“பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது – க.அன்பழகன்

“பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது . . . .மேலும், தொல்காப்பியர் வடமொழியினும் தேர்ச்சியுடையவர் என்று கருதினும், வடமொழி இலக்கண நூல்கள் எனப்படும் ஐந்திரமோ, பாணீனீயமோ, தொல்காப்பியர் காலத்துக்கு முன் தோன்றியன அல்ல என்பதாலும், ஒரு வேளை இருந்தன எனினும் வேற்றுமொழி எழுத்திலக்கணம், முன்னரே பிறந்த ஒரு மொழி எழுத்துக்கு இலக்கணமாக முடியாமையானும், சொல்லும் அதன் புணர்ச்சிகளும், சொற்றொடர்களும் மக்கள் வழக்கில் மரபாக நிலைத்தவையாதலின் பிறமொழி இலக்கணம் பயன்படாமையானும்; “பொருள்” என்னும் அறிவுசால் வாழ்க்கை இலக்கணம், வடமொழியில் என்றும் தோன்றாமையாலும், வடமொழி நூல் எதுவும்…

தொல்காப்பியம் ஒரு முதல்நூல் – க.அன்பழகன்

தொல்காப்பியம் ஒரு முதல்நூல் . . . எனவே, தொல்காப்பியத்திற்கு முதல்நூல் அகத்தியம் என்று கொள்வதற்கு இடமில்லை. மாறாகச் செய்யுள் வழக்கினும், உலகோர் வழக்கினும் பல காலமாய் இடம்பெற்ற பல செய்திகளும், தொல்காப்பியரால் எடுத்தாளப் பெற்றிருத்தல் இயல்பே எனலாம். ஆயினும், எழுத்து, சொல், பொருள் மூன்றன் இலக்கணமும் விவரித்திடும் விரிவானதொரு நூல், அக்காலத்தில் வேறு இல்லையாதலின் அதுவே முதல்நூல் ஆகும் என்பதில் ஐயமில்லை. பேராசிரியர் க.அன்பழகனார்: (கலைஞரின்) தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம் 11  

வரலாற்றுச் சிறப்பு தமிழினத்திற்கே உண்டு – மு.கருணாநிதி

வரலாற்றுச் சிறப்பு தமிழினத்திற்கே உண்டு   உலகில் பல பகுதிகளில் உருவான இனங்கள் மொழிச் சாதனத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கின எனினும்; அவற்றில் மொழியில் இலக்கியம் கண்டு, அதற்கு இலக்கணமும் கண்டு, ஐயாயிரம் ஆண்டுக்கு முன்பே தொடங்கிய வளர்ச்சிக்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னரே மெருகேற்றிக் கொண்ட பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் தமிழ் இனத்துக்கே உண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதே தொல்காப்பியத்தின் பொருளதிகாரமாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் பழங்கால வாழ்க்கை முறைக்குறிப்புகள், ஒழுக்கம் பற்றிய பல செய்திகள், தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழ் நிலத்தில் நடைமுறையில் இருந்தன. எனினும்…

மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் – புலவர் செந்துறைமுத்து

  மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம்    தமிழ் இலக்கிய உலகு உலகு மிகவும் பழமைபட்டது; பரந்து பட்டது; பெருமைபட்டது. தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகு எனவும் தமிழ் கூறும் இலக்கிய உலகு எனவும் கூறலாகும். காலவரையறையைக் காண வியலாத பழமையையும் பெருமையையும் கொண்டது தமிழ் உலகு. தமிழ் உலகில் வழங்கும் நூல்களில் தொல்காப்பியம் மிகவும் பழமை வாய்ந்தது. அந்நூலின் பெயரே அதன் பழமையைக் காட்டுவதாயுள்ளது. தொல்காப்பியத்துக்கு முன் அகத்தியம் இருந்தது என்பர். ஆனால், அந்நூல் முழுமையும் கிடைக்கப் பெறாமையின், கிடைத்துள்ள நூல்களுள் மிகவும்…

