தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) இன்னா செய்தாரை இனிமைச் செயல்களால்  ஒறுத்தல் நன்றென உரைத்த பொருளுரை  படித்து மேடையில் பாங்காய்ப் பொழிந்தும்  தமிழ்நலம் நாடிய தகைசால் உரையைப்  பொறுக்கலா ற்றாது வெறுக்கும் இயல்பால்  அரசின் சார்பில் அளிக்க இருந்த  பரிசைத் தடுத்த பரிசை  என்னென  நற்றமிழ்நாடே நவில்க! நற்றமிழ்த்  தொண்டு புரிதல் துயர்க்கே  கூட்டும்  தமிழ்ப் பகைத்தோர் தள்ளினர் சிறையில்  தமிழின் பேரால் தகுநிலை அடைந்தோர்  தமிழ்ப் புகழ்பாடினும் தமிழை அடக்கி  வாழவே முனையும் வன்கண்மையால்  இழக்கச்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (13) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) –  தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (13)   நாட்டில் வீண் பேச்சுப் பெருகி விட்டது. பேச்சைக் குறைத்து செயலைப் பெருக்க வேண்டும் என்பதையும் கவிஞர் அறிவிக்கிறார். ஆண்மைசால் பேருழைப்பை அன்னை நம் நாட்டுக்காக்கி,  வீண்பேச்சைக் குறைத்துத் தீய வீணரை ஒழித்தே அன்பாம் காண்தகு நிலைகள் எல்லாம் கடும் உழைப் பொன்றால் என்ற மாண்பெழில் கொள்கை வெல்லும்  வரலாறு படைக்க வேண்டும்! முன்னேற்றம் காண்பதற்கு ஒற்றுமை அவசியம். மக்களின் சக்தியை ஒன்று திரட்ட வேண்டுவதும் அவசிய…

மறக்கமுடியுமா? – ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) :- எழில்.இளங்கோவன்

மறக்கமுடியுமா?   ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாடுதான் இவரின் சொந்த ஊர். தொழில்  தொடர்பாக, நாஞ்சில் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து, கேரளம் மாநிலம் ஆலப்புழையில் குடியேறியவர்கள் பெருமாள்பிள்ளை, மாடத்தியம்மாள்  இணையர். இவர்களின் மகனாக ஆலப்புழையில் பங்குனி 23, 1886 / 1855ஆம் ஆண்டு ஏப்பிரல் 4ஆம் நாள் பிறந்தவர் ‘மனோன்மணீயம்’ பெ.சுந்தரம்(பிள்ளை). தமிழ் மொழி இயல், இசை, கூத்து என மூன்று பிரிவுகளைக் கொண்டது. கூத்து என்பது நாடக வடிவத்தின் பெயர். நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (11) –  தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) 3.ஒருமைப்பாட்டு உணர்வு – தொடர்ச்சி   அடிமையில் மோகமும், அடிமைத்தனமும் ஒழிக்கப் படவேண்டும். அதற்கு மக்கள் விழிப்பும் எழுச்சியும் பெற்றாக வேண்டும். கொடுமைகள் நீக்கிக் கொள்கைகள் காத்து பெரிய முன்னேற்றம் ஆக்கி, விந்தைகள் நிலைக்கச் செய்து, வெற்றி மேல் வெற்றி சேர்த்து, தந்தையர் நாட்டை ஏற்றம்தனில் நிலை நாட்டி வைப்போம் என்று முழக்கமிடுகிறார் பெருங்கவிக்கோ. பாரினில் பாரதம் மேன்மை பெற்று விளங்க நாட்டில் உற்பத்தி பெருக வேண்டும்;…

மறக்க முடியுமா? – ஔவை துரைசாமி – எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? – உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி   கல்வெட்டுகளைப் படியெடுத்தல், ஏடுபார்த்து எழுதுதல், செப்பேடுகளைத் தேடி ஆய்வு செய்தல் ஆகியனவற்றில் தேர்ந்த இலக்கிய – இலக்கண ஆய்வறிஞர், உரைவேந்தர், நாவலர், பேரவைத் தமிழ்ச்செம்மல், சித்தாந்த கலாநிதி என்று தமிழ் உலகத்தால் போற்றப்பட்டவர் ஔவை சு.துரைசாமி(பிள்ளை) அவர்கள். கவிஞர் சுந்தரம்(பிள்ளை), சந்திரமதி அம்மையாரின் ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் இவர். பிறந்த ஆண்டு  : ஆவணி 21, 1933 / 1902 செட்டம்பர் 5. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் சொந்த ஊர் ஔவையார் குப்பம்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) பேராசிரியர் இலக்குவனாரின் உழைப்பால் மக்களிடையே ஏற்பட்ட தமிழுணர்வை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய தி.மு.க. ஆட்சியிலும் இதே அவலம்தான் தொடர்ந்தது. 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டிலும், தமிழ்மொழிப்பற்றும் தாங்கிய புலமையும்  இல்லோரெல்லாம் இனிதிடம் பெற்றனர் எம்போன்றோரை எள்ளியே தள்ளினர் எனப் பேராசிரியர் இலக்குவனார் வருந்தும் அளவிற்குத் தமிழ்ப்பகைவர்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. பகைவரையும் நட்பாக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அன்பர்களின் சிறப்பைப் புறக்கணிக்கும் போக்கு இருந்தது. இருப்பினும் கட்டணம் செலுத்திப் பேராளராகப்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி)   இவ்வாறு பேராசிரியர் இலக்குவனார் தமிழ்க்கடமையே  கண்ணாகப் பணியாற்றினாலும் பணியிலும் சிக்கல்கள் தவறாமல் தொடர்ந்தன. ஆனால், முதல்வரான பேரறிஞர் அண்ணாவின் கருத்திற்கு இதைக் கொணரப் பேராசிரியர் இலக்குவனார் விழையவில்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆளும்கட்சியாய்த் தி.மு.க.மாறியதுமே “எங்களில் ஒருவர் நீங்கள்” எனக் கூறினார்கள். இவ்வாறு அமைச்சரவையில் பேராசிரியர் சேர வேண்டும் என்பதைப் பேரறிஞர் குறிப்பாக உணர்த்தினார். ஆனால் மூத்த தலைவர்கள் நீங்கள் அமைச்சர்களுக்கெல்லாம் அமைச்சராக விளங்குகிறீர்கள்; உங்களுக்குக் கட்சி அரசியல் ஒத்து…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (11) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (11) 3.ஒருமைப்பாட்டு உணர்வு – தொடர்ச்சி   மேலும் அவர் தெரிவிக்கும் விருப்பங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய நல்ல எண்ணங்களே. ஆகும்.   வேற்றுமைகள் ஒய்ந்திட வேண்டும்-ஈன             வேண்டா மதச் சாதி சாய்ந்திட வேண்டும் போற்றும் சமநிலை வந்திட வேண்டும்-கல்விப்             புத்தம் புதுமைகள் பூத்திட வேண்டும்! அறியாமைப் பேய்களை அகற்றிட வேண்டும் நம்மின்                 அன்னை பாரதத்தின் உண்மைக் கிராமங்கள் நெறிமுறைகளைப் பேணிட வேண்டும்-என்றும்                …

