உலகப் பொதுமொழி தமிழே! – கா.அப்பாத்துரை
உலகப் பொதுமொழியாய் முன்பு இருந்ததும் நாளை இருக்கப் போவதும் தமிழே பண்டு முதிரா நாகரிகமுடைய மிக முற்பட்ட காலத்தில் தமிழ் உலகப் பொதுமொழியாயிருத்தல் வேண்டுமென்று அறிஞர் பலர் உய்த்துக் காண்கின்றனர். அது எப்படியாயினும், வருங்கால உலகப் பொதுமொழியாவதற்குரிய பண்பு அதற்குக் கட்டாயம் உண்டு என்பதில் ஐயமில்லை. வேறு எம்மொழிக்கும் ஆங்கிலம், சீனம், இந்துத்தானி ஆகியவற்றுக்கு இருக்கும் உயர்ப்பண்பைவிட, அதற்குரிய உயர்ப்பண்பின் தகுதி பெரிதாகும். உயர்தனிச் செம்மொழிகள் கடந்த, தாய்மொழிகள் கடந்த இவ்வுயிர்ப்பண்புக்குக் காரணமென்ன? அதுவே தமிழ் வளர்த்துக் கொண்டுள்ள தனித்தமிழ் பண்பு…
சங்க இலக்கியங்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பவை – இரா.சாரங்கபாணியார்
சங்க உவமை உணர்த்தும் உயிரியல் அறிவாற்றல் சங்கப் புலவர்கள் கையாண்டுள்ள இயற்கை உவமைகளை நோக்கும் போது பயிரினங்கள், விலங்கினங்கள் முதலியவற்றின் இயல்புகளை அவர்கள் எத்துணைக் கூர்ந்து நோக்கியறிந்திருந்தனர் என்பது பெறப்படும். – பெரும்புலவர் முனைவர் இரா.சாரங்கபாணியார்: இயற்கை விருந்து: பக்கம்.3 சங்க இலக்கியங்கள் வாழ்வியல் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பவை சங்க இலக்கியங்கள் சாதி, சமய, இன வேறுபாடற்றவை. வாழ்வியல் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பவை. பொருட் சிறப்பும், கருத்துச் செறிவும், சொல்லினிமையும் வாய்ந்தவை. அவை அகத்திணை, புறத்திணை என இருபாற்பட்டுப் பெரும்பாலும் காதல், வீரம், குறித்துப்…
தமிழ் இலக்கியத் தோற்றக் காலத்தை அறுதியிட்டுரைக்க இயலாது – சி.இலக்குவனார்
தமிழ் இலக்கியத் தோற்றக் காலத்தை அறுதியிட்டுரைக்க இயலாது ‘இலக்கியம்’ என்பது தூய தமிழ்ச் சொல். இதனை “இலக்கு+இயம்’ எனப் பிரிக்கலாம். இது ‘குறிக்கோளை இயம்புவது’ என்னும் பொருளைத் தருவது. வாழ்வின் குறிக்கோளை வகையுற எடுத்து இயம்புவதே இலக்கியமாகும். ஆகவே, இலக்கியத்தின் துணைகொண்டு அவ்விலக்கியத்திற்குரிய மக்களின் வாழ்வியலை அறிதல் கூடும். தமிழிலக்கியத்தின் துணை கொண்டு தமிழ் மக்களின் வாழ்வியலை அறியலாம். தமிழ் மக்களின் வரலாற்றை அறிவதற்குத் துணைபுரிவனவற்றுள் முதன்மை இடம் பெறுவதும் தமிழ் இலக்கியமேயாகும். தமிழ் இலக்கியம் தொன்மை நலம் சான்றது. அதன்…
சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 1: மறைமலை இலக்குவனார்
1 கட்டுரையின் நோக்கம்: கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தராக விளங்கிய சங்கத் தமிழர், தம்மைச் சுற்றியும் ஒலிக்கும் ஒலிகளையறிந்து அவ்வொலிகளின் வழித் தம் இயக்கத்தை அமைத்துக்கொண்டனர். வளியின் போக்கையறிந்து நீரில் கலன்களைச் செலுத்தும் முறைமையையறிந்த தமிழர்,நிலத்தில் தம்மைச் சூழ்ந்தமையும் ஒலிகளின் மாறுபாடுகளை வகைப்படுத்தியறிந்து ஊறு நேர வாய்ப்புள்ள வழிகளைத் தவிர்த்துக் கொள்ளும் விழிப்புணர்வைப் பெற்றிருந்தனர். இனிய ஓசைகளைச் செவியாரத் துய்த்தும் இன்னா ஓசைகளை இனங்கண்டு பிறர்க்குரைத்தும் ஒலிகளை ஒப்புநோக்கிக் கூறியும் தம்மைச் சூழ்ந்திருந்த ஒலிச்சூழலமைவை அவர்கள் ஆய்ந்துரைத்த திறம்…
