சமுதாயம் அன்றும் இன்றும் – தி. வே. விசயலட்சுமி

சமுதாயம் அன்றும் இன்றும்   மக்களினம் அறிவு வளர்ச்சி பெற்று நாகரிகம் மிகுந்து வளர வளர சமுதாய உறவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சமுதாயக் கொள்கைகளுக்கும் இன்றையக் கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்தால் உண்மை புலனாகும். ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே -என்று பாடினார் புலவர் பொன்முடியார். அரசனுக்காகப் போர்புரிந்து வெற்றி பெற்றுத் தருதலே அக்கடமையாக இருந்தது. இன்றோ, போர் முயற்சியில் ஈடுபடாமல் உலக அமைதியை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதே இளைஞர்க்குக் கடமையாக…

கருப்பினப் போராளி அலி! -ஆரூர் தமிழ்நாடன்

  முகமது அலி, உலகக்குத்துச்சண்டை உலகில் சுற்றிச் சுழன்ற கறுப்புச் சூறாவளி.  அமெரிக்காவில் நிலவும் நிறவெறிக் கொடுமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து மிகுவலுக் குத்துகளை விட்டுகொண்டிருந்த மாவீரர் அவர். நடுக்குவாத (Parkinson) நோயோடு 30 ஆண்டுகளுக்கும் மேலாய், மல்யுத்தம் நடத்திகொண்டிருந்த அந்த மாவீரர், தனது 74-ஆவது  அகவையில், கடந்த 3-ஆம்நாள் தன்  நேயர்களிடமிருந்து  நிலையாக விடைபெற்றுக்கொண்டார். உலகைப் போட்டிகளில் அழுத்தமான குத்துகளால் எதிராளிகளை மிரட்டிய அவரது கைகள், அசைவற்ற  அமைதியில் அமிழ்ந்துவிட்டன.     அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் 1942- இல் பிறந்த அலியின் இயற்பெயர்,…

சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! – பாவலர் கருமலைத்தமிழாழன்

சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! நீருக்குள் நிழல்தன்னைத் தேடல் போன்று நீர்த்துபோன அரசியலில் நியாயந் தன்னைப் பாருக்குள் கிடைக்குமென்று தேடு கின்றார் பரிதாப ஈழத்துத் தமிழ ரின்று ! வேருக்கு நீருற்றி ஐ.நா மன்றம் வேதனையைத் தீர்த்துவிடும் என்றி ருந்தால் பேருக்குத் தீர்மானம் போட்டோ மென்றே பெயர்த்திட்டார் நம்பிக்கை திட்ட மிட்டே ! பால்தருவார் பசிக்கென்று காத்தி ருக்கும் பச்சிளமைக் குழந்தைகள்போல் ஈழ மக்கள் ஆல்போன்று மன்றம்தாம் நிழலைத் தந்தே அநீதிக்குத் தண்டனைகள் வழங்கு மென்று கால்கடுக்க ஏக்கத்தில் நின்றி ருந்தால் கள்ளிப்பால்…

நான் தமிழ்! நீ தமிழ்! யாவும் தமிழ்! – கவிஞர் கல்முனையான்

நான் தமிழ்! நீ தமிழ்! யாவும் தமிழ்!   இனிய தமிழ் என்றும் இனிக்கும் தமிழ் கண்கள் பனிக்கும் தமிழ் உழைக்கும் தமிழ் என்றும் தழைக்கும் தமிழ் ஈழம் அழைக்கும் தமிழ் மிளிரும் தமிழ் என்றும் குளிரும் தமிழ் எம்மில் ஒளிரும் தமிழ் தங்கத் தமிழ் என்றும் சிங்கத் தமிழ் எங்கள் சங்கத் தமிழ் செந்தமிழ் என்றும் பைந்தமிழ் வாழ்வின் தேன்தமிழ் ஆல் தமிழ் ஆழ் தமிழ் அகிலம் ஆள் தமிழ் உன் தமிழ் என்றும் உண் தமிழ் தமிழனின் கண் தமிழ் கல்…

அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்! – செயபாசுகரன்

  தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர்  நா.அருணாசலம், வாழ்வின் விளிம்புக்குப் போனதையறிந்த தமிழ்ச்சுற்றங்கள், கவலையோடு அவர் இல்லத்தில் குழும… தேனிசை செல்லப்பா, புட்பவனம் குப்புசாமி போன்ற பாவாணர்கள், ஆனாரூனாவுக்குப் பிடித்த இன எழுச்சிப் பாடல்களை, அவர் காதுபடப் பாடினர். புட்பவனம்,  ஆனாரூனா அவர்களைப்பற்றி  செயபாசுகரன் எழுதிய “தமிழ்மொழியின் வேரில் பாயும்’’  எனத்தொடங்கும்  பாடலைத்,   தேம்பலுடன் பாடியபோது, அதைக் கேட்டபடியே ஆனாரூனா அவர்களின் இதயத் துடிப்பு கரைந்துவிட்டது. அப்பாடல் வருமாறு: அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்!   தமிழ் மொழியின் வேரில் பாயும் தஞ்சை…

வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை! – வ.கோவிந்தசாமி

வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை!   இந்தியச் சனநாயகத்தின் இன்றியமையா வாழ்வுரிமை வாக்குரிமை! மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை! அடிமை வாழ்வை எண்ணி – அதில் கொடுமை நிலையெண்ணி விடுதலை வேட்கையிலே – அன்று வீரர் பலர் இருந்தனர் – அவர்கள் நித்தம் நித்தம் தம் நிலையை எண்ணி – தம் சித்தம் கலங்கி நின்றார் – அன்று சிந்தையில் துணிவு கொண்டார். யுத்தம் பல புரிந்து இரத்தம் பலர் சொரிந்து பெற்றது இந்தக் குடியரசு – அதை நன்றே பேணும் புவியரசு….

வாக்குகளுக்கு ஏனோ விலை? – சா.சந்திரசேகர்

வாக்குகளுக்கு ஏனோ விலை? பொழியுது வாக்குறுதி மழை வாக்குகளுக்கு ஏனோ விலை நயமாகப் பேசுவது தான் அரசியல் கலை நல்லோருக்கு வாக்களித்து மற்றோருக்கு வைப்போம் உலை                                           – சா. சந்திரசேகர் கவிதைமணி, தினமணி 17.11.2015

திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்! – கோ. மன்றவாணன்

திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்! விரலில் கருப்பு மை வைக்கும்போதே தெரியவில்லையா… நம்நாடு நம்மக்களை நம்பவில்லை என்று! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் தரும் அட்சயப் பாத்திரம் ஆவோம் என்பவர்கள்… தேர்தலுக்குப் பிறகு எங்கள் திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்! விதிமீறல்களை வேடிக்கை பார்ப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்புதானோ தேர்தல் ஆணையம். எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்பது கனவு சனநாயகம். மந்திரிகள் மட்டுமே மன்னர்கள் ஆவது நவீன சனநாயகம்! ஊழலில் சிதறிய ஒரு சொட்டே வெள்ளமாய்ப் பாயும் விந்தையைப் பார்க்கலாம் தேர்தல் திருவிழாவில் மட்டுமே! பணம் வாங்கி வாக் களித்த…

ஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா அண்டப்புளுகர்கள் – ஏகாந்தன்

ஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா அண்டப்புளுகர்கள் – ஏகாந்தன் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அழகாக முகம் காட்டவே ஆடிக்கொண்டு வருகிறாய் உன் வருகையினாலே உவகை மிகக்கொண்டு அப்பாவி மக்கள் வாய்பார்த்து நிற்க அசராது பேசி மகிழ்வார் ஆயிரம் ஆயிரம் வாக்குறுதிகளை அள்ளி வீசி அசத்திடுவார் ஈவுஇரக்கம் எள்ளளவுமின்றி ஏய்த்துப் பிழைப்பார் எத்தியே மகிழ்ந்திடுவார் ஏதுமறியா ஏழைகளை ஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா அண்டப்புளுகர்கள் அயோக்கிய சிகாமணிகள்!  – ஏகாந்தன், புது தில்லி கவிதைமணி,  தினமணி 17.11.2015