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) 3.ஒருமைப்பாட்டு உணர்வு   தமிழ்மொழி உணர்வும், தமிழ் இனப்பற்றும், மிகுதி யாகப் பெற்றுள்ள கவிஞர் சேதுராமன் குறுகிய நோக்கு டையவர் அல்லர். பரந்த இந்திய உணர்வும் கொண்ட வராக அவர் விளங்குகிறார். “இந்தியா என்பதொரே நாடு-ஒங்கும் இமயமுதல் குமரிவரை எங்களுடை வீடு! உந்தி எழுந்தே உழைப்பைத்தேடு-என்றும் உலரெங்கில் நமது புகழ் நிலைத்திடவே கூடு!” என நாவலிக்கிறார் பெருங்கவிக்கோ. வறுமை மிகுந்த நாடாக இருக்கிறது இந்தியா. இந்நாட்டின் எண்ணற்ற ஏழை…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா)     பேரறிஞர் அண்ணா பேராசிரியர் இலக்குவனாரிடம் பேசி அவருக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முதலான ஏதேனும் ஒரு பணியைத் தர முதலில் எண்ணினார். பெருந்தலைவர் காமராசர் இருந்த பொழுதே தடைநோக்கில் இருந்த அதிகாரக் கூட்டத்தார் கடும்போட்டி இருப்பதால் இவரை அமர்த்த இயலாது எனக் கூறினர். எத்தனைப் போட்டியாளர் இருப்பினும் தமிழுக்காகப் போர்க்களங்களைக் கண்டு சிறைவாழ்க்கையும் பதவி இழப்புகளும் உற்ற பேராசிரியர் இலக்குவனாருக்கு இணையாக அவர்கள் வருவார்களா என எண்ணவில்லை.  …

ஆய்வுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் – எழில் இளங்கோவன்

ஆய்வுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்! யார் இவர்? ‘‘வடஇந்தியாவின் வரலாறே இந்தியாவின் வரலாறு. தென்னாட்டின் சரித்திர உண்மைகளைக் கைவிட்ட காலம். அந்த நாளில் கல்வெட்டுகளின் துணைகொண்டு, (தென்னாட்டு) வரலாறுகளைத் தொடர்ந்து எழுதத் தொடங்கியவர் சதாசிவப்பண்டாரத்தார்’’ அறிஞர் மு.அண்ணாமலையின் அறிமுகம் இது. அந்தக் காலங்களில் வரலாறுகளை ஆங்கிலத்தில் எழுதுவார்கள். தமிழில் வரலாறுகள் மிகக் குறைவாகவே இருந்தன. அதனை உடைத்துத் தமிழில் வரலாறுகளைத் தொடர்ந்து எழுதியவர்களுள் முதன்மையானவர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். குறிப்பாக அவரின் கல்வெட்டுச் சான்றுகளும், செப்பேட்டுச் சான்றுகளும் மிக நுட்பமானவை. 1956ஆம்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)  ‘தமிழ் நடைப் பாவை’யின் எளிமைக்கும் இனிமைக்கும், கருத்து நயத்துக்கும் சொல்லோட்டத்துக்கும் இவை நல்ல எடுத்துக்காட்டுக்கள் ஆகும். பாவை முழுவதுமே படித்துச் சுவைத்து இன்புறத்தக்க இலக்கிய விருந்தாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் நடைப் பயணம் மேற்கொண்ட பெருங்கவிக்கோ தேமதுரத் தமிழின் பெருமையை உலகமெலாம் பரப்புவதற்காக உலகநாடுகளில் சுற்றித் திரிகின்றார். உலகக் கவிஞர் மன்றங்களிலும் மாநாடுகளிலும் தமிழ் முழக்கம் செய்கின்றார். இது குறித்து அவர் பாடியிருப்பது நினைவுகூரத்…