இலக்குவனாரின் ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’யின் சிறப்புகள்

  தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற இந்நூலில் பரவிக்கிடக்கும் இலக்குவனாரின் கருத்துகளில் சில: ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக் கொண்டிருக்கவேண்டுமேயன்றி, தமிழ், ஆரியத்தை நோக்கி அமைத்துக் கொண்டது அன்று. (இலக்குவனார் 1971:44). இந்திய மொழிகளின் வரிவடிவ எழுத்துகளின் தாய் தமிழ் நெடுங்கணக்கின் வரிவடிவமே எனில் மிகையாகாது. (இலக்குவனார் 1971:45). மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்கள் எழுத்துகளின் பிறப்புபற்றிக் கூறும் கருத்துகள் தொல்காப்பியர் கூறும் கருத்துக்களோடு ஒற்றுமையுடையனவாக இருக்கின்றன. (இலக்குவனார் 1971:65). தொல்காப்பியப் பொருட்படலம் இலக்கியம் விளக்கும் இலக்கணமாகும்(science of Literature) என்பதை அறிந்து போற்றிப் பயில்வோமாக….

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 5 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 102 ஐப்பசி 08, 2046 / அக். 25.10.2015 தொடர்ச்சி) எண்ணினர் தனியே யிருப்பதா யோர்நாள் காதலின் கையிற் கருவிய ராகி இன்ப வாடல்க ளன்பாய்த் தொடங்கினர். தென்றல் தவழ்ந்து தேனுறு மலரினும் முத்த மளித்து முகமலர் கொண்டே இன்ப மெய்து மெழினெறி கண்டே எழிலர சிக்கோ ரின்ப முத்தம் ஆடலன் விரும்பி அன்பி னளித்தான். காதல் கைமிகக் கருத்தழிந் தவளும் நிரைவளை முன்கை விரைவி னீட்டி இளமுலை ஞெமுங்க வளைந்து புறஞ்சுற்றி “ நின்மார் படைதலின்இன்பமு மின்று ” நன்றே வாழ்க…

மொழியே நம் விழி – பேரா.முனைவர் சி.இலக்குவனார்

    உலகில் வழங்கும் மொழிகட்கெல்லாம் முற்பட்ட தொன்மையுடையது நம் செந்தமிழ். ஆகவே அதனைப் பழந்தமிழ் என்று அழைத்துள்ளோம்.    இன்னும் பல அடைமொழிகளும் தமிழுக்கு உள. அடைமொழிகளைச் சேர்த்தே தமிழை அழைப்பது புலவர்களின் பெருவழக்காகும். பைந்தமிழ், நற்றமிழ், ஒண் தமிழ், வண் தமிழ், தண் தமிழ், இன்றமிழ் என்பனவற்றை நோக்குக. அதன் பண்பும் பயனும் கருதியே தமிழ் இவ்வாறு அழைக்கப்பட்டு வருகின்றது.   மொழியே நம் விழி; மொழியின்றேல் நமக்கு வாழ்வு இன்று; வாழ்வில் வளமும் இன்பமும் பெறல் அரிது. பேரா.முனைவர் சி.இலக்குவனார்…

தொல்காப்பியர் காலத் தமிழ், வளம் பெற்றிருந்தது – முனைவர் சி.இலக்குவனார்

  தமிழ் அவ்வாறு தொல்காப்பியர் காலத்தில் விளங்கியது.  தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று  இருந்தது.  அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம்.   தொல்காப்பியத்தால் மொழி நிலை –  இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும்.   இவ்வாராய்ச்சி நூல் தொல்காப்பியர் கால மொழியின் சிறப்பையும் இலக்கியவளச் சிறப்பையும் எடுத்துக்காட்டும்.  தொல்காப்பியர் கால மக்கள் வாழ்வு பற்றித் தனியாக ஒரு நூலில் ஆராய எண்ணியுள்ளோம்.   தமிழ் மக்கள் வரலாறு அறிவதற்குத் தமிழ் மொழியும் இலக்கியமும் பெருந்துணையாக உள்ளன.  பண்டைத் தமிழ்…

