சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 121-125
(சட்டச்சொற்கள் விளக்கம் 116-120 : இலக்குவனார் திருவள்ளுவன்) சட்டச்சொற்கள் விளக்கம் 121-125 121. Abnegation மறுதலிப்பு பொதுநலன் கருதித் தன் நலனைக் கைவிடல். 122. Abnormal இயல்நெறி பிறழ்ந்த, இயல்பிழந்த, இயல்புமீறிய அமைப்பு முறைகளுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகைமையில்லாத அல்லது இயல்பற்ற நிலைமைகள். 123. Abnormality பிறழ்மை பிறழ்வு இயல்பு அல்லாத நிலைமையை அல்லது இயல்பு கடந்த நிலைமையக் குறிப்பது. 124. Abnormality of mind இயல்புகடந்த மனநிலை இயல்பு திரிந்த மனநிலை…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 71 : சரசுவதி பூசையும் தீபாவளியும்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 70 : சிலேடையும் யமகமும் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-43 சரசுவதி பூசையும் தீபாவளியும் நான் பிள்ளையவர்களிடம் வந்து சேர்ந்து சில மாதங்களே ஆயின.சித்திரை மாதம் வந்தேன் (1871 ஏப்பிரல்); புரட்டாசி மாதம் பட்டீச்சுரத்தில்இருந்தோம். இந்த ஆறு மாதங்களில் நான் எவ்வளவோ விசயங்களைத்தெரிந்து கொண்டேன். தமிழ் இலக்கியச் சம்பந்தமான விசயங்களோடுஉலகத்திலுள்ள பல வேறு வகைப் பட்ட மனிதர்களின் இயல்புகளையும்உணர்ந்தேன். செல்வத்தாலும் கல்வியாலும் தவத்தாலும் நிரம்பியவர்களைப்பார்த்தேன். அவர்களுள் அடக்கம் மிக்கவர்களையும், கருவத்தால் தலைநிமிர்ந்தவர்களையும் கண்டேன். உள்ளன்புடையவர்களையும், புறத்தில்மாத்திரம் அன்புடையவர்கள் போல நடிப்பவர்களையும்…
பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 2/7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் – இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம் சென்னை வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 2/7 Alimony-துணைமைப்படி/துணைமைத் தொகை ஊட்ட உணவு, ஊட்டச்சத்து, ஊட்டமளித்தல் என்னும் பொருள் கொண்ட alimōnia என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து alimony சொல் வந்தது. வாழ்க்கைப்படி, பேணற்படி, ஊட்டம், வாழ்க்கைப் படி, பிரிமனைப் படி, வாழ்க்கைப்படி, வாழ்க்கைப் பொருளுதவி, வாழ்க்கைப் படி. சீவனாம்சம் எனப்…
ஊரும் பேரும்65 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – 6. தமிழகம் – அன்றும் இன்றும்
(ஊரும் பேரும் 64 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – அருங்குன்றம் – தொடர்ச்சி) ஊரும் பேரும்6. தமிழகம் – அன்றும் இன்றும் முன்னொரு காலத்தில் இமயம் முதல் குமரிவரை தமிழ் மொழியே பரவியிருந்த தென்பது தக்கோர் கருத்து. அப் பழம்பெருமையை நினைந்து, “சதுர்மறை ஆரியம் வருமுன்சகமுழுதும் நினதானால்முதுமொழி நீ அனாதியெனமொழிகுவதும் வியப்பாமே” என்று மனோன்மணியம் பாடிற்று. அந்நாளில் கங்கை நாட்டிலும்,காவிரிநாட்டிலும் தாளாண்மை யுடைய தமிழர் வேளாண்மை செய்தனர்; வளம் பெருக்கினர்; அறம் வளர்த்தனர். கங்கைத் திரு நாட்டில் பயிர்த் தொழில் செய்த வேளாளர் இன்றும் தமிழகத்தில்…
வள்ளுவர் சொல்லமுதம் -3 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும்
(வள்ளுவர் சொல்லமுதம் -2 : அ. க. நவநீத கிருட்டிணன் : உ. இறையருளும் நிறைமொழியும்-தொடர்ச்சி) ௩. மனையும் மக்களும் மனை என்னும் சொல் நாம் வாழும் இல்லத்தையும் இல்லிற்குத் தலைவியாகிய இல்லானையும் குறிப்பதாகும். மனைவி என்பது மனைக்குத் தலைவி என்ற பொருளைத் தரும். மனையை ஆளுபவள் மனையாள் எனப்பட்டாள். மனைவியுடன் கணவன் மனையில் வாழ்ந்து புரியும் அறமே மனையறம் எனப்படும். அதனையே இல்லறம் என்றும் இல்வாழ்க்கை என்றும் குறிப்பர். இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்பது ஒளவையாரின் அமுதமொழி. மக்கள் வாழ்வு நெறிகளே…
சட்டச்சொற்கள் விளக்கம் 116-120 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 111-115 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 116-120 116. Able வல்லமையுள்ள ஒரு செயலைச் செய்வதற்குரிய அல்லது சிக்கலைத் தீர்ப்பதற்குரிய ஆற்றல் அல்லது திறன் அல்லது போதுமான வளங்களைக் கொண்டிருத்தல். ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய போதுமான வளங்களையும் அதிகாரங்களையும் கொண்டிருத்தல். 117. Able bodied வல்லமையர் உடல் திறனாளர் என நேர் பொருளாக இருந்தாலும் உடலாலும் உள்ளத்தாலும் வலிமையானவரையே குறிக்கும். உடல், உள்ள வலிமை என்பது, ஒரு வேலையைச் செய்து அல்லது…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1021-1029
