ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 976 – 994 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  962 – 975 இன் தொடர்ச்சி) 976. நிலஅமைவு வளைசலியல் Landscape – நிலத்தோற்றம், நிலைபரப்பு, இயற்கை நிலத்தோற்றம், அகண்மை, அகன்மை, அகலவாக்கு, இயற்கை நிலக்காட்சி, இயற்கைக்காட்சி, நில அமைவு, நிலப்படம், நிலவடிவம், கிராமம், இயற்கை நிலத்தோற்றம், கிடைப்பரப்பு, அகலவாக்கு, அகண்மை, இயற்கை வனப்பு, நிலக்காட்சி,  நிலத் தோற்றம், நிலவெளி எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. நில அமைவு என்பதையே நாம் பயன் படுத்தலாம். எனவே, நிலஅமைவு வளைசலியல் – Landscape ecology எனலாம். Landscape ecology 977. நிலக்கரிப்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 962 – 975 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  948 – 961 இன் தொடர்ச்சி) 962. நாள நோயியல் angeîon பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் குருதி நாளம். Angiopathology 963. நாளவியல் angeîon பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் குருதி நாளம். Angiology  964. நிகழ்வுச் சங்கிலி வயண இயல் Event Chain Methodology 965. நிகழ்வுத் தாக்கவியல் Hedonology 966. நிண நீரியல் Lymphology 967. நிதி நுட்பியல் Engineering என்றால் பொதுவாகப் பொறியியல் என்று தான் பொருள். Engineer என்றால் பொறியாளர் என்பது தவிர…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 948 – 961 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  928 – 947 இன் தொடர்ச்சி) 948. நன்னியல் agathós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நல்ல.  நன்மைதரும் நல்லன பற்றிய இயல் என்பதால் நன்னிலை எனப்பட்டது. Agathology 949. நன்னீருயிரியல்   limno என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் ஏரி, குளம் என்பன. புதுநீர் உள்ள நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களைப் பற்றிய இயல். எனவே நன்னீருயிரியல் எனப்பட்டது. Limnobiology 950. நன்னீர் வளைசலியல்   Fresh Water Ecology – நன்னீர்ச் சுற்றுப்புறவியல், நன்னீர்ச் சூழலியல், புதிய…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 928 – 947 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  914 – 927   இன் தொடர்ச்சி) 928. நடுநிலை நுட்பியல் Neutral technology 929. நடைமேடைப்பொறியியல் Pavement Engineering 930. நடையியல் Phrenology(2) 931. நத்தையினவியல் Malacology(1) 932. நம்பிக்கையியல் pistis என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நம்பிக்கை. Pistology 933. நரம்பிய மரபியல் Neuroethology 934. நரம்பியக் கதிரியியல் Neuroradiology 935. நரம்பியங்கியல் Neurophysiology 936. நரம்பியல் Neurology 937. நரம்பு உயிரிஇயல் Neurobiology 938. நரம்பு உளவியல் Neuropsychology 939. நரம்பு நிணநீரியல் (endocrinology –அகச்சுரப்பி…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 914 – 927 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  895 – 913  இன் தொடர்ச்சி)   914. நகரக மானிடவியல்   Urban Anthropology 915. நகரகப் பொறியியல் Urban Engineering 916. நகரக் குமுகவியல் Urban sociology 917. நகர  வளைசலியல் Urban Ecology 918. நகரப் புவியியல் Urban geology 919. நகராட்சிப் பொறியியல் Municipal Engineering 920. நகையியல்   நகை என்பது இங்கே நகைச்சுவையைக் குறிக்கிறது. Humorology 921. நஞ்சியல்   நச்சூட்டவியல், விடவியல், நச்சாய்வியல், நச்சியல், நச்சுயியல், நச்சுவியல், நச்சூட்டாய்வு நூல்,…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 895 – 913   இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  876 -894  இன் தொடர்ச்சி) 895. தொல்லியல் Archaeology 896. தொழிலக உளவியல் Industrial Psychology 897. தொழிலக நுண்ணுயிரி யியல் Industrial Microbiology 898. தொழிலக மின்னணுவியல் Industrial Electronics 899. தொழிலக  வானிலை யியல் Industrial Meteorology 900. தொழிலக வேதி யியல் Industrial Chemistry 901. தொழிலகக் குமுகவியல்            Industrial Sociology 902. தொழிலகப் பொருளியல் Industrial Economics 903. தொழிலகப் பொறி யியல் Industrial Engineering 904. தொழில்முனைவோரியல்   கெளவை