ஐந்தாண்டுக்கொருமுறை வரும் திருவிழா! – ‘இளவல்’ அரிகரன்

ஐந்தாண்டுக்கொருமுறை வரும் திருவிழா! பொய்களின் ஊர்வலங்கள் அணிவகுக்க, ஐந்தாண்டுக்கொருமுறை வரும் திருவிழா……. அரசியல்வாதிகளின் குழப்பங்களால் அவ்வப்பொது அதற்கு முன்பாகவே வரும் பெருவிழா……. ஒருநாள் மட்டுமே மகுடஞ்சூட்டி ஒற்றைவிரலுக்கு மை பூசி ஆண்டுமுழுமைக்கும் கரிபூசும் அரசியல்வாதிகளின் பொதுவிழா….. கால்பணத்திற்கு ஆசைப்பட்டு வாக்குரிமையை லஞ்சப்பொருளாக்கி கைப்பணம் முழுதுமிழக்கும் வாக்காளர்தம் முட்டாள்நாள் விழா…… இலவசங்களில் ஏமாந்து முழக்கங்களில் மயக்குற்று பரவசத்தில் ஆழ்ந்துபோகும் தேசத்திற்கான ஒருவிழா…….. அரங்கேற்றத்திலேயே திருடுபோகும் மேடைகள்….. முதுகுக்குப் பின்புறமே முகத்துதிப் பூச்சூட்டல்கள்….. காதிலே வாக்குறுதிப் பூச்சுற்றி கன்னத்திலே சேற்றுச் சந்தனம்பூசி…. கைகளிலே விலங்குகள் பூட்டி… கால்களுக்குச்…

மை வைத்துப்பார்க்கும் மக்கள்! – வேங்கடராம்

மை வைத்துப்பார்க்கும் மக்கள்! தேர்தல் வெல்வது யார் என்று தெரிய மை வைத்துப் பார்க்கும் மக்கள்.   *****  காற்று வாக்கில் போயோ நேர் வாக்கில் போயோ குறுக்கு வாக்கில் போயோ வாக்களியுங்கள்! குருட்டு வாக்கில் மட்டும் வேண்டா! *****. வாங்கிய வாக்குகள் கொடுத்த வாக்குகளை மறக்கடிக்கக் கூடாது! ***** நேர்மை வாய்மை கடமை உரிமை வறுமை கொடுமை நன்மை திறமை செம்மை மடமை . . . போக்கச் சில மைகள் . . . ஆக்கச் சில மைகள் . ….

தேர்தல் தெய்வம் தந்த வரம் வாக்குரிமை – கவிஞர் திருமலைசோமு

  தேர்தல் தெய்வம் தந்த வரம்  வாக்குரிமை என் தேசத்தின்… என் சாலை என் மின்சாரம் என் குடிநீர் என் உணவு என்ற.. எல்லா அடிப்படைத் தேவைகளிலும் இடையூறுகள்.. நேற்றுவரை சீராக சென்ற சாலையில் திடீர் பள்ளம் பொறுத்துக் கொண்டேன் நேற்றுவரை தடையின்றி வந்த குடிநீர், மின்சாரத்திலும் குறைபாடு… பொறுத்துக் கொண்டேன். உண்ணும் உணவுப் பொருட்களின் விலையோ உச்சத்தில் அமைதி காத்தேன்.. இதோ என் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் வரமாய் ஒரு வாசல் திறக்கிறது…. குரல் ஏதும் எழுப்ப முடியாமல் சாமானியனாய் இருக்கும் எனக்கு விரல்…