அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.4. வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல்

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.3. வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல்-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் அ.4. வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல் – தொடர்ச்சி பொதுவாக மருத்துவத்தில் நோயாளியின் நிலை அறிவதே முதன்மையானது. நோயாளி நிலை என்பது நோயுள்ள உடல்நிலை மட்டுமன்று; நோயாளியின் மன நிலையுமாகும். உடல் நோய் நோயாளிக்குத் தரும் இடையூறு, இடுக்கண் உள்ளத்தைச் சோர்வடையச் செய்யும்; வருத்த வைக்கும்; அச்சத்தை ஏற்படுத்தும்; கலக்கத்தைக் கிள்ளிவிடும். தீர்ப்பான் இம்மனநிலையை உணரவேண்டும். முதலில் நோயாளியோ, இயல்பானமாந்தனோ இம் மனத் தாக்கத்தைப் பெறாது அமையும் முறையைக் கையாளவேண்டும்…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 20. நொச்சியும் உழிஞையும்

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 19, சொல்லின் எவனோ? – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி   17. நொச்சியும் உழிஞையும் மண்ணாசை கொண்டு, அண்டை நாட்டு அரசனோடு போரிடப் போன ஓர் அரசன், போரை விரும்பி மேற்கொண்டவனாதலின், அப்போரை மேற்கொள்வதன் முன்னர், தன்வலி, மாற்றான் வலி, தனக்கு ஆகும் காலம், மாற்றானுக்கு ஆகும் காலம், தனக்கு வாய்ப்புடைய இடம் மாற்றானுக்கு வாய்ப்புடைய இடம், ஆகியவற்றைப் பலமுறை ஆராய்ந்து, ஆராய்ந்து, தன் வலிமிக்க நிலையில், தனக்கு ஏற்புடைய காலத்தில், வாய்ப்புடைய இடமாக நோக்கிப் போர்…

சட்டச் சொற்கள் விளக்கம் 721-730 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 711-720 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 721-730 721. Ad Interim இடைக்கால   இடைப்பட்ட காலத்துக்குரியதை அல்லது இடைப்பட்டக் காலத்தில் நேர்வதைக் குறிப்பது.   இலத்தீன் தொடர் 722. Ad Interim Injunction இடைக்கால நெறிகை     இடைக்கால ஏவுரை   இடைக்கால உறுத்துக் கட்டளை   இடைக்கால உறுத்தாணை இடைக்கால ஏவாணை இடைக்காலத் தடையாணை     வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது நீதி மன்றத்தால் வழங்கப்படும் இடைக்காலத் தடையாகும். விண்ணப்பதாரர் இத்தடை…

இலக்குவனார் நினைவு நாள் கட்டுரை: ஆங்கிலத் திணிப்பால் ஆட்சியை இழக்க விரும்புகிறார்களா? – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தித்திணிப்பால்  பேராயக்(காங்கிரசு) கட்சி ஆட்சி அகன்றது. ஆங்கிலத்திணிப்பால் தி.மு.க. ஆட்சி அகல ஆட்சியாளர்களே விரும்புகிறார்களா? தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் நினைவு நாள் ஆவணி 18 / செட்டம்பர் 3. இலக்குவனார், தம் வாணாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்காகவும் தமிழ்க்காப்பிற்காகவும் பல போராட்டக் களங்களைச் சந்தித்தவர். தமிழ்க்காப்பு என்பது பிற மொழிகளின் ஆதிக்ககத்திலிருந்தும் திணிப்புகளிலிருந்தும் தமிழைக் காக்கப் போராடியதுமாகும். “தமிழின் எதிர்காலம் என்ன? சமயத் துறையில் வடமொழிக்கும், அரசியல் துறையில் இந்திக்கும் உலகியல் துறையில் ஆங்கிலத்திற்கும் இடம் அளித்துவிட்டு வீட்டளவில் நின்றுவிடுவதுதான் தமிழுக்குரிய தலைவிதியா? வீட்டளவிலும்…

சட்டச் சொற்கள் விளக்கம் 701-710 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 691-700 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 701-710 701. Actuary   பத்திரச் சான்றர்   பத்திரச் சான்றாளர்     காப்பீட்டு ஆலோசகர் காப்பீட்டு அறிவுரைஞர்   காப்பீட்டு மதிப்பீட்டாளர்   வாணாள் காப்பீட்டு நலன்கள், காப்பீட்டுப் பத்திரங்கள் முதலியவற்றை மதிப்பிடும் வல்லுநர்.   (ஆ.கா.க.சட்டம்(L.I.C.Act), பிரிவு 2(1) 702. Actuate   தூண்டு செயல்படுத்து   ஒரு செயல் நிகழ உந்துதலாக இருப்பது மேற்குறித்தவாறு பொதுவான பொருளில் வரும் இச்சொல், சட்டத்துறையில் ஒரு குற்றச்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 103 – தேசிகர் சொன்ன பாடங்கள்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 102 – அபய வார்த்தை-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்—65 தேசிகர் சொன்ன பாடங்கள் மாசி மாதம் மகாசிவராத்திரி புண்ணிய காலம் வந்தது. என் தந்தையார் இராத்திரி நான்கு சாமத்திலும் அபிசேக அருச்சனைகள் செய்வார். அவருடைய பூசைக்கு வேண்டிய தேங்காய்களை மடத்திலிருந்து பெறுவதற்காக நான் தேசிகரிடம் சென்றேன். விசேட காலங்களில் அவ்வூரிலுள்ளவர்கள் தங்கள் தங்கள் வீட்டிற் செய்யும் பூசை முதலியவற்றிற்கு உபயோகித்துக் கொள்ளும்படி இளநீர் தேங்காய் பழம் வத்திரம் சந்தனக்கட்டை முதலியன மடத்திலிருந்து அவர்களுக்கு அளிக்கப்படும். கடையில்லாமையால் அவற்றை வேறு எங்கும்…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 19, சொல்லின் எவனோ?

