இலக்குவனாரைப் பயன்படுத்தத் தெரியாத அரசு – சிவகாமி சிதம்பரனார்
இலக்குவனாரைப் பயன்படுத்தத் தெரியாத அரசு பேராசிரியர் சி.இலக்குவனார், கொள்கையிலும் மொழிப் பற்றிலும் பிடிவாதமான உறுதி வாய்ந்தவர். அஞ்சா நெஞ்சுடையவர். கடைசிக் காலம் வரை எதிர்ப்பில் போராடியவர். கொள்கைக்காகத் தம் ஆசிரியப் பணியையும் விட்டார். கொள்கைப் பிடிவாதத்தால் குடும்பத்துடன் துன்பப்பட்ட காலங்களும் நிரம்ப உண்டு. எக்கட்சி ஆளுங்கட்சியாய் இருந்தாலும் அரசுக்கு அவ்வப்போது இடித்துரை கூறத்தவறுவதில்லை. இதனால் பலமுறை பணிமாறுதல்களையும் சந்தித்த பெருமையுடையவர். தம் பிழைப்புக்காக ஒரு போதும் கொள்கையை விட்டுக் கொடுக்காத பேராண்மை படைத்தவர். சென்னையில் வாழ்ந்த போது, பல தமிழ் இலக்கியம் கூட்டங்களை…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 07: ம. இராமச்சந்திரன்
(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி) இயல் – 3 இருபதாம் நூற்றாண்டுக் கவிதையும் இலக்குவனாரும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் தமிழ்நாடு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த காலமாகும். நாட்டு விடுதலை வேட்கை மக்கள் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்தது. பாட்டுக்கொரு புலவன் பாரதியும் அவனைப்போலப் பிற கவிஞர்களும் நாட்டு விடுதலையைக் கருப்பொருளாகக் கொண்டு கவிதைகளை இயற்றினார்கள். செய்யுள் என்ற சொல்லைக் கவிதையாக்கியவர் பாரதி. மிகவும் எளிய சொற்களால் உள்ளத்து உணர்வைத் தூண்டும் வகையில் பாடினார். நாட்டு விடுதலையைப் பாடிய…
பேராசிரியர் சி.இலக்குவனார் சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டானவர்
தமிழ் வழிக்கல்விக்கு ஆக்கம் தேடியவர் பேராசிரியர் சி.இலக்குவனார் பகுத்தறிவு நோக்கில் பெரியாரைப் பின்பற்றினார். மொழிநோக்கில் மறைமலை அடிகளாரைப் பின்பற்றினார். இந்தி எதிர்ப்பில் நாவலர் சோமசுந்தர பாரதியாரைப் பின்பற்றினார். வறுமையிலும் செம்மையுடையவராக விளங்குவதில் புலவர் பெருஞ்சித்திரனாரைப் பின்பற்றினார். புறநானூற்றில் வருகின்ற வேலைக் கையிலெடுப்பது போலத் திண்மையோடு (வலிமையோடு) வாழ்ந்து காட்டினார். வன் தொடர்களை மிகுதியாகப் பின்பற்றினார். வல்லினப் பேராசியராய் விளங்கி இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்கின்றார். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்றோர் பக்திக்காகப் பயணம் செய்தனர். பக்திக்காகப் பயணம் செய்த தமிழ்நாட்டில் முதன் முதலாக…
சங்கத்தமிழ் தந்தால் சந்தப்பா தருவேன் – ஔவையார்: நாக.இளங்கோவன்
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய் துங்கக்கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா.” பிள்ளையாரின் அடியாரான ஒளைவையார் ஆக்கிய இந்தப்பாடலை தமிழ்படித்த, பேசுகின்ற எவரும் ஏதோவொரு வழியில் படித்தோ பேசியோ பாடியோ இருப்பார்கள். தமிழ்நாட்டில் அத்தனைப் புகழ்பெற்றது இந்தப்பாடல். தமிழ்வழிபாடுகளில் இடம்பெறும் பாடல்களில் முக்கியமான பாடல் இதுவென்றால் மிகையன்று. அழகும், வெற்றியும் அணிசெய்கின்ற கரிமுகத்தானிடம் ஔவையார் மூன்றுதமிழை கேட்கிறார், நாலுபொருளை தருவதாகக்கூறி. இறைவனுக்கு, நாம் விரும்பும் உணவினையெல்லாம், அவன்விரும்பும் உணவுப்பொருள்களாகச் சொல்லி படையலிட்டு…
