அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.2. பிணியின்மை – தொடர்ச்சி

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.1. பிணியின்மை – தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் அ.2.  பிணியின்மை – தொடர்ச்சி இம்மூன்றுதாம் உடலில் சமநிலையில் இருந்து உடலை இயங்க வைக்கின்றன. பருவத்தாலும், உணவாலும் உடலில் இம்மூன்றும் தனித்தனியே கூடியும் குறைந்தும் நோயைத் தருகின்றன. இம்மூன்றையும் வைத்தே தமிழ் மருத்துவ முறைகள் பிறந்தன; விரிந்தன. இவை மூன்றிலும் முதலிலுள்ள ‘வளி’ வல்லமை வாய்ந்தது. மற்றைய இரண்டும் அடுத்தடுத்த வல்லமை உடையவை. இதனை உருவகமாக வளியை அரசனாகவும், பித்தத்தை அமைச்சனாகவும், கோழையைப் படை மறவனாகவும் மருத்துவ நூலார்…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 18, – தமிழின் இனிமை

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 17, அறா அலியரோ அவருடைக் கேண்மை!-தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி 15. தமிழின் இனிமை தமிழ்மொழி இனிமை வாய்ந்தது. “இனிமையால் இயன்ற இளமகளிர்” என்ற பொருள்படவரும் “தமிழ் தழிஇய சாயலவர்” என்ற தொடரில் வரும் “தமிழ்” என்ற சொல்லே, இனிமை எனும் பொருள் தருவதாகும் எனக் கூறித் தமிழ்மொழிக்குப் பெருந்தொண்டு புரிந்துள்ளார் சீவக சிந்தாமணி என்னும் பெருங்காப்பியப் பேராசிரியர் திருத்தக்கத் தேவர். ‘ஒண் தமிழ்’, ‘தேமதுரத்தமிழோசை,’ ‘தமிழ் எனும் இனிய தீஞ்சொல்’ என்றெல்லாம் பெயர் சூட்டிப், புலவர்கள், தமிழின்…

சட்டச் சொற்கள் விளக்கம் 661-670 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 661-670 661. Active Confidence   செயலுறு நம்பிக்கை   முனைப்பான நம்பிக்கை   செயற்திறமுடைய  நம்பகத்தன்மை   ஒரு நம்பிக்கை எப்பொழுது முனைப்பாக அல்லது தீவிரமாக இருக்கும்? அது நடைமுறையில் – செயற்பாட்டில் இருக்கும் பொழுதுதானே. எனவேதான் செயலுறு நம்பிக்கை எனலாம்.   நம்பிக்கை என்பது பேச்சளவில் அல்லது ஏட்டளவில் இல்லாமல் செயலில் – செயற்பாட்டில் – உள்ளமையைக் குறிப்பது. இந்தியச் சான்றுகள் சட்டம், 1872 இன் பிரிவு…

சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 641-650 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 651. Action, penal தண்டனைக்குரிய நடவடிக்கை   அரசால் அல்லது தனியார் தரப்பால் சடடத்தை மீறியவருக்குக் குறை களைவதாக இல்லாமல் தண்டனை விதிப்பதற்குரிய செயல். 652. Action, Remedial மீட்புத் தீர்வு தீர்வு நடவடிக்கை   தீர்வுச் செயற்பாடு குறைபாடுகளைக் களைவதற்காக உற்பத்தி அல்லது சேவையில் மேற்கொள்ளும் மாற்றமே தீர்வு நடவடிக்கை/ தீர்வுச் செயற்பாடு. இரு தரப்பு அல்லது மேற்பட்ட தரப்பாரிடம் ஏற்படும் பிணக்குகள் முதலான…

சட்டச் சொற்கள் விளக்கம் 641-650 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 631-640 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி சட்டச் சொற்கள் விளக்கம் 641-650 641. Action வழக்கு   வழக்கு நடைமுறை செயற்படுமுறை   வழக்கு மூலம், செயல்,  வினையாற்றுதல், நடவடிக்கை, போர்வினை, வழக்குநடவடிக்கை, நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு, நடிப்பு செயலாய்வு, கருமம், தொழில், அமைதி, புரிவு, தொழிற்பண்பு, செய்தொழில், சேட்டை, வண்ணம், புணர்ப்பு, ஆட்டம், வினையம், செய், செயற்கை, நடவடிக்கை, வினை, கூத்து, கிரியை, வழக்கு, விசை, தாக்கம், செயல்வினை, செய்கை, அதிரடி.   வீரதீரச் சண்டைப்படங்களை…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 101 –  ‘சிவலோகம் திறந்தது’

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 100- சங்கீத ஒளடதம் – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்—63 ‘சிவலோகம் திறந்தது’ யுவ வருடம் கார்த்திகை மாத ஆரம்பத்தில் (நவம்பர் 1875) என் ஆசிரியர் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தார். கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் பாடம் நடைபெற்றது. அவருடைய அசௌக்கியத்தால் ஒரு நாளைக்கு முப்பது பாடல்களே பாடங் கேட்க இயன்றது. தக்க வைத்தியர்கள் கவனித்து வந்தனர். சுப்பிரமணிய தேசிகர் அடிக்கடி ஆசிரியருக்கு வேண்டிய சௌகரியங்களை அமைக்கும்படி சொல்லி வந்தார். வைத்தியர்கள் செய்த பரிகாரம் தேசிகர் முதலியோருடைய அன்பை வெளிப்படுத்தியதேயன்றி நோயைப்…

