சேக்கிழார் காலம் வரையிலும் தமிழிசை மரபு அழியவில்லை
சேக்கிழார் காலம் வரையிலும் தமிழிசை மரபு அழியவில்லை செங்கை யாழ் என்னும் செங்கோட்டியாழ் அல்லது சகோடயாழை இசைத்த பெரும்பாணனாகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர், கி.பி.ஆறாவது நூற்றாண்டில் “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய” திருஞானசம்பந்தர் காலத்தைச் சேர்ந்தவர். தொல்மரபாகிய யாழ் மரபும் பாணர் மரபும் தொடர்ந்து ஆறாவது நூற்றாண்டு வரை இருந்ததையும் மேலும் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் பெருமானும் அம்மரபைப் போற்றிப் பாடியிருத்தலின் அக்காலம் வரை தமிழிசை மரபு அழியாமலே இருந்திருக்கின்றது என்பதையும் அறிகிறோம். –தமிழ்ச்சிமிழ்
பறை எனும் தகவல் ஊடகம்
எட்டுத் தொகையில் ஒன்றாகிய பரிபாடல் இசைத் தமிழ்ப்பாடல்களைக் கொண்ட நூலேயாகும். ஒவ்வொரு பாடலிலும் அந்தந்தப் பாட்டுக்குரிய பண் இன்னதென்பது குறிக்கப் பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் பல இசைப்பாடல்களும் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றிற்கு விளக்கம் கூறும் அடியார்க்கு நல்லார், பல இசை நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். அவற்றுள் சில மேற்கோள் எந்தஇசை நூலைச் சார்ந்தன என்று நம்மால் அறிய முடியவில்லை. அடியார்க்கு நல்லார் கூறும் பல இசை நூல்களின் ஆசிரியர் யார் என்பதை அறிய முடியவில்லை. அவர் இசைநூல்களாக பெருநாரை, பெருங்குருகு,…
துலுக்கப்பயலே! 5 – வைகை அனிசு
(அகரமுதல 97, புரட்டாசி 3, 2046 / செப். 20, 2015 தொடர்ச்சி) 5 இராவுத்தர் கோயில் தஞ்சாவூர் அருகே உள்ள திருவோணம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது பாதிரங்கோட்டை என்ற ஊர். அங்கு இராவுத்தர் கோயில் உள்ளது. அக்கோயிலின் நுழைவு வாயிலில் எட்டடி உயரமுள்ள பிரமாண்டமான குதிரைச் சிலையும், அதன் அருகில் ஐயனார் சிலையும் உள்ளன. கையில் பெரிய வீச்சரிவாள், பெரிய மீசை பயமுறுத்தும் கண்களுடன் ஐயனார் காட்சியளிக்கிறார். ஐயனார் சிலையின் தலையில் முசுலிம்கள் அணியும் குல்லா உள்ளது. இவரைப் பெரிய இராவுத்தர்…
“முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” – அறிமுகம்
“முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 34 நாளிதழ்கள், இணைய இதழ்களில் வந்த ஆசிரியரின் காலத்திற்கேற்ற கட்டுரைகளே “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” என்ற கட்டுரைத் தொகுப்பாக வந்துள்ளது. இத் தொகுப்பின் ஆசிரியரான நா.முத்துநிலவன் உலகறிந்த பட்டிமன்றப் பேச்சாளர், பாடகர், கவிஞர், கட்டுரையாளர், சமூகச் சிந்தனையாளர், வலைப்பதிவாளர், கருத்தரங்குகளில் மொழி சார்ந்தும், சமூகம் சார்ந்தும் முழங்குபவர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தாலும் பள்ளி ஆசிரியர் என்ற அவரின் தகுதிதான் இந்த நூலை இன்னும் வேகமெடுத்து…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 063. இடுக்கண் அழியாமை
(அதிகாரம் 062. ஆள்வினை உடைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 063. இடுக்கண் அழியாமை துன்புறினும், மனம்கலங்காது, வென்று நின்று, இன்புற்று வாழும்திறன். இடுக்கண் வரும்கால், நகுக; அதனை, அடுத்(து)ஊர்வ(து), அஃ(து)ஒப்ப(து) இல். எத்துன்பம் வந்தாலும், இகழ்ந்து சிரித்தலே அத்துன்பத்தை வெல்லும்வழி. வெள்ளத்(து) அனைய இடும்பை, அறி(வு)உடையார், உள்ளத்தின் உள்ளக், கெடும். வெள்ளம் போன்ற பெரும்துயரும், சிந்தனை உறுதியால் சிதையும். இடும்பைக்(கு) இடும்பை, படுப்பர்; இடும்பைக்(கு) …
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 11 இலக்குவனார் திருவள்ளுவன்
(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 10 தொடர்ச்சி) 46-64.] பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவற்றுள் 19 நூல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நாலடியார், நான்மணிக்கடிகை, கார்நாற்பது, களவழிநாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஐந்திணைஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, இன்னிலை ஆகிய நூல்களின் உரைப்பக்கத்தின் பொருளடக்கப் பக்கத்தில் உள்ள தேடுதல் பகுதியைச் சொடுக்கினால், பக்கம் தேடல், சொல் தேடல் வருகின்றன. பக்கங்களில் பக்க எண் தேடல் மட்டும் உள்ளது….
