திருகோணமலையில் முப்பெருவிழா 2017
தை 15, 2048 / சனவரி 28, 2017 ஈச்சலபற்றை, தமிழீழம் -ஊற்றுவலையுலக எழுத்தாளர் மன்றம் -நந்தவனம் நிறுவம்
ஈழ மாணவர் சுட்டுக்கொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகை – மே 17
யாழ் பல்கலைக்கழக மாணவர் இருவரை சிங்களப் பேரினவாதக் காவல்துறை சுட்டுக்கொலை செய்திருக்கிறது. ஈழ மாணவர் எழுச்சியே 2009 இனப்படுகொலைக்குப் பின்பான அரசியலில் முதன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டார்கள், மாவீரர் விளக்குகள் விடுதலைக் கனலாய் பல்கலைக்கழக வளாகத்தில் முளைத்திருந்தன. தொடர்ந்து சிங்களப் பேரினவாதத்தின் முயற்சிகளுக்கு எதிராய்ப் போராட்டங்களும், மோதல்களும், முழக்கங்களும் யாழ் பல்கலைக்கழகத்திலேயே பிறந்தன. இந்தப் பின்புலத்திலிருந்தே இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. யாழ் மருத்துவமனையில் இந்திய அமைதிப்படை நடத்திய கோரமான படுகொலையின் 29ஆவது நினைவு நாள் இன்று. இந்த நிலையில் இந்தப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பன்னாடுகளின் தோல்வியும், அமெரிக்கத் தீர்மானத்தின்…
வட்டு இந்து இளைஞர் சங்கத்தின் தீபாவளிக்கான சிறப்பளிப்புகள்
வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் தீபாவளி நாளை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்குப் புத்தாடைகளும் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டன.. எமது புலம்பெயர் உறவான இலண்டனைச் சேர்ந்த பரஞ்சோதிஉலோகஞானம், தன் தந்தை பரஞ்சோதி (17.10.2016), தங்கை இராசேசுவரி (16.10.2016) பிறந்த நாள்களை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விழிப்புலனற்ற, சிறப்புத் தேவைக்குரிய இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்குச் சிறப்பு நண்பகல் உணவினை வழங்கி வைத்துள்ளதுடன். தீபாவளி நாளினை முன்னிட்டு இல்ல மாணவர்களுக்கு ஏறத்தாழ 1,13,000 உரூபா பெறுமதியான புத்தாடைகளையும் வட்டு…
தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 3/3 – க.வி.விக்கினேசுவரன்
(தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 தொடர்ச்சி) தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 3/3 நாங்கள் வடக்கு – கிழக்கு இணைப்பைக் கேட்பதன் காரணம் என்ன? ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. தமிழ், சிங்கள மொழிகள் இரண்டுக்கும் நிகரான நிலை அளிக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயரிடம் இருந்து நாடு எமக்குக் கைமாறியதும் பெரும்பான்மையினர் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து சிங்கள மொழியின் வல்லாட்சியை (ஆதிக்கத்தை) நாடு முழுவதும் திணித்தனர். முழு நாடும் சிங்கள பௌத்த நாடே என்ற,…
பன்னாட்டுக் கலைப்பாலம் 2016, கனடா
மிகச் சிறந்த ஈழத்துக் கலைஞர்களின் சங்கமத்துடன் கனடா திருமறைக் கலைமன்றம் வழங்கும் பன்னாட்டுக் கலைப்பாலம் 2016 ஈழத்தில் 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திருமறைக் கலைமன்றம்(கலாமன்றம்), 50 ஆண்டுகள் நிறைவைக் கனடாவில் பன்னாட்டு விழாபீவாகக் கொண்டாடுகிறது. கனடா திருமறைக் கலைமன்றம் தமது 25வது ஆண்டில் காலடி பதிக்கும் இந்த வருடத்தில், தாய் மன்றத்தின் பொன்விழாவையும், கனடிய மன்றத்தின் வெள்ளி விழாவையும் ஒன்றாக இணைத்துப், பன்னாட்டுக் கலை விழாவாகக் கொண்டாடுகிறோம். சுகாபரோவில், மைக்கோவன்-எல்சுமெயர் சந்திக்கருகே, இல.1686 எல்சுமெயர் வீதியில் அமைந்துள்ள சேசிசு மண்டபத்தில்…
இனமானப் புலி எங்கே? – காசி ஆனந்தன்
இனமானப் புலி எங்கே? இன்றிருந்த பகல்தனிலே ஞாயிறில்லை! இரவினிலும் நிலவில்லை! விண்மீன் இல்லை! இன்றெரிந்த விளக்கினிலே வெளிச்சம் இல்லை! எண்டிசையும் செடிகொடியில் பூக்கள் இல்லை! இன்றிதழ்கள் ஒன்றிலுமே முறுவல் இல்லை! இன்றெமது நாட்டினிலே பெரியார் இல்லை! எவர்தருவார் ஆறுதல்? இங் கெவரும் இல்லை! கோல்தரித்து நேற்றுலகைத் தமிழன் ஆண்டான்! கொற்றவனை அவனை இழி வாக்கி மார்பில் நூல்தரித்து மேய்ப்போராய் நுழைந்த கூட்டம் நூறு கதை உருவாக்கி “பிரம்ம தேவன் கால்தரித்த கருவினிலே தமிழன் வந்தான் காணீர் என்றுரைத்தமொழி கேட்டுக் கண்ணீர் வேல்தரித்து நெஞ்சில்…
தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 – க.வி.விக்கினேசுவரன்
(தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 தொடர்ச்சி) தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 கேரத்தீவில் உப்பளம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அது பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. பாதிக்கப்படும் எமது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எம்மைப் புறக்கணித்து மத்திய அரசு எமது வட மாகாணத்தில் இப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குவதன் உட்பொருள் என்ன? போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆன பின்னரும் (சிங்களப்) படையினர் பல காணி (ஏக்கர்) நிலங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, அவற்றில் பயிர் செய்து…
பௌத்த மயமாகும் தமிழர் தாயகம்-ஐ.நா.மன்றத்தில் அம்பலப்படுத்திய பி.த.பேரவை
பௌத்த மயமாகும் தமிழர் தாயகம் ஐ. நா. சிறப்பு நிகழ்வில் மறைக்கப்பட்ட உண்மைகளை மறுக்க முடியாத ஆதாரங்கள் மூலம் அனைவர் கவனத்தையும் ஈர்த்த பிரித்தானியத் தமிழர் பேரவை செனீவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைக் கழகத்தின் 33 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள், பன்னாட்டு அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானியத் தமிழர் பேரவை அளித்த ஆவணங்கள் சிறிலங்காவின் முன்னைய அரசு மற்றும் இன்றைய “நல்லாட்சி” அரசின் நிலப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது. நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள்…
புற்றுநோய் போக்க மருத்துவச் செலவு உதவி வேண்டல்
அன்பான நண்பர்களுக்கு! கீழ்க்குறிப்பிடப்படும் பெயர் விபரங்களையுடைய இப்பெண் புற்றுநோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இவரின் மருத்துவச் செலவுக்கு ஏறத்தாழ எண்ணூறாயிரம் உரூபாய்கள் தேவைப்படுகிறது. அவரின் குடும்பச் சூழ்நிலையால் அவர்களால் அப்பெரிய தொகைப்பணத்தை திரட்ட முடியவில்லை. எம்மைப்போன்ற சில அமைப்புகளின் உதவியுடன் அவர்களின் பெற்றோரால் ஏறத்தாழ ஐந்நூறாயிரம் உரூபாய்கள் தற்சமயம் திரட்டப்பட்டுள்ளது. அப்பெண்ணின் நிலைமை மிகவும் மோசமாகி வருவதால் உடனடியாக மருத்துவம் அளிக்கப்படவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மேலதிகமாகத் தேவைப்படும் முந்நூறாயிரம் உரூபாய்களை உங்களின் உதவியுடன் துயர் துடைப்போம் குழுமத்தின் ஊடாக…
கூப்பிடு கூப்பிடு வீரர்களை! – காசி ஆனந்தன்
கூப்பிடு கூப்பிடு வீரர்களை! பாண்டிய மன்னவன் சோழன் பனிவரை பாய்ந்து கலக்கிய சேர மகன் ஈண்டு முளைத்த குலத்தில் எழுந்தனை! ஏடா தமிழா! எடடா படை! கூண்டுக் கிளிநிலை எத்தனை நாள்வரை? கூப்பிடு கூப்பிடு வீரர்களை! ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை? கோட்டுப் புலிக்குலம் வாழக் குகையுண்டு! குருவிக்குக் கூடு மரத்திலுண்டு! காட்டு வயற்புற நண்டுக்குப் பொந்துண்டு! கஞ்சல் எலிக்கோர் குழியுமுண்டு! கோட்டை அமைத்துக் கொடியொடு வாழ்ந்தவர் குலத்துக்கொரு புகல் இங்கிலையோ? நாட்டை அமைப்பாய் தமிழ்மகனே! புவி…
தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 – க.வி.விக்கினேசுவரன்
தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 ஆசானே தெய்வம்! எனதருமைத் தமிழ் பேசும் உடன்பிறப்புகளே! ‘எழுக தமிழ்’ப் பேரணியில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக எமது உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் எமது அரசியல் சார்ந்த எதிர்பார்ப்புகளை உலகறிய விளம்புவதற்கும் இங்கே கூடியிருக்கின்ற எனதருமை மக்களே! இந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி! ஆட்சியில் அல்லது செல்வாக்கில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி இல்லை இது. நாம் எமது…
சென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை!
சென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை! உமாபதி அரங்கம், அண்ணா சாலை, சென்னை, தமிழகம் புரட்டாசி 15, 2047 / 01-10-2016 சனிக்கிழமை , மாலை 5 மணி உலகு முழுக்க உள்ள தமிழர்களை இனத்தால் ஒருங்கிணைப்பது. தமிழரின் மொழி, வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு போன்றவற்றை மேம்படுத்திப் பாதுகாப்பது. அரசியல், மதம், சாதிகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள். உலகளவில் நிகழக் கூடிய மனித நேயச் செயல்பாடுகளில் இணைந்து கொள்வது. சிறப்பு அழைப்பாளர்கள்: மேலை நாடுகளிலிருந்து தமிழ்த் தேசத்தவர்கள்:…
