ஈழ இலக்கியத்தில் ஐரோப்பியர் ஆதிக்கம்
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 3சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான் (முன்னிதழ்த் தொடர்ச்சி) அத்தியாயம் 2 யாழ்ப்பாண வரலாற்றில் ஐரோப்பிய இனத்தவரின் தலையீடு ஏற்படத்தொடங்கியதுடன் தமிழிலக்கியத்திலும் புதிய பண்பு ஒன்று தலைதூக்கியது. கிறித்த சமயப் பாதிப்பு வௌித்தெரியும் இலக்கியங்கள் எழத்தொடங்கியமையே இப்புதிய பண்பாகும். இதனால் இத்தகைய பாதிப்பு வௌித்தெரியும் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளைத் தனித்த ஒரு பிரிவாகக் கொண்டு அக்கால இலக்கியங்களை ஆராய்தல் பொருத்தமுடைத்து. இவ்விரு நூற்றாண்டுகளிலும் போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் ஆதிக்கம் இலங்கையின் மத்திய மலைநாட்டைத் தவிர்ந்த…
தமிழில் பிறமொழிக் கலப்பு 3/4 – மறைமலை அடிகள்
தமிழில் பிறமொழிக் கலப்பு 3/4 (தமிழில் பிறமொழிக் கலப்பு 2/4 தொடர்ச்சி) இங்ஙனஞ் செய்தல் இறந்துபோன வடசொற்களை முற்றுமே அங்ஙனம் விடாமற், சில பல சொற்களையேனும் உலக வழக்கிற் பயிலவிடுதற்கு வழியாய் இருத்தலின் அது குற்றமாய்க் கொள்ளப்படுதலாகா தெனின்; இறந்துபோன வடமொழியின் சில சொற்களை உயிர்ப்பிக்கின்றேன் என்று புகுந்து பல நூறாயிரம் மக்களுக்குப் பயன்பட்டு வழங்கி இறக்கச் செய்தல் எள்ளளவும் பொருந்தாது. கையிலுள்ள பெருந்தொகைப் பொருளைக் கடலிற் கொண்டுபோய் எறிந்துவிட்டு, நிலத்தை அகழ்ந்து அடியிலுள்ள பொருள்களை எடுக்க முயல்வார் திறத்திற்குந், தமிழ்ச் சொற்களைக் கைந்நெகிழ…
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு ஓர் அறிமுகம் : சி. மௌனகுரு, மௌ.சித்திரலேகா, எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 2. ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு: ஓர் அறிமுகம் ஈழத்துத் தமிழிலக்கியப்பரப்பு ஐந்துநூற்றாண்டு காலத் தொடர்ச்சியான பாரம்பரியத்தையுடையது. இவ்விலக்கியப் பாரம்பரியத்தினையும் அதனூடு காணப்படும் பல்வேறு போக்குகளையும் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் நோக்குதல் அவைபற்றிய தௌிந்த விளக்கத்துக்கு உதவும். இக்காலத்தில் இலங்கையில் குறிப்பாகத் தமிழ்ப் பகுதிகளில் நிலவிய சமூக சமய பண்பாட்டு நிலைமைகள், அவற்றை ஊக்குவித்த அரசியல் பொருளாதாரக் காரணிகள் ஆகியவற்றின் விளக்கமும் இவ்விலக்கிய வரலாற்று விளக்கத்துக்கு உதவி புரிவதாகும். எனினும் 17-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் தமிழ்ப்பகுதிகளின்…
தமிழில் பிறமொழிக் கலப்பு 2/4 – மறைமலை அடிகள்
தமிழில் பிறமொழிக் கலப்பு 2/4 (தமிழில் பிறமொழிக் கலப்பு ¼ தொடர்ச்சி) அங்ஙனமாயின், வேற்று நாட்டுச் சொற்கள் தமிழிற் கலந்தது போலவே, தமிழ்ச் சொற்களும் மற்றைத் தேயமொழிகளிற் கலந்து காணப்படுதல் வேண்டுமேயெனின்; ஆம், தமிழ்ச்சொற்கள் பல பழைய மொழிகளிலுங் கலந்து வழங்கவேபடுகின்றனவென்று கடைப்பிடிக்க. ஆணி மீனம் நீர் தாமரை கலை குடம் முதலான பலசொற்கள் ஆரிய மொழியிலும், அசை அருவி இரும்பு ஈன எல்லாம் மென்மை முகில் முதலான பல சொற்கள் ஆங்கிலம் இலத்தீன் கிரேக்கு முதலான ஐரோப்பியர் மொழிகளிலும், அவா இரு ஊர்…