சங்கத்தமிழ் வீரனின் அம்பும் இராமனின் அம்பும் – அறிஞர் அண்ணா
இதுதான் வீரமா? இந்தக் கதையை அறிவுடையதென்று ஏற்கமுடியுமா? வில்வீரன் ஒருவன் வில்லிலே நாணேற்றி அம்பைப் பூட்டி விசையாக விடுகிறான், ஒரு புலியைக் குறி வைத்து. 1. அம்பு வில்லினின்றும் விடுபட்டு மிக வேகமாகப் புலியின் உடலை ஊடுருவிச் சென்று, அருகிலிருந்த வாழை மரத்திலே பாய்ந்து நின்று விட்டது. இந்நிகழ்ச்சி உண்மையானது. உருவகப்படுத்தியதன்று. அம்பு புலியின் உடலைத் துளைத்துச் சென்றது என்பது அம்பின் கூர்மையையும் வேகத்தையும் அதை எறிந்தோனுடைய சக்தியையும், குறி தவறாத திறமையையும் குறிக்கிறது.புலியைத் துளைத்தபின் அம்பின் வேகம் குறைகிறது. தடையேற்பட்டதால், 1. எனவே,…
சங்க இலக்கியத்தில் கனவுக் குறிப்புகள் – ச.வே.சுப்பிரமணியன்
சங்க இலக்கியத்தில் கனவுக் குறிப்புகள் சங்க இலக்கியத்தில் ஏறத்தாழ நாற்பத்து நான்கு கனவுக் குறிப்புகள் காணப்படுகின்றன. சில, தலைவன் தலைவியர் கண்டனவாகவும், சில பறவை, விலங்குகள் கண்டனவாகவும் அமைகின்றன. – நல்லறிஞர் ச.வே.சுப்பிரமணியனார்: இலக்கியக் கனவுகள்: பக்கம்: 17-18 சங்கத்தமிழ் கற்றால் கீழ்மை போகும் பழம் சங்கப் பனுவலைக் கற்றால் கிழம் போகும் கீழ்மையும் போகும் – அறிஞர் வ.சுப.மாணிக்கனார்
தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் 3
3 நாம் கேட்கும் தகவல்களை முறையாகத் தகவல் தராமல் அலைக்கழிப்பு செய்வதற்காக அரசு அதிகார்கள் மூன்றாமவர் பற்றிய தகவலைத் தரமுடியாது என ஒரே வரியில் கூறிவிடுவார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அப்துல் மசீத்து என்பவர் தன்னுடைய குடும்ப அட்டையில் முத்துப்பேட்டையில் வசிக்கும் நபர்களின் பெயரைச் சேர்த்துக் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படக்கூடிய பொருட்களை வாங்கி வருகிறார். அவர் குறிப்பிட்டுள்ள இருநபர்களுக்கு திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள முத்துப்பேட்டையிலும் குடும்ப அட்டை உள்ளது. இதன் தொடர்பாகக் கேட்கப்பட்ட தகவலுக்கு விடை கூறமால் மூன்றாமவர் தொடர்புடைய பதில் கூறஇயலாது என…
‘அகம்’ என்றால் என்ன? – சி.இலக்குவனார்
‘அகம்’ என்றால் என்ன? ‘அகம்’ என்றால் என்ன? ஒத்த அன்பினையுடைய தலைவனும் தலைவியும் தனித்துக் கூடுகின்ற காலத்துத் தோன்றி, மன உணர்ச்சியால் நுகரப்படும் (அநுபவிக்கப்படும்) இன்பம், அக் கூட்டத்தின் பின்னர், அவ்வின்பம் இவ்வாறு இருந்தது எனச் சொல்லால் விளக்கிக் கூற முடியாமல் எப்பொழுதும் உள்ளத்தே நிகழும் உணர்ச்சியால் நுகரப்படுவதால் ‘அகம்’ எனப்பட்டது. அகம் உள், உள்ளம்: அதுபற்றி எழும் ஒழுக்கத்தை ‘அகம்’ என்று கூறினர். எளிமையாகக் கூறினால் காதல் இன்பம் என்பதாகும். காதலின்பம் உணர்ச்சி வயத்தது; உணர்ச்சி உள்ளத்தைப் பற்றியது. பண்டைத் தமிழ்ப்…
