ஆரியர்கள் தமிழ் எழுத்தைக் கொண்டு தம் மொழியை அமைத்துக் கொண்டனர்
ஆரியர்கள் தமிழ் எழுத்தைக் கொண்டு தம் மொழியை அமைத்துக் கொண்டனர் ஐரோப்பாவிலுள்ள ஆரிய மொழியினங்களுக்குக் கிரேக்க, இலத்தீன் எனப் பெயர்கள் இருப்பதைப் போல, இந்தியாவிற்கு வந்த ஆரிய மொழிக்கு ஏதேனும் பெயர் உண்டு என்பரேல் அது சரி, ஒத்துக் கொள்வோம். சமற்கிருதம் என்னும் பெயர் எப்பொழுது வந்தது? ஆரியர் இந்தியாவிற்கு வந்து தமிழிலுள்ள உயிரையும் மெய்யையும் தம் மொழியில் வைத்துக் கொண்டு அவ்வெழுத்துகளுக்கேற்ற உயிர் மெய்யெழுத்தையும் அமைத்துக் கொண்டு அவ்வெழுத்துகளுக்கேற்ற மொழிகளையும் ஆராய்ச்சியால் செம்மை செய்து அமைத்துக் கொண்ட தமது மொழிக்குச் “சமற்கிருதம்’…
தமிழர்கள் தம் பண்புகள் பலவற்றை ஆரியருக்கு வழங்கினர்
தமிழர்கள் தம் பண்புகள் பலவற்றை ஆரியருக்கு வழங்கினர் திராவிடர் நாகரிகத்தைப் பற்றிப் பல அறிஞர் கொண்ட புதுமையான கருத்துகள் வியப்பைத் தருவனவாகும். மிகப் பழைய காலத்திலும் திராவிடர் நாகரிகம் ஆரியர் நாகரிகத்துடன் கலந்திருந்தது எனக் கொண்டு அதற்குச் சான்று காட்ட முயன்றனர் இவர். பார்ப்பனரின் ஆதிக்கத்தினால் திராவிடருக்கு உரிய பண்பாடு ஆரியருக்குரிய பண்பாட்டோடு தொடர்புபடுத்தப்பட்டது. இக்காரணத்தால் மிகவும் பழைய தென்னாட்டு நாகரிகத்தை விளங்கிக் கொள்வது மிகவும் கடினமாக விட்டது. எனினும் பழங்காலத்தில் தென்னாட்டவரின் பண்பாடு ஆரியக் கலப்பு அற்றிருந்ததென ஓரளவுக்கு நிறுவலாம்….
மாயாண்டிபாரதி என்னும் வரலாறு – பாலா, தமிழக அரசியல்
‘‘ஏறினா இரயிலு… இறங்கினா செயிலு!’’ – மாயாண்டி பாரதி என்ற சரித்திரம் மாயாண்டி பாரதி… மதுரை என்றதுமே அறிவு பூர்வமானவர்களின் நினைவுக்கு வரும் அற்புதப் பெயர். இந்திய விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்க்கையை ஈகம் செய்த ஈகையர் மாயாண்டி பாரதி பிப்பிரவரி 24 ஆம் நாள் விடுதலை மண்ணில் மரணமடைந்தார். மதுரை மேலமாசி வீதியில் 1917 ஆம் ஆண்டு இருளப்பன் – தில்லையம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர் மாயாண்டி. இவருக்கு 13 அகவை ஆகும்போது 1930ஆம் ஆண்டு திருமரைக்காடு என்னும் வேதாரண்யத்தில்…
வாணாள் குறைவது அரசின் பனைமரத்திற்கு அழகா! -குமரி அனந்தன்
வாணாள் குறைவது அரசின் பனைமரத்திற்கு அழகா! தொல்காப்பியத்தில் ஒரு பொருளைப் பெரிதாகச் சொல்வதற்குப் ‘பனையளவு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். சிறிய பொருளைத் தினையளவு என்றும் பெரிய பொருளைப் பனையளவு என்றும் ஒப்பிட்டனர். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் முப்பாலிலும் பனை வருகிறது. அறத்துப்பாலில் 104 ஆவது, பொருட்பாலில் 433 ஆவது, இன்பத்துப்பாலில் 1282ஆவது குறள்களில் பனை என்று வருகிறது. ‘கள் உண்ணாமை’ என்றொரு அதிகாரமே எழுதியுள்ளார். திருக்குறள் எழுதப்பட்டதும் பனைஓலையில்தான். மூவேந்தர்களில் சேரமன்னனின் நாணயத்தில் பனைமரம் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் அரசு மரம் பனைமரம். தொல்காப்பியத்தில்…
வருமானவரித்துறையை மூடுக!
பெரும்பான்மையருக்கு உதவாத மத்தியஅரசின் பாதீடு – நிதிநிலை அறிக்கை 2015 – 2016 ஆம் நிதியாண்டிற்கான மத்தியில் ஆளும் பா.ச.க.வின் வரவுசெலவுத்திட்டமாகிய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண்(செட்லி) அளித்துள்ளார். செல்வர்கள் நலனில் கருத்து செலுத்தும் மத்திய அரசு ஏழை மக்களையும் நடுத்தரநிலை மக்களையும் கருத்தில் கொள்ள வில்லை. அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியும் மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவவசதியும் அளிக்க வேண்டிய கடமையில் இருந்து தவறியுள்ளது. நாடெங்கிலும் ஏறத்தாழ 80,000 உயர்நிலை பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து தரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்…
உலகப் பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளே!
