குறுந்தொகை கூறும் உயிரியல் செய்திகள்: 1/5 -இலக்குவனார்திருவள்ளுவன்

           பழந்தமிழர்கள் அறிவியலிலும் சிறந்து விளங்கியுள்ளார்கள் என்பது நமக்குக் கிடைத்துள்ள இலக்கியங்களில் இருந்தே நன்கு புலனாகின்றது. சங்கஇலக்கியங்களில் உள்ள சில வானியல் செய்திகளையும் அறிவியல் விதிகளையும் வேளாண்மைச் செய்திகளையும் திரும்பத்திரும்பக் கூறுகிறோமே தவிர, சங்கக்கடலில் புதைந்துள்ள அறிவியல் வளங்களை முழுமையாக இன்னும் வெளிக்கொணரவில்லை. அறிவியல்தமிழ்க் கருத்தரங்கங்கள் இத்தகைய முயற்சிகளுக்குத் துணைநிற்பது பாராட்டிற்குரியது.           சங்கஇலக்கியங்களில் உயிரியல்செய்திகள் மிகுதியாக உள்ளன. பொதுவாகப் பயிரியல் விலங்கியல்களில் தோற்றம், வகை, வண்ணம், செயல்பாடுகள், பயன், ஒப்புமை அல்லது வேறுபாடு, வளரிடம், சூழ்நிலை, உறுப்புகள், இனப்பெருக்கமுறை, இடப்பெயர்ச்சி முதலானவைபற்றித்தான் படிக்கிறோம்….

ஆர்க்கிமிடிசு – தி.சி.கருப்பண்ணன், கலை.மு.

 (சித்திரை 14, 2045 / 27 ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி)   விலக்கம் உற்ற தண்ணீரின் எடை எவ்வளவோ, அவ்வளவு குறைவு பொருளின் எடையிற் காணும். ஏனெனில் தண்ணீருள் அமிழும் பொருளை தண்ணீர் எப்போதும் மேல் நோக்கித் தள்ளுகிறது. இவ்வாறு கீழே அமிழும் பொருளை மேல் நோக்கித் தள்ளும் தண்ணீரின் ஆற்றல், பொருளால் விலக்கம் உற்ற தண்ணீரின் எடைக்கு ஒப்பாகும் எடுத்துக்காட்டாக, ஓர் இரும்புத் துண்டு 4 கிலோ கிராம் எடையுள்ளதாகக் கொள்வோம். இது தண்ணீருள் முழுதும் மூழ்கும்படி தொங்கவிடப்பட்டால் ஏறத்தாழ அரைகிலோகிராம்…

ஆர்க்கிமிடிசு – தி.சி.கருப்பண்ணன், கலை.மு.,

    மழை பெய்கிறது கதிரவன் காய்கிறது. இவற்றால் மண்ணால் புற்பூண்டுகள் பயிர் பச்சைகள் முளைத்துத் தழைக்கின்றன. இன்னோரன்ன பல்வேறு நிகழ்ச்சிகள் இயல்பாய் நடைபெறுகின்றன. மழை எங்கிருந்து உருவாகின்றது? காயும் கதிரவன் எவ்வாறு இயங்குகின்றது? மண்ணினிருந்தும் புற்பூண்டுகள் எப்படித் தோன்றி வளர்கின்றன? இத்தகைய வினாக்கள் நம் மனத்துள் எழுதுவதில்லை. நாம் இவற்றையெல்லாம் இயற்கையெனக் கூறி மேனோக்கோடு விட்டு விடுகின்றோம். ஆனால் ஒரு விஞ்ஞானியோ இவை போன்ற நிகழ்ச்சிகளைக் கூர்ந்து நோக்குகின்றான். நோக்கியவற்றை ஆழ்ந்த அறிவு கொண்டு ஆய்கின்றான். இங்ஙனம் பெற்ற ஆராய்ச்சி அறிவைப் புதுமைகள்…

ஊர்ப்புற மேம்பாட்டில் தகவல் தொடர்பு, தொழில்நுட்ப ஏந்துகளின் தாக்கம்

  – கே.சி.சிவபாலன்                 ஆராய்ச்சி மாணவர் வேளாண் விரிவாக்கத்துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவை – 03                                     இந்தியாவின் மக்கட்தொகை 121 கோடியில்,  சிற்றூர்களில் மட்டும் 70 கோடிக்கு அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். நமது நாட்டில் உள்ள ஆறு இலட்சத்து முப்பத்து ஆறாயிரம் (6,36,000) சிற்றூர்களில் வசிக்கும் உழவர்களே நாட்டின் உணவுத் தேவைக்காகக் கூலங்களை(தானியங்க‌ளை) உற்பத்தி செய்கின்றனர். சிற்றூர்களை மேம்படுத்த வகுக்கப்பட்ட சிற்றூர் மேம்பாட்டுத் திட்டங்கள், வேளாண் தொழில்நுட்பங்கள், விடுதலை அடைந்த 65 வருடங்களில் இன்னமும் முழுமையாக…