கண்ணியக் காவலர் குலோத்துங்கன் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழகம் மறக்கக்கூடாதவர்களுள் ஒருவர்! தமிழக மக்கள், அரசியல் துறையில், இலக்கிய உலகில், கலைப்பணியில், என வெவ்வேறு வகைப்பாடுகளில் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய தகைமையாளர்கள் பலர் உள்ளனர். அத்தகையோருள் குறிப்பிடத்தக்க ஆன்றோர் கண்ணியம் ஆ.கோ.குலோத்துங்கன் ஐயா அவர்கள். “அன்று குலோத்துங்கனுக்காகக் கலிங்கத்துப்பரணி பாடினார் செயங்கொண்டார். இன்று செயங்கொண்டத்தில் குலோத்துங்கன் தமிழ்ப்பரணி பாடுகிறார். எழுத்துத் துறையில் நாளை ஒரு வேந்தனாகத் திகழ்வார்” என்று பேரறிஞர் அண்ணா இவரின் எழுத்துப்பணியைப் பாராட்டி உள்ளதே இவரின் சிறப்பினை அடையாளப்படுத்தும். தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர் தொழிலாளர்களின் உற்ற தோழனாக,…
தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 8 – இலக்குவனார் திருவள்ளுவன்
8 ஙூ.) தமிழ்நாடு இணையத்தமிழ் மன்றம்: இணையம் வழியாகத் தமிழ் வளர்ப்பதற்குக் கணிணியில் தமிழ்ப்பயன்பாடுகள் பெருக வேண்டும். இதற்கெனத் தமிழக அரசே, ‘தமிழ்நாடு இணையத்தமிழ் மன்றம்’ ஒன்றை அமைக்க வேண்டும். ‘தமிழ்நாடு இணையத் தமிழ் மன்றம்’ / ‘தமிழகக் கணித் தமிழ் மன்றம்’ என்ற ஏதேனும் ஒரு பெயரில் இணைய வழியிலான அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கென ஓர் அமைப்பு இன்றியமையாது வேண்டப்படுகின்றது. ‘தமிழ் இணையக் கல்விக்கழகம்’ என்னும் அமைப்பு இருக்கும்பொழுது வேறு தேவையா என்ற எண்ணம் எழலாம். அந்த அமைப்பு…
கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடு 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
2 கணிணியியலில் ஆங்கில ஒலிபெயர்ப்பிலேயே கலைச் சொற்களும் தலைப்பெழுத்துச் சொற்களும் எண்ணிலடங்கா அளவு கையாளப்பட்டுத் தமிழ் மொழி சிதைந்து வருவதைப் பலரும் உணரவில்லை. ‘மணிப்பிரவாளம்’ என்ற பெயரில் மொழிக்கொலை புரிந்து பாழ்பட்ட நிலையிலிருந்து அண்மைக் காலத்தில் மீண்டுவரும் வேளையில் ஆங்கிலக்கலப்பு விளைவிக்கும் தீங்கைப் பெரும்பான்மையர் புரிந்து கொள்ளவில்லை. பிற அறிவியல் துறைகளில் நிகழும் சொல்லாக்கத் தவறுகள்தாம் கணிணியியலிலும் நடைபெறுகின்றன. ஆனால், பிற துறைகளுடன் ஒப்பிட முடியாத அளவு கணிணியியலில்தான் ஆங்கில ஒலிபெயர்ப்புச்சொற்கள் மிகுதியாகக் கையாளப்படுகின்றன. இவை முற்றிலும் உடனடியாகக் களையப்பட வேண்டும். சுருக்கக்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 062. ஆள்வினை உடைமை
(அதிகாரம் 061. மடி இன்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 062. ஆள்வினை உடைமை ஏற்றுக் கொண்ட செயல்முடிக்க, இடைவிடாது செய்யும், நல்முயற்சி “அருமை உடைத்(து)”என்(று), அசாவாமை வேண்டும்; பெருமை, முயற்சி தரும். “முடியாதது” என்று, மலைக்காதே; முயற்சி, பெருமையாய் முடியும். வினைக்கண், வினைகெடல் ஓம்பல்; வினைக்குறை தீர்ந்தாரின், தீர்ந்தன்(று) உலகு அரைகுறையாய்ச் செயல்கள் செய்யாதே; செய்தால், உலகமும் கைவிடும். தாள்ஆண்மை என்னும், தகைமைக்கண் தங்கிற்றே, வேள்ஆண்மை என்னும், செருக்கு….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 061. மடி இன்மை
(அதிகாரம் 060. ஊக்கம் உடைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 061. மடி இன்மை குடும்பத்தையும், குடியையும் உயர்த்த முயல்வார் விடவேண்டிய சோம்பல் குடிஎன்னும் குன்றா விளக்கம், மடிஎன்னும் மா(சு)ஊர, மாய்ந்து கெடும். சோம்பல்தூசு படிந்தால், அணையாக் குடும்ப விளக்கும் அணையும். மடியை, மடியா ஒழுகல், குடியைக், குடியாக வேண்டு பவர். குடியை, உயர்ந்த குடியாக்க விரும்புவார், சோம்பலை விலக்குக. மடிமடிக் கொண்(டு)ஒழுகும், பேதை பிறந்த குடி,மடியும்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 060. ஊக்கம் உடைமை
(அதிகாரம் 059. ஒற்று ஆடல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 060. ஊக்கம் உடைமை எவ்வகைச் சூழலையும் கலங்காது, எதிர்கொண்டு சமாளிக்கும் மனஉறுதி ‘உடையர்’ எனப்படுவ(து) ஊக்கம்; அஃ(து)இல்லார், உடைய(து) உடையரோ மற்று? ஊக்கம் உடையாரே, ‘உடையார்’; மற்றையார், உடையார் ஆகார். உள்ளம் உடைமை, உடைமை; பொருள்உடைமை, நில்லாது; நீங்கி விடும். ஊக்கமே, நிலைக்கும் பெரும்செல்வம்; பொருள்செல்வமோ நில்லாது; நீங்கும். ”ஆக்கம் இழந்தேம்” என்(று), அல்லாவார்,…
