விதைத்துப்போயிருக்கிறர்கள்

  தமிழ்த்தாயே மரம் தாங்கும் மண்ணாய் இலை தாங்கும் மரமாய்   காய் தாங்கும் கொடியாய் சேய் தாங்கும் தாயாய்   நீயே தாய் நாங்கள் சேய்   ஈழத்தின் முடிவிலா கொலைகள் கண்டு முடியாமலே போகிறது உன் இரங்கற்பா.. !   ஈழத்திற்காக இறந்தவர்கள் எல்லாரும் சிதை சிதைந்து போகவில்லை விதை விதைத்துப் போயிருக்கிறார்கள்…!         – விக்கி நன்றி:  ஈழம்கவிதைகள் வலைத்தளம் http://eelamkavithaigal.blogspot.in/

வடக்குத்திசை – நமக்கு எமன் திசை

1. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று சொன்ன மகாகவியே எப்படி? கற்களினாலா? கபால ஓடுகளாலா?   2. கவசஊர்திகள் கிளறிப் போட்ட சேற்றில் கண்களைத் திறந்தபடி செத்துக் கிடந்த குழந்தையின் விழியில் நீலவானம் சிறுத்துச் சிறுத்து போர் விமானமாய்… இரத்தம் உறைந்த உதடுகளின் நெளிவில் ஏளனம்   3. சிட்னியில் சிறுவர் பள்ளியில் ‘இலங்கையின் தலை நகரம் எது?’ வினாவுக்கு விடை எழுதியது புலம் பெயர் தமிழ்க்குழந்தை ‘கொழுப்பு’   4. முகம் சிவந்தார் இட்லர் மகிந்த இராசபட்சேவைப் பார்த்து “ஆசுட்விட்சு புக்கன்…