விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 1-இலக்குவனார் திருவள்ளுவன்

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 1 விருது பெறுபவரை விருதாளர் என்பர். இவரோ தான் நிறைய விருதுகளைப் பெற வேண்டும் என்பதற்காகத் தன் பெயரையே விருதாளர் என மாற்றிக் கொண்டவர். தான் சூட்டிய பெயருக்கேற்ப சிறுகதைகளுக்காகவும் புதினங்களுக்காகவும் நிறைய விருதுகள் பெற்றுப் பாராட்டு பெறுபவர். அண்மையில் இவர் எழுதிய ‘வேர்களை மறக்கா விழுதுகள்’ என்னும் புதினம் சிறந்த புதினத்திற்காக அனைத்து இந்திய விருதினைப் பெற்றது. இதற்காகப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் புகழ்பெற்ற ‘வி’ தொலைக்காட்சி நிறுவனத்தினர் இவரைப் பாராட்ட இவர் வீட்டிற்கு…

தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு-தமிழ்க்காப்புக் கழகம்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௲௩௰௩ – 1033)  தமிழ்க்காப்புக் கழகம் தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு 2056 “பொங்கற் புதுநாள் தமிழர் திருநாளே! யாவரும் கொண்டாடலாம்!” இணைய வழி நிகழ் நாள்: மார்கழி 28, 2055. ஞாயிறு 12.01.2025 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்       தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் உரைஞர்கள் : பொங்கற் பாடல் : கவிமாமணி ம.வே.மாணிக்கவாசகம் பாவலர்  மு. இராமச்சந்திரன், தலைவர்,…

சட்டச் சொற்கள் விளக்கம் : 901-905

(சட்டச் சொற்கள் விளக்கம் 896-900, தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் : 901-905 901. assistance, employee   / employee assistance பணியாளர் உதவிபணியாளர்க்கு உதவுதல் தொழிலாளர்களின் பணிமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் முதலாளிகளால் தரப்படும் உதவி. தொழிலாளர்களின் பணித்திறனை மேம்படுத்தவும் தொழிலாளர்களின் சிக்கல்களைத் தீர்க்கவும் தொழிலாளர் ஆணையத்தால் வழங்கப்படும் நிதியுதவி முதலான உதவிகள். தொழிலாளர்களுக்கு ஆற்ற வேண்டிய உதவிகளைச் செய்யாவிட்டால் அதுவும் குற்றமாகும். 902. assistance, Enlist/ Enlist  assistance உதவி பெறுஆதரவு பெறு படையில் சேர்த்திடுபடையில் இடம்பெறுபட்டியலில் இணைத்துக்கொள்சேர்இணைவுறுஆள்சேர்படைக்கு வீரர் திரட்டுதுணையாகப்பெறுஎய்தப்பெறுபயன்படுத்துஈடுபடுத்துபுகுந்தீடுபடு பணி வளங்களைப்…

பொங்கல் விடுமுறையில் இரு குறைபாடு – இலக்குவனார் திருவள்ளுவன்

பொங்கல் விடுமுறையில் இரு குறைபாடு போகிக்கு அல்லவா விடுமுறை விட்டிருக்க வேண்டும்? மொழிப்போர் ஈகியர் நாளை வேலைநாள் ஆக்கியிருக்கலாமா? இவ்வாண்டு(தி.ஆ.2056/பொ.ஆ.2025) தமிழர் திருநாளாம் பொங்கற் புதுநாள் சனவரி 14 செவ்வாயன்று வருகிறது. தொடர்ந்து புதனன்று திருவள்ளுவர்  திருநாள்/மாட்டுப் பொங்கல்(சன.15), வியாழனன்று உழவர் திருநாள் (சன.16) என முந்நாளும் அரசு விடுமுறையாகும். எனவே வெள்ளியன்று விடுமுறை விட்டால் தொடர்ந்து வரும் சனி, ஞாயிற்றிலும் குடும்பத்தினருடன் இருக்கும் வகையில் நல் வாய்ப்பாக இருக்கும் என ஆசிரியர்களும் அரசூழியர்களும் கருதினர். இதற்கிணங்க எழுந்த முறையீட்டு அடிப்படையில் அரசு வெள்ளியன்றும்…

ஆளுமையர் உரை 118 & 119; என்னூலரங்கம் ஞாயிறு 22.12.2024

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை.    (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௪ – 414) தமிழே விழி!                                                                            தமிழா விழி! தமிழ்க்காப்புக் கழகம் ஆளுமையர் உரை 118 & 119; என்னூலரங்கம் மார்கழி 07, 2055 ஞாயிறு 22.12.2024 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00டிவ கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்      தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” உரையாளர்கள் இதழாளர் வி.முத்தையா கண்ணதாசக் காதலர் காவிரி மைந்தன்                                                                என்னூலரங்கம் இலக்குவனார்…

சட்டச் சொற்கள் விளக்கம் 886 – 890: இலக்குவனார் திருவள்ளுவன்

சட்டச் சொற்கள் விளக்கம் 881-885-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் 886 – 890 886.Assessment  மதிப்பீடு தீர்வை விதிப்பு ஏதாவதொன்றின் விகிதத்தினை அல்லது தொகையினைத் தீர்மானித்தல். எடுத்துக் காட்டாக இழப்பீடு அல்லது விதிக்கப்பட்ட ஒறுப்புத் தொகை. குற்றவியல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப் பட்டவரின் உள நிலைமை குறித்துத் தகுதி வாய்ந்த வல்லுநர் ஒருவர் தீர்மானித்தல். குடும்பநல வழக்குகளில் தகுதியான வல்லுநர் ஒருவர் சிறாரின் தேவையையும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான தரப்பினரின் ஆற்றலையும் ஆராய்ந்து மதிப்பிட்டு அறிவிக்கும் பகுப்பாய்வு அறிக்கை. குடியியல் வழக்குகளில் சொத்தினைப் பேணவும் தனிப்பட்ட நலன்…