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1010 -1020- தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1021-1029 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்
சட்டச்சொற்கள் விளக்கம் 111-115 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 111-115 111. Abjection இழிநிலை இழிதகவு இழிதகையான நிலைமையக் குறிப்பது இலக்கியத் திறனாய்வுக் கோட்பாட்டில் புறக்கணிப்பு என்னும் கருத்தாக்கத்தையும் இது குறிக்கும். 112. Abjure கைவிடு விட்டொழி முற்றோக ஒழித்தல் ஆணையிட்டொழி; (சத்தியஞ்செய்து விட்டொழி) ஏற்கெனவே மேற்கொண்ட சூளுரை அல்லது உறுதிமொழியைக் கைவிடுதல். கொள்கைக் கடப்பாட்டினைக் கைவிடுவதையும் குறிக்கும். ஆணையிட்டொழி (சத்தியத்தை விட்டொழி) என்னும் பொருளடைய abiūrō என்னும் இலத்தீன்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 70 : சிலேடையும் யமகமும்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 69 : ஒரு செய்யுள் செய் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-42 சிலேடையும் யமகமும் பட்டீச்சுரத்தில் இருந்தபோது பிள்ளையவர்கள் இடையிடையேகும்பகோணம் முதலிய இடங்களுக்குப் போய் வருவதுண்டு. அப்பொழுதுநானும் உடன் சென்று வருவேன். பட்டீச்சுரத்திலுள்ள ஆலயத்திற்கு ஒருநாள்சென்று தரிசனம் செய்து வந்தோம். அக்கோயிலில் தேவி சந்நிதானத்தில் சிரீகோவிந்த தீட்சிதரது பிம்பமும் அவர் பத்தினியாரது பிம்பமும் இருக்கின்றன.அவற்றை நாங்கள் கண்டு களித்தோம். தஞ்சையிலிருந்து அரசாண்ட அச்சுதப்பநாயக்கரிடம் அமைச்சராக இருந்து பல அரிய தர்மங்களைச் செய்தவர் சிரீகோவிந்த தீட்சிதர். அவர் பட்டீச்சுரத்து அக்கிரகாரத்தில் வசித்து…
ஊரும் பேரும் 64 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – அருங்குன்றம்
(ஊரும் பேரும் 63 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – சமணமும் சாக்கியமும் – தொடர்ச்சி) ஊரும் பேரும் அருங்குன்றம் திருத்தணிகை மலைக்கு ஐந்து கல் தூரத்தில் உள்ளது அருங்குன்றம். அங்குக் காணப்படுகின்ற அழகிய சினாலயம் கார் வெட்டு நகரக் குறுநில மன்னரால் கட்டப்பட்டதென்பர். தமிழ்ச் சிறு காப்பியங்களுள் சிறந்ததாக மதிக்கப்படும் சூளாமணியின் ஆசிரியராகிய தோலா மொழித் தேவர் இவ்வாலயத்தில் அமைந்த தரும தீர்த்தங்கரரை வழிபட்ட செய்தி அந்நூற் பாயிரத்தால் அறியப்படுகின்றது. எனவே, அருகன் குன்றம் என்னும் பெயர் அருங்குன்றமெனக் குறுகிற்றென்று கொள்ளுதல் பொருந்தும். திருநறுங் கொண்டை…
வள்ளுவர் சொல்லமுதம் -2 : அ. க. நவநீத கிருட்டிணன் : உ. இறையருளும் நிறைமொழியும்
(வள்ளுவர் சொல்லமுதம் -1 : அ. க. நவநீத கிருட்டிணன்: திருக்குறள் தெள்ளமுதம்-தொடர்ச்சி) உ. இறையருளும் நிறைமொழியும் இறைவன் எங்கும் நிறைந்தவன். பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரம்பொருள். அவன் இல்லாத இடமே இல்லை. உயிருள் உயிராகியும் அணுவுள் அணுவாகியும் ஒளிர்பவன். அவனன்றி ஒரணுவும் அசைவதில்லை. அறக் கடலாகவும் அருட்பெருங் கடலாகவும் அறிவுருவாகவும் திகழ்பவன். விருப்பு வெறுப்பு இல்லாத விமலன். இருவினைகள் சேராத இயல்பினன். தனக்கு உவமை இல்லாத தனிப் பெருமை உடையவன். இத்தகைய இறைவன் திருவடி, பிறவிப் பிணிக்கு மருந்தாய் விளங்குவது….
சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன் 106. Abiding கீழ்ப்படிகின்ற கடைப்பிடிக்கின்ற நெறிமுறைக்கு அல்லது விதிமுறைக்குக் கீழ்ப்படிகின்ற அல்லது அதனைக் கடைப்பிடிக்கின்ற செயல். 107. Abiding interest நிலை நலன் நிலையான அக்கறை அல்லது நிலையான ஆர்வம் கொண்டிருத்தலைக் குறிக்கிறது. ஒரிசா குத்தகைச் சட்டம், சொத்தில் நிலையான ஆர்வம் கொண்டவர், உறுதியாக .. . . . எப்போதும் நிலத்தில் நிலையான ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்…
