வலைமச் சொற்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
கணிப்பொறி தொடர்பாகவும் பிறஅறிவியல் தொடர்பாகவும் மிகுதியான கலைச் சொற்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டி உள்ளன. அறிவியல் கலைச்சொற்கள் அவ்வப்பொழுது சொல்லாக்க ஆர்வலர்களால் வெளிப்படுத்தப்படுகின்றன. மேலும் பல்லாயிரக்கணக்கான கலைச்சொற்கள் தேவை. இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட கலைச்சொற்களைக் கட்டுரையாளர்களும் நூலாசிரியர்களும் பயன்படுத்தினால்தான், இவற்றால் பயன் விளையும். இல்லையேல் விழலுக்கு இறைத்த நீர்தான். இனியேனும் படைப்பாளர்கள் தமிழ்க்கலைச் சொற்களையே பயன்படுத்தும் வேண்டுகோளுடன் கட்டுரையைத் தொடருகிறேன். கணிணிச் சொற்களில் வலைப்பணி(Network) சார்ந்த கலைச் சொற்களைக் காணலாம். கலைச்சொல்லாக்க நெறிமுறைகள் குறித்துக்,‘கணிணியியலில் நேர்பெயர்ப்புச் சொற்களும்ஒலிபெயர்ப்புச் சொற்களும்’ என்னும் (செருமனியி்ல்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 059. ஒற்று ஆடல்
(அதிகாரம் 058. கண்ணோட்டம் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 059. ஒற்று ஆடல் உள்,வெளி நாடுகளில், எல்லா நடப்புக்களையும், உளவு பார்த்தல் ஒற்றும், உரைசான்ற நூலும், இவைஇரண்டும், தெற்(று)என்க, மன்னவன் கண். உளவும், உளவியல் நூல்தெளிவும் ஆட்சியரிடம் அமைதல் வேண்டும். எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும் வல்அறிதல், வேந்தன் தொழில். எல்லார்க்கும் எல்லாமும் கிடைப்பவற்றை, ஆட்சியான் உளவால் ஆராய்க. ஒற்றினான் ஒற்றிப், பொருள்தெரியா மன்னவன் …
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 058. கண்ணோட்டம்
(அதிகாரம் 057. வெருவந்த செய்யாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 058. கண்ணோட்டம் உயிர்கள்மீது கண்களின் ஓட்டம், அதனால் விளையும் இரக்கம். கண்ணோட்டம் என்னும், கழிபெரும் காரிகை, உண்மையான், உண்(டு),இவ் உலகு. இரக்கம் என்னும், பேரழகுப் பண்பால்தான், உலகம் இருக்கிறது. 0572, கண்ணோட்டத்(து) உள்ள(து), உல(கு)இயல்; அஃ(து),இன்றேல், உண்மை நிலக்குப் பொறை. இரக்கத்தால் உலகுஇயல் உண்டு; இரக்கம்இலான் பூமிக்குச் சுமை. . பண்என்ஆம்? பாடற்(கு) இயை(பு)இன்றேல்; கண்என்ஆம்? …
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 057. வெருவந்த செய்யாமை
(அதிகாரம் 056. கொடுங்கோன்மை தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 057. வெருவந்த செய்யாமை குடிமக்கள், அஞ்சி நடுங்கும்படி, கொடுமைச் செயல்கள் செய்யாமை தக்காங்கு நாடித், தலைச்செல்லா வண்ணத்தால், ஒத்(து),ஆங்(கு), ஒறுப்ப(து), வேந்து. தக்கபடி ஆய்ந்து, குற்றம் மீளநடவாவாறு, பொருந்தத் தண்டிக்க. கடி(து)ஓச்சி, மெல்ல எறிக, நெடி(து)ஆக்கம், நீங்காமை வேண்டு பவர். கடுமையாக மிரட்டி, மென்மையாகத் தண்டிப்பதே, ஆக்க நீதி. வெருவந்த செய்(து)ஒழுகும், வெங்கோலன் ஆயின், ஒருவந்தம்,…
மெல்ல மெல்லப் படரும் இந்திநோய் – பேரறிஞர் அண்ணா
கேள்விக்குறியாகும் பூட்டுத் தொழில் – வைகை அனிசு
பூட்டுத்தொழிலுக்குப் பூட்டு! பழைய குடியேற்ற ஆதிக்கத்தின் மறுபெயர்தான் உலகமயமாக்கம். உலகமயம் மிகச் சிலரை இமயத்தில் ஏற்றிவிட்டுக் கோடிக்கணக்கான மக்களை வறுமைப் படுகுழியில், வாழ்வின் அதல பாதாளத்தில் தள்ளிவிடுகிறது. உலகமயம் என்னும் கொடுங்கோலன் உலகிலுள்ள ஏழை நாடுகளை அச்சுறுத்தி முதலாளித்துவக் கொள்கைகளை உள்ளடக்கியிருப்பதால் ஏழை மக்களைப் பற்றி அதற்கு அக்கறையில்லை. இதனால் அனைத்து நாடுகளிலுள்ள அடித்தட்டு மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. ஆதாயம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களால் ஏழை நாடுகளிலுள்ள அனைத்து வளங்களும் இன்று வரை சுரண்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு சுரண்டப்படுவதால்…
துலுக்கப்பயலே! 4 -வைகை அனிசு
(அகரமுதல 96, ஆவணி 27, 2046 / செப். 13, 2015 தொடர்ச்சி) 4 தமிழகத்தில் முசுலிம்களும் பிரிவுகளும் கி.பி.பத்தாம் நூற்றாண்டில் தென்னகத்திற்கு வந்த இசுலாமிய மார்க்க ஞானி நத்தகர் காலத்தில் இருந்த கல்வெட்டுகள், நூல்கள் போன்றவற்றில் அஞ்சுவண்ணத்தார், சோனகன், முகமதியர் எனப் பலபெயர்களில் இசுலாமியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு ஆணையின்படி (இ)லெப்பை, தக்கினி, மரைக்காயர், இராவுத்தர், மாப்பிள்ளை, பட்டாணி, காக்கா, சேட்டு, சையது, சேக்கு, பீர், தாவூது, அன்சார், நவாபபு என முசுலிம்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் ஏற்கெனவே உள்னர்.(பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்…
கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடு 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடு எத்துறையாயினும் அத்துறையறிவு தாய்மொழியில் வெளிப்படுத்தப் பட்டால்தான் அம்மொழியினருக்கு முழுப் பயன்பாடு கிட்டும்; அத்துறையும் சிறப்பான வளர்ச்சியை எட்டும். அந்த வகையில் கணிணியியலில் முழுமையும் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டால்தான் கணிணியியல் முழு வளர்ச்சியடைந்ததாகும்.. இப்பொழுது அந்நிலை இன்மையால், அதனை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். கட்டுரையாளர்களும் நூலாளர்களும் இதழாளர்களும் தமிழில் கணிணியியலை விளக்குவதில் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனால், அவ்வாறு விளக்குவதில் உள்ள ஆர்வம் தமிழைப் பயன்படுத்துவதில் இல்லை. கணிணிக் கலைச்சொற்களாக நல்ல தமிழ்ச் சொற்கள் இருப்பினும் அதைப் பயன்படுத்தாதவர்களும் உளர்; தமிழ்க்…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 10 இலக்குவனார் திருவள்ளுவன்
(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 9 தொடர்ச்சி) 10 புறநானூறு: முகப்பு அட்டவணையிலோ பாடல் பக்கங்களிலோ தேடுதல் பகுதி இல்லை(பட உரு 59) உ.வே.சா. உரைப்பக்க முகப்பு மேற்புறத் தேடுதலைச் சொடுக்கினால், ‘பக்கம் தேடல்’, ‘சொல் தேடல்’ வருகின்றன (பட உரு 60). உ.வே.சா. உரைப்பகுதியில் உரைப் பக்கங்களில் ‘பக்க எண் தேடல்’ உள்ளது (பட உரு 61). உரைவேந்தர் ஔவை உரைப்பக்க முகப்புத் தேடலைச் சொடுக்கினால் ‘பக்கம் தேடல்’, ‘பாடல் தேடல்’, ‘சொல் தேடல்’ வருகின்றன(படவுருக்கள் 62 & 63)…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 9 இலக்குவனார் திருவள்ளுவன்
(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 8 தொடர்ச்சி) 9 கலித்தொகை: முகப்பிலும் பாடல் பகுதியிலும் தேடுதல் இல்லை. பாடலுடன் கூடிய உரைப்பக்கங்க ளிலும் தேடுதல் பொறியும் இல்லை (பட உரு 51). ஆனால், நேரடியாக உரைக்குச் சென்றால், உரைப்பக்கங்களில் ‘பக்க எண்’ தேடல் வருகிறது (பட உரு 52). உரைப்பக்க அட்டவணை மேற்புறத்தில் உள்ள தேடுதலைச் சொடுக்கினால் ‘பக்கம் தேடல்’, ‘சொல் தேடல்’ வருகின்றன(படவுருக்கள் 53 & 54) இவ்வாறு, உரைப்பக்கத்தை அணுகும் முறைக்கேற்ப, தேடலின்மை, பக்க எண் தேடல், பக்கமும் சொல்லும்…
குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்றக் கும்பல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்றக் கும்பல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்ற(மாபியா)க் கும்பலைக் கைது செய்யவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள். நாகப்பட்டினம் மாவட்டம் தற்பொழுது ஆள்கடத்தல், சிறார் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், மணல் கடத்தல் போன்றவற்றையெல்லாம் தூக்கிச்சாப்பிடும் அளவிற்குப் புகழ்பெற்று விளங்குகிறது இணையத்தளத்தைப்பயன்படுத்தி, மிரட்டுவதன் மூலம் மூலம் குறுகிய காலத்தில் பணம் சம்பாதித்து வருகிறது குற்றக்கும்பல். 4 அல்லது 5 பேர் இணைந்து இந்தத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முதலீடு கணிணியும் அதில்…
வாழ்கின்றவரை வாழ்த்திடுவோம்! மடிந்தவரை மறந்திடுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
வாழ்கின்றவரை வாழ்த்திடுவோம்! மடிந்தவரை மறந்திடுவோம்! “அதிகாரியின் நாய் இறந்தால் ஊரே திரண்டு உடன் வரும். அதிகாரி இறந்தாலோ அந்த நாய் மட்டும்தான் உடன் வரும்” என்பார்கள். இவ்வாறு ஆதாயத்திற்காக இருப்பவரைப் போற்றுவதும் ஆதாயம் இல்லை என்பதற்காக இறந்தவரைப் புறக்கணிப்பதும் இழிவான செயலாயிற்றே! ஆனால், தலைப்பு வேறுவகையாக உள்ளதே என எண்ணுகின்றீர்களா? அதற்கு விளக்கம் காணும் முன்பு ஆன்றோர்கள் சொன்ன செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம். உலகில் மனித இனம்தோன்றிய பகுதி தமிழ்நாடு. அவ்வாறு தோன்றிய பொழுது தமிழ்நாட்டின் நிலப்பரப்பு மிக அகன்று இருந்தது….