சங்க இலக்கியங்கள் உளவியல் இலக்கியங்களாகும் – தமிழண்ணல்
சங்க இலக்கியத்திற்குப் பிறிதொரு பெயர் சூட்டு என்று கேட்டால், தயங்காமல், ‘உளவியல் இலக்கியம்’ எனக் குறிப்பிடலாம். அகத்திணைப் பாடல்கள் நூற்றுக்கு நூறும், புறத்திணைப் பாடல்கள் நூற்றுக்கு எழுத்தைந்தும் ‘உளவியல்’ பற்றியனவே ஆகும். ஏதேனும் ஒரு மனநிலையை மட்டுமே அல்லது அம்மனநிலை விளைவுக்குரிய சூழலை மட்டுமே அவை பாடுபொருளாய்க் கொண்டவை. எனவே உளவியற் கொள்கைகளையும் பிராய்டு, (இ)யங்கு, என்பாரின், பாலியல், உளவியற் ஆய்வுகளையும் கற்றுணர்ந்தால் சங்க இலக்கியக் கல்விக்கு அது பெரிதும் துணைபுரியும். – தமிழ்ச் செம்மல் தமிழண்ணல்: சங்க இலக்கிய ஒப்பீடு: பக்கம்….
அறிவியலிலும், தமிழர்கள் பின்தங்கியில்லை – சேலம் செயலட்சுமி
அறிவியலிலும், தமிழர்கள் பின்தங்கியில்லை என்பதைச் சங்க இலக்கியங்கள் நிறுவுகின்றன. சங்க இலக்கியங்கள் கூறும் பல்வேறு துறைச் செய்திகள் பிறநாட்டு அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. தாவர இயல், விலங்கியல், நிலங்களின் பிரிவுகள், இசை நுணுக்கங்கள், ஆடற் கலைகள், முத்து, வைரம், வைடூரியம் பற்றிய உண்மைகள், சிற்பக்கலை, கட்டடக்கலை, கணிதம், வானநிலை சாத்திரம், கடற்பயணங்கள் ஆகிய எந்தக் கலையிலும் அறிவியல் துறையிலும் தமிழர் பின்தங்கியதாகத் தெரியவில்லை. சங்க நூல்களைத் தெளிவாக ஆராய்ந்தால் இப்படிப் பல உண்மைகள் வெளிவருகின்றன. – இசைப்பேரரசி முனைவர் சேலம் செயலட்சுமி: தமிழிசை…
திருந்த வேண்டும் திரைப்பட அப்பாக்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தந்தையர்நாள் எண்ண ஓட்டம் உறவுகளைப்போற்றுவது தமிழர் நெறி. பெற்றோரை உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றிப் பேண வேண்டும் என்பது அதில் முதன்மையானது. “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.” (திருவள்ளுவர், திருக்குறள் 70) என்பதன் மூலம் மகனும் மகளும் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையைத் திருவள்ளுவர் கூறுகிறார். தாய்க்கும் செய்ய வேண்டிய கடமையாக இதை எடுத்துக் கொள்ளலாம். “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை” (ஔவையார், கொன்றைவேந்தன், 37,…
எழிலனும் கனிமொழியும் ஈழப்போரில் இந்தியப்பங்கும்
கனிமொழி கருணாநிதி கனிவுடன் உண்மையை மொழிய வேண்டும். விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் என்ற சின்னத்துரை சசிதரன் மனைவி அனந்தி சசிதரன், இப்பொழுது வடமாகாண அவை உறுப்பினராக உள்ளார். இவர், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில், தன் கணவன் எழிலனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் நீதிமன்றத்தில் சான்றுரை வழங்குகையில், விடுதலைப்புலிகள் சிங்களப்படையிடம் சரணடைவது, பன்னாட்டு ஏற்பாட்டில் நடைபெற்றதாகவும் இந்தியாவும் பங்கு பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்பொழுது…
