்பதாக மாறிவிட்டது. என்றாலும் ஊர்திகளில் மாற்றுச் சக்கரத்தைக் குறிப்பதே உண்மை.வால்டர் தேவீசு (Walter Davies) என்பவர் தாம் (Tom) என்பவருடன் சேர்ந்து இங்கிலாந்திலுள்ள வேல்சு நகரின் இலாநெல்லி (Llanelli) பகுதியில் இஃச்டெப்னி (stepney) தெருவில் 1895இல் இரும்புப் பொருள்கள் கடை தொடங்கி 1902இல் வாடகை ஊர்திப் பிரிவையும் தொடங்கினர். 1904இல் நீதிபதி ஒருவர் வாடகைக்கு எடுத்த ஊர்தியின் (சக்கரத்தின்) புறவட்டில்…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11 : யார் யாரையோ இணைப்பது அன்புதான்! – இலக்குவனார்திருவள்ளுவன்
(சங்கப்புலவர்கள் பொன்னுரை – 10 : பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!- தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11 யார் யாரையோ இணைப்பது அன்புதான்! “யாயும் ஞாயும் யார் ஆகியரோ?எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?யானும் நீயும் எவ்வழி அறிதும்?செம்புலப் பெயல் நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.” – செம்புலப் பெயனீரார் – குறுந்தொகை : பாடல் 40 பொருள்: யாய்=என் தாய்;…
தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 130 & 131; நூலாய்வு
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௬ – 416) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்: ஆளுமையர் உரை130 & 131; நூலாய்வு கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 சித்திரை 21 , 2056 ஞாயிறு 04.05.2025 காலை 10.00 மணி தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன் “தமிழும் நானும்” – ஆளுமையர்கள் திருவள்ளுவர்…
சேமக்குடுவையின் முன்னோடி – இலக்குவனார் திருவள்ளுவன்
(உயிரறிவியலின் முன்னோடி – தொடர்ச்சி) அன்றே சொன்னார்கள் 5 சேமக்குடுவையின் முன்னோடி அறிவியல் ஆய்வகங்களில் ஒரு பொருளை அதன் வெப்பம் அல்லது குளிர்ச்சி மாறாமல் காப்பது என்பது பெரும்பாடாக இருந்தது. இதற்கு 1892இல் ஒரு தீர்வு கண்டார் அறிவியல் அறிஞர் சேம்சு திவியார் (Sir James Dewar). அவர் கண்டுபிடித்த வெப்பக்குடுவை (Thermos Flask) வெப்பத்தைப் பாதுகாக்கவும் குளிர்ச்சியைப் பாதுகாக்கவும் உதவியது. அறிவியல் உலகில் இப்படி ஒரு தேவை உள்ளதை அக்கால நம் நாட்டவர் உணர்ந்திருந்தார்கள் எனில் நம் முன்னோரைப் பின்பற்றி எளிதில் சேமக்கலனை…
உயிரறிவியலின் முன்னோடி – இலக்குவனார் திருவள்ளுவன்
அன்றே சொன்னார்கள் 4 உயிரறிவியலின் முன்னோடி 1902ஆம் ஆண்டு உலக மக்களை வியப்பில் ஆழ்த்தினார் அறிஞர் சகதீசு சந்திரபோசு. அவர் வெளியிட்ட உயிரினங்கள்-உயிற்றவற்றின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) என்னும் நூலில் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்றதால் குழப்பமும் வியப்பும் ஏற்பட்டு இறுதியில் உலகம் அவரைப் போற்றியது. நம்மிடம் உள்ள அறிவியல் புதையலை அறியாத நாமும் அறியாமையால் இன்று வரையும் அவ்வாறுதான் படித்து வருகிறோம். பாடல் வடிவில் உள்ள தமிழ் இலக்கிய உண்மைகள் யாவும் கற்பனையே என்னும்…
கலைஞர் பல்கலைக்கழகம் தவறில்லை. தமிழ்ப்போராளி இலக்குவனார் பெயரிலும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்
நேரலை: கலைஞர் பல்கலைக்கழகம்.. பாமக கேட்கலாமா? வன்னியர்களுக்கு கலைஞர் செய்த துரோகம் | TNMedia Debate நெறியாளர் – தொகுநர், ஊடகர் சிவசங்கர் உரைஞர்கள் தமிழ்த்தேசச் செயற்பாட்டாளர் செந்தமிழ்க் குமரன் மூத்த தமிழறிஞர் இதழாளர் இலக்குவனார் திருவள்ளுவன் எழுத்தாளர், மூத்த ஊடகர் பவா சமுத்துவன்
சட்டச் சொற்கள் விளக்கம் 961-965 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 956-960 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 961-965 961. At sight கண்டவுடன் கண்ட நிலை காட்டியவுடன் பார்த்த உடன் “At sight” என்பது சட்டப் பிரிவிலும் நிதித் துறையிலும் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கொண்டுள்ளது. சட்டப் பிரிவில், “at sight” என்பது ஒரு கடமை அல்லது பணம் செலுத்த வேண்டிய தேவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைப் பற்றிக் குறிக்கும். பணப் பரிமாற்றங்கள், ஒப்பந்தங்களில்,…
