வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 101-110 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 91-100 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 101-110 (குறள்நெறி) (பயனும் நன்மையும் நல்கும்) இன்சொல் கூறு! எக்காலமும் இன்பம் தரும் இன்சொல் பேசு! இன்சொல் இனிமை தருகையில் வன்சொல் பயன்படுத்தாதே!  (பழமிருக்கக், காய் உண்டல் போன்று,) இன்சொல் இருக்க, இன்னாத கூறாதே!  (வையகமும் வானகமும் ஈடாகா வண்ணம்) உதவாதவர்க்கும்  உதவி செய்!  உற்றநேரத்தில் உதவு!   பயன்கருதாமல் உதவி செய்! (பயன்தெரிவார்க்குப் பனையளவாகும் வண்ணம்) திணையளவு செயலேனும் செய்!   உதவப்பட்டோரின் எண்ணத்திற்கேற்ப உதவியை மதிப்பிடு! தூயவர் உறவை மறக்காதே!…

வெருளி அறிவியல் – 5 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 4 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல்  –  5 7. அணுஆயுத வெருளி-Nucleomituphobia அணுஆயுதங்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் அணுஆயுத வெருளி. அணுஆயுதக்கருவிகள் இல்லாவிட்டாலும் இருந்து பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், அவை பயன்படுத்தப்பட்டுப் பேரழிவுகள் ஏற்படும் என்று கருதுவதால் உருவாகும் அச்சம் அணுஆயுத வெருளி. அமெரிக்கத் தலைவர்களுக்கு ஈராக்கு மீது ஏற்பட்டஅச்சம் இத்தகையதுதான். என்றாலும் அணுஆயுதக் கருவிகள்  இல்லை என்றறிந்த பொழுதும் இருப்பதாகப் பிறரை அச்சுறுத்தி அந்நாட்டை அழிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. போர் முழக்கங்களும் அமைதியின்மையும் வல்லரசு ஆசையும் நிறைந்த உலகில்…

பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது – இலக்குவனார் திருவள்ளுவன், மாலைமுரசு

பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது தமிழ் அறிஞர்கள் கண்டனம் சென்னை, மே 11 பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது என்று தமிழ் அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாணாக்கர்களுக்குத் தரமான தமிழறிவை ஊட்டித் தமிழ்ப்பற்றை வளர்க்க வேண்டியது கல்வித்துறையின் கடமை. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள கல்வித்துறையோ தமிழைத் தவணை முறையில் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு மேனிலைப்பள்ளிகளில் – 11, 12 ஆம் வகுப்புகளில்…

வெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 3 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல்  –  4   அகவை வெருளி – senecophobia அகவை(வயது) கூடுவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அகவை வெருளி.   ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று போகும் என்பது இயற்கை. எனினும் சிலருக்கு அகவை கூடுவது தோற்றத்தில் முதுமையைக் காட்டும் எனக் கவலை தருவதாக அமைகிறது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அகவை கூடினால் வாய்ப்பு குறையும் என்ற அச்சம் வரும். இவற்றால் இத்தகையோர் அகவை கூடுவது குறித்த தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.பெண்களுக்கு அகவை கூடுவது…

மக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

மக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக!   தேர்தலை நடத்துவதற்கு ஒரு நடுநிலை அமைப்பு தேவை என்பதால்தான் தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டது.  மக்களின் அடிப்படை உரிமைகளுள் முதன்மையானது தம்மை ஆளும் மக்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையைப் பயன்படுத்துவது. அதற்கான வாய்ப்பைக்கூடத் தராத செயல்பாட்டுக் குறைவான தேர்தல் ஆணையம் இருந்து என்ன பயன்?  தேர்தலின் பொழுது வாக்காளர் விழிப்புணர்வுப் பரப்புரைகள் நடத்துகின்றனர். உண்மையில் விழிப்புணர்வு வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்குத் தேவை. நமக்கு 100விழுக்காடு வாக்குப்பதிவிற்காகப் பரப்புரை தேவையில்லை. 100 விழுக்காடு வாக்காளர் பதிவு விழிப்புணர்வுதான்…

தவறுகள் தொடரா வண்ணம் தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்க! -இலக்குவனார் திருவள்ளுவன்

