தாய்த்தமிழும் மலையாளமும் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
தாய்த்தமிழும் மலையாளமும் 1 தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்ந்தாலும் தமிழ் நாட்டு வரலாறு போன்று தமிழ் மொழியின் உண்மையான வரலாறும் அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தப்படவில்லை. போதிய சான்றுகள் இருப்பினும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவது போன்று தமிழின் தொன்மைபற்றியும் நாம் பேசி வருகிறோம்; பேசும் அளவைவிடக் குறைவாக எழுதி வருகிறோம். நடுநிலை ஆய்வறிஞர்களால் தமிழ்மொழி வரலாறும் தமிழ்க்குடும்ப மொழிகளின் வரலாறும் தமிழ்மொழியின் தாய்மை வரலாறும் எழுதப்பெற்று அனைத்து மொழிகளிலும் பெயர்க்கப்பட வேண்டும். அந்த வகையில் இங்கே முழுமையாக ஆராயாவிட்டாலும் தமிழுக்கும்…
பேரா.வெ.அரங்கராசனின் திருக்குறள் அறுசொல் உரை – கு.மோகன்ராசு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையும் இணைந்து திருவள்ளுவர் ஆண்டு தைத் திங்கள் 2—ஆம் நாள் [16 –- 01 – 2015] அன்று நடத்திய திருக்குறள் எழுச்சி மாநாட்டில், திருக்குறள் தூயர் பேராசியர் முனைவர் கு. மோகனராசு அவர்கள முன்னிலையில், திருக்குறள் பண்பாட்டுச் சிற்பி கோ. பார்த்தசாரதி அவர்கள் பேராசிரியர் வெ. அரங்கராசன் அவர்கள் எழுதிய திருக்குறள் அறுசொல் உரை என்னும் நூலை வெளியிட்டார்கள். முதல் படியைக் கவிமாமணி க. குணசேகரன் அவர்கள். பெற்றார்கள். அந்நூலில் இடம் பெற்ற மதிப்புரை வருமாறு:…
கலைச்சொல் தெளிவோம் 214. எரிநெய் வழங்கி – Fuel dispenser : இலக்குவனார் திருவள்ளுவன்
– இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழும் சிங்களமும் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழும் சிங்களமும் “உலக மொழிகளின் தாய், தமிழே” என்னும் செந்தமிழ் மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், “இந்திய மொழிகளின் வரி வடிவ எழுத்துக்களின் தாய் , தமிழ் நெடுங்கணக்கின் வரி வடிவமே” என்கிறார். “எழுத்துகள் நெடுங்கணக்கின் நிலையை அடைவதற்கு முந்தைய காலங்களில் பெற்றிருந்த உருவங்களைப் பற்றிய குறிப்புகள், தமிழைத் தவிர வேறு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களில் காணப்படவில்லை” என்கிறார் முனைவர் சுப்பிரமணிய(ஐய)ர். “தமிழ் எழுத்து முறையே ஆரிய எழுத்தின் முன்னோடி” என்கிறார் அறிஞர் இரைசு டேவிட்சு. அனைத்து மொழிகளையும்…
கலைச்சொல் தெளிவோம் 212. ஒலிப்பம் – Decibel 213.ஒலிப்பேழை – Cassette : இலக்குவனார் திருவள்ளுவன்