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் – சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 1. முன்னுரை இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின், இன்று வரையுள்ள பொதுவான வளர்ச்சிப் போக்குகளைத் திரட்டிக் கூறுவதே இந்நூலின் நோக்கமாகும். பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும் ஈழத்து இலக்கியத்தில் அக்கறையுள்ள பொது வாசகர்களுக்கும், ஈழத்து நவீனத் தமிழ் இலக்கியம் பற்றி அறியும் ஆர்வம் உடைய ஈழத்தவர் அல்லாத தமிழ் வாசகர்களுக்கும் பயன்படத்தக்க வகையில் இந்நூல் அமைந்துள்ளது. ‘ஈழத்தில் தமிழ் இலக்கியம் ஆரோக்கியமான திசையில் வளர்ச்சியடைந்துள்ளது‘ என்ற ஒரு பொதுவான கருத்து இன்று…
தந்தை பெரியார் சிந்தனைகள் 16: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 15 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 16 2. குமுகம்பற்றிய சிந்தனைகள் அன்பு நிறைந்த தலைவர் அவர்களே,அறிஞர்பெருமக்களே,மாணாக்கச்செல்வங்களே. இன்றைய இரண்டாவது சொற்பொழிவு பெரியாரின் குமுக(சமூக)ச் சிந்தனைகளைப் பற்றியது. பேச்சில் நுழைவதற்குமுன் குமுகம் பற்றிய சில சொல்ல நினைக்கின்றேன். மனிதன் என்ற வாழும் உயிரியும் அசைவிலியாகவும் தாவரமாகவும் நிலைத்திணையாகவும்(அசேதனமாகவும், தாவரமாகவும், அசரமாகவும்) இருந்த பொருள்களிலிருந்தே படிப்படியாக உருமாறி இன்று மனித உருப்பெற்றிருக்கின்றான். இங்கு, புல்லாகிப் பூடாய்ப் பறவையாய்ப் பாம்பாகிக்கல்லா மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்செல்லாஅ நின்றஇத்…
புலவர்கள் 3. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 31 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 32 16. புலவர்கள் (தொடர்ச்சி) அக்காலத் தமிழ்மக்கள் இயலிசை நாடகங்களிலும், நடனங்களிலும் இன்பங் கண்டனர். அக்கால நடனம் எவ்வாறு நடந்தது என்பதை இயற்கைக் காட்சியில் இன்புறக் காட்டுகின்றார். இங்கு நடனப் பெண்ணாக மயில் தோன்றுகிறது. பார்த்து மகிழும் அவையினராக மந்திகள் அமருகின்றன. குழலிசையை இயற்கையில் துளைபட்ட மூங்கிலில் கோடைக்காற்று சென்று எழுப்புகின்றது. முழவாக அயலில் ஓடும் அருவியின் இன்னிசை இயம்புகின்றது. தூம்பு…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 3.
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 2. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 1 தொடர்ச்சி “அப்பா போய்விட்டார்” என்பதற்கு ஒப்புக்கொண்டு நம்புவது மனத்துக்குக் கடுமையானதாகத்தான் இருந்தது. அந்த அழகு, அந்தத் தமிழ்க்கடல், அந்த ஒழுக்கம், அந்தப் பண்பாடு, அத்தனையும் மாய்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகிப் பொய்யாய்ப் பழங்கதையாகக் கற்பனையாய் மெல்லப் போய்விட்டன. நமக்கு வேண்டியவர்களின் மரணத்தை நம்பவோ ஒப்புக்கொள்ளவோ முடிவதில்லைதான். “நின்றான், இருந்தான், கிடந்தான், தன்கேள் அலறச் சென்றான்” என்று வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிய ஒரு செய்யுள் வரியை அப்பா அடிக்கடி சொல்லுவார்….