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.1. பிணியின்மை

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. நாட்டிற்கு ஐந்து – தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம்அ. 1. பிணியின்மை நோய் – பிணிஅறிவியல் துறைகள் 1. நோய்இயல், 2. உணவியல் 3. மருத்துவ இயல், 4. உடலிய உளவியல் – எனும் நான்கு இயல்கள் – இத்தலைப்பில் குறளிலிருந்து புலனாக்கப்படுகின்றன. நோய் மாந்தர்க்கு உடலிலும் அமையும். உள்ளத்திலும் அமையும். அது மாந்தர்க்குப் பெருமளவில் உடன்பிறப்பு. ‘கருவிலே திருவுடைமை’ என்பது போன்று ‘கருவிலே நோயுடைமை’யும் உள்ளது. இக்குழந்தைக்குக் கருவிலேயே நோய்க்கூறு அமைந்தது ‘என்று இக்கால மருத்துவர் அறிந்து…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 17, அறா அலியரோ அவருடைக் கேண்மை!

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 16, வள்ளுவர் காட்டும் வழி -தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி 14. அறா அலியரோ அவருடைக் கேண்மை! நெய்தல் நிலத்து நல்லோன் ஒருவனைக் கணவனாகப் பெற்றுக் களித்து வாழ்ந்திருந்தாள் ஒரு நங்கை. மனைவிபால் மாறாக் காதல் கொண்டிருந்த அவன் உள்ளத்தில் கடமையுணர்வும் இடம் பெற்றிருந்தது. அதனால் அவளை மணந்து மனையறம் மேற்கொண்ட சின்னாட்களுக்குள்ளாகவே, தங்கள் இல்லற வாழ்க்கைக்கு இனிய துணைபுரிவதாய பொருளீட்டி வரும் பணியில் சென்றது அவன் மனம், அது கிடைக்கும் கடல் கடந்த நாடுகளுக்கும் கலம் ஏறிச்…

சட்டச் சொற்கள் விளக்கம் 631-640 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 631-640 631. Acting incumbent மாற்றுப் பணிப் பொறுப்பாளர் மாற்றுப் பொறுப்பாளர் பொறுப்பு நடப்புப் பதவியாளர்   நடப்புப் பதவியாளர் நடைமுறைப்பதவியில்  மாற்றாள் முறையில் பணியிடத்தை வகிப்பவர்.   பதவியில் உரியவர் இருக்கும் பொழுதே பயிற்சிக்குச் செல்லல் போன்ற காரணங்களால் பணியைத்தொடர்ந்தாலும் பதவியிடப்பணி தொய்வின்றித் தொடர்வதற்காகப் பொறுப்பு வழங்கப்படுபவர். 632. Acting Judge பொறுப்பு நீதிபதி   நீதிபதி விடுப்பில்/மாறுதலில்/ஓய்வில் சென்றிருந்தால் அல்லது இதுபோன்ற சூழலில் நீதிபதிப்…

சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 621. Act, nature of the இயற்கையின் செயல்   இயற்கைச் செயல் இயற்கையின் செயல் என்பது சூறாவளி, வெள்ளம், புயல், பூகம்பம், கடற்கோள் அல்லது பூச்சி தாக்குதல் போன்ற இயற்கை பேரழிவைக் குறிக்கிறது. இது மனிதரின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு செயலாகும். சான்றாக இதனால் கட்டடங்கள் சிதைந்தன எனில், இதற்குக் கட்டுமானர் பொறுப்பாக மாட்டார்.   ‘சட்டத்தின் தன்மை’ எனக் குறிக்கப்படுவது தவறாகும்….

தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். இ. சீகன்பால்கு, ஈ. இரேனியசு, உ. காலுடுவெல் – பா.வளன் அரசு

(தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். அ. ஆந்திரிக்கசு அடிகளார்‌, ஆ. வீரமாமுனிவர்‌-தொடர்ச்சி) தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் 3. செருமானியத் தமிழ்ச் சான்றோன் சீகன்பால்கு (1682-1719) கடற்கரை மணலில் கைவிரலால் எழுதிப் பழகி, அழகப்பன் உதவியுடன் எட்டே மாதங்களில் தமிழ் கற்ற சீகன்பால்கு(Bartholomäus Ziegenbalg), அலைபாடிக் கலை வளர்க்கும் தரங்கம்பாடியில் பதின்மூன்று ஆண்டுகள் மாண்புமிகு தமிழ்ப் பணி புரிந்துள்ளார். நேர்மையாளருக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும் என்று கிறித்தவம் என்னும் நூல் வழியாக நவின்ற சீகன்பால்கு, தாய்மொழி வாயிலாகப் பிறமொழியைக் கற்று புலமைபெற…

சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 601-610 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 611. Act of terrorism வன் செயல்   பயங்க வாதம் என்கிறோம். வாதம் என்றால் ஒன்றிற்காக வாதிடுவதைத்தான் குறிக்கிறது. வன்முறைப் போக்கிற்காகப் பேசுவதுடன் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதையும் இது குறிக்கிறது. எனவே, வன்முறைச் செயல் > வன் செயல் என்றே சொல்லலாம்.   இதனைத் தன்னாட்டு வன்முறை என்றும் பன்னாட்டு வன்முறை என்றும் கூறலாம்.   தன்னாட்டு வன்முறை அல்லது உள்நாட்டு வன்முறை என்பது…