தொல்காப்பியம் விழுமிய நூல் – மு.வை.அரவிந்தன்

தொல்காப்பியம் விழுமிய நூல்   தொல்காப்பியம் என்னும் பழம்பெரும் இலக்கணநூல் தமிழ்மொழியின் தொன்மைக்கும் சிறப்பிற்கும் சான்றாய் விளங்குகின்றது. வளமாக வாழ்ந்த தமிழினத்தின் உயர்ந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் உலகிற்கு உணர்த்தும் விழுமிய நூலாய் இது ஒளிர்கின்றது. இதனை இயற்றிய தொல்காப்பியரின் குரல், காலத்தையும் இடத்தையும் கடந்து வந்து தெளிவாக ஒலிக்கின்றது. தொல்காப்பியம் தனக்குப் பின் தோன்றிய பல இலக்கண இலக்கியங்களுக்கு எல்லாம் தலைமை தாங்கி வழிகாட்டி நடத்திச் செல்லுகின்றது. தொல்காப்பியத்தின் கருத்தை உணரவும் உணர்த்தவும் புலவர் பெருமக்கள் காலந்தோறும் முயன்று வந்தனர். அம்முயற்சியின் விளைவாய் உரைகள்…

தொல்காப்பியம் ஒரு வரலாற்று நூலே! – சி.இலக்குவனார்

தொல்காப்பியம் ஒரு வரலாற்று நூலே!   தொல்காப்பியர் தம்முடைய சமசுகிருதப் புலமை தமிழின் அழகையும், தனித் தன்மையையும், சிதைப்பதற்கு இடம் தரவில்லை. வடவேங்கடம் தென்குமரி இடையே உள்ள கிடைத்த தமிழ் நூல்களின் அடிப்படையிலேயே தொல்காப்பியர் தம்முடைய சிறந்த நூலை யாத்துள்ளார் எனப் பனம்பாரனார் மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் “என்மனார்’ “என்ப’ “என்மனார் புலவர்’ எனத் தம் முன்னவர்களைப் பற்றி 287 இடங்களில் குறிப்பிடுகின்றார். இத்தகைய மேற்கோள்களால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு நிலவிய தமிழ்மொழி தமிழ் இலக்கிய நிலைமை குறித்து அறிதற்கு இயலுகிறது. எனவே…

தொல்காப்பியமே கிறித்து காலத்திற்கு முற்பட்ட வரலாற்று வாயில் – சி.இலக்குவனார்

  கிறித்து காலத்திற்கு முற்பட்ட தமிழ்நாட்டின் நிலையையும், தமிழ் மொழி இலக்கிய நிலையையும் அறிவதற்குத் தொல்காப்பியமே வாயிலாய் அமைகின்றது. எல்லா வகையிலும் தமிழ்நாட்டின் வரலாற்றில் தொல்காப்பியமே ஒரு எல்லைக் கல்லாக விளங்குகிறது. தொல்காப்பியர் இலக்கண ஆசிரியராக மட்டுமல்லாமல் புலவராக, மொழியியலாளராக, மெய்யியலாளராக, வரலாற்றறிஞராக மன்பதையியல் அறிஞராகத் திகழ்கிறார். தொல்காப்பியர் தமிழிலும், சமசுகிருதத்திலும் சிறந்த புலமையாளராக விளங்குகிறார். தொல்காப்பியம் அவரது அறிவுக்குச் சான்றாய்த் திகழ்கின்றது. – பேராசிரியர் சி.இலக்குவனார், தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்: (Tholkāppiyam in English with critical studies) பக்கம் 20  

வளம் பெறும் மொழி மாறுதலடையும் – சி.இலக்குவனார்

வளம் பெறும் மொழி மாறுதலடையும் இலக்கிய ஆசிரியரால் வளம் பெறும் மொழி, என்றும் ஒரே நிலையானதாக இராது. காலந்தோறும் மாறுதலடையும். இலக்கண வரம்புக்குட்பட்டு மாறுதலடைதல், மொழி வளர்ச்சியின் இன்றியமையாத நெறியாகும். இலக்கண ஆசிரியராம் தொல்காப்பியர் இம்மொழியல்பை நன்கு அறிந்த மொழிநூற் புலவராவார். அதனால் தாம் கூறும் இலக்கண வரம்புகட்கு விதி விலக்களிக்கும் புறனடை நூற்பாக்களை ஆங்காங்கே புகன்றுள்ளார். – செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்: தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்.9

சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 2: மறைமலை இலக்குவனார்

(சூன் 28, 2015 தொடர்ச்சி)2  போராரவாரம்:   பேராரவாரம் மிக்க சூழல்களையும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய சங்கச் சான்றோர்கள் போராரவங்களையும் பதிவு செய்துள்ளனர். புறப்பாடல்களைவிட மிகுதியாக அகப்பாடல்களில் இவை நுவலப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஊரார் அலர் தூற்றலின் கொடுமையால் துன்புறும் தலைவியும் தோழியும், அலரினால் எழுந்த ஆரவாரம் போராரவாரத்தைக் காட்டிலும் பெரிதாக விளங்கியதாக எடுத்துக்கூறும் வகையில் இப் பாடல்கள் அமைந்துள்ளன.   “அன்னி என்பவன் குறுக்கைப் போர்க்களத்தில் திதியன் என்பவனது தொன்மையான புன்னை மரத்தின் பெரிய அடியை வெட்டித் துண்டித்தபொழுது கூத்தர் அவனைப் போற்றிச் செய்த…

திருக்குறளில் வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் 2 – வெ.அரங்கராசன்

(சூன் 28, 2015 தொடர்ச்சி)2 11.0. வல்லுநர் கருத்து அறிதல் [EXPERT OPINION]     ஒரு தொழிலை / வணிகத்தை / நிறுவனத்தை நடத்தும் போது, எதிர்பாராத விதமாகச் சில நடைமுறைச் சிக்கல்கள் தோன்றும். அவற்றைச் சரி செய்வதற்கு, அவற்றின் உள்ளும் புறமும் உள்ள அனைத்தையும் படித்த – ஆராய்ந்த – பட்டறிந்த – வல்லுநர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பயன்கொள்ளலாம். இதுவும் ஒரு வணிக நடைமுறையே. இதையும் திருவள்ளுவப் பெருந்தகையார் தெளிந்துள்ளார்; தெரிவித்துள்ளார். இதனைச்,         செய்வினை செய்வான் செயல்முறை, அவ்வினை…

மகளுக்குத் தந்தையின் மடல் – இளையவன்-செயா

  பெரியார் ஆண்டு 135  தொ. ஆ. 2880 தி.ஆ. 2046        ஆடவை ( ஆனி )  13          28–06–2015 அன்பு மதுமலர்க்கு வணக்கம். நலம். நாடலும் அதுவே.        கடந்த  22ஆம் நாள்  உங்கள்  புகழுரையை  மின்னஞ்சல் மூலம் படித்தேன். அதனை அப்படியே  ஏற்றுக்கொள்கிறேன். நான் இளைஞர்களிடம் பேசும்போது  ” உன்னை  அறிவாளி  யாரேனும்  பாராட்டும்போது  உடனே ” ஆம்  நான் அறிவாளிதான் ” என்று ஒப்புக் கொள்.  காரணம்  அந்தப்…

குமுக வளர்ச்சி 2 – முனைவர் இராம.கி.

(சூன் 28, 2015 தொடர்ச்சி) முனைவர் இராம.கி.   குமிந்துகூடிச் சேர்ந்துவாழும் மக்கள்கூட்டத்தையே குமுகமென்று சொல்கிறோம்.  குமுகமென்பதை வடமொழி உச்சரிப்போடு சமூகமென்று சொல்லியே நாமெல்லாம் பழகிவிட்டோம். ஆங்கிலத்தில் இதை society என்பார். “People bound by neighborhood and intercourse aware of living together in an ordered community” ஆகக் குமுகமென்பது வெறுங் கும்பலல்ல. பல்வேறு வகைப்பட்ட மக்கள் ஓரிடத்திற் சேர்ந்து குடியிருந்து, கட்டொழுங்கோடு வாழும் அமைப்பாகி, ஒருவருக்கொருவர் இணங்கி, எல்லோருக்கும் நலனும் வளர்ச்சியும் ஏற்படும்வகையில் உறவாடிக் கொள்வதே குமுகமாகும். இக் குமுக உறுப்பினருக்குத் தனிப்பொறுப்புகளும், குடும்பப்…