ஆளுமையர் உரை 116 & 117 ; என்னூலரங்கம்: வெருளி அறிவியல் 5

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று.   (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௧ – 641) தமிழே விழி!                                         தமிழா விழி!             தமிழ்க்காப்புக் கழகம் ஆளுமையர் உரை 116 & 117; என்னூலரங்கம் கார்த்திகை 23, 2055 ஞாயிறு 08.12.2024 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்       தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” உரையாளர்கள் கவிஞர் முத்துக்குமாரசாமி உலகநாதன், யார் தான்…

சட்டச் சொற்கள் விளக்கம் 881-885:

(சட்டச் சொற்கள் விளக்கம் 876-880 தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 881-885 881. animus manendi தங்குகை நோக்கம் நிலை இருப்பிட நோக்கம் ஓரிடத்தில் காலரையறையின்றித் தங்கி அவ்விடத்தைத் தன் நிலையான இருப்பிடமாக ஆக்க எண்ணும் அகநிலை நோக்கமாகும்.   animus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள், உணர்வு, மனம், துணிவு,  சினம் முதலியன. இச்சொல் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக் குறிக்க மற்ற சொற்களுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது.  manendus என்னும் சொல்லில் இருந்து உருவான வடிவமே manendi என்பது. இதன் பொருள் இருத்தல்,…

இலக்குவனார் திருவள்ளுவனுக்கு அடர் தமிழ்ப் போராளி விருது – பெருங்கவிக்கோ அளித்தார்

அன்னை சேது அறக்கட்டளை நடத்திய பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ இணையர் அன்னை சேதுமதியின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தலின் (ஐப்பசி 23, 2055  /  09.11.2024 சனி மாலை 5.30) பொழுது தமிழ்த் தொண்டறத்தார்களுக்கு விருதுகள் வழங்கப்பெற்றன. தொடக்கத்தில் பன்னாட்டுத்தமிழுறவு மன்ற இயக்குநர் கவிஞர் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையில் விருதாளர்களைச் சிறப்பாக அறிமுகப்படுத்தினார். புலவர் மா.கணபதி தமிழ்ப்போராளி புலவர் த.சுந்தரராசன் படத்தினைத் திறந்து வைத்தார். கந்தசாமி (நாயுடு) கல்லூரி முதல்வர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் விருது வழங்குநரை அறிமுகப்படுத்தினார். அறிஞர்கள் சிலரின் உரைக்குப் பின்னர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஏற்புரை வழங்கினார் தமிழ்வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஒளவை ந.அருள் அன்னை சேது மக்கள் சார்பில் தொண்டறச் செம்மல்களுக்குப் பட்டயமும் பொற்கிழியும்…

சட்டச் சொற்கள் விளக்கம் 876-880: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 871-875 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 876-880 876. alternative and cumulative remedy மாற்று – திரள் தீர்வழி மாற்று ஒட்டுமொத்தத் தீர்வழி திரள் தீர்வழி என்பது தரப்பாருக்கு நடைமுறையில் உள்ள தீர்வைவிடக் கிடைக்கும் வாய்ப்புள்ளதாகும். ஒரே இரண்டு தீர்வழிகளும் தவறு செய்பவருக்கு அல்லது தவறு செய்பவர்களுக்கு எதிராக அவரால் அல்லது அவர்களால் பாதிப்புற்றவருக்கு அல்லது பாதிப்புற்றவர்களுக்கு வெவ்வேறு வகையாக வகைப்படுத்தப்படுகின்றன. தீங்கிழைத்தவர் ஒரே ஆளாக இருப்பின் தீர்வழிகளில் மிகுதியான மாறுபாடு இருக்காது. எடுத்துக்காடடாக மண…

உலகத்தமிழ் நாள், இலக்குவனார் 115 ஆவது பிறந்த நாள் பெருமங்கல விழா

தமிழேவிழி!                                                       தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் உலகத்தமிழ் நாள் இலக்குவனார் 115 ஆவது பிறந்த நாள் பெருமங்கல விழா இணைய உரையரங்கம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.(திருவள்ளுவர், திருக்குறள் 28) கார்த்திகை 02, 2055 * ஞாயிறு காலை 10.00 *17.11.2024 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள் முனைவர் ஞானம் பாண்டியன் முனைவர் நாக.இளங்கோ நூலாய்வு: தமிழ்ப்போராளி…

சட்டச் சொற்கள் விளக்கம் 871-875 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 861-870 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 871-875 871. alternative dispute resolution பிணக்குத் தீர்வு மாற்று வழி   பிணக்கு ஏற்படும் பொழுது நீதிமன்றம் செல்லாமல் வேறு வழிகளில் பிணக்கைத் தீர்த்துக் கொள்ளும் வழி.   நடுநிலை இணக்குவிப்பு, சேர்ந்து முடிவெடுக்கும் குடும்பச்சட்டம் முதலியன மாற்று வழிகளாம். 872. alternative இரண்டில் ஒன்றான, மாற்றுவழி, ஒன்றுவிட்டு ஒன்று   இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சாத்தியக்கூறுகளில் ஒன்றுக்கு மாற்றாக அமையும் வாய்ப்பு. 873. Alternative plea…