தவறுகள் தொடரா வண்ணம் தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்க! எல்லா அமைப்பையும்போல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் நிறைகளும் உண்டு; குறைகளும் உண்டு. ஆனால், குறைகளற்றுச் செயல்பட்டால்தான் தேர்தல்கள் சிறப்பாக நடைபெறும். எனவே, இதன் குறைகளைப்பற்றிச் சில கூற விரும்புகிறேன். சான்றுக்குச் சில:   புழுதிவாக்கம் வாக்குப்பதிவு மையத்தில் கடந்த தேர்தலில் சில வாக்குப்பதிவு அறைகளின் முன்னர்ப் பந்தல் போடாமல் வெயிலில் வாட விட்டிருந்தனர். இது குறித்து முறையிட்டதும் இங்கெல்லாம் வெயில் வராது என எண்ணிப் போடவில்லை என்ற அதிகாரிகள் சில மணி நேரத்தில் பந்தல்…

வெருளி அறிவியல் – 3 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 2 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல்  – 3 ‘தெனாலி’ படம் பார்த்தவர்களுக்குப் பின்வரும் பயங்கள்பற்றிய பேச்சு நினைவிருக்கும்: “எனக்கு எல்லாம் பயமயம். … காலால் உதைத்தால் காலில் அடிபடும் என்ற பயம் எனக்கு; கவிதை பயம் எனக்கு; கதை பயம் எனக்கு; பீமனின் கதைக்கும், அனுமனின் கதைக்கும் பயம்; உதைக்கும் பயம்; சிதைக்கும் பயம்; கதவு பயம் எனக்கு; கொஞ்சம் திறந்த கதவும் பயம், முழுதாக மூடின கதவும் பயம், பூட்டு போட்ட கதவென்றாலும் பயம் எனக்கு; காடு பயம்…

தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் பாவேந்தர் விழா-நிகழ்வுப் படங்கள்

நிகழ்ந்த நாள்: வைகாசி 14, 2050 சனி 27.04.2019 மாலை 04.30  இடம்: முத்தமிழ் மன்றம், கோயில் பதாகை, ஆவடி, சென்னை-62 படங்களைப் பெரிதாகக் காணச் சொடுக்குக.

சிங்கார வேலர் விருது : நோக்கத்தைத் தெளிவு படுத்துக! -இலக்குவனார் திருவள்ளுவன்

சிங்கார வேலர் விருது : நோக்கத்தைத் தெளிவு படுத்துக! அறிஞர்களையும் ஆன்றோர்களையும் அரசு மதிக்க வேண்டும். அதன் அடையாளமாகத்தான் தமிழக அரசு விருதுகள் பலவற்றை வழங்கி வருகிறது; திருவள்ளுவர் திருநாள் விருதுகள் எனவும் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகள் எனவும் இரு நிலைகளில் வழங்குகிறது. அவ்வப்பொழுது புதிய விருதுகளை அறிவிப்பதுபோல் இவ்வாண்டு புதியதாகவும் சில விருதுகளை அறிமுகப்படுத்துகிறது. திருவள்ளுவர் விருது (1986 முதல்) மகாகவி பாரதியார் விருது (1997 முதல்) பாவேந்தர் பாரதிதாசன் விருது (1978 முதல்) தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது (1979 முதல்) கி.ஆ.பெ….

எங்களுக்காக உழைப்பார் உண்டோ!? – இலக்குவனார் திருவள்ளுவன்

எங்களுக்காக உழைப்பார் உண்டோ!? உழைத்தோம் உழுதோம் உணவின்றி வாடுகிறோம்   உழைத்தோம் நெய்தோம் துணியின்றி ஏங்குகிறோம்   உழைத்தோம் கட்டினோம் வீடுஇன்றி அலைகிறோம்   உழைத்தோம் பிறருண்ண பிறருடுக்க பிறர்வசிக்க   எங்களுக்கு எல்லாம் கிடைக்க உழைப்பார் உண்டோ!? இலக்குவனார் திருவள்ளுவன்

தனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக! – இலக்குவனார் திருவள்ளுவன்

தனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக!  வேலூரில் மட்டும்தான் வாக்கு வணிகம் நடைபெற்றதுபோல் தேர்தல் ஆணையம் அங்கே தேர்தலை நிறுத்தி விட்டது. வாக்கு வணிகம் நடைபெறாத தொகுதி என்று ஒன்றைச் சொல்ல முடியுமா? அல்லது வாக்கு வணிகர்கள் தேர்தலில் பஙகேற்கா வண்ணம் தேர்தல் ஆணையம்தான் எங்காவது நடவடிக்கை எடுத்துள்ளதா? ஒன்றும் இல்லை. அவ்வாறிருக்க, வேட்பாளர்களின் செல்வமும் உழைப்பும் மக்களின் வரிப்பணமும் நேரமும் வீணடிக்கப்படும் வகையில் தேர்தலை நிறுத்தியது ஏன்? வேலூரில்  தேர்தலை நிறுத்தியதற்கு எல்லாக் கட்சியினரும் தமிழக அரசும் எதிர்ப்பு காடடியுள்ளனர்….