தந்தை பெரியார் சிந்தனைகள் பின்னிணைப்பு 1 & 2
(தந்தை பெரியார் சிந்தனைகள் 41 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 42 பின்னிணைப்பு-1 சவகர்லால் நேரு மறைந்த போது அவர் நினைவாக நேரு அவர்களைப் பற்றி அறிஞர் கருத்துகளைத் திரட்டி ‘இந்தியப் பேரொளி’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டது கழகம். அங்ஙனமே அறிஞர் அண்ணா மறைந்தபோது அம்முறையில் தொகுத்து ‘தமிழ்ப் பேரொளி’ என்ற தலைப்பில் வெளியிட்டது. தந்தை பெரியார் மறைவு நினைவாக இங்ஙனமே ஒருநூல் வெளிவரத் திட்டமிட்டது கழகம். ஆனால் எக்காரணத்தாலோ நூல் வெளிவரவில்லை. அதற்குக் கழகம் வேண்டியபடி 18.2.1974இல் தந்தை பெரியாரைப்பற்றி…
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1191-1200) – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1181-1190) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (திருவள்ளுவர், திருக்குறள்,) காமத்துப்பால் 120. தனிப்படர் மிகுதி – பிரிவால் ஏற்படும் தனிமைத் துன்பம் விரும்புநர் விருப்பம் விதையில்லாப் பழம். (1191) காதலர் மீதான காதல் வான் மழை. (1192) விரும்புநர் பிரிந்தாலும் மீள வருவார் என்னும் செருக்கு வரும்.(1193) விரும்புநர் விரும்பவில்லையேல் உலக உறவால் பயன் என்? (1194) காதல் கொண்டவர் காதலிக்காவிட்டால் வேறென் செய்வார்? (1195) காவடிபோல் இருபுறக் காதலே இன்பம். (1196) காமன் ஒருபக்கமே நிற்பதால் என் துன்பமும் துயரமும்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 850 – 854 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 835 – 849 இன் தொடர்ச்சி) 850. துண்ட நகர்வியல் Plate Tectonics என்பது கண்டத்தட்டு நகர்வியல், தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு, புவித்தட்டு நகர்வியல், புவித்தட்டுக் கட்டுமானவியல் எனப் பலவகையாகக் கூறப் படுகின்றது. பழங்கிரேக்கத்தில் tecton என்றால் கட்டுமானம் எனப் பொருள். Plate என்பது இங்கே புவித்தட்டை / புவியின் கண்டத் தட்டைக் குறிப்பிடுகிறது. எனவே, கட்டுமானம் அல்லது கட்டமைப்பு நீங்கலாகப் பிற பொருள்கள் யாவும் சரியே. ஆனால், வெவ்வேறு கலைச்சொற்களைப் பயன்படுத்துவது குழப்பத்தைத் தருகின்றது. எனவே, ஒரே…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 835 – 849 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 820 – 834 இன் தொடர்ச்சி) 835. திண்ம ஏரண நுட்பியல் Solid Logic Technology 836. திபேத்தியல் Tibetology 837. திமிங்கில இயல் cetus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் திமிங்கிலம். Cetology 838. திராட்சை வளர்ப்பியல் திராட்சை தொடர்பானவற்றைக் குறிக்கும் பழங் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவான oeno சொல் eno என மாறியுள்ளது. Enology 839. திராவிடவியல் Dravidology 840. திருமறைக் குறியீட்டியல் மூலச்சொல்லான typus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறியீடு. இங்கே…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 820 – 834 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 803 – 819 இன் தொடர்ச்சி) 820. தாவரமருந்தியல் Ethnopharmacology என்பதன் நேர் பொருள் தாவரமருந்தியல் என்பதுதான். ஆனால், இத்துறை பெரும்பான்மை தாவரங் களுக்கும் சிறுபான்மை விலங்கு களுக்குமான மருந்து குறித்த இயல். எனவேதான் தாவர மருந்தியல் எனப்படுகிறது. Ethnopharmacology 821. தாவரவியல் Botany 822. தாழ் ஆற்றல் இயற்பியல் Low energy physics 823. தாழ் ஓசையியல் கீழ் ஓசையியல் என்றும் கூறுவர். அதனினும் தாழ் ஓசையியல் என்பது ஏற்றதாக இருக்கிறது. Infrasonics- அகச்சிவப்பு என்றும் பொருள்…
தந்தை பெரியார் சிந்தனைகள் முடிவுரை: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 40 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 41 முடிவுரை முடிவுரை: என் பேச்சுகளுக்கு மூல மனிதராக இருக்கும் நாயக்கர் வாழ்க்கைக் குறிப்புகளையும் அவரது தோற்றத்தைப் பற்றியும் இன்று விளக்கப்பெற்றது. மொழிபற்றிய தோற்றம் வரலாற்று அடிப்படையில் விளக்கப்பெற்றது. அடுத்து இதன் அடிப்படையில் எது தமிழ் என்பது தெளிவாக்கப் பெற்றது. பலகால உழைப்புதான் மொழியாக அமைந்தது என்று சுட்டப்பெற்றது. மொழி ஆராய்ச்சியில் தெய்வக்கூறு பெரியரால் வெறுக்கப்பெற்றது என்றும், மூளையின் வளர்ச்சி காரணமாகத்தான் மொழி வளர்ந்தது என்றும் கூறி கிளியின் பேச்சில் மூளையின் கூறு…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 803 – 819 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 780 – 802 இன் தொடர்ச்சி) 803. தாங்குட்டியல் தாங்குட்டு(Tangut) மக்களின் மொழி, கலை, பண்பாடு, வரலாறு முதலியன குறித்து ஆராயும் துறை தாங்குட்டியல் எனப்படுகிறது. 