தந்தை பெரியார் சிந்தனைகள் 8 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 7 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 8 திருவாழி: சக்கரபாணி என்பது திருமாலின் மற்றொரு பெயர். அண்டங்களின் நடைமுறையை விளக்குவது சக்கரம். கோள் எல்லாம் சுழன்று சுழன்று வருகின்றன. வட்டமிடுவது அவற்றின் இயல்பு. நட்சத்திரங்கள் பல நேரே ஓடிக் கொண்டுள்ளனபோலத் தென்படுகின்றன. பெருவேகத்துடன் பல்லாண்டு பல்லாண்டுகளாகப் பறந்தோடி ஒரு வட்டத்தை நிறைவேற்றுகின்றன. ஒன்றுக்கு அப்பால் ஒன்று அனந்தம் சக்கரங்கள் ஓயாது சுழல்கின்றன. அவையாவும் திருமாலின் திருச்சக்கரத்தில் தாங்கப்பெற்றுள்ளன. அண்டங்கள் யாவையும் உண்டு பண்ணுதலும், நிலைபெறச் செய்தலும், பின்பு அவற்றை நீக்குதலும்…

தந்தை பெரியார் சிந்தனைகள் 7 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 6 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 7 இன்னும் முருகனது மூவித சக்திவடிவம், வள்ளி – தெய்வயானை தத்துவம், தேவசேனாபதி, நான்முகனைச் சிறையில் வைத்தல், சூரசம்காரம், குகன், ஞானபண்டிதன் என்பவைபற்றியெல்லாம் தத்துவங்கள் உள்ளன. இங்ஙனம் முருகனடியார்கள் சிந்தித்து எழுதியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் ஏற்பட்டன என்று சொல்வதற்கில்லை. என்ன காரணத்தாலோ பார்ப்பனர்களைத் திட்டித் தீர்க்கின்றார்கள் தந்தையவர்கள். வெள்ளைக்காரர் ஆட்சியில் பார்ப்பனர்கள் படித்து அரசு அலுவல்களில் சேர்ந்து விட்டனர். பல மட்டங்களில் அவர்கள் அக்காலத்தில் செய்த அட்டகாசங்கள் சொல்லிமுடியா. இதனால் தான் அக்காலத்தில்…

நவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

நவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்! உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் நாள் கொண்டாடத் தமிழக அரசு உலகத் தமிழ்நாளை அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைப்பற்றித் தெரிவிக்கும் முன்னர் ‘இந்தி நாள்’ குறித்து அறிந்து கொள்வோம்! ஒவ்வோர் ஆண்டும் செப்.14 இந்தி நாளாகக் கொண்டாடப்படுகிறது. “இந்திய அரசு இந்தியை அலுவல் மொழியாக, 1949 ஆம் ஆண்டு செப். 14 அன்று ஏற்றது. அதற்காக,  இந்தியை அலுவல் மொழியாக நடைமுறைப்படுத்துவதை ஊக்கப்படுத்துவதற்காக இந்நாள்” என அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் ஆட்சி மொழித் துறை…

தமிழ்த்தேசியமும் தந்தை பெரியாரும் : ப.திருமாவேலன்

தமிழ்த்தேசியமும் தந்தை பெரியாரும் தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உணராமல், அதற்கான எந்த அருப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர் களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை: தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என் கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க்…

தென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

தென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர்    கடந்த இரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த புலவர்கள் பலரும் பழமைக்குப் பாலமாகத் திகழ்ந்து அளப்பரும்  தமிழ்த்தொண்டாற்றி யுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்களவர், சைவச் சித்தாந்தப் பெரும்புலவர், வைதிக சைவச் சித்தாந்தச் சண்ட மாருதம், பரசமயக்கோளரி என்று பல  பட்டங்கள் பெற்ற சோமசுந்தர(நாயக)ர் ஆவார்.   சோமசுந்தர(நாயக)ர், இராமலிங்க நாயகர் – அம்மணி அம்மையார் ஆகிய இல்லற இணையரின் மூத்தமகனாக ஆவணி 02, 1877 / ஆகத்து 16, 1846 அன்று சென்னையில் பிறந்தவர். இவரி்ன் தந்தை சைவ நெறியினராகவும் தாய் வைணவராகவும் விளங்கினர். தந்தையார் தம் மனைவியின் விருப்பத்திற்கிணங்க அனைவருக்கும் வைணவப் பெயர்களையே சூட்டியுள்ளார். தம்பியர் திருவேங்கடசாமி(நாயகர்), நாதமுனி(நாயகர்), வரதராச(நாயக)ர், தங்கை தாயாரம்மை…

தமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்! நாம் போற்றும் எந்தத் தலைவராயினும் அவரிடையே குறைகள் இல்லாமல் இல்லை. வாழும் தலைவர்களாயின் குறைகளைத் திருத்த முற்படலாம். ஆனால் வாழ்ந்து மறைந்த தலைவர்களிடையே  உள்ள குறைகளை மட்டும் பட்டியலிட்டுப் பயனில்லை. அவர்கள் ஆற்றிய நல்ல செயல்களைமட்டும் போற்ற வேண்டும்.  குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (திருவள்ளுவர்,திருக்குறள் 504) என்பதற்கேற்ப, நாம் நடுநிலையுடன் ஆராய்ந்து மிகுதியான நற்குணங்கள், நற்செய்கள், நல்லுரைகள் முதலியவை அடிப்படையிலேயே போற்ற வேண்டும். இப்படிச்சொல்வதால் அவர்களது தவறுகளை ஏற்கவேண்டும் எனப் பொருள்…

பேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…! இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

பேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…!  கட்சி உறுப்பினர்களைக் குடும்ப உறுப்பினர்கள்போல் நடத்திய மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா. அண்ணாதுரை என்னும் அவரின் பெயரின் சுருக்கம்போல் அண்ணா என்பது திகழலாம். ஆனால், உண்மையில் கோடிக்கணக்கான தம்பியர் அவரைப் பாசமுடன் அழைத்த சொல்லே அண்ணா என்பது. தம்பிக்கு என மடல் எழுதி விழிப்புணர்வு ஊட்டிமையால் வயது வேறுபாடின்றி அனைவருக்குமே அவர் அண்ணா ஆனார். எனவேதான் அவர் மறைவின் பொழுது  திரண்டிருந்த மக்கள் கூட்டம் உலகிலேய மிகுதியான இறுதி அஞ்சலி எனக் கின்னசு உலக ஆவணப்பதிவு அறிவித்தது. தமிழ்…

சாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி இராமச்சந்திரனார் – இலக்குவனார் திருவள்ளுவன்

சாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி    ஒவ்வொருவரும் தத்தம் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்களைப் பெருமையாக இணைத்துக் கொள்ளும் அவலமான வழக்கம் இந்தியாவில் உள்ளது. இத்தகைய போக்கு தமிழ்நாட்டை விடப் பிற மாநிலங்களில் பெரும்பான்மை இருப்பதையும் நாம் காணலாம். சான்றாக இராய், இராவ், எக்டே, ஐயர், கோசு, கௌடா, கௌர், சட்டர்சி, சர்மா, சிங், சோனி, சௌத்திரி, திரிவேதி, தேசாய், நம்பியார், நாயர், நாயுடு, பட், பட்டேல், மிசுரா, முகர்சி, மேனன், வர்மா, என ஆயிரக்கணக்கிலான சாதி ஒட்டுகளைக் கூறலாம்.  பிற மாநிலங்களின் தலைவர்கள்…

இலக்கிய அமுதம் – கவிஞர் சுரதாவின் எழுத்துகள்: திரு அமுதோன்

ஆவணி 29, 2050 ஞாயிறு 15.09.2019 மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை 600 017 கவிஞர் சுரதாவின் எழுத்துகள்: சிறப்புரை: திரு அமுதோன்

செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வைப் போற்றுவோம்! – பேரா சிரியர் சி. இலக்குவனார்

செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வைப் போற்றுவோம்!   செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க. முத்தமிழ் வித்தகராய், தமிழ் உரை நடைத் தந்தையாய், சொற்பொழிவுக் கொண்டலாய்,  செய்தி இதழ் ஆசிரியராய், தொழிலாளர்களின்  தோழராய், அரசியல் அறிஞராய், மார்க்சியம் போற்றுபவராய், பெண்மை போற்றும் பெருந்தகையாய், மாணவர் நண்பராய், சமரச சன்மார்க்க  அருங்குணக்குன்றாய், அடக்கத்தின் எடுத்துக்காட்டாய் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் செப்டம்பர்த் திங்களில் (17.9.53) செந்தமிழ் நாட்டைவிட்டு மறைந்து விட்டார்.  தமிழை வளர்க்கும் தலையாய பணியில் ஈடுபட்டு அருந்தொண்டாற்றிய பெருமை அவர்க்கு நிறைய உண்டு. அவர்தம் தொண்டால்…