என்றால்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 876 -894 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  868 –  875 இன் தொடர்ச்சி)   876. தையல் நுட்பியல் Stitch technology          877. தொகுப்பு வானிலையியல் Synoptic Meteorology(1) 878. தொடரியல் Phraseology 879. தொடரி யியல் Latin இலத்தீன் சொற்களான ferrum, equus  என்பனவற்றிற்கு முறையே இரும்பு, குதிரை என்று பெயர். இரும்புக்குதிரை என்பது தொடர்வண்டியைக், குறிப்பாக அதன் பொறியைக்குறிக்கிறது. தொடர்வண்டி என்பதன் இன்றைய வடிவமே தொடரி என்பது. Ferroequinology 880. தொடர்கொலை யியல் இலண்டனில் வெண்கோயில் (Whitechapel) நகரில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 868 – 875 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 855 – 867 இன் தொடர்ச்சி) 868. தேராய்வு உளவியல் Experimental Psychology 869. தேராய்வுச் சூலியல் Experimental Embryology 870. தேராய்வுவளைசலியல் Experimental ecology 871. தேர்தலியல் Psephology – தேர்தல் புள்ளியியல், தேர்தலியல், கருத்துக் கணிப்பியல், வாக்களிப்பியல் எனப்படுகிறது. Psephos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கூழாங்கல். அப்போது கூழாங்கல்லைப் பயன்படுத்தித் தேர்தல் நடத்தியதால் இச்சொல் உருவானது. (அதுபோல் சிறிய பந்து என்னும் பொருள் கொண்ட ballotte என்னும் பிரெஞ்சு சொல்லில் இருந்துதான் ballot உருவானது.)…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 855 – 867  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  850 – 854 இன் தொடர்ச்சி) 855. துருக்கியியல் Turkology 856. துருவார்ப்பியல் Uredinology / Urenology 857. துறைமுகப் பொறியியல் Harbor Engineering 858. தூசியியல் koniology  – துகளியல், தூசுயிர்த் தொடர்பியல்,  தூசி யியல். Konía என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தூசி. எனவே, நாம் சுருக்கமான தூசியியல் – koniology என்பதையே பயன்படுத்தலாம். Koniology / Coniology 859. தூய இலக்கிய இயல்  hiero- என்னும் பழங்கிரேக்கச் சொல் தூய நிலையையும் அதன் வழித்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 850 – 854 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  835  – 849  இன் தொடர்ச்சி) 850. துண்ட நகர்வியல் Plate Tectonics என்பது கண்டத்தட்டு நகர்வியல், தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு, புவித்தட்டு நகர்வியல், புவித்தட்டுக் கட்டுமானவியல் எனப் பலவகையாகக் கூறப் படுகின்றது. பழங்கிரேக்கத்தில் tecton என்றால் கட்டுமானம் எனப் பொருள். Plate என்பது இங்கே புவித்தட்டை / புவியின் கண்டத் தட்டைக் குறிப்பிடுகிறது. எனவே, கட்டுமானம் அல்லது கட்டமைப்பு நீங்கலாகப் பிற பொருள்கள் யாவும் சரியே. ஆனால், வெவ்வேறு கலைச்சொற்களைப் பயன்படுத்துவது குழப்பத்தைத் தருகின்றது. எனவே, ஒரே…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 835 – 849 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  820 –  834 இன் தொடர்ச்சி) 835.  திண்ம ஏரண நுட்பியல் Solid Logic Technology 836. திபேத்தியல் Tibetology 837. திமிங்கில இயல் cetus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் திமிங்கிலம். Cetology 838. திராட்சை வளர்ப்பியல் திராட்சை தொடர்பானவற்றைக் குறிக்கும் பழங் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவான oeno சொல் eno என மாறியுள்ளது. Enology 839. திராவிடவியல் Dravidology 840. திருமறைக் குறியீட்டியல் மூலச்சொல்லான typus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறியீடு. இங்கே…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 820 – 834 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  803 – 819 இன் தொடர்ச்சி) 820. தாவரமருந்தியல்  Ethnopharmacology என்பதன் நேர் பொருள் தாவரமருந்தியல்  என்பதுதான். ஆனால், இத்துறை பெரும்பான்மை தாவரங் களுக்கும் சிறுபான்மை விலங்கு களுக்குமான மருந்து குறித்த இயல். எனவேதான் தாவர மருந்தியல் எனப்படுகிறது. Ethnopharmacology 821. தாவரவியல் Botany 822. தாழ் ஆற்றல் இயற்பியல் Low energy physics 823. தாழ் ஓசையியல் கீழ் ஓசையியல் என்றும் கூறுவர். அதனினும் தாழ் ஓசையியல் என்பது ஏற்றதாக இருக்கிறது. Infrasonics- அகச்சிவப்பு என்றும் பொருள்…