திராவிடம் என்பது பிந்தையது – பேரா.சி.இலக்குவனார்

தமிழ் என்னும் சொல் தோன்றிய காலத்தது;  திராவிடம் என்பது பிந்தையது.    இந்திய மொழிகளை ஆரியக் குடும்ப மொழிகள் என்றும் தமிழ்க் குடும்ப மொழிகள் என்றும் இருவேறு இனமாகப் பிரித்துள்ளனர் மொழியாராய்ச்சியாளர்கள்.   தமிழ்க்குடும்ப மொழிகளைத் திராவிடக் குடும்ப மொழிகள் என்பர்.   திராவிடம் என்ற சொல்லிலிருந்தே தமிழ் என்ற சொல் தோன்றியது என்ற கருத்து பிழைபட்டது என்று நிலைநாட்டப்பட்டுவிட்டது.   கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில்  தமிழ் எனும் சொல் பயின்றுள்ளது.   திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 04 : ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 101, ஐப்பசி 1, 2046 / அக்.18, 2015 தொடர்ச்சி) 4   தமிழர் மானத்தோடு வாழ வழிகாட்டியவர் தன் மதிப்பு இயக்கத்தலைவர் பெரியார் ஆவர். அதனால் இலக்குவனாருக்குப் பெரியாரிடம் பற்று ஏற்பட்டது. தமிழறிஞர் சாமி சிதம்பரனார் இலக்குவனார்க்கு ஆசிரியர். இவர் சொல்வன்மை படைத்தவர். மாணவரிடையே தூய தமிழ்ப் பற்றை வளர்த்து வந்தார். தன்மதிப்பு இயக்கப் பற்றாளராக விளஙகினார். அதனால் ஆசிரியரைப் பின் பற்றி மாணவராகிய இலக்குவனாரும் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அதன் வழி நடந்தார்.   நீதிக்கட்சி பிராமணரல்லாதாரை எல்லா…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 4 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 101 ஐப்பசி 01, 2046 / அக். 18.10.2015 தொடர்ச்சி) கரையிடை யிட்ட காட்டா றிரண்டு கலந்தொன் றாகிக் கரைகடந் தோட எதிர்ப்படு பொருளெலாம் சிதைப்படு தன்மையின் குலமுங் குடியும் கொடிய சாதியும் உயர்வும் தாழ்வும் உறுமணச் சடங்கும் எல்லாக் குப்பையு மிரிந் தோடினவே இருவருங் கரந்தனர் எய்தின ரின்பம் இரண்டுட லென்பதை யிருவரு மறந்தனர் “மணந்த நிகழ்ச்சி வணிகர் அறிந்திடில் உலற லெய்துவர் ஒருங்கே யழிப்பர்” என்றறிந் திருவரும் எவருங்காணா இயல்பினி லொழுகி இன்பந் துய்த்தனர் இவர்கள் செயலில் எட்டுணை ஐயமும்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 03 : ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 100, புரட்டாசி 24, 2046 / அக்.11, 2015 தொடர்ச்சி) இயல் – 2 இலக்குவனார் வரலாறும் கவிதை தோன்றிய சூழலும்   வரலாறு, மனித வாழ்வுக்கு மிக இன்றியமையாதது. வரலாறு நடந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது. அதாவது உள்ளதை உள்ளபடி கூறுவதாகும். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் இன்று வரலாறாக மலர்கின்றன. உலக வரலாறு, அரசியல், வரலாறு, பொருளியல் வரலாறு, சமூக வரலாறு, அறிவியல் வரலாறு, மொழி வரலாறு, கவிதை வரலாறு என வரலாறு பல வகைப்படும். தனிமனித வரலாறு உலக வரலாற்றுக்கு உறுதுணையாக…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 3 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2 தொடர்ச்சி) எழிலரசி அல்லது காதலின் வெற்றி 3   வானில் விளங்கா மதியென முகமும் சேலினைப் பழிக்கும் சீர்கரு விழியும் புன்னகை தவழும் மென்செவ் விதழும் முத்தென முறுவலும் மின்னென உருவும் வேய்த்தோள் மீது மிடைந்து சுருண்ட கருங்குழல் தவழும் காட்சியும் மன்றிச் சாதுவை வென்ற சாந்த குணமும் அன்பும் அடக்கமும் அருளும் அறமும் ஒருங்கே கொண்டு ஓரு வாகி யாழினு மினிய இசையுங் கொண்ட முற்றத் துறந்த முனிவரு மிவளை ஒருகால் நோக்கில் உணர்விழந் திடுவரால்,…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2 – பேரா.சி.இலக்குவனார்

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2   தோள்களும் கொங்கையும் நாள்தொறும் வளர்ந்தன வளர்மதி யன்ன வாண்முகம் பொலிந்தன கொடியிடை துவள அடிபெயர்த் திட்டாள் மணத்தின் சுவையை மனத்துட் கொண்டாள். வெள்ளப் பெருக்கை மெல்லிய நாணற்   புதர்கள் தடுக்கப் பொருந்திய வாறு காதல் மடைக்கிடு கற்களாய் நின்றனர் மெல்லக் கசிந்து மேவிய கற்களைத் தள்ளிடும் நீரின் தன்மை போன்ற காதலின் தன்மை கண்டவ ரல்லரே;   “உருவுங் குணனும் ஒத்த பான்மையிற் காத லிருவர் கருத்தொரு மித்தபின் குலனு மோரார் குடியு மோரார்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 02 : ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 99, புரட்டாசி 17, 2046 / அக்.04, 2015 தொடர்ச்சி) 2  இலக்குவனார் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர். தொல்காப்பியத்தை மட்டுமினறி வேறுசில இலக்கண நூல்களையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். Tamil language Semanteme and Morpheme in Tamil language A Brief study of Tamil words. ஆகிய நூல்களை எழுதி தமிழ் இலக்கணத்தின் சிறப்பை விளக்கியுள்ளார். இவை தவிர Dravidian Federation என்னும் ஆங்கிலம் இதழும் KuralNeri என்னும் ஆங்கில இதழும் நடத்தியுள்ளார். ஆய்வு செய்யக் காரணம் இத்தகு சிறப்புடைய…

இலக்குவனார் கருத்தரங்க நூல் அறிமுகம் – ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்

‘பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்’ நூலறிமுக விழா   பரபரப்பு நிறைந்த சென்னை பாரிமுனைப்பகுதியில் உயர்நீதி மன்றத்தின் எதிரே உள்ள 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒய்.எம்.சி.ஏ. கட்டடித்தினுள்     அமைந்துள்ள “ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற அரங்கம் தமிழறிஞர்கள், தமிழ்ப் போராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என நிறைந்து காணப்பட்டது.   காரணம், தமிழ்ப் பேரறிஞர், திருக்குறள், தொல்காப்பியங்களின்   உரைநடை நூல்கள் படைத்தவர், மொழி பெயர்ப்பாளர், மொழிப் போராட்ட ஈகையாளர், கவிஞர், இதழியலாளர், இத்தனை சிறப்புகளுக்கும் உரியவரும், தமிழ்மொழி வளர்ச்சிக்கு அரும்பெரும் தொண்டாற்றியவருமான பெருமகனார் மறைந்த பேராசிரியர் சி. இலக்குவனார்…