திருநங்கையரின் வாழ்வியலைப் படம் பிடிக்கும் புதினம் – பொட்டு வைத்த பொழுதில்
இல.அம்பலவாணனின் பொட்டு வைத்த பொழுதில் அணிந்துரையும் பதிப்புரையும் அணிந்துரை வணக்கம், இந்தப் புதினத்தைப் படித்த போது எனது சின்ன வயதிற்குள் மூழ்கிப்போனேன். இப்படியெல்லாம் நடந்து விடாதா என ஏங்கிய நாட்களே எனக்கு நினைவில் வந்தன. எனது கண்களைக் குளமாக்கியது. ஒரு திருநங்கையாய்ப் பிறந்தவள் வாழ்வில் என்னவெல்லாம் நடக்குமோ அனைத்தையும் எழுத்துகளால், காட்சிகளால் உருவாக்கி இருக்கிறார், திரு. அம்பலவாணன் அவர்கள். அற்புதமான புதினம் என்பதற்கு புதினத்தினுள்ளே பல இடங்கள் உணர்த்துகின்றன. ஒரு மனிதனைப் போல் மற்றவர் இருப்பதில்லை. ஆனால் புதினத்தை எழுதி…
அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 4/4
துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 4/4:பேராசிரியர் வெ.அரங்கராசன் விளக்க உரை: பேராசிரியர் வெ.அரங்கராசன் 1031ஆவது குறள் உழவின் இன்றியமையாமையை உரைக்கின்றது. இதில் உள்ள ஈற்றுச் சீர் தலை என்பதுதான் உழவின் இன்றியமையாமையை மிகத் தெளிவாக இயம்புகின்றது. அஃதாவது, உடலுக்குத் தலை எத்துணை அளவு இன்றியமையாமையாதது என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை; தலை உள்ளவர்கள் அனைவரும் நன்குணர்வர். அதுபோலவே, உலகம் என்னும் உடலுக்குத் தலையாக அமைவது உயிர் கொடுக்கும் உயர்தொழில் உழவே; உயிர்த்தொழிலாம். உலகம் சார்ந்தது: அகச்சான்று: சுழன்றும் ஏர்ப்பின்ன[து] உலகம்;…
தந்தை பெரியார் சிந்தனைகள் 15: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 14 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 15 (4) பிராமணர்களின் மோசடித்தன்மை தொலைய வேண்டுமானால், இந்த நாட்டுமக்கள் மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து தடுத்தாக வேண்டுமானால், மக்கள் எல்லோரும் ஒரே குலம் என்கிற நல்லுணர்ச்சியைக் கைக்கொள்ள வேண்டுமானால், உலகத்தில் மற்ற நாடுகளைப் போல் நாமும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால், முதலில் மக்களுக்கிடையே பரப்பப்பெற்றிருக்கும் மதவுணர்ச்சி வேர்களுக்கு வெந்நீரை ஊற்ற வேண்டும். குருட்டுத்தனமான மதவுணர்ச்சியை வளர்க்கும் பண்டிகைகள் வெறுக்கப் பெறல் வேண்டும். அயோக்கியச் செயல்களுக்கெல்லாம் வளர்ப்புப் பண்ணைகளாயிருந்து மதப்போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கும் மடலாயங்கள் எல்லாம்…
புலவர்கள் 2. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 30 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 31 16. புலவர்கள் (தொடர்ச்சி) தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் ஆய மூவரும் தனிச்சிறப்புடையவர்கள். தொல்காப்பியர் காலத்துக்குப் பின்பே தமிழ் வளர்ப்பதற்கெனச் சங்கம் தோன்றியிருக்க வேண்டும். ஆதலின், சங்கக் காலத்துக்கு முற்பட்டவராவார் தொல்காப்பியர். தொல்காப்பியர் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு எனவும், திருவள்ளுவர் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு எனவும், இளங்கோ அடிகளின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனவும் கொண்டுள்ளோம். சங்கக்காலத்தைக் கி.மு….