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 18, – தமிழின் இனிமை – தொடர்ச்சி). என் தமிழ்ப்பணி சொல்லின் எவனோ? 16 கணவன் பரத்தையர் தொடர்பு கொண்டு, அவர் சேரி வாழ்க்கையிலேயே ஆழ்ந்துவிட்டமை அறிந்து வருந்தினாள் ஒரு பெண், அவள் கணவன் அவளை மணப்பதற்குமுன் அறியாதவனோ, அவள்மீது விருப்பம் இல்லாமலே மணம் செய்து கொண்டவனோ அல்லன்; பலர் அறிய மணந்து கொள்வதற்கு முன்பே அவன் அவளை அறிவான்; அவளைக் கண்டு அவள் அழகிற்கு மயங்கி அவள்மீது காதல் கொண்டு. அக்காதல் நிறைவேற நெடுநாள் அரும்பாடு…

சட்டச் சொற்கள் விளக்கம் 691-700 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 681-690 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 691-700 691. Actual Or Express Notice   நேரடியான அல்லது வெளிப்படையான புரிதல்   நிகழ்வு, கோரிக்கை, உரிமை கோரல்,செயல்முறை குறித்த உள்ளபடியான அல்லது வெளிப்படையான புரிதல். notice என்றால் அறிவிப்பு எனக் கொள்வதைவிட அறிதல், புரிதல், உணர்தல் என்ற முறையில் கவனிக்கப்படுவதைக் குறிப்பதாகக் கொள்வதே சரியாகும்.   ஓர் உண்மை உள்ளதை ஒருவர் அறிதலே அல்லது  நிகழ்வு அல்லது உண்மை பற்றிய அறிவை ஒருவர் உள்ளவாறு…

தூயதமிழ் ஊடக விருதுத் தொகையைத் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கு இணையாக உயர்த்துக! – இலக்குவனார் திருவள்ளுவன்

தூயதமிழ் ஊடக விருதுத் தொகையைத் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கு இணையாக உயர்த்துக! அறிஞர்களைப் போற்றும் அரசே பாராட்டிற்குரியது என்கின்றனர் உலக அரசியலறிஞர்கள். தமிழ்நாடு அரசும் பல வகைகளில் அறிஞர்களைப் போற்றுகிறது. அவர்கள் மூலம் அறிவுத் தளத்தை விரிவாக்குகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு போற்றுதலுக்குரியது. அறிஞர்களையும் வல்லுநர்களையும் பாராட்டும் பொழுது சமநிலை இருக்க வேண்டும். திறமைக்கேற்பப் பாராட்டுதல்கள் அமைய வேண்டும். அவ்வாறு சமநிலை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி அக்குறையைக் களைய வேண்டுகிறோம். தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக அரசு விருதுகள் அளிப்பதுபோல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்…

சட்டச் சொற்கள் விளக்கம் 681-690 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 671-680 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 681-690 681. acts justified by law   சட்டத்தால் நியாயப்படுத்தப்பட்ட செயல்கள் சட்டத்தால் ஞாயப்படுத்தப்பட்ட செயல்கள் சட்டத்தால் நயன்மைப்படுத்தப்பட்ட செயல்கள் சட்டத்தால் முறைமைப்படுத்தப்பட்ட செயல்கள்   நிகழ்வுகளின் உண்மை நிலை குற்றம் நடந்துள்ளது என்பதைக் காட்டினாலும் குற்றம் செய்ததாகத்  தவறாகக் கருதப்படுபவர், தான் இதில் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் எனப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். 682. Acts regarded as trivial அற்பமாகக் கருதப்படும் செயல்கள்  …

சட்டச் சொற்கள் விளக்கம் 671-680 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 661-670 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 671-680 671. Activity, Political அரசியல் செயற்பாடு   அரசியல் கட்சியின் அல்லது அரசியல் கட்சியின்  சார்பாளனின் வெற்றி தோல்வி நோக்கிய செயற்பாடு. 672. Actori incumbit onus probandi    மெய்ப்பிப்புப் பொறுப்பு முறையீட்டாளரிடம் உள்ளது.   வழக்கு தொடுத்தவருக்கே மெய்ப்பிக்கும் பொறுப்பு உள்ளது.   குற்றம் நிகழ்ந்ததாக முறையிடும் வழக்காளியே அதற்கான ஆதாரத்தையும் தர வேண்டும். ஆதாரம் அளிக்கவேண்டிய சுமை, வாதியிடமே உள்ளதை இது குறிக்கிறது.  எனவே,…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 102 – அபய வார்த்தை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 101 – ‘சிவலோகம் திறந்தது’ – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்—64 அபய வார்த்தை ஆசிரியர் வியோகமடைந்த பிறகு உலகத்தில் எல்லாம் எனக்கு ஒரே மயக்கமாக இருந்தது. வீட்டிற்கு வந்து ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டேன். ஒரு வேலையும் செய்யத் தோன்றவில்லை. யாரிடமாவது ஏதேனும் பேசவும் விருப்பம் உண்டாகவில்லை. ஆசிரியர் இளமையில் இயற்றிய தியாகராசலீலை என்னும் நூலைக் கையில் வைத்துப் படித்தபடி இருந்தேன். ஆனால் என் உள்ளம் முழுவதும் அதில் ஈடுபடவில்லை. அடிக்கடி பிள்ளையவர்களது நினைவு எழுந்து துன்புறுத்தியது. அவருடைய கற்பனை மிகவும்…