குறள் கடலில் சில துளிகள் . 26. விருப்பத்தைப் பகைவர் அறியப் புலப்படுத்தாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் . 25. உன்னையே வியந்து கொள்ளாதே! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 26. விருப்பத்தைப் பகைவர் அறியப் புலப்படுத்தாதே! காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:குற்றங்கடிதல் குறள் எண்: ௪௱௪௰ – 440) பதவுரை: காதல-காதலித்த பொருள்கள்; விரும்புகின்ற பொருள்கள்; காதல்-விருப்பம்; அறியாமை-தெரியாமல்; உய்க்கிற்பின்-செலுத்த வல்லனாயின். பொழிப்பு: தன்விருப்பம் வெளிவராவாறு அடக்கி வாழ்ந்தால், பகைப்பார் தோற்பார் (பேரா.வெ.அரங்கராசன்). தனக்கு விருப்பமானவற்றைப் பிறர் அறியாதபடி அடக்கி வைத்திருப்பவனிடம் பகைவரின் வஞ்சகச்…
விலங்கறிவியல் – இலக்குவனார் திருவள்ளுவன்
விலங்கு என்பது குறுக்காக நடப்பவற்றைத்தான் குறிப்பிடும். கைகளில் குறுக்காக மாட்டப்படும் சங்கிலிக்காப்பை விலங்கு என்கிறோம் அல்லவா? வளைந்த அமைப்பு உள்ளதுதானே வில். எனவே, குறுக்காக உடலுடைய உயிரினங்கள் விலங்குகள் எனப் பட்டன. எனினும் அறிவியலில் பறவை வகைகளும் விலங்கு வகையில் அடங்கும். ஏன், மனிதனே ஒரு மன்பதை விலங்குதானே! தமிழ்ப் பெருநிலப்பரப்பு, புவி அமைந்த தொடக்கக் காலத்தில் இன்றைய ஆப்பிரிக்கா முதல் ஆசுதிரேலியா வரை இருந்தமையால் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்திருந்தன. அவற்றையெல்லாம் ஆராயும் நோக்கில் மாணாக்கர் அறிவு வளம் பெருக வேண்டும். பொதுவாக இப்புவியில்…
நாலடி நல்கும் நன்னெறி 8 : காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 7 : பயனின்றிச் சேர்ப்போர் இழப்பர் – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 8 காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப் பல்கழன்று பண்டம் பழிகாறும் – இல்செறிந்து காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே ஏம நெறிபடரும் ஆறு. பொருள்: சொற்கள் தளர்ந்து கைத்தடியுடன் நடக்கும் முதுமை வரையும் காமவழியில் செல்வார்க்குப் பேரின்ப நெறியில் செல்வதற்கு வழியில்லை. சொல் விளக்கம்: சொல்=சொற்கள்; தளர்ந்து=வலிமை குறைந்து(குழறி); கோல்=ஊன்றுகோலை; ஊன்றி=ஊன்றிக்கொண்டு; சோர்ந்த=தள்ளாடிய; நடையினர் ஆய்=நடையை உடையவராய், பல்=பற்கள், கழன்று=உதிர்ந்து,…
சங்கப்புலவர்கள் பொன்னுரை – 10 : பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!- இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9-தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 10 பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்! “பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக” ஐங்குறுநூறு 5. 2 பதவுரை : பிணி – நோய்; சேண் நீங்குக – தொலைவிற்குச் செல்லுக; அஃதாவது இல்லாமல் போகுக. ஐங்குறுநூற்றுப் பாடலில் புலவர் ஓரம்போகியார் “பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக” என வாழ்த்துகிறார். பசி இல்லாமல் ஆவதும் நோய் தொலைவில் நீங்குவதும் இயல்பாக நடைபெறுமா?…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9 : பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 8 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9 பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்! “செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான “ (தொல்காப்பியம், பொருளதிகாரம், பொருளியல், நூற்பா 15) “செறிவு என்பது அடக்கம்; நிறைவு என்பது அமைதி; செம்மை என்பது மனங்கோடாமை; செப்பு என்பது சொல்லுதல்; அறிவு என்பது நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் துணிதல்; அருமை என்பது உள்ளக் கருத்து அறிதலருமை” என்று இளம்பூரணர் உரை வகுத்துள்ளார். செப்பும் என்பதற்குக் கூறத் தகுவன கூறலும் என்கிறார் பேரா.முனைவர்…