804. தாசியா இயல் தாசியா இயல்(Dacology) என்பது திரேசியலின்(Thracology ) ஒரு பிரிவாகும். பழைய உரோமானியப் பேரரசின் தாசியா நாட்டு மக்களின் மொழி, இலக்கியம், வரலாறு, சமயம், கலை, பண்பாடு, பொருளியல், நெறிமுறைகள் குறித்து ஆராயும் துறையே தாசியா இயல். Tangutology Dacology 805. தாடைஎலும்பியல் தாடை எலும்பு என்னும் பொருள்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 780 – 802 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 759 – 779 இன் தொடர்ச்சி) 780. தண்டனை யியல் 781. தண்டூர்திக் கணிப்பியல் Penology / Poenology 781. Sporalogy 782. தணிப்பக உளவியல் Clinical psychology 783. தமிழியல் Tamilology 784. தரப் பொறியியல் Quality Engineering 785. தர மும்மை Quality Trilogy 786. தரவரிசைப் புள்ளியியல் Rank order statistics 787. தரவு வனைம நுட்பியல் Data Processing Technology 788. தரவுக் கட்டமைப்பியல் Stringology 789. தரவுப் புள்ளியியல் Data…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 759 – 779 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 746 – 758 இன் தொடர்ச்சி) 759. தகவலியல் Informatics 760. தகவல் தொடர்புப் பொறியியல் Communication Engineering 761. தகவல் நுட்பியல் Information Technology 762. தகவல் முறைமைப் பொறியியல் Information Systems Engineering 763. தகைமையியல் Timology என்பது மேன்மை, மாண்பு, சிறப்பு, தகுநிலை முதலியவை பற்றிய இயல். இதனை விழுமியம் என்னும் பொருளிலேயே ஆங்கிலத்தில் பெரும்பாலும் குறிப்பிடு கின்றனர். தமிழிலும் அவ்வாறே குறிக்கின்றனர். தகைமை என்பது பொருத்தமான சொல்லாக இருக்கும். Axiology என்பதை விழுமியம்…
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1181-1190) – இலக்குவனார் திருவள்ளுவன்
(முன் பகுதியின் தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (திருவள்ளுவர், திருக்குறள்,) காமத்துப்பால் 119. பசப்புறு பரவல் – பிரிவால் வந்த பசலையைக் கூறல் 101. காதலரின் பிரிவிற்கு இசைந்தேன் பசலைக்கு யார் காரணமென்பேன்? (1181) 102. காதலர் தந்தார் என உடலெங்கும் பரவுகிறது பசலை. (1182) 103. அழகையும் நாணத்தையும் கொண்டார்; காமநோயும் பசலையும் தந்தார். (1183) 104. பேச்சிலும் நினைப்பிலும் அவரே! வந்தது ஏனோ பசலை? (1184) 105. காதலர் பிரியும் போதே பசலையும் பரவுகிறதே (1185) 106. விளக்கில்லையேல் வருகிறது இருள்….
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 746 – 758 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 722 – 745 இன் தொடர்ச்சி) 746. தகவலியல் Informatics 747. தகவல் தொடர்புப் பொறியியல் Communication Engineering 748. தகவல் நுட்பியல் Information Technology 749. தகவல் முறைமைப் பொறியியல் Information Systems Engineering 750. தகைமையியல் Timology என்பது மேன்மை, மாண்பு, சிறப்பு, தகுநிலை முதலியவை பற்றிய இயல். இதனை விழுமியம் என்னும் பொருளிலேயே ஆங்கிலத்தில் பெரும்பாலும் குறிப்பிடு கின்றனர். தமிழிலும் அவ்வாறே குறிக்கின்றனர். தகைமை என்பது பொருத்தமான சொல்லாக இருக்கும். Axiology என்பதை விழுமியம்…
பெரியார் பற்றி அறிஞர்கள் தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 39 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 40 பெரியார் பற்றி அறிஞர்கள் தொடர்ச்சி (18) “மனச்சாட்சிக்கும் தொண்டுக்கும் பக்தரான நாயக்கரை ‘நாத்திகன்’ என்று கூறும் அன்பர்கள் நாத்திகம் யாது என்றே தெரிந்து கொள்ளவில்லை என்றே சொல்லுவேன். . . அநீதியை எதிர்க்கத் திறமையும், தைரியமும் அற்ற ஏழைகளாய்ச் சொரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை, அடி தெரியும்படி கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம், நாயக்கரைப் பெரிதும் சேர்ந்ததாகும். அப்பப்பா! நாயக்கரின் அழகுப் பிரசங்கத்தை, ஆணித்தரமான சொற்களை, அணிஅணியாய் அலங்காரம் செய்யும் உவமானங்களை, உபகதைகளை,…