உலகப் பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளே! நடுநிலக் கடலைச் சூழ்ந்து வாழ்ந்த மக்களினம் இந்திய தீவக்குறையில் தோன்றியது என்றே தீர்மானிக்கலாம்… இத்தீவக்குறை, தென்னிந்தியாவை ஆப்பிரிக்காவோடு இணைந்திருந்ததும், சிந்துகங்கை ஆறுகளின் பள்ளத்தாக்கு அமையாத காலத்தில் கடலில் மூழ்கியதுமான குமரிக் கண்டத்தில் இருந்ததாகும். இம்மாநிலமே திராவிடரின் மூலத் தாயகமாகும். ….. ….. ….. எனவே, திராவிடப் பண்புகள் இந்திய நாகரிகத்தில் மட்டும் காணப்படவில்லை; சிறந்த நாகரிகச் சிறப்பினை அடைந்திருந்த கிரீக்கு, சுமேரியா, பாபிலோனியா, பாலினீசியா போன்ற நாடுகளிலும் மற்றும் பண்டை உலகின் நாகரீக நாடுகள் பலவற்றிலும்…
ஆரியர் இந்தியா வந்தபின்பே தமிழரைப் பார்த்து எழுதினர்
ஆரியர் இந்தியா வந்தபின்பே தமிழரைப் பார்த்து எழுதினர் ஆரியர் இந்தியாவிற் புகுந்த பின் தமிழர் உடைய நாகரிக அவர் தாங்கருதிய பொருளை எழுத்திலிட்டுப் பொறித்தலுங் கண்டு தாமும் தம்முடைய பாட்டுக்களைப் பண் அடைவுபட வகுத்தஞான்று எழுதுமுறை கண்டறிந்தார். இது என்னும் பண்டிதர் விளக்குமாற்றானும் நன்கு அறியப்படும். – தமிழ்க் கடல் மறைமலையடிகள்
தமிழ் எழுத்துகளைக் கண்டு ஆரியர் தம் எழுத்துகளை முறைப்படுத்தினர்
இன்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளின் முன்னரே தமிழர் அழகிற் சிறந்த எழுநிலை மாடங்களும், உயர்ந்த கற்கோட்டைகளும் கட்டுவித்து வாழ்ந்தனராயின், அவ்வரிய பெரிய கட்டடங்கள் அமைப்பதற்கு இன்றியமையாப் பெருஞ்செல்வ வளமும், அவை தம்மைத் திருத்தமுறக் கட்டுவித்து முடிப்பதற்கு உரிய நூல் உணர்வும், அவற்றுள் நடத்தப்படும் பல திறப்பட்ட ‘இலௌகிக’ கருமங்களும் உடையராய் இருந்தாராதல் தெற்றனத் துணியப்படும். இத்துணைப் பெரிய நாகரிக வாழ்க்கை இனிது நடைபெறுவதற்கு இன்றியமையாது வேண்டப்படும் தமிழ் மொழியினை இலக்கண இலக்கிய அமைதியோடு முற்றக் கற்று வந்தார் என்பதூஉம், இதனால் நிலைநிறுத்தப்படும் முடிபொருளாம். ஆகவே,…
திராவிடம் என்பதும் தமிழையே குறிக்கும்- ந.சி.கந்தையா
திராவிடம் என்பதும் தமிழையே குறிக்கும் திராவிடமென்பது தமிழுக்குப் பிறிதொரு பெயராக விளங்குகின்றது. தமிழ் ‘ழகர’த்தை உச்சரிக்க அறியாத ஆசிரியர் தமிழர் என்னுஞ் சொல்லைத் திராவிடம் என வழங்கினர். ‘நகைச்சுவைக்குப் பொருளாவன ஆரியர் கூறுந்தமிழும்…….போல்வன’ என்னும் பேராசிரியர் உரை. ஆரியர் திருத்த முத்தமிழ் பேச அறியார் எனப் புலப்படுத்துகின்றது. – ந.சி.கந்தையா: தமிழகம்
தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு : 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(மாசி 10, 2046 / பிப்பிரவரி 22, 2045 தொடர்ச்சி) [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.] தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 2 தட்டச்சுப் பொறி:- 1961ஆம் ஆண்டு வெளியான அரசின் குறிப்பாணை ஒன்றின்படி “மாவட்ட ஆட்சியர்களும் துறைத் தலைவர்களும் இசைந்ததற்கு இணங்க ஒரே ஒர் ஆங்கிலத் தட்டச்சுப் பொறி…
ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது!
ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது! ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. (எழுத்துக்களை வகைப்படுத்தியவர்கள் தமிழர்களே.) மறைமலை அடிகள் : தமிழின் தனிச்சிறப்பு
குறியேற்றத்தின் மூலம் தமிழுக்குக் கேடுசெய்வோருக்கு நாக.இளங்கோவன் கண்டனம்!
கணித்தமிழ் ஆர்வலரின் செவ்வி! தமிழார்வம் மிக்க கணிப்பொறியாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் நாக.இளங்கோவன். கால்நூற்றாண்டிற்கும் மேலாகத் தமிழ்நாட்டிலும் அயல்நாடுகளிலும் கணிணி வல்லுநராகப் பணியாற்றுபவர். 1995 முதல் தமிழ் இணையத்தில் கருத்து செலுத்தி வருபவர். 2009-ல் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகள் நடைபெற்ற பொழுது பொங்கி எழுந்தவர்களுள் இவரும் ஒருவர். நடக்க இருந்த தமிழ்ச் சிதைப்பைக் கட்டுரை மூலமாக மட்டுமல்லாமல் தமிழ் எழுத்துக் காப்பியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராகச் செயல்பட்டு அதன் எதிர்ப்புப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். ஒருங்குகுறியில் 2010 இல் நிகழ…