‘தந்தையுமான தாய் நூல்’ ஆய்வுரை -வா.மு.சே.திருவள்ளுவர்
கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் அவர்களின் தந்தையுமான தாய் நூல் ஆய்வுரை சென்னையில் சித்திரை 19, 2046 / 2-5-2015 அன்று கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் அவர்களின் ‘தந்தையுமான தாய்’ நூல் வெளீயீட்டு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளூவர் ஆற்றிய நூல் ஆய்வுரை: நிலவு முத்துகிருட்டிணன் என் உள்ளம் கவர்ந்த நண்பர். உள்ளதை உணர்வதை கள்ளமில்லாமல் கூறும் நெஞ்சர். தம் குழந்தைப் பருவம் முதல் இன்றுவரை பகுத்தறிவு போற்றும் பாவலர். சமுகம் சுற்றத்தார் நண்பர் குடும்பம் என அனைத்து நிலைகளிலும் செயலாற்றும்…
ஆட்சிமொழிக்காவலர் இராமலிங்கனார்புகழ் வெல்க!
ஆட்சிமொழிக்காவலர் இராமலிங்கனார்புகழ் வெல்க! தமிழகத் தலைமைச் செயலகம் முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வரை இன்றைக்கு ஓரளவுக்காவது ஆட்சிமொழி நிருவாகம் தமிழ்மொழியில் நடைபெறுவதற்கு மூல காரணமாகத் தமிழறிஞர் ஒருவர் இருந்துள்ளார். அவரை இப்போது தெரிந்து கொள்வோம். அவர் பெயர் கீ.இராமலிங்கனார். 1956ஆம் ஆண்டில் மொழிவழி மாகாணமாகத் தமிழ்நாடு உருவாக்கப்பட்ட போது ஆட்சிமொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திய விடுதலைக்கு முன்னும், பின்னும் பிரித்தானியரின் ஆங்கிலமொழியே தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. நீண்ட காலத்திற்கு முன்பே ஆங்கில…
நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் வேறுபாடு – பாவாணர்
அகச் செம்மை பண்பாடு; புறச் செம்மை நாகரிகம் நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. அது எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவது. பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம். அது எல்லாப் பொருள்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்துவது. இலக்கணப் பிழையின்றிப் பேசுவதும், எல்லாவகையிலும் துப்புரவாயிருப்பதும், காற்றோட்டமுள்ளதும் உடல் நலத்திற் கேற்றதுமான வீட்டிற் குடியிருப்பதும், நன்றாய்ச் சமைத்து உண்பதும், பிறருக்குத் தீங்கு செய்யாமையும், நாகரிகக் கூறுகளாம்; எளியாரிடத்தும் இனிதாகப் பேசுவதும், புதிதாய் வந்த ஒழுக்க முள்ள அயலாரை விருந்தோம்புவதும், இரப்போர்க்கிடுவதும், இயன்றவரை பிறருக்குதவுவதும், கொள்கையும் மானமுங் கெடின் உயிரை…
இராசபக்சவை வீழ்த்தியது எது? – திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு
இராசபக்சவை வீழ்த்தியது எது? “எமது விடுதலை தொடர்பாக இலங்கைக் குடியதிபர்(சனாதிபதி) மைத்திரிபாலா கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படாததால், காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மீண்டும் தொடங்குகிறோம். இறப்புக்குப் பிறகு, எங்கள் உடல்களை யாழ் பல்கலைக்கழக மருத்துவப் புலத்தில் ஒப்படைக்கும்படி மைத்திரியைக் கேட்டுக்கொள்கிறோம்! எம் மாணவர்களின் மருத்துவ ஆய்வுகளுக்கு எம் உடல்கள் பயன்படட்டும்….” இப்படியோர் உருக்கமான அறிவிப்புடன் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார்கள், இலங்கையின் ௧௪ (14) சிறைகளில் நீண்ட காலமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் ௨௧௭ (217) தமிழ் அரசியல் கைதிகள். அத்தோபர் இறுதியில், தங்களது விடுதலை…