திருவள்ளுவரின் அறிவியல் சிந்தனை – களப்பால் குமரன்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு – 355 காதல் சிறப்புரைத்தல் அதிகாரத்தின் (113) முதல் குறட்பா,  அறிவியல் ஆய்வாளர்களின் ஆய்வு முடிவை ஒத்துள்ளது என்பது வியப்புக்குரிய அறிவியல் உண்மையாகும். 1.   பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி வால்எயிறு ஊறிய நீர்.   இம்மென் மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் ; பாலுந் தேனுங்கலந்த கலவை போலும் . – பாவாணர் The dew on her white teeth, whose voice is soft and low, Is as…

வந்தேறிக் குடிப்புகளின் கொடூரமும் தமிழர் குடிப்புகளின் நலத்தன்மையும்

– அசித்தர் படிப்போர் பயன் குறிப்பு ஓர் அயிரை – ஒரு கிராம் ஒரு குவளை – 250 அயிரை ஒரு சிறிய கரண்டி – 5 அயிரை ஒரு பெரிய கரண்டி – 15 அயிரை இந்நூலில் சக்கரை எனக் குறிப்பிடப்படுவது பனை வெல்லம் அல்லது பனஞ் சக்கரை – யையேயாகும். வெள்ளைச் சக்கரையை அல்ல. ( ) இவ்வகை பிறை அடைப்புக்குள் வரும் சொற்கள் பிறமொழிச் சொற்கள் ஆகும்.   எலும்பைக் கரைக்கும் குளிர் குடிப்புகள் கோடைக்காலததில் களைப்பைப் போக்க மட்டுமல்லாது…

சித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்

அசித்தர் பேசி – 93827 19282   (முன் இதழ்த் தொடர்ச்சி) பாதரசம்        –     இதளியம், இதள் பாதாம்           –     கற்பழவிதை பாயசம்           –     பாற்கன்னல் பார்லி           –     பளிச்சரி, வாற்கோதுமை பாரதம்          –     இதளியம், இதள் பாரிசாதம்       –     பவழமல்லிகை பால்கோவா    –     திரட்டுப்பால் பாசாணம்       –     கல், நஞ்சு பிசுதா           –     பசத்தம் பித்தபாண்டு    –     இளைப்பு, மஞ்சநோய் பித்தளை        –    …

சித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்

  அசித்தர் பேசி – 93827 19282     (முன் இதழ்த் தொடர்ச்சி) சாமரபுசுபம்         –     கமுகு சாரணம்              –     அம்மையார் கூந்தல் சிகிச்சை              –     பண்டுவம் சிகை                    –     முடி, மயிர் சிங்கி                  –     மான் கொம்பு சித்தப்பிரமை     –     மனமயக்கம், பித்தியம் சிந்தூரம்              –     செந்தூளத் தாது சிலேபி                –     தேன்குழல், தேன்முறுக்கு சிவலிங்கம்        –    …

சித்தர் மருத்துவப் பிறமொழிச் சொற்களுக்குச் செந்தமிழ்க் கலைச்சொற்கள்

அசித்தர் பேசி – 93827 19282     தமிழ் மருத்துவம் கலைச்சொற்கள் அக்ரூட்                           –               உருப்பருப்பு, படகரு அங்குட்டம்                  –              பெருவிரலளவு அசோகு                         –              பிண்டி, பிண்டிமரம்,செயலைமரம் அண்டத்தைலம்        –              கோழி முட்டை நெய்மம் அண்டவாதம்              –             விரையழற்சி அட்சதை                     –             மங்கல அரிசி அத்தர்                       …

மீனியல் (Icthyology)

– முனைவர் இலக்குவனார் மறைமலை (சென்ற இதழின் தொடர்ச்சி) இக்கட்டுரையில் பயிலும் கலைச்சொற்கள்: குறுக்கம்-Depression;  நெருக்கம்-Compression;  தோள்துடுப்பு-Pelvic Fin;  கால்துடுப்பு- Pectoral Fin;  புறத்துடுப்பு-Dorsal Fin; அகத்துடுப்பு-Ventral Fin;  வால்துடுப்பு-Caudal Fin; இளகி-Plastic Fin; குறுக்கு வெட்டு-Transverse Section; உள்நுழைக்கோணங்கள்- Entering Angels;  வளைவும் இடப்பெயர்வும்-Curves and Displacement; துள்ளல்–Runs;  புதையிர்த்தடம்-Fossil

மீனியல் (Icthyology) – முனைவர் இலக்குவனார் மறைமலை

(சென்ற இதழின் தொடர்ச்சி) எல்லாக் கலைகளையும் கற்றுணர்ந்து அவற்றில் நூல்களும் எழுதிச்சென்ற அரிச்டாட்டில் எனும் அருங்கலை வல்லுநர்தான் இம் மீனியலையும் (Greek : Icthya = a fish logos-a discourse > Icthyology) தொடங்கி வைத்தார். முனைவர் குந்தர்(Dr. Gunther) என்பார், “அரிச்டாட்டில் தொகுத்து வைத்த மீனைப்பற்றிய விவரங்கள் அனைத்தும் மிகப் பொருத்தமாகவும் உண்மையாகவும் உள” எனக் கூறியுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் நெய்தல் நிலத்தில் கருப்பொருட்களில் ஒன்றாக மீன் கூறப்பட்டுள்ளது. “பெருங்கடற்பரப்பில் சேயிறால் நடுங்கக், கொடுந்தொழில் முகந்த செங்கோல் அவ்வலை”யுடைய பரதவர் “அயிலை…