தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு : 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை. அவையில் அனைவரின் பாராட்டையும் பெற்ற கட்டுரை இது. யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் எப்படியெல்லாம் சட்டம் இயற்றக்கூடாது என்பதற்குத் தங்களுக்கு இது மிகவும் வழிகாட்டியாக அமையும் என்றார். முனைவர் நன்னன் அவர்கள் “தமிழ்நாடே இனி உருப்படாதோ என்ற தொனி இருந்தாலும் உண்மைகளைச் சிறப்பாக உரைத்துள்ளீர்கள்” என்றார். கடந்த ஆண்டே அறிஞர்…
செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்
செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் – இலக்குவனார் திருவள்ளுவன் உலகின் முதல் மொழியான தமிழ், உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்னும் செம்மைச்சிறப்புடன் தோன்றும் பொழுதே செம்மொழியாய் அமைந்தது. இருப்பினும் ஆங்கிலேயர் ஆட்சியில் செயற்கை மொழியான சமற்கிருதம் போன்றவற்றைச் செம்மொழி என்ற போர்வையில் ஊக்கப்படுத்தி வந்தது அரசு. ஆனால் உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கும் செம்மொழிக்குரிய அறிந்தேற்பு வழங்க வேண்டும் என நல்லறிஞர்கள் குரல் எழுப்பி வந்தனர். இதன் தொடர் நிகழ்வால் 12.10.2004 அன்று மத்திய அரசு தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பை வழங்கியது….
நாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி!
நாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி! கடந்த இதழுரையிலேயே “திறந்த புத்தகம்போல் விசய் தொலைக்காட்சி இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு இருந்தோம். ஆனால் உச்சப்பாடகர் நிகழ்ச்சியில் உலக மக்கள் தங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்ற அச்சம் இல்லாமலும் தட்டிக் கேட்பதற்கு யாருமில்லர் என்ற தலைக்கனத்தாலும் வாக்கில் முதலிடம் பெற்றவருக்குப் பரிசு அளிக்காமல் மூன்றாம் இடம் பெற்றவருக்கு முதல் பரிசு அளித்துள்ளனர். ஒரு கோடிக்கு மேல் ஒருவர் வாக்கு பெற்றது பாரறிய அறிவிக்கப்பட்டது. அவர் (ஃச்) பூர்த்தியாக இருந்தால் அந்த வாக்கு எண்ணிக்கையை அறிவித்திருப்பர்….
இமயம் முதல் குமரி வரை தமிழே இருந்தது
இமயம் முதல் குமரி வரை தமிழே இருந்தது மிகப் பழங்காலத்தில் இமயம் முதல் குமரிவரை தமிழாகவே இருந்தது என்பது மொழியாராய்ச்சியாலும் வரலாற்று ஆராய்ச்சியாலும் நிலை நாட்டப்படும் உண்மையாக உள்ளது. … மண்ணிற் புதையுண்டு மறைந்த ‘ஆரப்பா’ ‘மொகஞ்சதாரோ’ நகரங்கள் வழங்கிய மொழி ‘தமிழே’ என்று தந்தை ஈராசு அவர்கள் நிறுவியுள்ளமையும் இவ்வுண்மையை வலியுறுத்தும். – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்க காலம்)
நெடுங்கணக்கு தமிழில் மட்டுமே உள்ளது
நெடுங்கணக்கு தமிழில் மட்டுமே உள்ளது எழுத்துகள் நெடுங்கணக்கின் நிலையை அடைவதற்கு முந்தைய காலங்களில் பெற்றிருந்த உருவங்களைப் பற்றிய குறிப்புகள். தமிழைத் தவிர வேறு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களில் காணப்படவில்லை. – முனைவர்.க.சுப்பிரமணிய ஐயர்
மொகஞ்சதாரோவில் வாழ்ந்தவர் தமிழரே
மொகஞ்சதாரோவில் வாழ்ந்தவர் தமிழரே மொகஞ்சதாரோவில் வாழ்ந்த மக்களும் தென் இந்தியத் திராவிடரும் ஓர் இனத்தவரே. அவர்கள் இரு பிரிவினரும் பேசிய மொழி ஒன்றே. சிந்துவெளிமொழி திராவிடம் என்பதில் ஐயமே இல்லை. அது தமிழையே பெரிதும் ஒத்துள்ளது என்று உறுதியாகக் கூறலாம். – அறிஞர் ஈராசு அடிகள் – தரவு தமிழ்ச்சிமிழ்
தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!
தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்! தலைகால் புரியாமல் இருக்கும் நரேந்திரர், அகமது(பட்டேல்) முதலானவர்கள் தலையில் பாறாங்கல்லைப் போட்ட தில்லி வாக்காளர்களை நாம் பாராட்ட வேண்டும். ஆம் ஆத்மி என்னும் பாசக-காங். கலவைக் கட்சியைத் தேர்ந்தெடுத்ததற்காக நாம் பாராட்டவில்லை. அதனைத் தேர்ந்தெடுப்பது தவிர அம்மக்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், பாசக வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவே தாங்கள்தான் என மாரடித்துக் கொண்டு உலகமெல்லாம் மாயத் தோற்றத்தை அதன் தலைவர்கள் உருவாக்கியிருப்பர். நரேந்திரர் பின்னால் இந்தியா இருப்பதாகவும் அதன் தலைவர் அகமது வினைத் திறம் வெற்றி கண்டதாகவும் கூறுவதுடன்…
தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள்
தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் திராவிடர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் என்பது உண்மை அறியா மாந்தரின் கற்பனையுரையேயாகும். திராவிட நாகரிகமும் பண்பாடும் இந்நாட்டு மண்ணிலேயே முளைத்து எழுந்து, தழைத்து, வளர்ந்து பல விழுதுகள் விட்டு முதிர்ந்த பேராலமரமாகும். – இந்தியக் கலை-பண்பாடுகள் – தமிழ்ச்சிமிழ்
கற்கால மொழி தமிழே! – பி.டி.சீனிவாச ஐயங்கார்
கற்கால மொழி தமிழே! மனிதன் தென்னிந்தியாவின் நடுப்பகுதியில் தான் தோன்றியிருக்க வேண்டும். புதுக் கற்கால மக்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றை – பெரிதும் தமிழையே பேசியிருக்க வேண்டும். -பி.டி.சீனிவாச ஐயங்கார்
வேற்றுலகம் இருப்பின் அவ்வுலக மொழியும் தமிழே!
வேற்றுலகம் இருப்பின் அவ்வுலக மொழியும் தமிழே தமிழ் மொழி இயற்கையான மொழி என்பதால் நம் பூவுலகு போல வெளியுலகு இருப்பின் அங்கும் தமிழ் மொழியே இருக்க முடியும் என்று நாம் அழுத்தமாகக் கூறலாம். அறிவியல் இந்தக் கூற்றை வலியுறுத்தும் நாள் விரைவில் வரும். – இரா.வேங்கட கிருட்டிணன்: தமிழே முதன் மொழி: பக்.389 – தமிழ்ச்சிமிழ்
பல்வகைச் சிறப்புடையது தமிழே!
பல்வகைச் சிறப்புடையது தமிழே! உலக மொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள் தொண்மை, முன்மை, எண்மை (எளிமை) ஒண்மை (ஒளிமை); இளமை, வளமை; தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது. தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை. – சொற் பிறப்பியல் அறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் : தமிழ் வரலாறு
கொச்சைத்தமிழின் வெவ்வேறு வடிவங்களே பிற மொழிகள்
கொச்சைத்தமிழின் வெவ்வேறு வடிவங்களே பிற மொழிகள் கொச்சைத் தமிழாகப் பிறந்த மொழிகளில் மிகப் பழமையானவை சுமேரிய, எகிப்து, மொழிகளாகும். பின்னர் வடமொழி, கிரேக்கம், இலத்தீன் என்று சிறப்பான வளம் பெற்ற மொழிகள் தோன்றின. கிரேக்கம், இலத்தீன், வடமொழியாவும் கொச்சைத் தமிழ் என்பதால் அவை மக்கள் வழக்கில் நிற்காமல் மறைந்தன. கொச்சைத் தமிழிலும் மீண்டும் எழுத்து மொழி, பேச்சு மொழி எனப் பல்வேறு மொழிகள் இணைந்தன. அவையே இன்றைய ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், மற்றும் அரபி, உருது, இந்திய மொழிகளாகும். தூய தமிழ் தனித்து…