திருக்குறள் அறுசொல் உரை – 090. பெரியாரைப் பிழையாமை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 089. உள்பகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 090. பெரியாரைப் பிழையாமை பெரியார்சொல் கேட்பார், பிழைசெய்யார் பெரியார்சொல் கேளார், பிழைசெய்வார். ஆற்றுவார் ஆற்றல், இகழாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. செயல்வல்ல பெரியாரை இகழாது, மதித்துச் செயல்படல் சிறப்பு. பெரியாரைப் பேணா(து) ஒழுகின், பெரியாரால் பேரா இடும்பை தரும். பெரியார்தம் சொல்வழி நடவாமை, பெயராப் பெரும்துன்பம் தரும். கெடல்வேண்டின், கேளாது செய்க; அடல்வேண்டின், …
திருக்குறள் அறுசொல் உரை – 089. உள்பகை: வெ. அரங்கராசன்
அதிகாரம் 088. பகைத் திறம் தெரிதல் தொடர்ச்சி 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 089. உள்பகை வெளியில் தெரியாமல், மனத்துள்ளே ஒளிந்துஇருந்து, அழிக்கும் கொடும்பகை நிழல்நீரும், இன்னாத இன்னா; தமர்நீரும், இன்னாஆம் இன்னா செயின். நோய்தரும் நிழல்நீரும், தீமைதான்; நோய்தரும் உறவும், தீமைதான். வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக, கேள்போல் பகைவர் தொடர்பு. வெளிப்பகைக்கு அஞ்சாதே; உறவுபோல் நடிக்கும் உள்பகைக்கு அஞ்சு. உள்பகை அஞ்சித் தன்காக்க, உலை(வு)இடத்து,…
திருக்குறள் அறுசொல் உரை – 088. பகைத் திறம் தெரிதல் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 087. பகை மாட்சி தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 088. பகைத் திறம் தெரிதல் பகைவரது பலவகைத் திறன்களை ஆராய்ந்து தக்கவாறு நடத்தல். பகைஎன்னும் பண்(பு)இல் அதனை, ஒருவன் நகையேயும், வேண்டல்பாற்(று) அன்று. பகைஆக்கும் பண்புஇல்லா எதுவும், வேடிக்கை என்றாலும் வேண்டாம். வில்ஏர் உழவர் பகைகொளினும், கொள்ளற்க, சொல்ஏர் உழவர் பகை. வீரரைப் பகைத்தாலும், சொல்திறப் பேரறிஞரைப் பகைக்க வேண்டாம். ஏமுற் றவரினும் ஏழை, தனியனாய்ப்,…
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3 தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்தியதால் இந்தியப்பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறைவாழ்க்கை பெற்ற பேராசிரியர்(1965), தமிழ்க்கல்வித்திட்டம் பற்றியும் பின்வருமாறு அகநானூற்றுப் பாடல் 55 இல் வரும் வெண்ணிப்போர் விளக்கம் மூலம் வலியுறுத்துகிறார். வெண்ணிப்போர்: ‘வெண்ணி’ , ‘கோவில் வெண்ணி’ என்ற பெயரின் சுருக்கமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் உள்ளது. . . . இங்கு நடந்த போரைப்பற்றி புலவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ஆயினும் நம் தமிழ் மாணவர்கள் மேனாட்டில் நடைபெற்ற போர்களைப்…