– – இலக்குவனார் திருவள்ளுவன்
இறந்த பின்னர் இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் இரங்கத்தக்க ஊர்கள்! – வைகை அனிசு
இறப்பிற்குப் பின்னரும் தொடரும் ஊர் விலக்கக் கொடுமை தமிழகத்தில் உயிருடன் இருக்கின்றபோது இடஒதுக்கீடு கேட்டுப்போராட்டம் நடத்தி அதன்மூலம் சாதித் தலைவர்கள் குளிர்காய்வது வழக்கம். அந்த வாக்கு வங்கியை பயன்படுத்தி அந்தத் தலைவர்கள் தங்கள் காரியத்தை நிறைவேற்றுவார்கள் என்பது நடைமுறை உண்மை. ஆனால் இறந்த பின்னர் இடஒதுக்கீடு கேட்டுப்போராட்டம் நடத்தும் ஊர்கள் தமிழகத்தில் பல உள்ளன. இந்த இடஒதுக்கீடு சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கேட்பதுபோல் இல்லை. தங்கள் சொந்த சாதியினரிடையே இடஒதுக்கீடு கேட்பதுதான் விந்தையிலும் விந்தை. உயிருடன் இருக்கும்போது கல்வி,வேலைவாய்ப்பு, அரசுப்பணி அதற்காகப்…
பெருமை தமிழ் மொழி ஒன்றுக்கே உண்டு! – அ.க.நவநீதகிருட்டிணன்
மக்கள் வாழ்வுக்கு இலக்கணம் வகுத்த பெருமை தமிழ் மொழி ஒன்றுக்கே உண்டு! இனிமை நலங் கொழிக்கும் இன்பத் தமிழ் மொழிக்கு இலக்கணம் அமைந்திருப்பது போன்று, எந்த மொழிக்கும் அமையவில்லை என்பது பன்மொழி அறிந்தார் திருந்திய கருத்தாகும். தமிழில் உள்ள எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, என்னும் ஐவகை இலக்கணங்களுள் நடுவணதாகிய பொருள் இலக்கணம் எந்தப் பிறமொழிக்கும் இல்லாத தனிச்சிறப்புடையது. இது நாகரிகமிக்கத் தமிழர்தம் நல்வாழ்வு முறைகளை வகுத்துரைக்கின்றது. இங்ஙனம் மக்கள் வாழ்வுக்கு இலக்கணம் வகுத்த பெருமை தமிழ் மொழி ஒன்றுக்கே…
கோதில்லாக் குறிக்கோளும் குலசேகர ஆழ்வாரும் – சொ.வினைதீர்த்தான்
குலசேகர ஆழ்வாரின் அருமையான உவமைகள் வழியாக குறிக்கோள், குறிக்கோளின்மீதுள்ள தீராப்பற்று, அதனை அடைதல் ஆகியவை குறித்து எண்ணிப்பார்ப்பது இந்தப்பதிவு. எந்தவொரு காதல் பாடலையும் அல்லது தெய்வபக்திப் பாடலையும் வெற்றி அல்லது குறிக்கோளுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம். காதல் என்பதும் பக்தி என்பதும் ஒன்றின் மீதுள்ள ஏக்கமும் அடையவேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பமுமே அல்லவா? முருகனின் பக்கலிலுள்ள வள்ளியும் தெய்வானையும் குறிப்பது சிற்றாடை கட்டிய பாவையரையல்ல என்பார்கள். ஞானசக்தியாகிய முருகனை(Goal) அடைய இச்சாசக்தியாகிய (Passion) ஆழ்ந்தவிருப்பமும் கிரியாசக்தியாகிய(Action) செயலும் உடனிருக்கவேண்டுமென்பார்கள். “வெற்றிக்கு அடிப்படை அதைப்பற்றிய சிந்தனை; அதற்கேற்ற…
குமுக வளர்ச்சி – முனைவர் இராம.கி.
காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் வீடுகட்கு அன்றைக்கு வந்தவெங்கள் அம்மா இலக்குமியே என்றைக்கும் நீங்கா திரு! இந்த இனிய மாலைப்பொழுதில் இவ்வரங்கிற் கூடியிருக்கும் பள்ளத்தூர்வாழ் மக்களுக்கும் விழா அழைப்பாளருக்கும் முதற்கண் என் வணக்கம். சிவன்கோயிற் தேரையிழுத்து நிலைகொள்ளச் செய்த களைப்போடு எல்லோருங் கூடியுள்ள நிலையில், அடுத்த கோயில்நிகழ்ச்சி தொடங்குமுன் இடைப்பட்ட நேரத்தில், உங்களோடு செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு தந்தமைக்கு என் நன்றிகள். துடிப்பான இளைஞரும், தொழில்முனைப்பாளரும் (industrialist) ஆன அருண் கூப்பிட்டும் இங்கு வராமல் இருக்கலாமா?…
பண்டைத்தமிழர்கள் இலக்கிய வளமும் பெற்றிருந்தனர்! – வி.கனகசபை
பண்டைத் தமிழிலக்கியம் பேரளவினது; முன்முறையினது பண்டைத் தமிழிலக்கியம் அகல்பெரும் பரப்புடையது. அதே சமயம் அது முன்னால் வேறு எவர் காலடியும் படாத ஒரு புதுநிலப்பரப்புப் போன்ற இயல்புடையதாகவும் இலங்குகிறது. – அறிஞர் வி.கனகசபை: 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்: பக்கம். 8: மொழிபெயர்ப்பு: பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் உயர்நாகரிகமும் செல்வ வளமும் மிகுந்திருந்தமையால் பண்டைத்தமிழர்கள் இலக்கிய வளமும் பெற்றிருந்தனர்! பண்டைத் தமிழ் இலக்கிய ஏடுகளை யான் கூர்ந்து ஆராய்ந்தபோது, எனக்கு ஏற்பட்ட கருத்து ஒன்றே ஒன்றுதான். அவற்றுள் ஒரு பெரும்பகுதி இரண்டாயிர ஆண்டுகளுக்கு…
திருக்குறளில் வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் – வெ.அரங்கராசன்
1.0. நுழைவாயில் எல்லார்க்கும் எல்லாமும் [0582] சொல்ல வேண்டியவற்றை நல்ல வகையில்- வெல்லும் வகையில் சொல்லும் சொல்லாற்றல் மிக்கவர் அருந்திறல் பெருந்தகையர் திருவள்ளுவர். தனிமனிதனுக்கும் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் உலகிற்கும் சொல்ல வேண்டிய இன்றியமையா அனைத்தையும் சொல்லியுள்ளார். அவற்றுள் ஒரு தலைப்பே உலகு தழீஇய பொதுமைச் சிறப்பு மிக்க தலைப்பாகிய ‘வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள்’ என்பது. இத் தலைப்பும், திருவள்ளுவர் எத்துணைப் பெரிய பெருமையும் அருமையும் பொலியும் தொலைநோக்குப் பார்வையர் என்பதைப் புலப்படுத்தும். இனி அவை பற்றி நீடு நினைந்து ஆழச் சிந்திப்பது இவ்…
இயற்கைப்பின்னணி தமிழுக்கே உள்ள சிறப்பு – நெ.சுப்பையா
அக உணர்வுகளை இயற்கையோடு பின்னிப்பாடும் அருமை, தமிழ் இலக்கியங்களுக்கே உள்ள சிறப்பு சங்க இலக்கியங்களை அகம் புறமென இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவற்றுள் அகமென்பது மனத்தின்கண்ணே நிகழும் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் சித்தரித்துக் காட்டும் பாடல்களையேயாம். அவை அகப்பாட்டு எனப்படும். இப்பாட்டில் சிறந்த மக்களைப் பற்றியே பேசப்படும். புறமென்பது புறத்தே நடக்கும் காரியங்களை விளக்கிக் காட்டும் பாடல்களையேயாம்; அவை புறப்பாடெனப்படும். தலைவன், தலைவியாகிய இருவர்பால் நிகழும் உணர்ச்சிகளைச் சொல்லோவியமாகக் கவின் பெறக் காட்டினார்கள் நம் சங்கத்துச் சான்றோர்கள். அகத்தே நிகழும் உணர்ச்சிகளை, இயற்கையோடு…
